கனடாவுக்கு அனுப்புவதாக நடந்த பாரிய நிதி மோசடி

முழு குடும்பத்தையும் கனடாவிற்கு அழைத்துச் செல்வதாகக் கூறி, ஒரு கோடியே 58 லட்சம் ரூபாயை மோசடி செய்த குற்றச்சாட்டின் கீழ், அரசியல் பிரமுகர் ஒருவரின் மனைவியை விளக்கமறியலில் வைக்க நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. ஐக்கிய மக்கள் சக்தியின் மாத்தளை மாவட்ட அமைப்பாளரின் மனைவியான 43 வயதுடைய, மூன்று பிள்ளைகளின் தாயை விளக்க மறியலில் வைக்குமாறு வரக்காபொல நீதவான் மினோலி பி. ரத்நாயக்க உதரவிட்டுள்ளார். கேகாலையைச் சேர்ந்த முறைப்பாட்டாளருக்கும், குறித்த அரசியல் பிரமுகருக்கும் இடையே 2008ஆம் ஆண்டு கொரியாவில் பணியாற்றிய […]
அமெரிக்காவில் நீதிமன்றக் கட்டிடத்தில் தீ விபத்து

அமெரிக்காவின் ஜோர்ஜியா மாகாணம், பிளாய்ட் கவுண்டியிலுள்ள வரலாற்றுச் சிறப்புமிக்க நீதிமன்றக் கட்டடத்தில் திங்கள்கிழமை (23) பிற்பகல் தீ விபத்து ஏற்பட்டுள்ளது. 1892-ல் கட்டப்பட்ட நீதிமன்றக் கட்டிடத்திலேயே தீ விபத்து ஏற்பட்டுள்ளது. நீதிமன்றக் கட்டிடத்திலிருந்து அனைவரும் பாதுகாப்பாக வெளியேற்றப்பட்டதாக ஃப்ளாய்ட் மாவட்ட மேலாளர் ஜேமி மெக்கார்ட் தெரிவித்துள்ளார். தீ விபத்து நடந்த நேரத்தில் நீதிமன்றக் கட்டிடத்தில் புனரமைப்புப் பணிகள் நடைபெற்று வந்ததாக ஃப்ளாய்ட் மாவட்ட அரசு தெரிவித்துள்ளது. தீ விபத்துக்கான காரணம் குறித்து எந்தத் தகவலும் இதுவரை வெளியாகவில்லை. […]
விடுதலை சிறுத்தைகள் கட்சி திமுக கூட்டணியில்

திமுக தலைமையிலான கூட்டணியில் பங்கு பெற்றிருக்கும் விடுதலை சிறுத்தைகள் கட்சிக்கு எட்டு தொகுதிகள் ஒதுக்கீடு செய்யப்பட்டிருக்கிறது. இதற்கான தேர்தல் கூட்டணி ஒப்பந்தம் தமிழக முதல்வரும், திமுகவின் தலைவருமான மு க ஸ்டாலினும் விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தலைவரான தொல் .திருமாவளவனும் செய்து கொண்டனர். எதிர்வரும் ஏப்ரல் மாதம் 23ஆம் திகதி அன்று தமிழகத்தில் உள்ள 234 தொகுதிகளுக்கு ஒரே கட்டமாக சட்டப்பேரவை பொது தேர்தல் நடைபெறுகிறது. இந்நிலையில் தமிழகத்தில் உள்ள அரசியல் கட்சிகள் தங்களின் கூட்டணி கட்சிகளுக்கு […]
தீயைக் கட்டுப்படுத்த முயன்ற விவசாயி உயிரிழப்பு
அம்பாந்தோட்டை, வீரவில – கங்கசிறிகம பகுதியில் தனது வயலில் ஏற்பட்ட தீயைக் கட்டுப்படுத்த முயன்ற 63 வயதுடைய விவசாயி ஒருவர், தீக்காயங்களுக்கு உள்ளாகிப் பரிதாபமாக உயிரிழந்துள்ளார். இச்சம்பவம் குறித்து வீரவில பொலிஸாருக்குக் கிடைத்த தகவலின் அடிப்படையில் விரிவான விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன. உயிரிழந்தவர் திஸ்ஸமஹாராம, கங்கசிறிகம பகுதியைச் சேர்ந்தவர் என அடையாளம் காணப்பட்டுள்ளார். முதற்கட்ட விசாரணைகளின்படி, மேற்படி நபர் தனது வயலில் இருந்த வைக்கோலுக்குத் தீ வைத்துள்ளார். எனினும், அந்தத் தீ எதிர்பாராத விதமாக அருகில் இருந்த ஏனைய […]
சர்வதேச அளவில் நிலவும் அரசியல் பதற்றங்கள்; தங்கத்திற்கான விலை நிர்ணயத்தில் மாற்றங்கள்!

உலகப் பொருளாதாரம் ஒரு பக்கம் தள்ளாட்டத்தில் இருக்க, மறுபக்கம் உலக நாடுகளின் மத்திய வங்கிகள் ஒரு விடயத்தில் மட்டும் தெளிவாக இருக்கின்றன. அது-தங்கம் வாங்குவதே! சர்வதேச அளவில் நிலவும் அரசியல் பதற்றங்கள் மற்றும் ‘டொலர்’ ஆதிக்கத்தைக் குறைக்க நாடுகள் எடுக்கும் முயற்சிகளால், வரும் காலங்களில் தங்கத்திற்கான விலை எகிறப்போவதாக உலக தங்க கவுன்சில் (WGC) தெரிவித்துள்ளது. இதுவரை அமைதியாக இருந்த பல நாடுகள் இப்போது திடீரென தங்கத்தை நோக்கி ஓடத் தொடங்கியுள்ளன. இது குறித்து உலக தங்க […]
மயக்க மருந்தை குளிர்சாதன இயந்திரத்தினுள் செலுத்தி கொள்ளை

திருகோணமலை, வித்தியாலய ஒழுங்கையிலுள்ள வீடொன்றில் இன்று (24) அதிகாலை புகுந்த திருடர்கள், வீட்டில் இருந்தவர்களுக்கு மயக்க மருந்து செலுத்திப் பொருட்களைக் கொள்ளையிட்டுச் சென்றுள்ளனர். இன்று அதிகாலை 2.00 மணியளவில் மதிலேறிக் குதித்த திருடர்கள், வீட்டின் உரிமையாளர் குடும்பத்துடன் உறங்கிக் கொண்டிருந்த அறையின் வெளியில் பொருத்தப்பட்டிருந்த குளிர்சாதன இயந்திரத்தினுள் மயக்க மருந்தைச் செலுத்தியுள்ளனர். இதனால் வீட்டில் இருந்தவர்கள் ஆழ்ந்த மயக்க நிலைக்குச் சென்றுள்ளனர். இதனைப் பயன்படுத்திக் கொண்ட திருடர்கள், ஜன்னலை உடைத்து வீட்டிற்குள் நுழைந்துள்ளனர். வீட்டிலிருந்த அலமாரிகள் மற்றும் […]
கடும் வறட்சி; குடிநீர்ப் பிரச்சினைகளுக்கு விரைவில் தீர்வு

மலையகத்தில் ஏற்பட்டுள்ள கடும் வறட்சியின் காரணமாக ஹட்டனில் பகுதியில் ஏற்பட்டுள்ள குடி நீர் பிரச்சினைகளுக்கு வெகுவிரைவில் தீர்வு எட்டப்படுமென நுவரெலியா மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் கிருஷ்ணன் கலைச்செல்வி தெரிவித்தார். (24)செவ்வாய்கிழமை ஹட்டன் நீர்ப்பாசன சபையின் முகாமைத்துவதாதோடு இடம்பெற்ற கலந்துரையாடலின் போது இந்த தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளதாக பாராளுமன்ற உறுப்பினர் தெரிவித்தார். ஹட்டன் பகுதியில் ஒவ்வொரு வருடமும் ஜனவரி மாதம் முதல் ஏப்ரல் மாதம் வரை கடுமையான வரட்சி காணப்படுகின்ற போது ஒவ்வொரு வருடமும் குடி நீருக்கான தட்டுப்பாடு ஏற்படுகிறது.ஹட்டன் […]
இலங்கை பொலிஸார் 24 மணிநேரமும் சேவையில் ஈடுபட வேண்டும்!
பொதுமக்களின் பணம், தங்கம் மற்றும் ஏனைய பெறுமதிமிக்க சொத்துக்களைக் கொள்ளையிடுவதற்கும், திருடுவதற்கும் அல்லது பலவந்தமாகப் பறிப்பதற்கும் குற்றவாளிகள் கையாளும் உத்திகள் குறித்து தெளிவுபடுத்தவும், அத்தகைய அச்சுறுத்தல்களிலிருந்து தங்களைப் பாதுகாத்துக் கொள்வதற்கான வழிகாட்டல்களை வழங்கவும் இலங்கை பொலிஸ் அர்ப்பணிப்புடன் செயற்படுகிறது. இலங்கை பொலிஸார் 24 மணிநேரமும் சேவையில் ஈடுபட்டு, பொதுமக்கள் அச்சமின்றி வாழவும், நம்பிக்கையுடன் எவ்விடத்திற்கும் சுதந்திரமாக நடமாடவும் கூடிய பாதுகாப்பான சூழலைப் பேணுவதற்குப் பாடுபடுகின்றனர். நாடு முழுவதும் உள்ள அனைத்து பொலிஸ் பிரிவுகளிலும் உத்தியோகத்தர்கள் பணியில் ஈடுபடுத்தப்பட்டு, […]
ஏப்ரல் 24 வரை 2026 உ/த பரீட்சைக்கு விண்ணப்பிக்க அவகாசம்

2026 ஆம் ஆண்டுக்கான கல்வி பொது தராதர உயர்தர (A/L) பரீட்சைக்கு தோற்றவுள்ள மாணவர்களிடமிருந்து விண்ணப்பங்கள் கோரப்பட்டுள்ளதாக பரீட்சைத் திணைக்களம் உத்தியோகபூர்வமாக அறிவித்துள்ளது. விண்ணப்பதாரர்கள் செவ்வாய்க்கிழமை (24) முதல் ஏப்ரல் 24, வரை இணையதளம் ஊடாக மாத்திரமே தமது விண்ணப்பங்களை சமர்ப்பிக்க முடியும். அனைத்து விண்ணப்பதாரர்களும் பரீட்சைத் திணைக்களத்தின் உத்தியோகபூர்வ இணையதளங்களான www.doenets.lk அல்லது www.onlineexams.gov.lk/eic ஆகியவற்றின் ஊடாக வழங்கப்பட்டுள்ள அறிவுறுத்தல்களை பின்பற்றி விண்ணப்பிக்க வேண்டும். பாடசாலை விண்ணப்பதாரர்கள்: அரச மற்றும் அரச அங்கீகாரம் பெற்ற தனியார் […]
பாடசாலை மாணவிகளுக்கு சனிட்டறி நப்கின்ஸ் வழங்கும் திட்டத்துக்கு அமைச்சரவை அங்கீகாரம்

பாடசாலை மாணவிகளின் தொடர்ச்சியான கல்வியை உறுதிப்படுத்தும் நோக்கில், மாணவிகளுக்கு விடாய்க்கால அணையாடை (Sanitary Napkins) வழங்கும் திட்டத்தை இந்த ஆண்டும் நடைமுறைப்படுத்த அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது. அனைத்து அரச பாடசாலைகளிலும் தரம் 6-க்கு மேற்பட்ட வகுப்புகளில் கல்வி பயிலும் மாணவிகள் மற்றும் அரச உதவி பெறும் விசேட பாடசாலைகளில் பயிலும் பருவமடைந்த மாணவிகள் என சுமார் 1.05 மில்லியன் (10.5 இலட்சம்) மாணவிகளை உள்ளடக்கும் வகையில் இத்திட்டம் திட்டமிடப்பட்டுள்ளது. இதற்கமைய, ஒரு மாணவிக்கு 1,440 ரூபா பெறுமதியான, […]