தென் பசிபிக் கடலில் உள்ள தொங்கா அருகே சக்தி வாய்ந்த நிலநடுக்கம்
தென் பசிபிக் கடலில் உள்ள தொங்கா (Tonga) அருகே செவ்வாய்க்கிழமை ரிக்டர் அளவில் 7.6 ரிக்டர் அளவிலான சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டது. இதனைத் தொடர்ந்து பிராந்தியத்தில் உள்ள நாடுகள் சுனாமி அச்சுறுத்தல் குறித்து ஆய்வு செய்து வருகின்றன. நியூசிலாந்தின் தேசிய அவசரக்கால மேலாண்மை நிறுவனம் (National Emergency Management Agency), இந்த நிலநடுக்கம் நியூசிலாந்தைப் பாதிக்கக்கூடிய சுனாமியை உருவாக்கியுள்ளதா என்பதை மதிப்பீடு செய்து வருவதாகத் தெரிவித்துள்ளது. “இந்த இடத்தில் சுனாமி உருவானால், அது நியூசிலாந்தை வந்தடைய குறைந்தது […]
இலங்கையில் வன்முறைகள் அதிகரிப்பதால் பொதுமக்கள் நீதித்துறையினருக்கு ஆபத்து – ரணில் சஜித் நாமல் சர்வதேச அமைப்புகளுக்கு கூட்டாகக் கடிதம்

இலங்கையில் அதிகரித்து வரும் வன்முறை மற்றும் சட்ட அமலாக்கத்துறை அரசியல்மயமாக்கப்பட்டுள்ள சூழலில், சட்டத்தரணிகளுக்கும் பொதுமக்களுக்கும் ஏற்பட்டுள்ள கடுமையான அச்சுறுத்தல்கள் குறித்து எச்சரித்து, இலங்கையிலுள்ள எதிர்க்கட்சிகள் பல சர்வதேச சட்ட ரீதியான தொழில்முறை அமைப்புகளுக்கு கடிதம் எழுதியுள்ளன. கடந்த ஆண்டில் 60-க்கும் மேற்பட்ட உயிர்கள் பலியாகியுள்ளன என்றும், 2026-ஆம் ஆண்டில் இதுவரை 9 பேர் உயிரிழந்துள்ளனர் என்றும் சுட்டிக்காட்டியுள்ள அந்தக் கடிதம், துப்பாக்கிச் சூடு மற்றும் கொலைகள் ஒரு தொடர்ச்சியான போக்காக மாறியுள்ளதை அடிக்கோடிட்டுக் காட்டுகிறது. குறிப்பாக, பிப்ரவரி […]
பெண்களின் பயணப் பாதுகாப்பை உறுதிப்படுத்தும் நோக்கில் விழிப்புணர்வு அறிவுறுத்தல்கள்!

கிழக்கு மாகாணத்தில் பெண்களின் பயணப் பாதுகாப்பை உறுதிப்படுத்தும் நோக்கில், கிழக்கு மாகாண பெருங்குற்றவியல் தடுப்புப் பிரிவு பொலிஸ் பொறுப்பதிகாரி தெய்வநாயகம் மேனன் பல முக்கிய விழிப்புணர்வு அறிவுறுத்தல்களை வெளியிட்டுள்ளார். அண்மையில் இலங்கையை உலுக்கிய பாழ்ங்கிணறு படுகொலைச் சம்பவங்களைத் தொடர்ந்து, பொதுமக்களின் பாதுகாப்பைக் கருத்திற்கொண்டு அவர் இந்த ஆலோசனைகளை வழங்கியுள்ளார். பொறுப்பதிகாரி மேனன் விடுத்துள்ள அறிவுறுத்தலில் குறிப்பிட்டுள்ளதாவது: ஆபரணங்கள்: பெண்கள் பொது இடங்களுக்குச் செல்லும் போது, பெறுமதிமிக்க தங்க நகைகளை அநாவசியமாக வெளிப்படையாக அணிவதைத் தவிர்க்க வேண்டும். பயணம்: […]
இணுவிலில் தாக்குதல் சம்பவம்: நால்வர் காயம்

சுன்னாகம் பொலிஸ் பிரிவிற்குட்பட்ட இணுவில் பகுதியில் இடம்பெற்ற தாக்குதல் சம்பவத்தில் நால்வர் காயமடைந்ததாக தெரிவிக்கப்படுகிறது. இது குறித்து மேலும் தெரியவருகையில், இணுவில் பகுதியைச் சேர்ந்த ஒருவர் உடுவில் – மல்வம் பகுதியை சேர்ந்த பெண்ணொருவரை நான்காவது தாரமாக திருமணம் செய்துள்ளார். பின்னர் அங்கு ஏற்பட்ட முரண்பாடு காரணமாக மனைவியை விட்டுவிட்டு இணுவில் பகுதியில் உள்ள தனது வீட்டுக்கு சென்றுள்ளார். இந்நிலையில் இதுகுறித்து கேட்பதற்காக அந்த பெண்ணின் உறவினர்கள் மூவர் இணுவில் பகுதியில் உள்ள குறித்த நபரின் வீட்டுக்கு […]
விபத்தில் இராணுவச் சிப்பாய் உயிரிழப்பு
கதிர்காமத்தில் இருந்து செல்லக்கதிர்காமம் நோக்கிச் சென்ற சபாரி ரக வாகனம் ஒன்று மோட்டார் சைக்கிளுடன் மோதி விபத்துக்குள்ளானதில், ஓய்வுபெற்ற இராணுவச் சிப்பாய் ஒருவர் உயிரிழந்துள்ளார். நேற்றுமுன்தினம்(22.03.2026) கதிர்காமம் மகசேன் வட்டார வீதி சந்தியில் இந்த விபத்து இடம்பெற்றுள்ளது. சபாரி ரக வாகனம் வீதிச் சந்தியைக் கடக்க முயன்றபோது, சாரதியின் வலது புறமாகச் சென்ற மோட்டார் சைக்கிள் மீது மோதியுள்ளது. இந்த விபத்தில் படுகாயமடைந்த மோட்டார் சைக்கிள் ஓட்டுநர் உயிரிழந்தார் என்று பொலிஸார் தெரிவித்தனர். விபத்தில் உயிரிழந்தவர் கே.ஏ.சந்தன […]
கொலம்பியாவின் விமானம் விழுந்து நொறுங்கியதில் 34 வீரர்கள் பலி

ன் அமெரிக்க நாடான கொலம்பியாவின் தெற்கு பகுதியில் உள்ள பியூர்டோ லெகுயிசாமோ விமான நிலையத்தில் இருந்து புறப்பட்ட இராணுவ விமானம் ஒன்று, புறப்பட்ட சிறிது நேரத்திலேயே நொறுங்கி விழுந்து விபத்துக்குள்ளானதில் 34 பேர் உயிரிழந்துள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. 100க்கும் மேற்பட்ட இராணுவ வீரர்கள் பயணம் செய்த விமானம் விபத்துக்குள்ளானதையடுத்து, சம்பவ இடத்திற்கு, மீட்பு படையினர் விரைந்து மீட்பு பணியில் ஈடுபட்டுள்ளனர். விபத்துக்கான காரணம் குறித்து இன்னும் உறுதிப்படுத்தப்படவில்லை. தீவிர விசாரணை நடந்து வருகிறது. விமானம் […]
அமெரிக்கா, ஐரோப்பிய ஒன்றியம் மற்றும் பிரித்தானியாவில் இலங்கையின் ஆடைத்துறை தங்கியிருப்பது ஆபத்து!

இலங்கை ஆடைத் தொழில்துறை தொடர்ந்தும் அமெரிக்கா, ஐரோப்பிய ஒன்றியம் மற்றும் பிரித்தானியா ஆகிய நாடுகளை மட்டும் தங்கியிருப்பது பெரும் ஆபத்தானது என எச்சரிக்கப்பட்டுள்ளது. இலங்கையின் ஆடை உற்பத்தித் தொழில்துறையின் உயர்மட்ட அமைப்பான ஒன்றிணைந்த ஆடைச் சங்கங்களின் மன்றத்தின் தலைவர் பீலிக்ஸ் ஏ. பெர்னாண்டோ இந்த எச்சரிக்கையை விடுத்துள்ளார். உலகளாவிய பொருளாதார மாற்றங்களுக்கு மத்தியில், அவர் இந்த எச்சரிக்கையை விடுத்துள்ளார். இலங்கை தற்போது ஈட்டி வரும் ஆடை ஏற்றுமதி வருமானத்திற்கும், நிர்ணயிக்கப்பட்டுள்ள இலக்கிற்கும் இடையே பாரிய இடைவெளி காணப்படுகின்றது. […]
லிட்ரோ நிறுவனம் முக்கிய அறிவித்தல்!
லிட்ரோ எரிவாயு விலைத்திருத்தம் தொடர்பில் விரைவில் அறிவிக்கப்படுமென லிட்ரோ நிறுவனத்தின் தலைவர் சன்ன குணவர்த்தன தெரிவித்துள்ளார். ஊடகமொன்றுக்கு அவர் இந்த விடயத்தை கூறியுள்ளார். அவர் மேலும் தெரிவிக்கையில், சர்வதேச வர்த்தக பதற்றம் காரணமாக, சமையல் எரிவாயுவின் விலை அதிகரிக்கக்கூடும். அதன்படி, எதிர்வரும் ஏப்ரல் மாதம் முதலாம் திகதிக்குள் எரிவாயு விலைத்திருத்தம் தொடர்பில் தீர்மானிக்கப்படும். எதிர்வரும் மே மாதம் வரையில் போதுமான கையிருப்பு உள்ளது. அதன்படி, ஏற்கனவே முன்பதிவு செய்யப்பட்ட எரிவாயு கப்பல் விரைவில் நாட்டை வந்தடையும். எவ்வாறாயினும், […]
அனுபவமற்ற ஆட்சியாளர்களின் பலவீனமான நிர்வாகத்தால் மக்கள் துயரங்களை அனுபவிக்கிறார்கள்!

அனுபவமற்ற ஆட்சியாளர்களின் பலவீனமான நிர்வாகத்தால் மக்களே இன்று சொல்லொணாத் துயரங்களை அனுபவித்து வருகின்றனர் என்றும், எரிபொருள் விநியோகக் கட்டமைப்பில் அரசே கறுப்புச் சந்தையை உருவாக்கியுள்ளது என்றும் ஐக்கிய மக்கள் சக்தியின் பொதுச்செயலாளர் ரஞ்சித் மத்தும பண்டார எம்.பி. குற்றம் சுமத்தியுள்ளார். கொழும்பில் நேற்று திங்கட்கிழமை நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பிலேயே அவர் இந்த விடயங்களைக் குறிப்பிட்டார். அவர் மேலும் தெரிவிக்கையில், நெருக்கடியான காலப்பகுதிகளில் அரசு மிகவும் தாமதமாகவே தீர்மானங்களை எடுக்கின்றது. அண்மைய ‘டித்வா’ புயல் தாக்கத்தின் போதும் அரசு […]
பாடசாலைப் பரீட்சைகள் தொடர்பில் வெளியான அறிவிப்பு

நாட்டில் நிலவும் எரிபொருள் நெருக்கடி காரணமாக எதிர்வரும் நாட்களில் இடம்பெறவுள்ள எந்தவொரு பரீட்சையையும் ஒத்திவைக்கவோ அல்லது மறு அட்டவணைப்படுத்தவோ தற்போது எந்த திட்டங்களும் இல்லை என்று கல்வி பிரதி அமைச்சர் மதுர செனவிரத்ன உறுதிப்படுத்தியுள்ளார். மத்திய கிழக்கில் ஏற்பட்டுள்ள போர் பதற்றம் காரணமாக ஏற்பட்டுள்ள எரிபொருள் நெருக்கடியை சமாளிக்கும் வகையில் அரச மற்றும் அரசாங்கத்தால் அங்கீகரிக்கப்பட்ட அனைத்து தனியார் பாடசாலைகளுக்கும் புதன்கிழமை விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. இது சிறப்பு அரசாங்க விடுமுறையாக அறிவிக்கப்பட்டுள்ளதுடன், புதன்கிழமைகளில் கல்வி வகுப்புகளை நடத்துவதும் […]