முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் கைது

முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் சஜின் வாஸ் குணவர்தன சற்றுமுன்னர் கைது செய்யப்பட்டுள்ளார். சுமார் 243.8 மில்லியன் ரூபாய் பெறுமதியான சொத்துக்களை சட்டவிரோதமான முறையில் ஈட்டியமை தொடர்பான குற்றச்சாட்டின் கீழ், முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் சஜின் வாஸ் குணவர்தன இலஞ்சம் அல்லது ஊழல் பற்றிய சார்த்துரைகளைப் புலனாய்வு செய்வதற்கான ஆணைக்குழு அதிகாரிகளால் கைது செய்யப்பட்டுள்ளார். சட்டவிரோத சொத்து குவிப்பு தொடர்பான விசாரணைக்காக வாக்குமூலம் வழங்க அவர் அழைக்கப்பட்டிருந்ததுடன், அவரிடம் நடத்தப்பட்ட விசாரணைகளைத் தொடர்ந்து அதிகாரிகள் அவரைக் கைது செய்துள்ளனர்.

தண்ணீர் தொட்டி விழுந்ததில் ஐந்து மாணவர்கள் காயம்

பத்தேகமவில் உள்ள பாடசாலையொன்றில் இன்று (9) மதியம் தண்ணீர் தொட்டி விழுந்ததில் ஐந்து மாணவர்கள் காயமடைந்து வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டதாக பத்தேகம பொலிஸார் தெரிவித்துள்ளனர். காயமடைந்த ஐந்து மாணவர்களும் முதலில் பத்தேகம மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர். இந்த நிலையில் பலத்த காயமடைந்த மூன்று மாணவர்கள் கராபிட்டிய மருத்துவமனைக்கு மாற்றப்பட்டதாக பொலிஸார் கூறியுள்ளனர். பாடசாலையில் ஆறு மற்றும் ஏழாம் வகுப்புகளைச் சேர்ந்த ஐந்து மாணவர்களே விபத்தில் சிக்கியுள்ளதாக தவல்கள் தெரிவிக்கின்றன. சம்பவம் குறித்து பத்தேகம பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

மாதகல் கடல் வழியாக இந்தியாவுக்குக் கடத்த முயன்ற தங்கக் கட்டிகள் மீட்பு!

யாழ்ப்பாணத்திலிருந்து இந்தியாவுக்குப் பெருந்தொகைத் தங்கத்தைக் கடத்திச் செல்ல முயன்ற இருவரைக் இலங்கை கடற்படையினர் கைது செய்துள்ளனர். குறித்த கைது நடவடிக்கையானது இன்றையதினம்(9.3.2026) மேற்கொள்ளப்பட்டுள்ளது. மாதகல் கடல் வழியாக இந்தியாவிற்கு படகொன்றில் தங்கம் கடத்தி செல்லப்படுவதாக கடற்படையினருக்கு கிடைத்த இரகசிய தகவல் வழங்கப்பட்டுள்ளது. இதனையடுத்து, குறித்த படகினை கடலில் வழிமறித்து கடற்படையினர் சோதனையிட்ட வேளை படகில் இருந்து 6 கிலோ 85 கிராம் தங்க கட்டிகளை மீட்டுள்ளனர். அத்தோடு, படகில் இருந்த இருவரையும் கடற்படையினர் கைது செய்தனர். கைது […]

பெருந்தோட்ட மக்கள் அனைவருக்கும் காணி உரிமை உறுதிப்படுத்தப்பட வேண்டும்

மலையகப் பெருந்தோட்ட மக்கள் அனைவருக்கும் தேசிய மக்கள் சக்தி அரசாங்கத்தின் ஊடாகக் காணி உரிமை உறுதிப்படுத்தப்பட வேண்டும் எனத் தமிழ் முற்போக்குக் கூட்டணியின் தலைவரும் கொழும்பு மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினருமான மனோ கணேசன் வலியுறுத்தியுள்ளார். கொட்டக்கலையில் நேற்று (08.03.2026) நடைபெற்ற ‘மலையக வாழ்வுரிமை மாநாட்டில்’ கலந்துகொண்டு உரையாற்றும் போதே அவர் இதனைத் தெரிவித்தார். அவர் மேலும் தெரிவிக்கையில், காணி, வீடு, மற்றும் நியாயமான ஊதியம் ஆகிய மூன்றே ஒரு சமூகத்தின் வாழ்வுரிமையைத் தீர்மானிக்கும் பிரதான காரணிகளாகும். இலங்கையில் […]

அதிக வெப்பநிலை; விடுக்கப்பட்டுள்ள அவசர எச்சரிக்கை

அதிக வெப்பநிலை வெப்ப வெடிப்புகள், எரிச்சல் மற்றும் பூஞ்சை தொற்று போன்ற பொதுவான தோல் நோய்களை ஏற்படுத்தும் என சுகாதார நிபுணர்கள் பொது மக்களை எச்சரித்துள்ளனர். மேலும் குழந்தைகள் மென்மையான தோல் மற்றும் வெளிப்புற வெப்பத்திற்கு அடிக்கடி வெளிப்படுவதால் பாதிக்கப்படுவதாகவும் குறிப்பிட்டுள்ளனர். நாட்டில் நிலவும் வெப்பமான வானிலை காரணமாக குழந்தைகளிடையே தோல் பிரச்சினைகள் மற்றும் நீரிழப்பு அதிகரிக்கும் என்று சுகாதார அதிகாரிகள் எச்சரித்துள்ளனர். இது தொடர்பான அறிவிப்பில் மேலும், அதிக வெப்பம் குழந்தைகளிடையே நீரிழப்பு அபாயத்தை அதிகரிக்கிறது. […]

விசேட தெரிவுக்குழுவின் அறிக்கை கிடைத்தால் உடனே மாகாண சபைத் தேர்தல்

மாகாண சபைத் தேர்தலை நடத்தும் முறைமை குறித்து ஆராய நியமிக்கப்பட்டுள்ள விசேட தெரிவுக்குழு, எதிர்வரும் மூன்று மாத காலத்துக்குள் தனது அறிக்கையைச் சமர்ப்பிக்குமாயின், இந்த ஆண்டுக்குள்ளேயே தேர்தலை நடத்த முடியும் எனத் தேர்தல்கள் ஆணைக்குழுவின் தலைவர் ஆர்.எம்.ஏ.எல். ரத்நாயக்க தெரிவித்தார். மாகாண சபைத் தேர்தல் தொடர்பில் நிலவும் இழுபறிகள் குறித்து ஊடகங்களிடம் கருத்துரைக்கும்போதே அவர் இதனைக் குறிப்பிட்டார். அவர் மேலும் தெரிவிக்கையில், 2017 ஆம் ஆண்டின் 17 ஆம் இலக்கத் திருத்தச் சட்டத்தின் மூலம் அறிமுகப்படுத்தப்பட்ட கலப்புத் […]

நாளை வங்கி கணக்கில் மஹபொல

2026 ஆம் ஆண்டுக்கான வரவு செலவுத் திட்ட முன்மொழிவின் கீழ் அதிகரிக்கப்பட்ட மஹபொல புலமைப்பரிசில் கொடுப்பனவை நாளை (10) முதல் மாணவர்களின் வங்கிக் கணக்குகளில் வைப்பிலிட நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. இதன்படி, ஜனவரி மாதத்திற்குரிய 10,000 ரூபாய் இவ்வாறு வைப்பிலிடப்படும் என லலித் அத்துலத்முதலி மஹபொல உயர்கல்வி புலமைப்பரிசில் அறக்கட்டளை நிதியத்தின் தலைவர், ஓய்வுபெற்ற நீதியரசர் விஜித் மலல்கொட தெரிவித்துள்ளார். இதற்கு முன்னர் 7,500 ரூபாயாக இருந்த இந்தக் கொடுப்பனவு, தற்போது 10,000 ரூபாயாக அதிகரிக்கப்பட்டுள்ளது. மஹபொல புலமைப்பரிசில் […]

திறைச்சேரிக்கு சொந்தமான அரச நிறுவனங்களிடமே மின்சார சபை பொறுப்புகள்

மின்சார சபை தனியார் மயப்படுத்தப்படவில்லை. திறைச்சேரிக்கு சொந்தமான அரச நிறுவனங்களிடமே பொறுப்புகள் வழங்கப்பட்டுள்ளன. மறுசீரமைப்பு நடவடிக்கைகளின் போது மின்சாரசபையின் சேவையாளர்களுக்கு எவ்வித பாதிப்பும் ஏற்படவில்லை.மின்சாரத்துறையை வினைத்திறனாக்குவதற்காக கட்டமைப்பில் மாத்திரமே மாற்றம் ஏற்படுத்தப்பட்டுள்ளது என வலுசக்தி அமைச்சர் குமார ஜயகொடி தெரிவித்தார். இலங்கை மின்சாரசபை மறுசீரமைக்கப்பட்டமை தொடர்பில் திங்கட்கிழமை (9) விசேட அறிவிப்பை விடுத்து மேற்கண்டவாறு குறிப்பிட்டார். அவர் மேலும் தெரிவித்ததாவது, இலங்கை மின்சார சபையை மறுசீரமைக்கும் பணிகள் நேற்றுடன் வெற்றிகரமாக முடிவடைந்தது.நூற்றுக்கு நூறு சதவீதம் அரசுக்கு சொந்தமான […]

முல்லைத்தீவு நாயாறு 12 வயது சிறுமி மீது பாலியல் துஷ்பிரயோகம்; பத்து வருட கடூழிய சிறை

முல்லைத்தீவு நாயாறு பகுதியில் கடந்த 2015 ஆம் ஆண்டு பன்னிரெண்டு வயதுச் சிறுமியொருவரை பாலியல் துஷ்பிரயோகத்திற்குட்படுத்திய குற்றவாளிக்கு கிளிநொச்சி மேல் நீதிமன்றத்தினால் 10 வருட கடூழிய சிறைத்தண்டனை வழங்கி தீர்ப்பளிக்கப்பட்டுள்ளது. முல்லைத்தீவு நாயாறு பகுதியில் கடந்த 2015 ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் 28 ஆம் திகதி 12 வயதுடைய சிறுமி ஒருவரை பாலியல் துஷ்பிரயோகத்திற்குட்படுத்திய குற்றச் சாட்டுத் தொடர்பில் முல்லைத்தீவு பொலிஸாரால் சந்தேக நபரொருவர் கைது செய்யப்பட்டு இச் சம்பவத்துடன் தொடர்புபட்ட சந்தேக நபரையும் சான்றுப் […]

2026 ஆம் ஆண்டு சீன – அமெரிக்க உறவுகள் குறித்து சீன வெளிவிவகார அமைச்சர் கருத்துப்பகிர்வு

2026 ஆம் ஆண்டு சீனா-அமெரிக்க உறவுகள் ஒத்துழைப்பு மற்றும் வளர்ச்சிக்கான ஒரு புதிய பாதை என சீன வெளிவிவகார அமைச்சர் வாங் யீ தெரிவித்துள்ளார். சீனாவின் தலைநகரான பீஜிங்கில் இன்று ஞாயிற்றுக்கிழமை (08) நடைபெற்ற 14வது தேசிய மக்கள் காங்கிரஸின் நான்காவது அமர்வின் ஒரு பகுதியாக, சீனாவின் வெளிவிவகாரக் கொள்கை மற்றும் உறவுகள் தொடர்பான ஊடகவியலாளர் சந்திப்பில் சீன வெளிவிவகார அமைச்சர் வாங் யி இதனை தெரிவித்துள்ளார். அவர் மேலும் கருத்து தெரிவிக்கையில், சீனாவும் அமெரிக்காவும் பெரிய […]