திறைச்சேரிக்கு சொந்தமான அரச நிறுவனங்களிடமே மின்சார சபை பொறுப்புகள்

மின்சார சபை தனியார் மயப்படுத்தப்படவில்லை. திறைச்சேரிக்கு சொந்தமான அரச நிறுவனங்களிடமே பொறுப்புகள் வழங்கப்பட்டுள்ளன. மறுசீரமைப்பு நடவடிக்கைகளின் போது மின்சாரசபையின் சேவையாளர்களுக்கு எவ்வித பாதிப்பும் ஏற்படவில்லை.மின்சாரத்துறையை வினைத்திறனாக்குவதற்காக கட்டமைப்பில் மாத்திரமே மாற்றம் ஏற்படுத்தப்பட்டுள்ளது என வலுசக்தி அமைச்சர் குமார ஜயகொடி தெரிவித்தார்.

இலங்கை மின்சாரசபை மறுசீரமைக்கப்பட்டமை தொடர்பில் திங்கட்கிழமை (9) விசேட அறிவிப்பை விடுத்து மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.

அவர் மேலும் தெரிவித்ததாவது,

இலங்கை மின்சார சபையை மறுசீரமைக்கும் பணிகள் நேற்றுடன் வெற்றிகரமாக முடிவடைந்தது.நூற்றுக்கு நூறு சதவீதம் அரசுக்கு சொந்தமான பங்குகளைக் கொண்டுள்ள நான்கு அரச நிறுவனங்களிடமும், இரண்டு இணை நிறுவனங்களிடமும் மின்சார சபையின் விடயதானங்கள் பொறுப்பாக்கப்பட்டுள்ளன.

மறுசீரமைப்பு நடவடிக்கைகளின் போது மின்சாரசபையின் சேவையாளர்களுக்கு எவ்வித பாதிப்பும் ஏற்படவில்லை.பல்வேறு காரணிகளின் நிமித்தம் சுய விருப்பத்தின் அடிப்படையில் சேவையில் இருந்து ஓய்வுப்பெறும் தீர்மானத்தை அறிவித்தவர்களுக்கு சேவை காலத்தை அடிப்படையாகக் கொண்டு போதுமான இழப்பீடு வழங்கப்பட்டுள்ளது.

கடந்த அரசாங்கம் மின்சாரசபையை 12 கூறுகளாக பிரித்து, 12 ஆயிரம் பேரை சேவையில் இருந்து நீக்குவதற்கு தீர்மானித்து அதற்குரிய வகையில் சட்டத்தையும் இயற்றியது. இந்த சட்டத்தை திருத்தம் செய்து புதிய உள்ளடக்கங்களுடன் மின்சாரசபை மறுசீரமைக்கப்பட்டுள்ளது.

மின்சார சபையின் உரித்தை முழுமையாக அரச நிறுவனம் ஊடாக பாதுகாத்துக்கொண்டு இந்த மறுசீரமைப்பு பணியை நிறைவு செய்துள்ளோம் என்பதை வெளிப்படையாக குறிப்பிட முடியும். மின்சார சபை தனியார் மயப்படுத்தப்படவில்லை. திறைச்சேரிக்கு சொந்தமான அரச நிறுவனங்களிடமே பொறுப்புகள் வழங்கப்பட்டுள்ளன.

மறுசீரமைப்புக்கான நடவடிக்கைகள் குறித்து கடந்த ஒரு ஆண்டுகாலமாக சகல தரப்புடனும் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டுள்ளோம். சுமார் 42 மின்சார தொழிற்சங்கங்களுடன் கலந்துரையாடி அவர்களின் யோசனைகளை மறுசீரமைப்புக்குள் உள்ளடக்கியுள்ளோம்.

நட்டத்தில் இயங்கும் மின்சாரசபையை மறுசீரமைத்து அதன் உச்சபயனை நாட்டு மக்களுக்கு வழங்க வேண்டும். மின்சாரத்துறை வினைத்திறனான வகையில் பொதுமக்களுக்கு சேவை வழங்க வேண்டும் என்பதற்காகவே இந்த மறுசீரமைப்பு பணிகள் முன்னெடுக்கப்பட்டன.

மறுசீரமைப்பினால் மின்சாரசபையின் சேவையாளர்களுக்கு எவ்வித பாதிப்பும் ஏற்படவில்லை. புதிய நிறுவன கட்டமைப்புக்குள் இவர்கள் சேவைக்குள் உள்வாங்கப்படுவார்கள்.கட்டமைப்பில் மாத்திரமே மாற்றம் ஏற்படுத்தப்பட்டுள்ளது என்றார்.

1777567784-death-6

ஒரு காலில் மூன்று வெட்டுக் காயங்களும், கையில் ஒரு காயம் , உடலுக்கு அருகில் சிறிய கத்தி-2.5 மில்லியன்டொலர் சைபர் மோசடி தொடர்பில் இடைநிறுத்தப்பட்ட நிதி அமைச்சின் அதிகாரியின் மரணம் குறித்த மேலதிக தகவல்கள் 

April 30, 2026

ஏப்ரல் 30, 2026 | இரவு 10:17 மணி சுமார் 2.5 மில்லியன் அமெரிக்க டொலர் சைபர் கொள்ளை சம்பவம்

Uni

இன அழிப்பை மூடி மறைக்கும் அரசுக்கு எதிராக அணி திரள வேண்டிய காலகட்டத்தில் நாம் மே தினத்தை நினைவு கூருகின்றோம் – யாழ்.பல்கலைக்கழக ஊழியர் சங்கம்

April 30, 2026

யாழ்ப்பாணம் பல்கலைக்கழக ஊழியர் சங்கமானது மே தினம் தொடர்பான ஊடக அறிக்கை ஒன்றை இன்று வியாழக்கிழமை (30) வெளியிட்டுள்ளது. அந்த

f

வட்டுக்கோட்டை தீர்மானம் வெளியிடப்பட்டு 50 ஆண்டுகள்; மீண்டும் தவறவிடப்போகிறோமா?

April 30, 2026

வட்டுக்கோட்டை தீர்மானம் வெளியிடப்பட்டு 50 ஆண்டுகள் பூர்த்தி. மீண்டும் தவறவிடப்போகிறோமா? என தமிழர் தாயக காணாமல் ஆக்கப்பட்ட உறவுகளின் சங்கம்

put

புடினுடன் தொலைபேசி உரையாடல்; ட்ரம்ப் முக்கிய கோரிக்கை

April 30, 2026

ரஷ்ய ஜனாதிபதி விளாடிமிர் புடினுடன் நடைபெற்ற 90 நிமிட தொலைபேசி உரையாடலில், ஈரானின் யுரேனியம் செறிவூட்டல் தொடர்பாக உதவி செய்யத்

RBKOMUGNEVG3ZHUJGP6GE3XTP4

டொரன்டோவின் வரலாற்றுச் சிறப்புமிக்க படகுச் சங்கம் தீக்கிரை: திட்டமிட்டுத் தீ வைக்கப்பட்டதாக பொலிஸார் சந்தேகம்

April 30, 2026

ஏப்ரல் 30, 2026 – டொரன்டோவின் எட்டோபிகோக் (Etobicoke) பகுதியில் பல தசாப்தங்களாக இயங்கி வந்த படகுச் சங்கத்தின் கட்டடம்

684105632_993797889662066_5036282836550723148_n

யாழில் எழுச்சிபூர்வமாக இடம்பெற்ற தேனிசை செல்லப்பா புகழ் வணக்க நிகழ்வு!

April 30, 2026

பாசறைப் பாணர் தேனிசை செல்லப்பா அவர்களின் நினைவு வணக்க நிகழ்வு, போராளிகள் நலன்புரிச் சங்கத்தினரின் ஏற்பாட்டில் இன்றையதினம் வியாழக்கிழமை (ஏப்ரல்

1777557288-monk-6

 போதைப்பொருள் கடத்தலைத் தொடர்ந்து பௌத்த தேரர்கள் வெளிநாடு செல்வதற்கான சட்டங்கள் அறிமுகம்

April 30, 2026

போதைப்பொருள் கடத்தலைத் தொடர்ந்து பௌத்த தேரர்கள் வெளிநாடு செல்வதற்கான சட்டங்கள் அறிமுகம் ஏப்ரல் 30, 2026 – வெளிநாடுகளுக்குப்

Harsha-Harshana-Suriyapperuma

திறைசேரி செயலாளருடன் CoPF சந்திப்பு: “2.5 மில்லியன் அமெரிக்க டொலர் பெறுமதியான 10 பரிமாற்றங்கள் திருடப்பட்டுள்ளன

April 30, 2026

ஏப்ரல் 30, 2026 – அவுஸ்திரேலியாவில் உள்ள ஒரு தரப்பினருக்கு வழங்கப்பட வேண்டிய 10 அரசாங்க கடன் திருப்பிச் செலுத்தும்

death-pictures-4i5d2eg6pdb913xl

வவுனியாவில் கனடா பிரஜை திடீர் மரணம்: பொலிஸார் விசாரணை

April 30, 2026

வவுனியாவிற்கு வருகை தந்து தற்காலிகமாக வசித்து வந்த கனடா நாட்டுப் பிரஜை ஒருவர், சிகிச்சை பலனின்றி தனியார் வைத்தியசாலையில் உயிரிழந்துள்ளார்.

heat-1554460827

தமிழகத்தில் சுட்டெரிக்கும் வெயில்: இன்று 17 இடங்களில் சதமடித்த வெப்பம் – வேலூரில் 108.32°F பதிவு!

April 30, 2026

சென்னை: தமிழகத்தில் கோடை வெயிலின் தாக்கம் நாளுக்கு நாள் அதிகரித்து வரும் நிலையில், இன்று ஒரே நாளில் மாநிலத்தின் 17

21

“வெற்றி பெற்றவுடன் வேறு எங்கும் செல்லாதீர்கள், பனையூர் வந்துவிடுங்கள்” – தவெக வேட்பாளர்களுக்கு விஜய் அதிரடி உத்தரவு!

April 30, 2026

சென்னை: தமிழகச் சட்டமன்றத் தேர்தல் முடிவுகள் வெளியாக உள்ள நிலையில், தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவர் விஜய் இன்று தனது

rcmp1

கஞ்சா விற்பனை நிலைய சோதனைக்கு எதிர்ப்பு: பொலிஸ் வாகனங்கள் சேதப்படுத்தப்பட்டமை தொடர்பில் நால்வர் மீது வழக்கு

April 30, 2026

ஏப்ரல் 30, 2026 – நோவா ஸ்கோடியாவின் பொட்லோடெக் (Potlotek) பகுதியில் உள்ள முதற்குடி மக்கள் (First Nations) வசிக்கும்