விசேட தெரிவுக்குழுவின் அறிக்கை கிடைத்தால் உடனே மாகாண சபைத் தேர்தல்

மாகாண சபைத் தேர்தலை நடத்தும் முறைமை குறித்து ஆராய நியமிக்கப்பட்டுள்ள விசேட தெரிவுக்குழு, எதிர்வரும் மூன்று மாத காலத்துக்குள் தனது அறிக்கையைச் சமர்ப்பிக்குமாயின், இந்த ஆண்டுக்குள்ளேயே தேர்தலை நடத்த முடியும் எனத் தேர்தல்கள் ஆணைக்குழுவின் தலைவர் ஆர்.எம்.ஏ.எல். ரத்நாயக்க தெரிவித்தார்.

மாகாண சபைத் தேர்தல் தொடர்பில் நிலவும் இழுபறிகள் குறித்து ஊடகங்களிடம் கருத்துரைக்கும்போதே அவர் இதனைக் குறிப்பிட்டார்.

அவர் மேலும் தெரிவிக்கையில், 2017 ஆம் ஆண்டின் 17 ஆம் இலக்கத் திருத்தச் சட்டத்தின் மூலம் அறிமுகப்படுத்தப்பட்ட கலப்புத் தேர்தல் முறைமையில், எல்லை நிர்ணயப் பணிகள் நிறைவடையாத காரணத்தினால் கடந்த பல வருடங்களாக மாகாண சபைகள் மக்கள் பிரதிநிதிகள் இன்றி இயங்கி வருகின்றன.

பழைய விகிதாசார முறைமையில் தேர்தலை நடத்துவதா அல்லது புதிய கலப்பு முறைமையில் நடத்துவதா என்பது குறித்து நாடாளுமன்றமே தீர்மானிக்க வேண்டும் என உயர்நீதிமன்றம் ஏற்கனவே பலமுறை வியாக்கியானம் வழங்கியுள்ளது.

இது தொடர்பாகத் தேர்தல்கள் ஆணைக்குழுத் தலைவர் மேலும் தெரிவிக்கையில், “தேர்தல் முறைமை மற்றும் சட்டத் திருத்தங்களை ஆராய நியமிக்கப்பட்டுள்ள விசேட குழு, எதிர்வரும் மே மாதத்துக்குள் (மூன்று மாத கால அவகாசம்) தனது விதப்புரைகளைச் சமர்ப்பிக்க வேண்டும்.

குறித்த குழுவில் முன்னிலையாகி தேர்தல்கள் ஆணைக்குழு சார்பான யோசனைகளை முன்வைக்கவுள்ளோம். அரசு எடுக்கும் ஆக்கபூர்வமான தீர்மானங்களுக்கு முழுமையான ஒத்துழைப்பு வழங்கப்படும்.

எல்லை நிர்ணயப் பணிகள் முடியும் வரை பழைய விகிதாசார முறைமையிலாவது தேர்தலை நடத்தி, மாகாண சபைகளுக்கு மக்கள் பிரதிநிதிகளை நியமிக்க வேண்டும் என்பதில் ஆணைக்குழு உறுதியாக உள்ளது.

தெரிவுக்குழுவின் அறிக்கை கிடைத்தவுடன், சட்ட ரீதியான அதிகாரங்களைப் பயன்படுத்தித் தேர்தலை நடத்துவதற்கான பூர்வாங்க நடவடிக்கைகளை ஆணைக்குழு உடனடியாக ஆரம்பிக்கும்.

இதன் மூலம் நீண்டகாலமாகத் தாமதிக்கப்பட்டு வரும் மாகாண சபைத் தேர்தலை இந்த ஆண்டின் இறுதிக்குள் நடத்த முடியும் என்று அவர் நம்பிக்கை வெளியிட்டார்.

1777567784-death-6

ஒரு காலில் மூன்று வெட்டுக் காயங்களும், கையில் ஒரு காயம் , உடலுக்கு அருகில் சிறிய கத்தி-2.5 மில்லியன்டொலர் சைபர் மோசடி தொடர்பில் இடைநிறுத்தப்பட்ட நிதி அமைச்சின் அதிகாரியின் மரணம் குறித்த மேலதிக தகவல்கள் 

April 30, 2026

ஏப்ரல் 30, 2026 | இரவு 10:17 மணி சுமார் 2.5 மில்லியன் அமெரிக்க டொலர் சைபர் கொள்ளை சம்பவம்

Uni

இன அழிப்பை மூடி மறைக்கும் அரசுக்கு எதிராக அணி திரள வேண்டிய காலகட்டத்தில் நாம் மே தினத்தை நினைவு கூருகின்றோம் – யாழ்.பல்கலைக்கழக ஊழியர் சங்கம்

April 30, 2026

யாழ்ப்பாணம் பல்கலைக்கழக ஊழியர் சங்கமானது மே தினம் தொடர்பான ஊடக அறிக்கை ஒன்றை இன்று வியாழக்கிழமை (30) வெளியிட்டுள்ளது. அந்த

f

வட்டுக்கோட்டை தீர்மானம் வெளியிடப்பட்டு 50 ஆண்டுகள்; மீண்டும் தவறவிடப்போகிறோமா?

April 30, 2026

வட்டுக்கோட்டை தீர்மானம் வெளியிடப்பட்டு 50 ஆண்டுகள் பூர்த்தி. மீண்டும் தவறவிடப்போகிறோமா? என தமிழர் தாயக காணாமல் ஆக்கப்பட்ட உறவுகளின் சங்கம்

put

புடினுடன் தொலைபேசி உரையாடல்; ட்ரம்ப் முக்கிய கோரிக்கை

April 30, 2026

ரஷ்ய ஜனாதிபதி விளாடிமிர் புடினுடன் நடைபெற்ற 90 நிமிட தொலைபேசி உரையாடலில், ஈரானின் யுரேனியம் செறிவூட்டல் தொடர்பாக உதவி செய்யத்

RBKOMUGNEVG3ZHUJGP6GE3XTP4

டொரன்டோவின் வரலாற்றுச் சிறப்புமிக்க படகுச் சங்கம் தீக்கிரை: திட்டமிட்டுத் தீ வைக்கப்பட்டதாக பொலிஸார் சந்தேகம்

April 30, 2026

ஏப்ரல் 30, 2026 – டொரன்டோவின் எட்டோபிகோக் (Etobicoke) பகுதியில் பல தசாப்தங்களாக இயங்கி வந்த படகுச் சங்கத்தின் கட்டடம்

684105632_993797889662066_5036282836550723148_n

யாழில் எழுச்சிபூர்வமாக இடம்பெற்ற தேனிசை செல்லப்பா புகழ் வணக்க நிகழ்வு!

April 30, 2026

பாசறைப் பாணர் தேனிசை செல்லப்பா அவர்களின் நினைவு வணக்க நிகழ்வு, போராளிகள் நலன்புரிச் சங்கத்தினரின் ஏற்பாட்டில் இன்றையதினம் வியாழக்கிழமை (ஏப்ரல்

1777557288-monk-6

 போதைப்பொருள் கடத்தலைத் தொடர்ந்து பௌத்த தேரர்கள் வெளிநாடு செல்வதற்கான சட்டங்கள் அறிமுகம்

April 30, 2026

போதைப்பொருள் கடத்தலைத் தொடர்ந்து பௌத்த தேரர்கள் வெளிநாடு செல்வதற்கான சட்டங்கள் அறிமுகம் ஏப்ரல் 30, 2026 – வெளிநாடுகளுக்குப்

Harsha-Harshana-Suriyapperuma

திறைசேரி செயலாளருடன் CoPF சந்திப்பு: “2.5 மில்லியன் அமெரிக்க டொலர் பெறுமதியான 10 பரிமாற்றங்கள் திருடப்பட்டுள்ளன

April 30, 2026

ஏப்ரல் 30, 2026 – அவுஸ்திரேலியாவில் உள்ள ஒரு தரப்பினருக்கு வழங்கப்பட வேண்டிய 10 அரசாங்க கடன் திருப்பிச் செலுத்தும்

death-pictures-4i5d2eg6pdb913xl

வவுனியாவில் கனடா பிரஜை திடீர் மரணம்: பொலிஸார் விசாரணை

April 30, 2026

வவுனியாவிற்கு வருகை தந்து தற்காலிகமாக வசித்து வந்த கனடா நாட்டுப் பிரஜை ஒருவர், சிகிச்சை பலனின்றி தனியார் வைத்தியசாலையில் உயிரிழந்துள்ளார்.

heat-1554460827

தமிழகத்தில் சுட்டெரிக்கும் வெயில்: இன்று 17 இடங்களில் சதமடித்த வெப்பம் – வேலூரில் 108.32°F பதிவு!

April 30, 2026

சென்னை: தமிழகத்தில் கோடை வெயிலின் தாக்கம் நாளுக்கு நாள் அதிகரித்து வரும் நிலையில், இன்று ஒரே நாளில் மாநிலத்தின் 17

21

“வெற்றி பெற்றவுடன் வேறு எங்கும் செல்லாதீர்கள், பனையூர் வந்துவிடுங்கள்” – தவெக வேட்பாளர்களுக்கு விஜய் அதிரடி உத்தரவு!

April 30, 2026

சென்னை: தமிழகச் சட்டமன்றத் தேர்தல் முடிவுகள் வெளியாக உள்ள நிலையில், தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவர் விஜய் இன்று தனது

rcmp1

கஞ்சா விற்பனை நிலைய சோதனைக்கு எதிர்ப்பு: பொலிஸ் வாகனங்கள் சேதப்படுத்தப்பட்டமை தொடர்பில் நால்வர் மீது வழக்கு

April 30, 2026

ஏப்ரல் 30, 2026 – நோவா ஸ்கோடியாவின் பொட்லோடெக் (Potlotek) பகுதியில் உள்ள முதற்குடி மக்கள் (First Nations) வசிக்கும்