‘டெக்ஸ்லா’ படத்தின் தொடக்க விழா!

தமிழ் திரையுலகின் தனித்துவமான நடிகர்களில் ஒருவராக அடையாளம் பெற்றிருக்கும் ஜெய் – மலையாள திரையுலகின் நட்சத்திர நடிகரான சுராஜ் வெஞ்சரமூடு ஆகிய இருவரும் கதையின் நாயகர்களாக நடிக்கும் ‘டெக்ஸ்லா’ திரைப்படத்தின் தொடக்க விழா சென்னையில் பிரமாண்டமாக நடைபெற்றது. இயக்குநர் ஐஸ்வர்யா ரஜினிகாந்த் இயக்கத்தில் தயாராகும் ‘டெக்ஸ்லா ‘ திரைப்படத்தில் ஜெய், சுராஜ் வெஞ்சரமூடு, ஜார்ஜ் மரியன், ஆனந்தராஜ் உள்ளிட்ட பலர் நடிக்கிறார்கள். யுவன் சங்கர் ராஜா இசையில் தயாராகும் இந்தத் திரைப்படத்தை கண்ணன் ரவி குழுமம் சார்பில் […]
நடிகர் கௌதம் ராம் கார்த்திக் நடிக்கும் ‘ பிளடி பாலிடிக்ஸ்’

நட்சத்திர வாரிசும், பிரபல நடிகருமான கௌதம் ராம் கார்த்திக் கதையின் நாயகனாக அரசியல் கள பின்னணியில் நடித்திருக்கும் புதிய திரைப்படத்திற்கு ‘பிளடி பாலிடிக்ஸ்’ என பெயரிடப்பட்டு , அதற்கான டைட்டில் டீசர் வெளியிடப்பட்டிருக்கிறது. இதனை நடிகர் ஆர்யா மற்றும் இயக்குநர் மாரி செல்வராஜ் ஆகியோர் இணைந்து வெளியிட்டுள்ளனர். இயக்குநர் தீனா ராகவன் இயக்கத்தில் உருவாகியுள்ள ‘பிளடி பாலிடிக்ஸ் ‘ திரைப்படத்தில் கௌதம் ராம் கார்த்திக், அஞ்சனா நேத்ரன், செல்வராகவன் , ரோபி ,பி. வாசு, ஏ. வெங்கடேஷ், […]
காலி கடற்பரப்பில் மூழ்கிய ஈரான் போர்க்கப்பலின் பாகங்கள் சீனிகம கடற்கரையில் மீட்பு!

இலங்கையின் தெற்கு கடற்பரப்பில் அமெரிக்க நீர்மூழ்கியின் தாக்குதலில் மூழ்கடிக்கப்பட்ட ஈரானிய கடற்படை கப்பலின் பாகங்களாக இருக்கலாம் என கருதப்படும் சில பொருட்கள், சீனிகம கடற்கரை பகுதியில் கரையொதுங்கிய நிலையில் மீட்கப்பட்டுள்ளன. உள்ளூர் மீனவர்கள் மற்றும் கடற்கரை பாதுகாப்பு அதிகாரிகள் தெரிவித்ததன்படி, இன்று காலை கடற்கரையில் அடையாளம் தெரியாத உலோக பாகங்கள் மற்றும் கப்பல் உதிரிப்பாகங்களை ஒத்த பொருட்கள் காணப்பட்டுள்ளன. இதையடுத்து அவை அதிகாரிகளால் பாதுகாப்பாக மீட்கப்பட்டு மேலதிக விசாரணைக்காக ஒப்படைக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. இந்த பொருட்கள், இந்தியப் பெருங்கடலில் […]
போதைப்பொருளுடன் இருவர் கைது!
குருநாகல் – தித்தவெல்ல, அலஸ்வத்த பகுதியில் ஐஸ் போதைப்பொருளுடன் சந்தேகநபர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். நேற்று சனிக்கிழமை (07) இரவு குருநாகல் பொலிஸ் அதிகாரிகளால் மேற்கொள்ளப்பட்ட விசேட சுற்றிவளைப்பின் போதே, இந்த கைது நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டுள்ளது. இதன்போது, சந்தேகநபரிடமிருந்து 126 கிராம் 500 மில்லிகிராம் ஐஸ் போதைப்பொருள் கைப்பற்றப்பட்டுள்ளது. சந்தேகநபர் மாஸ்பொத்த பகுதியைச் சேர்ந்த 35 வயதுடைய நபர் என தெரியவந்துள்ளது. சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை குருநாகல் பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர். இதேவேளை, ஹோமாகம பகுதியில் […]
மகரகமவில் பாரிய தீவிபத்து!

மகரகம நகரில் அமைந்துள்ள வர்த்தக நிலையத் தொகுதியொன்றில் இன்று ஞாயிற்றுக்கிழமை (08) பாரிய தீவிபத்து ஏற்பட்டுள்ளது. குறித்த தீயைக் கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வருவதற்காக கோட்டை தீயணைப்புப் பிரிவின் 04 வாகனங்கள் விரைவாக ஸ்தலத்திற்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
லியன்ஓயா பகுதியில் நீரில் அடித்துச் செல்லப்பட்ட யுவதி மீட்பு!

கித்துல்கலை – லியன்ஓயா பகுதியில் நீரில் அடித்துச்செல்லப்பட்ட இளம் பெண் ஒருவர் பாதுகாப்பாக மீட்கப்பட்டுள்ளார். நேற்று சனிக்கிழமை (07) காலை இந்த சம்பவம் பதிவாகியுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். சம்பவம் நேர்ந்தபோது பாதுகாப்பு கடமையில் ஈடுபடுத்தப்பட்டிருந்த பொலிஸ் உயிர்காப்பு பிரிவை சேர்ந்த அதிகாரிகளால் குறித்த பெண் மீட்கப்பட்டு அடிப்படை முதலுதவி வழங்கப்பட்டுள்ளது. மீட்கப்பட்டவர் பெந்தோட்டை பகுதியை சேர்ந்த 23 வயதுடைய இளம் பெண் என தெரியவந்துள்ளது.
நோர்வே அமெரிக்க தூதரகத்தில் குண்டுவெடிப்பு

நோர்வேயின் தலைநகர் ஒஸ்லோவில் அமைந்துள்ள அமெரிக்கத் தூதரகத்தின் நுழைவாயிலில் இன்று ஞாயிற்றுக்கிழமை (08) அதிகாலை சக்திவாய்ந்த குண்டு வெடிப்பொன்று இடம்பெற்றுள்ளது. இச்சம்பவத்தில் தூதரகக் கட்டடத்திற்குச் சிறு சேதங்கள் ஏற்பட்டுள்ள போதிலும், எவருக்கும் காயங்கள் ஏற்படவில்லை என நோர்வே பொலிஸார் உறுதிப்படுத்தியுள்ளனர். மத்திய கிழக்கில் அமெரிக்கா முன்னெடுத்து வரும் இராணுவ நடவடிக்கைகளுக்குப் பதிலடியாக பல்வேறு நாடுகளில் உள்ள அமெரிக்கத் தூதரகங்களுக்குப் பாதுகாப்பு அச்சுறுத்தல்கள் விடுக்கப்பட்டுள்ள நிலையில், இந்தத் தாக்குதல் இடம்பெற்றுள்ளது. அந்நாட்டு நேரப்படி இன்றையதினம் அதிகாலை 1.00 மணியளவில் […]
தொடர் தாக்குதல்களில் ஈரானின் 42 கப்பல்கள் தரைமட்டம்

ஈரானுக்கு எதிராக 3 நாட்களாக முன்னெடுக்கப்பட்ட தொடர் தாக்குதல்களில், அந்த நாட்டிற்குச் சொந்தமான 42 கடற்படைக் கப்பல்கள் முழுமையாக அழிக்கப்பட்டுள்ளன என அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் தெரிவித்துள்ளார். புளோரிடாவில் இடம்பெற்ற விசேட நிகழ்வொன்றில் உரையாற்றும் போதே அவர் இதனைக் குறிப்பிட்டார். அத்துடன் ஈரானின் வான்படை பலம் மற்றும் தொடர்பாடல் கட்டமைப்புகள் பெருமளவில் செயலிழக்கச் செய்யப்பட்டுள்ளன. ஈரான் அணு ஆயுதத்தைத் தயாரிக்கும் மிக நெருங்கிய நிலையை எட்டியிருந்ததால், அவர்களின் அணுசக்தி வேலைத்திட்டத்துடன் தொடர்புடைய மையங்களை இலக்கு வைத்து […]
“பெண்களின் தலைமைத்துவம் – செழிப்பான தேசத்தின் பெருமை”

இலங்கை வரலாற்றில் முன்னெப்போதும் இல்லாத வகையில் அரசியல் மற்றும் பொருளாதார ரீதியாகப் பெண்கள் பாரிய மாற்றங்களை நிகழ்த்தி வரும் சூழலில், “பெண்களின் தலைமைத்துவம் – செழிப்பான தேசத்தின் பெருமை” எனும் தொனிப்பொருளின் கீழ் இவ்வாண்டு சர்வதேச மகளிர் தினம் கொண்டாடப்படுவதாக ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க தெரிவித்துள்ளார். சர்வதேச மகளிர் தினத்தை முன்னிட்டு அவர் விடுத்துள்ள விசேட வாழ்த்துச் செய்தியில், ஒரு நூற்றாண்டுக்கும் மேலாக ஒவ்வொரு ஆண்டும் மார்ச் 08 ஆம் திகதி உலகம் முழுவதும் சர்வதேச […]
நவாலியில் தனியார் பேருந்தும் கன்டர் ரக வாகனமும் மோதி விபத்து
யாழ்ப்பாணம்- நவாலி வீதியில் கன்டர் ரக வாகனமும் தனியார் போக்குவரத்து சேவை பேருந்து ஒன்றும் மோதி விபத்துக்குள்ளாகியுள்ளது. குறித்த விபத்தானது நேற்றையதினம்(7.3.2026) இடம்பெற்றுள்ளது. இது குறித்து மேலும் தெரியவருகையில், யாழ்ப்பாணத்தில் இருந்து காரைநகர் நோக்கி பயணித்த பேருந்தும், யாழ்ப்பாணம் நோக்கி பயணித்த கன்டர் ரக வாகனமும் மோதியே இந்த விபத்து சம்பவித்துள்ளது. இருப்பினும் உயிர் சேதங்கள் எவையும் ஏற்படவில்லை எனத் தெரிவிக்கப்படுகின்றது. விபத்து சம்பவம் குறித்து விசாரணைகளை மானிப்பாய் பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.