இலங்கை விமானப்படையின் 75ஆம் ஆண்டு விழா

இலங்கை விமானப்படையின் 75 ஆவது ஆண்டு நிறைவைக் கொண்டாடும் வகையில் நடைபெறும் கண்காட்சி மற்றும் வான் சாகச நிகழ்வுகள் நேற்று வெள்ளிக்கிழமை (06) பிற்பகல் ரத்மலானை, இலங்கை விமானப்படை தளத்தில் ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்கவின் தலைமையில் ஆரம்பித்து வைக்கப்பட்டது. விமானப்படைத் தளத்திற்கு வருகை தந்த முப்படைகளின் தளபதி ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க, விமானப்படை மரியாதையுடன் வரவேற்கப்பட்டார். பின்னர் கண்காட்சி அரங்குகளைப் பார்வையிட்ட ஜனாதிபதி, வான் சாகசங்களையும் கண்டுகளித்தார். விமானப்படை அருங்காட்சியகத்தில் ஜனாதிபதி சிறப்பு நினைவுக் […]
இலங்கையில் உள்ள அமெரிக்க குடிமக்களுக்கு தூதரகத்தின் முக்கிய அறிவிப்பு

இலங்கையில் உள்ள அமெரிக்க குடிமக்களுக்கு இலங்கையில் உள்ள அமெரிக்க தூதரகம் முக்கிய அறிவிப்பை வெளியிட்டுள்ளது. கட்டுநாயக்க விமான நிலையம் வழக்கம் போல் இயங்கினாலும், மத்திய கிழக்கு பிராந்தியத்தில் விமான வழித்தடங்கள் மூடப்பட்டதால் உலகளாவிய விமானப் பயணம் இன்னும் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளதாக அதில் குறிப்பிடப்பட்டுள்ளது. இருப்பினும், மத்திய கிழக்கு வழியாக செல்லாத பல வணிக விமானங்களைப் பயன்படுத்தலாம் என்றும், விமான தாமதங்கள் அல்லது இரத்து செய்யப்பட்டால் பயணிகள் தங்கள் விமான நிறுவனத்தை நேரடியாகத் தொடர்புகொள்ள வேண்டும் என்றும் அறிவுறுத்தியுள்ளது. […]
கொழும்புக்கு கொண்டு வரப்பட்டார் ஜப்பானிய கப்பலின் பணியாளர்

கொழும்புக்கு அப்பாலுள்ள மேற்கு கடற்பரப்பில் பயணித்துக்கொண்டிருந்த ஜப்பானிய கடல்சார் தற்காப்புப் படையினருக்குச் சொந்தமான “JMSDF ONAMI” கப்பலில், மருத்துவ சிகிச்சை தேவைப்பட்ட பணியாளர் ஒருவர் பாதுகாப்பாகக் கரைக்கு அழைத்து வரப்பட்டுள்ளார். கொழும்பு கடல்சார் தேடல் மற்றும் மீட்பு ஒருங்கிணைப்பு மையத்தின் ஒருங்கிணைப்புடன், இலங்கை கடற்படையினரின் ஒத்துழைப்புடன் இந்த நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டது. குறித்த நபர் மேலதிக சிகிச்சைக்காகக் கொழும்பு தேசிய வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாகக் கடற்படை தெரிவித்துள்ளது. கப்பல் பணியாளர் ஒருவருக்கு ஏற்பட்ட திடீர் நோய் நிலைமை காரணமாக, அவருக்கு […]
சுற்றுலாத்துறை குறித்து பரப்பப்படும் போலிச் செய்திகள்!

வுஸ்திரேலியர்களுக்கு இலங்கை ஒரு அதிக அபாயகரமான சுற்றுலாத் தலமாக வகைப்படுத்தப்பட்டுள்ளதாக வெளியாகும் செய்திகளை கொழும்பிலுள்ள அவுஸ்திரேலிய உயர்ஸ்தானிகராலயம் நிராகரித்துள்ளது. இலங்கைக்கான அவுஸ்திரேலியாவின் உத்தியோகபூர்வ சுற்றுலா அறிவுறுத்தல் மட்டத்தில் (Travel Advisory Level) எவ்வித மாற்றமும் ஏற்படவில்லை என உயர்ஸ்தானிகராலயம் குறிப்பிட்டுள்ளது. துல்லியமான மற்றும் புதுப்பிக்கப்பட்ட சுற்றுலா ஆலோசனைகளுக்கு உத்தியோகபூர்வ ‘ஸ்மார்ட்ராவலர்’ (Smartraveller) இணையதளத்தை மாத்திரம் நம்பியிருக்குமாறு அவுஸ்திரேலியப் பிரஜைகளிடம் அந்த அலுவலகம் கோரிக்கை விடுத்துள்ளது. சமூக ஊடகங்களில் பரவி வரும் சில செய்திகள், இலங்கைக்கான அவுஸ்திரேலியாவின் சுற்றுலா […]
ஈரான் ஆன்மீகத் தலைவர் அயத்துல்லா அலி கமேனியைப் படுகொலை செய்த பின்னணி

ஈரான் ஆன்மீகத் தலைவர் அயத்துல்லா அலி கமேனியைப் படுகொலை செய்வதற்கான திட்டத்தைத் தீட்டியபோது, இஸ்ரேல் எவ்வாறு தெஹ்ரானின் கண்காணிப்பு கெமெரா அமைப்பிற்குள் சட்டவிரோதமாக நுழைந்து தரவுகளைத் திருடியது என்பது குறித்த தகவல்களை இந்திய ஊடகங்கள் வெளியிட்டுள்ளன. இதன் மூலம் கமேனியின் அன்றாட நடமாட்டங்கள், வாகனங்களை நிறுத்தும் முறை முதல் அவரது பாதுகாவலர்களின் பணி மாற்ற முறைகள் வரையிலான நுணுக்கமான விடயங்கள் மிக நெருக்கமாகக் கண்காணிக்கப்பட்டுள்ளமை அம்பலமாகியுள்ளது. இவ்வாறு திரட்டப்பட்ட தரவுகளைக் கொண்டு, மொசாட் அமைப்பின் ‘8200’ (Eighty-Two […]
இடைநிறுத்தப்பட்டிருந்த காங்கேசன்துறை – நாகப்பட்டினம் பயணிகள் படகுச்சேவை மீண்டும் ஆரம்பம்

பருவகால மழை மற்றும் பராமரிப்புப் பணிகளுக்காக இடைநிறுத்தப்பட்டிருந்த காங்கேசன்துறை – நாகப்பட்டினத்திற்கு இடையேயான பயணிகள் படகுச் சேவையானது நேற்று மீண்டும் ஆரம்பமானது. தமிழ்நாடு நாகப்பட்டினத்திலிருந்து நேற்று காலை 9.30 மணிக்கு 77 பயணிகளுடன் சிவகங்கை பயணிகள் படகானது காங்கேசன்துறை நோக்கிப் புறப்பட்டது. அது மதியம் 2.00 மணியளவில் காங்கேசன்துறை துறைமுகத்தை வந்தடைந்தது. பின்னர் காங்கேசன்துறை துறைமுகத்திலிருந்து 92 பயணிகளுடன் மாலை 3.00 மணிக்கு நாகப்பட்டினம் நோக்கிய பயணத்தை ஆரம்பித்தது. கடந்த ஒக்டோபர் மாதம் 28ஆம் திகதி பருவகால […]
ஈரான் யுத்தக் கப்பலுக்கு இந்தியா அடைக்கலம்?

ஈரானுக்குச் சொந்தமான ‘IRIS Lavan’ எனும் யுத்தக் கப்பலுக்கு அடைக்கலம் வழங்க இந்தியா தீர்மானித்துள்ளது. இதற்கமைய, 183 ஊழியர்களைக் கொண்ட இக்கப்பல் கடந்த 4ஆம் திகதி முதல் கொச்சி துறைமுகத்தில் நங்கூரமிடப்பட்டுள்ளது. IRIS Lavan கப்பலானது கடந்த பெப்ரவரி மாதம் 28ஆம் திகதி அடைக்கலம் கோரியிருந்த நிலையில், மார்ச் 1ஆம் திகதி அதற்கான அனுமதி வழங்கப்பட்டதாக இந்திய ஊடகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.
ஹோர்முஸ் நீரிணையில் கப்பல் மீது தாக்குதல்?

ஹோர்முஸ் நீரிணையில் கப்பல் ஒன்று தாக்குதலுக்கு உள்ளாகியிருப்பதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. ஐக்கிய இராச்சியத்தின் கடல்சார் வர்த்தக நடவடிக்கைகளுக்கான மையத்தின் அறிக்கையை மேற்கோள் காட்டி இந்தத் தகவல் வெளியாகியுள்ளது. ஓமானுக்கு வடக்கே ஆறு கடல் மைல் தொலைவில் இந்தச் சம்பவம் இடம்பெற்றுள்ளதாகக் குறிப்பிடப்பட்டுள்ளது. எவ்வாறாயினும், இது தொடர்பாக ‘மூன்றாம் தரப்பு’ தகவல்கள் வெளியாகியுள்ள போதிலும், உத்தியோகபூர்வமாக உறுதிப்படுத்தப்படவில்லை என பிபிசி உலக சேவை தெரிவித்துள்ளது.
முன் எப்போதும் இல்லாத வகையில் நாடு ஒருவித போர் சூழலுக்குள் தள்ளப்பட்டுள்ளது!

நாம் விரும்பாத ஒரு சூழலுக்கு மத்தியிலும், நாடு ஒருவித போர் நிலைக்குள் தள்ளப்பட்டுள்ளதாக பொதுமக்கள் பாதுகாப்பு பிரதி அமைச்சர் சுனில் வட்டகல நேற்று (06) பாராளுமன்றத்தில் தெரிவித்துள்ளார். சமீபத்திய வரலாற்றில் முன் எப்போதும் இல்லாத வகையில் ஒரு பயங்கரமான செயல்முறையை வேடிக்கை பார்ப்பவர்களாக நாம் மாறியுள்ளதாக பிரதி அமைச்சர் மேலும் குறிப்பிட்டார். அத்துடன், யார் எப்போது எவ்வாறு பாதிக்கப்பட்டவர்களாக மாறுவார்கள் என்பதை எதிர்வு கூற முடியாத ஒரு நிலைமை உருவாகியுள்ளதாகவும் அவர் சுட்டிக்காட்டினார். கடந்த சில தினங்களுக்கு […]
காடுகளுக்கு தீ வைப்பவர்களை உடனே கைது செய்யுமாறு கோரிக்கை

நுவரெலியா மாவட்டத்தில் காடுகளுக்கு தீ வைப்பவர்களை உடன் கைது செய்து சட்டத்தின் முன் நிறுத்த வேண்டும் என பொது மக்கள் கோரிக்கை விடுக்கின்றனர். காடுகளுக்கு தீ வைக்கும் சம்பவங்கள் அதிகரித்து வருகின்றன. இதனால் பெருமளவான காட்டு வளம் அழிக்கப்பட்டுள்ளன. அத்தோடு, காடுகளுக்கு தீ வைப்பதனால் பாரிய குடிநீர் தட்டுப்பாடு ஏற்படுகின்றது. ஹட்டன் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட ரூவன்புர குடாஓயா வீடமைப்பு பகுதியில் அமைந்துள்ள மானா பற்றைக்காட்டுக்கு பகுதிக்கு இனந்தெரியாத விசமிகளால் இன்று பகல் தீ வைக்கப்பட்டுள்ளதனால் அங்குள்ள பெரும் […]