பிரதான வீதியில் லொறி மோதி பாதசாரி உயிரிழப்பு
கந்தானை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட கொழும்பு – நீர்கொழும்பு பிரதான வீதியில் இடம்பெற்ற விபத்தில் பாதசாரி ஒருவர் உயிரிழந்துள்ளார். இந்த சம்பவம் நேற்று வெள்ளிக்கிழமை (06) இரவு இடம்பெற்றுள்ளது. கொழும்பு நோக்கி பயணித்த லொறி ஒன்று, வீதியைக் கடக்க முயன்ற பாதசாரி மீது மோதியதில் இந்த விபத்து நேர்ந்துள்ளது. விபத்தில் படுகாயமடைந்த பாதசாரி, ராகம வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டதன் பின்னர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார். உயிரிழந்தவரின் அடையாளம் இதுவரை உறுதிப்படுத்தப்படவில்லை. விபத்துடன் தொடர்புடைய லொறியின் சாரதி பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார். […]
நிபந்தனையற்ற சரணாகதி தவிர ஈரானுக்கு வழியில்லை – ட்ரம்ப் எச்சரிக்கை

ஈரானுடனான போர் தீவிரமடைந்த நிலையில், நிபந்தனையற்ற சரணாகதி தவிர வேறு எந்த ஒப்பந்தத்திற்கும் இடமில்லை என்று அமெரிக்க ஜனனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் அறிவித்துள்ளார். ட்ரம்ப் தனது ட்ரூத் சமூக வலைதளப் பதிவில், நிபந்தனையற்ற சரணாகதியைத் தவிர ஈரானுடன் வேறு எந்த ஒப்பந்தமும் கிடையாது. அதற்குப் பிறகு, சிறந்த மற்றும் ஏற்றுக்கொள்ளத்தக்கத் தலைவர்(கள்) தேர்ந்தெடுக்கப்பட்டால், நாங்களும் எங்களது அற்புதமான மற்றும் மிகவும் துணிச்சலான கூட்டாளிகளும் இணைந்து, ஈரானை அழிவின் விளிம்பிலிருந்து மீட்டெடுக்க அயராது உழைப்போம். இதன் மூலம் ஈரானைப் […]
இலங்கைக்கு அமெரிக்கா அழுத்தம்

ஐக்கிய அமெரிக்காவானது தாம் இவ்வாரம் மூழ்கடித்த ஈரானிய போர்க்கப்பலில் உயிர் தப்பியவர்களையும் இலங்கையின் கட்டுப்பாட்டிலுள்ள இரண்டாவது ஈரானியக் கப்பலின் மாலுமிகளையும் நாடு கடத்த வேண்டாமென இலங்கை அரசாங்கத்துக்கு ஐக்கிய அமெரிக்கா அழுத்தம் கொடுப்பதாக றொய்ட்டர்ஸால் வெள்ளிக்கிழமை (06) பார்வையிடப்பட்ட உள்ளக இராஜாங்கத் திணைக்களத்தின் கேபிள் வெளிப்படுத்தியுள்ளது. வெள்ளிக்கிழமை (06 திகதியிடப்பட்ட கேபிளில் கொழும்பிலுள்ள ஐக்கிய அமெரிக்கத் தூதரகத்துக்கு பொறுப்பான ஜேய்ன் ஹொவெல், பூஷெர் கப்பலின் மாலுமிகளோ அல்லது டெனாவில் உயிர் தப்பிய 32 பேரோ ஈரானுக்கு நாடுகடத்தப்படக்கூடாதென […]
நாட்டில் அவசரகாலச் சட்டம் அமுலில் உள்ள நிலையில் அடக்குமுறை நடந்திருந்தால் ஆதாரத்தை முன்வையுங்கள்!

நாட்டில் அவசரகாலச் சட்டம் அமுலில் உள்ள நிலையில், அதன் மூலம் ஏதேனும் அடக்குமுறைகள் இடம்பெற்றிருந்தால் அதனை ஆதாரங்களுடன் நிரூபிக்குமாறு பிரதமர்ஹரிணி அமரசூரிய எதிர்க்கட்சியினருக்குச் சவால் விடுத்துள்ளார். நாடாளுமன்றம் நேற்று( 06.03.2026 ) முற்பகல் சபாநாயகர் ஜகத் விக்கிரமரத்ன தலைமையில் கூடிய வேளையில், எதிர்க்கட்சியினரின் குற்றச்சாட்டுகளுக்குப் பதிலளித்துப் பேசிய போதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார். பிரதமர் மேலும் தெரிவிக்கையில், அடக்குமுறை, அடக்குமுறை என்று வெறும் வார்த்தைகளை மட்டும் கூறிக்கொண்டிருக்காமல், உண்மையில் எங்கே அடக்குமுறை நடந்தது என்பதை எங்களிடம் முன்வையுங்கள். […]
அவுஸ்திரேலியாவில் இலங்கைப் பெண் சடலமாக மீட்பு

அவுஸ்திரேலியாவின் விக்டோரியா மாகாணத்தில் உள்ள லொட்ரோப் பகுதியில், உள்ள வீட்டில் இலங்கைப் பெண் உட்பட தம்பதி சடலங்களாக மீட்கப்பட்டுள்ளனர். உயிரிழந்தவர்கள் 46 வயதான ஆரோன் ஹம்மண்ட் மற்றும் 47 வயதான சமிந்திகா ஜெயவர்தன என அடையாளம் காணப்பட்டுள்ளனர். கடந்த சனிக்கிழமை இரவு அந்த வீட்டிலிருந்து 30 விநாடி இடைவெளியில் இரண்டு துப்பாக்கிச் சூடு சத்தங்கள் கேட்டதாக அயலவர்கள் தெரிவித்துள்ளனர். முதற்கட்ட விசாரணையில், இது ஒரு கொலை மற்றும் உயிர் மாய்ப்பு சம்பவமாக இருக்கலாம் என பொலிஸார் சந்தேகிக்கின்றனர். […]
நாடு முழுவதும் பொலிஸார் தீவிர கண்காணிப்பு

ட்ரோன்களை (Drone)பயன்படுத்தி நாட்டின் தேசிய பாதுகாப்பு தொடர்பான உணர்திறன் மிக்க தகவல்களைச் சேகரித்தல் மற்றும் பயங்கரவாதத் தாக்குதல்கள் நடத்தப்படுவதற்கான சாத்தியக்கூறுகளைத் தடுப்பதற்கான நடவடிக்கைகளை எடுக்குமாறு பொலிஸ்மா அதிபர் அனைத்து பொலிஸ் நிலையங்களுக்கும் அறிவுறுத்தல் வழங்கியுள்ளார். இது தொடர்பாக பொலிஸ் ஊடகப் பிரிவு விடுத்துள்ள அறிக்கையில் பின்வருமாறு தெரிவிக்கப்பட்டுள்ளது: ட்ரோன்களை பயன்படுத்தி தேசிய பாதுகாப்புக்கு அச்சுறுத்தல் ஏற்படும் வகையிலான செயற்பாடுகளை முன்னெடுத்தல் மற்றும் பயங்கரவாதத் தாக்குதல்களை மேற்கொள்வதற்கான சாத்தியக்கூறுகளைக் கருத்திற்கொண்டு, அத்தகைய நிலைமைகளைத் தடுப்பதற்குத் தேவையான மேலதிக நடவடிக்கைகளை […]
பாகிஸ்தான் தொடரிலிருந்து பங்களாதேஷ் முக்கிய வீரர்கள் விலகல்?

பாகிஸ்தான் அணிக்கு எதிராக நடைபெறவுள்ள 3 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடருக்கான 15 பேர் கொண்ட பங்களாதேஷ் அணியை அந்நாட்டு கிரிக்கெட் சபை அறிவித்துள்ளது. மெஹிதி ஹாசன் மிராஜ் தலைமையிலான இந்த அணியில் சில முக்கிய வீரர்கள் காயம் காரணமாக இடம்பெறவில்லை. பங்களாதேஷ் அணியின் முன்னணி வேகப்பந்து வீச்சாளர்களான ஹசன் மஹ்மூத் மற்றும் தன்சிம் ஹாசன் சாகிப் ஆகியோர் காயம் காரணமாக இந்தத் தொடரிலிருந்து விலகியுள்ளனர். நீண்ட இடைவேளைக்குப் பிறகு அனுபவ வீரர் அபிஃப் ஹொசைன் மீண்டும் […]
நாட்டு துப்பாக்கி வெடித்து இளைஞர் படுகாயம்; மல்லாவியில் சம்வம்

சட்டவிரோதமாக உடமையில் வைத்திருந்த நாட்டு துப்பாக்கி தவறுதலாக வெடித்ததில் இளைஞர் ஒருவர் கடுமையாக காயமடைந்துள்ளார். இந்த சம்பவம் நேற்று (06.03.2026) பிற்பகல் மல்லாவி ஒட்டறுத்தகுளம் வடகாடு பகுதியில் இடம்பெற்றுள்ளது. சம்பவத்தில் ஒட்டறுத்தகுளம் வடகாடு பகுதியைச் சேர்ந்த 32 வயதுடைய ஆறுமுகம் சகிதன் என்ற இளைஞரே படுகாயமடைந்துள்ளார். சட்டவிரோதமாக தனது உடமையில் வைத்திருந்த நாட்டு துப்பாக்கி தவறுதலாக வெடித்ததன் காரணமாக அவர் கடுமையாக காயமடைந்ததாக ஆரம்பக்கட்ட தகவல்கள் தெரிவிக்கின்றன. காயமடைந்த இளைஞர் உடனடியாக மல்லாவி ஆதார வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு […]
இலங்கை விமானப்படையின் 75ஆம் ஆண்டு விழா

இலங்கை விமானப்படையின் 75 ஆவது ஆண்டு நிறைவைக் கொண்டாடும் வகையில் நடைபெறும் கண்காட்சி மற்றும் வான் சாகச நிகழ்வுகள் நேற்று வெள்ளிக்கிழமை (06) பிற்பகல் ரத்மலானை, இலங்கை விமானப்படை தளத்தில் ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்கவின் தலைமையில் ஆரம்பித்து வைக்கப்பட்டது. விமானப்படைத் தளத்திற்கு வருகை தந்த முப்படைகளின் தளபதி ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க, விமானப்படை மரியாதையுடன் வரவேற்கப்பட்டார். பின்னர் கண்காட்சி அரங்குகளைப் பார்வையிட்ட ஜனாதிபதி, வான் சாகசங்களையும் கண்டுகளித்தார். விமானப்படை அருங்காட்சியகத்தில் ஜனாதிபதி சிறப்பு நினைவுக் […]
இலங்கையில் உள்ள அமெரிக்க குடிமக்களுக்கு தூதரகத்தின் முக்கிய அறிவிப்பு

இலங்கையில் உள்ள அமெரிக்க குடிமக்களுக்கு இலங்கையில் உள்ள அமெரிக்க தூதரகம் முக்கிய அறிவிப்பை வெளியிட்டுள்ளது. கட்டுநாயக்க விமான நிலையம் வழக்கம் போல் இயங்கினாலும், மத்திய கிழக்கு பிராந்தியத்தில் விமான வழித்தடங்கள் மூடப்பட்டதால் உலகளாவிய விமானப் பயணம் இன்னும் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளதாக அதில் குறிப்பிடப்பட்டுள்ளது. இருப்பினும், மத்திய கிழக்கு வழியாக செல்லாத பல வணிக விமானங்களைப் பயன்படுத்தலாம் என்றும், விமான தாமதங்கள் அல்லது இரத்து செய்யப்பட்டால் பயணிகள் தங்கள் விமான நிறுவனத்தை நேரடியாகத் தொடர்புகொள்ள வேண்டும் என்றும் அறிவுறுத்தியுள்ளது. […]