டோஹாவின் வான்பரப்பில் இஸ்ரேலின் ஏவுகணைகள் முறியடிப்பு!

கட்டார் தலைநகர் டோஹாவின் வான்பரப்பில் தொடர்ச்சியான ஏவுகணைத் தாக்குதல்கள் முறியடிக்கப்பட்டு வருவதால், நகரின் மத்திய பகுதியில் இடைவிடாத வெடிப்புச் சத்தங்கள் கேட்டவண்ணம் உள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. டோஹா நகரின் மத்தியப் பகுதிக்கு மிக அண்மித்த வான்பரப்பில் தொடர்ச்சியான பலத்த வெடிப்புச் சத்தங்கள் பதிவாகி வருவதாக அந்த செய்தியில் குறிப்பிடப்பட்டுள்ளது. கட்டார் வான் பாதுகாப்பு கட்டமைப்புகள் இஸ்ரேல் அல்லது ஏனைய தரப்புகளிடம் இருந்து ஏவப்படும் ஏவுகணைகளைத் தொடர்ந்து இடைமறித்து அழித்து வருவதாக கட்டார் பாதுகாப்பு அமைச்சகம் மீண்டும் உறுதிப்படுத்தியுள்ளது. முன்னதாக […]
நாட்டில் நிலவும் எரிபொருள் மற்றும் எரிவாயு தட்டுப்பாடு திட்டமிட்டது – அசேல சம்பத்

நாட்டின் தற்போதைய எரிபொருள் மற்றும் எரிவாயு தட்டுப்பாடுகள் திட்டமிட்டு உருவாக்கப்பட்டவை. ஜனாதிபதி அண்மையில் வெளியிட்ட கருத்துக்கள் உண்மையான நிலையை மறைப்பதாகவே அமைந்துள்ளன என அகில இலங்கை சிற்றுண்டிச்சாலை உரிமையாளர்கள் சங்கத்தின் தேசிய ஒருங்கிணைப்பாளர் அசேல சம்பத் தெரிவித்துள்ளார். தேசிய நுகர்வோர் முன்னணி காரியாலயத்தில் வியாழக்கிழமை (5) நடைபெற்ற விசேட ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்து கொண்டு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார். அங்கு அவர் மேலும் கூறுகையில்; கடந்த காலங்களில் மக்கள் எரிவாயுவுக்காக நீண்ட வரிசைகளில் […]
மத்திய கிழக்கு பதற்றம்; ஈரான் வௌிவிவகார அமைச்சருடன் ஜெய்ஷங்கர் கலந்துரையாடல்

ஈரானை அமெரிக்காவும், இஸ்ரேலும் கூட்டாக இணைந்து வான்வழியாக கடந்த பிப்ரவரி 28 ஆம் திகதி கடுமையாக தாக்கின. தொடர்ந்து நடந்த தாக்குதலில் பெண்கள், குழந்தைகள் என ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் பலியாகி உள்ளனர். ஈரானும் பதிலுக்கு தாக்குதலை தீவிரப்படுத்தி உள்ளது. இதனால் மத்திய கிழக்கு பகுதியில் கடும் பதற்றம் காணப்படுகிறது. மேற்காசியாவில் நடந்து வரும் மோதலுக்கு இடையே, ஈரான் வெளியுறவு அமைச்சர் சையத் அப்பாஸ் அராக்சியை, இந்திய மத்திய வெளியுறவுத்துறை அமைச்சர் எஸ் ஜெய்சங்கர் நேற்று (5) தொலைபேசி […]
ஈரானுக்குச் சொந்தமான கப்பலை திருமலை துறைமுகத்திற்கு கொண்டு வர நடவடிக்கை

ஈரானுக்குச் சொந்தமான ‘IRIS Bushehr’ கப்பலை திருகோணமலை துறைமுகத்திற்கு கொண்டு வருவதற்கு நடவடிக்கை எடுத்து வருவதாகவும், அக்கப்பலில் இருந்த 208 பணியாளர்களை கொழும்பு துறைமுகத்திற்கு அழைத்து வருவதற்குத் தேவையான நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டு வருவதாவும் ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க தெரிவித்துள்ளார். ஜனாதிபதி செயலகத்தில் நேற்று ஊடகங்களுக்கு கருத்து தெரிவித்த ஜனாதிபதி, இலங்கையின் நிலப்பரப்பு, கடல் எல்லைகள் மற்றும் வான்பரப்பு ஆகியவற்றை எந்தவொரு அரசும் மோதல்களின் போது ஒரு தரப்பிற்கு ஆதரவாகப் பயன்படுத்துவதற்கோ அல்லது வேறு நாடுகளுக்கு பாதிப்பு ஏற்படும் […]
வைத்தியசாலை பிரேத அறையில் பெண் உடல் துஷ்பிரயோகம்: குற்றவாளிகளுக்கு கடுமையகத் தண்டிக்க வேண்டும்

வைத்தியசாலையொன்றில் பிரேத அறையில் இருந்த பெண்ணின் உடல் துஸ்பிரயோகத்திற்குள்ளான சம்பவம் வன்மையாக கண்டிக்கத்தக்கது. இந்த சம்பவத்துடன் தொடர்புடையவர்கள் தொடர்பில் உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும் என்று ஐக்கிய மக்கள் சக்தி பாராளுமன்ற உறுப்பினர் ரோஹிணி குமாரி கவிரத்ன தெரிவித்தார். பாராளுமன்றத்தில் நேற்று வியாழக்கிழமை (5) நடைபெற்ற சர்வதேச மகளிர் தினம் தொடர்பான சபை ஒத்திவைப்பு விவாதத்தில் உரையாற்றுகையில் மேற்கண்டவாறு குறிப்பிட்டார். அங்கு அவர் மேலும் உரையாற்றியதாவது, உயிரிழந்த பெண்ணொருவரின் உடல் வைத்தியசாலையில் உள்ள பிரேத அறையில் […]
இருபதுக்கு – 20 உலகக் கிண்ணம்: இறுதிப் போட்டியில் இந்தியா

சர்வதேச கிரிக்கெட் சபையின் இருபதுக்கு – 20 உலகக் கிண்ணத் தொடரின் இறுதிப் போட்டிக்கு நடப்புச் சம்பியன்களான இந்தியா தகுதி பெற்றுள்ளது. மும்பையில் முடிவுக்கு வந்த இங்கிலாந்துக்கெதிரான இரண்டாவது அரையிறுதிப் போட்டியில் வென்றதன் மூலமே இறுதிப் போட்டிக்கு இந்தியா தகுதி பெற்றுள்ளது. ஸ்கோர் விவரம்: நாணயச் சுழற்சி: இந்தியா இந்தியா: 253/7 (20 ஓவ. ) (துடுப்பாட்டம்: சஞ்சு சாம்சன் 89 (42), ஷிவம் டுபே 43 (25), இஷன் கிஷன் 39 (18), ஹர்திக் பாண்டியா […]
வடக்கு மாகாண கால்நடை விவசாயத்தை ஒரு ‘மௌனப் பேரழிவு’ தாக்கியுள்ளது – செல்வம் அடைக்கலநாதன் எம்.பி

வடக்கு மாகாண கால்நடை விவசாயத்தை ஒரு ‘மௌனப் பேரழிவு’ தாக்கியுள்ளது. திடீர் வெப்பநிலை குறைவு மற்றும் தொடர்ச்சியான மழை காரணமாக, கடந்த 48 மணி நேரத்திற்குள் ஆயிரக்கணக்கான கால்நடைகளும் ஆடுகள் கோழிகள் உயிரிழந்துள்ளன. இது வெறும் விலங்குகளின் இழப்பு மட்டுமல்ல, ஆயிரக்கணக்கான குடும்பங்களின் கிராமியப் பொருளாதாரத்தின் முழுமையான வீழ்ச்சியாகும். என ஜனநாயக தமிழ் தேசிய கூட்டணியின் வன்னி மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் செல்வம் அடைக்கலநாதன் தெரிவித்தார். பாராளுமன்றத்தில் நேற்று வியாழக்கிழமை (5) நடைபெற்ற அமர்வின் போது நிலையியற் […]