கொழும்புத் துறைமுகத்திற்கு அழைத்துவரப்பட்டனர் IRIS Bushehr கப்பல் இருந்த பணியாளர்கள்!

இலங்கை கடல் எல்லைக்கு அருகே நங்கூரமிட்டிருந்த ஈரானின் ‘IRIS Bushehr’ கப்பலில் இருந்த பணியாளர்களில் 204 பேரை இலங்கை கடற்படையினர் பாதுகாப்பாக கொழும்பு துறைமுகத்திற்கு அழைத்து வந்துள்ளதாக கடற்படை ஊடகப் பேச்சாளர் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக நேற்று (5) விசேட அறிவிப்பொன்றை வெளியிட்ட ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க, சம்பந்தப்பட்ட கப்பலை திருகோணமலை துறைமுகத்திற்கு கொண்டு செல்வதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாகத் தெரிவித்தார். குறித்த கப்பலில் மொத்தம் 208 பணியாளர்கள் இருந்ததாகக் குறிப்பிடப்பட்டுள்ளது.
அரச புலனாய்வுப் பிரிவின் முன்னாள் பணிப்பாளர் கைது; எதிரான மனு
அரச புலனாய்வு பிரிவின் முன்னாள் பணிப்பாளர் மேஜர் ஜெனரல் (ஓய்வு) சுரேஷ் சலேவை பயங்கரவாதத் தடைச் சட்டம் கீழ் கைது செய்து தடுத்து வைத்திருப்பதை சவாலுக்கு உட்படுத்தி உச்சநீதிமன்றத்தில் அடிப்படை உரிமை மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது. இந்த அடிப்படை உரிமை மீறல் மனுவை ஓய்வு பெற்ற வான்படை அதிகாரி ஒருவர் தாக்கல் செய்துள்ளார். இதில் பாதுகாப்பு அமைச்சர், பாதுகாப்பு அமைச்சின் செயலாளர், பொதுப் பாதுகாப்பு அமைச்சின் செயலாளர், பொலிஸ் மா அதிபர் உள்ளிட்டோரும் குற்றப்புலனாய்வு திணைக்களமும் மனுவின்பிரதிவாதிகளாக […]
கிளிமடுச்சேனை விபத்தில் இரண்டு சிறுவர்கள் பலி!
புத்தளம், மதுரங்குளிய பொலிஸ் பிரிவின் கிளிமடுச்சேனை பகுதியில் நேற்று இடம்பெற்ற இந்த விபத்தில், 2 சிறுவர்கள் உயிரிழந்துள்ளனர். கிளிமடுச்சேனை பகுதியைச் சேர்ந்த 8 மற்றும் 13 வயதுடைய இரண்டு சிறுவர்களே இவ்வாறு உயிரிழந்துள்ளனர். மதுரங்குளியவில் இருந்து ரணவிரு வசந்த மாவத்தை வழியாக குருங்கன்வெட்டிய நோக்கி பயணித்த லொறி, எதிர் திசையில் இருந்து வந்த இரு சிறுவர்கள் பயணித்த சைக்கிளில் மோதியது. அப்போது இரண்டு சிறுவர்கள் பலத்த காயமடைந்து புத்தளம் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட பின்னர் உயிரிழந்ததாக பொலிஸார் தெரிவித்தனர். […]
அரசை பாதுகாக்கும் பயங்கரவாத தடுப்பு சட்டத்தினை நீக்கவேண்டும் – மட்டக்களப்பு மாநகரசபையில் தீர்மானம்

மட்டக்களப்பு மாநகரசபையில் அரசை பாதுகாக்கும் பயங்கராத தடுப்பு சட்டத்தினையும் பயங்கரவாத தடைச்சத்தினையும் நீக்கவேண்டும் என மட்டக்களப்பு மாநகரசபையில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது. மட்டக்களப்பு மாநகரசபையின் அமர்வு நேற்றைய தினம் (05) மட்டக்களப்பு மாநகரசபையின் முதல்வர் சிவம்பாக்கியநாதன் தலைமையில் நடைபெற்றுள்ளது. மட்டக்களப்பு மாநகரசபையின் சம்பிரதாயங்களுக்கு அமைவாக ஆரம்பிக்கப்பட்டு முதல்வரின் தலைமையுரையுடன் சபை நடவடிக்கைகள் ஆரம்பமானது. இதன்போது சபையின் குழுக்களினால் கலந்துரையாடப்பட்டு எடுக்கப்பட்ட தீர்மானங்கள் சபையில் சமர்ப்பிக்கப்பட்டு பல்வேறு வாதப்பிரதிவாதங்களுக்கு மத்தியில் நிறைவேற்றப்பட்டுள்ளது. மாநகரசபை அமர்வில் இன்றைய அரசாங்கத்தினால் பல வீதிகளை […]
சர்வதேச படுகொலைகள் பற்றிப் பேசுகின்றோம் செஞ்சோலையில் கொல்லப்பட்ட குழந்தைகளுக்கு நீதி எங்கே?

செஞ்சோலையில் விமான தாக்குதல் மூலம் மோசமாக கொல்லப்பட்ட பெண் குழந்தைகளுக்கான நீதி இதுவரை கிடைக்கவில்லை என நாடாளுமன்ற உறுப்பினர் சிவஞானம் சிறீதரன் கேள்வி எழுப்பினார். நாடாளுமன்றில் நேற்றையதினம் (5.3.2026) உரையாற்றும் போதே அவர் இந்த கேள்வியை எழுப்பினார். அவர் மேலும் தெரிவிக்கையில், இன்று சர்வதேசத்தில் படுகொலை செய்யப்படுபவர்கள் குறித்து பேசுகின்றோம், இதேபோல தான் அப்போது செஞ்சோலையில் பெண் குழந்தைகள் விமான தாக்குதல் மூலம் மோசமாக கொல்லப்பட்டார்கள். அவர்களுக்கான நீதி இதுவரை கிடைக்கவில்லை. தமிழீழ விடுதலை புலிகளை சேர்ந்த […]
இதுவரை 3 இலட்சத்திற்கும் அதிகமான லெபனான் மக்கள் இடம்பெயர்வு

லெபனான் மீது இஸ்ரேல் முன்னெடுத்து வரும் தொடர்ச்சியான வான்வழி மற்றும் தரைவழித் தாக்குதல்கள் காரணமாக இதுவரை 3 இலட்சத்திற்கும் அதிகமான லெபனான் மக்கள் இடம்பெயர்ந்துள்ளனர் என இஸ்ரேலிய இராணுவம் தெரிவித்துள்ளதாக அல்ஜெஸீரா செய்திகள் தெரிவிக்கின்றன. லெபனானின் லிட்டானி ஆற்றுக்கு தெற்கே வசிக்கும் பொதுமக்கள் அனைவரும் அங்கிருந்து வெளியேறுமாறு இஸ்ரேலிய இராணுவம் கட்டளையிட்டுள்ளது. அதனடிப்படையில், லெபனான் முழுவதும் 320 இற்கும் மேற்பட்ட இடங்களை இலக்கு வைத்துத் தாக்குதல்கள் நடத்தப்பட்டுள்ளதாக இஸ்ரேலிய இராணுவப் பேச்சாளர் ஒருவர் தெரிவித்துள்ளார். இந்தத் தாக்குதல்களின் […]
டோஹாவின் வான்பரப்பில் இஸ்ரேலின் ஏவுகணைகள் முறியடிப்பு!

கட்டார் தலைநகர் டோஹாவின் வான்பரப்பில் தொடர்ச்சியான ஏவுகணைத் தாக்குதல்கள் முறியடிக்கப்பட்டு வருவதால், நகரின் மத்திய பகுதியில் இடைவிடாத வெடிப்புச் சத்தங்கள் கேட்டவண்ணம் உள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. டோஹா நகரின் மத்தியப் பகுதிக்கு மிக அண்மித்த வான்பரப்பில் தொடர்ச்சியான பலத்த வெடிப்புச் சத்தங்கள் பதிவாகி வருவதாக அந்த செய்தியில் குறிப்பிடப்பட்டுள்ளது. கட்டார் வான் பாதுகாப்பு கட்டமைப்புகள் இஸ்ரேல் அல்லது ஏனைய தரப்புகளிடம் இருந்து ஏவப்படும் ஏவுகணைகளைத் தொடர்ந்து இடைமறித்து அழித்து வருவதாக கட்டார் பாதுகாப்பு அமைச்சகம் மீண்டும் உறுதிப்படுத்தியுள்ளது. முன்னதாக […]
நாட்டில் நிலவும் எரிபொருள் மற்றும் எரிவாயு தட்டுப்பாடு திட்டமிட்டது – அசேல சம்பத்

நாட்டின் தற்போதைய எரிபொருள் மற்றும் எரிவாயு தட்டுப்பாடுகள் திட்டமிட்டு உருவாக்கப்பட்டவை. ஜனாதிபதி அண்மையில் வெளியிட்ட கருத்துக்கள் உண்மையான நிலையை மறைப்பதாகவே அமைந்துள்ளன என அகில இலங்கை சிற்றுண்டிச்சாலை உரிமையாளர்கள் சங்கத்தின் தேசிய ஒருங்கிணைப்பாளர் அசேல சம்பத் தெரிவித்துள்ளார். தேசிய நுகர்வோர் முன்னணி காரியாலயத்தில் வியாழக்கிழமை (5) நடைபெற்ற விசேட ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்து கொண்டு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார். அங்கு அவர் மேலும் கூறுகையில்; கடந்த காலங்களில் மக்கள் எரிவாயுவுக்காக நீண்ட வரிசைகளில் […]
மத்திய கிழக்கு பதற்றம்; ஈரான் வௌிவிவகார அமைச்சருடன் ஜெய்ஷங்கர் கலந்துரையாடல்

ஈரானை அமெரிக்காவும், இஸ்ரேலும் கூட்டாக இணைந்து வான்வழியாக கடந்த பிப்ரவரி 28 ஆம் திகதி கடுமையாக தாக்கின. தொடர்ந்து நடந்த தாக்குதலில் பெண்கள், குழந்தைகள் என ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் பலியாகி உள்ளனர். ஈரானும் பதிலுக்கு தாக்குதலை தீவிரப்படுத்தி உள்ளது. இதனால் மத்திய கிழக்கு பகுதியில் கடும் பதற்றம் காணப்படுகிறது. மேற்காசியாவில் நடந்து வரும் மோதலுக்கு இடையே, ஈரான் வெளியுறவு அமைச்சர் சையத் அப்பாஸ் அராக்சியை, இந்திய மத்திய வெளியுறவுத்துறை அமைச்சர் எஸ் ஜெய்சங்கர் நேற்று (5) தொலைபேசி […]
ஈரானுக்குச் சொந்தமான கப்பலை திருமலை துறைமுகத்திற்கு கொண்டு வர நடவடிக்கை

ஈரானுக்குச் சொந்தமான ‘IRIS Bushehr’ கப்பலை திருகோணமலை துறைமுகத்திற்கு கொண்டு வருவதற்கு நடவடிக்கை எடுத்து வருவதாகவும், அக்கப்பலில் இருந்த 208 பணியாளர்களை கொழும்பு துறைமுகத்திற்கு அழைத்து வருவதற்குத் தேவையான நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டு வருவதாவும் ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க தெரிவித்துள்ளார். ஜனாதிபதி செயலகத்தில் நேற்று ஊடகங்களுக்கு கருத்து தெரிவித்த ஜனாதிபதி, இலங்கையின் நிலப்பரப்பு, கடல் எல்லைகள் மற்றும் வான்பரப்பு ஆகியவற்றை எந்தவொரு அரசும் மோதல்களின் போது ஒரு தரப்பிற்கு ஆதரவாகப் பயன்படுத்துவதற்கோ அல்லது வேறு நாடுகளுக்கு பாதிப்பு ஏற்படும் […]