இலங்கைக்குக் கடத்துவதற்காகப் பதுக்கி வைக்கப்பட்டிருந்த மாத்திரைகள் மண்டபத்தில் பறிமுதல்

இராமநாதபுரம் மாவட்டம் மண்டபம் அருகே இலங்கைக்குக் கடத்துவதற்காகப் பதுக்கி வைக்கப்பட்டிருந்த 10 லட்சம் ரூபாய் மதிப்பிலான வலி நிவாரணி மற்றும் வெளிநாட்டு மாத்திரைகளை க்யூ பிரிவு மற்றும் சுங்கத்துறை அதிகாரிகள் புதன்கிழமை (04) அன்று அதிகாலை பறிமுதல் செய்துள்ளனர். 20,400 வலி நிவாரணி மாத்திரைகள், 4,800 வெளிநாட்டு வயாகரா மாத்திரைகள் மற்றும் அழகு சாதனப் பொருட்கள் ஆகியனவே கைப்பற்றப்பட்டன.கைப்பற்றப்பட்ட பொருட்களின் இந்திய மதிப்பில் ரூ. 10 லட்சமாகும். கடத்தலுக்குப் பயன்படுத்தத் தயார் நிலையில் இருந்த ஒரு படகு […]
பண்டாரவளை ஆற்றிலிருந்து ஆணின் சடலம் மீட்பு
பண்டாரவளை, கடுகஹ லெவ்வெதென்ன பாலத்திற்கு அருகில் உள்ள ஆற்றில் இருந்து புதன்கிழமை (4) அன்று சடலமொன்று மீட்கப்பட்டதாக பண்டாரவளை பொலிஸார் தெரிவித்தனர். பண்டாரவளை, பட்டியகெதர எனசல்பெத்த பகுதியைச் சேர்ந்த ஒரு பிள்ளையின் தந்தையான 47 வயதுடைய லக்ஷ முதியன்சேலாகே வசந்த பிரியதர்ஷன என்பவரே இவ்வாறு சடலமாக மீட்கப்பட்டுள்ளார். விவசாயத் தொழிலில் ஈடுபட்டு வந்த குறித்த நபர், தனது பிள்ளையுடனும் வயோதிப தாயுடனும் பட்டியகெதர ஏனசல்பெத்த வீட்டில் வசித்து வந்ததாகவும், இவரது மனைவி வெல்லவாய பகுதியில் வசித்து வருவதாகவும் […]
ஒரு பெண் சடலமாகி பிணவறையில் வைக்கப்பட்டிருந்தாலும் பாதுகாப்பு இல்லை?

டிக்கோயா – கிளங்கன் வைத்தியசாலையில் உயிரிழந்த யுவதியொருவரின் உடல் பிணவறையில் வைத்து துஷ்பிரயோகத்திற்கு உள்ளாக்கப்பட்டுள்ள சம்பவமானது, இந்த நாட்டில் உயிரிழந்த பெண்களுக்குக்கூட பாதுகாப்பு இல்லாத நிலையை உறுதிப்படுத்துவதாக மலையக மக்கள் முன்னணியின் தலைவரும் பாராளுமன்ற உறுப்பினருமான வே. இராதாகிருஷ்ணன் தெரிவித்தார். பாராளுமன்றத்தில் புதன்கிழமை(4) அன்று சுகாதார அமைச்சரிடம் விசேட கோரிக்கையொன்றை முன்வைத்து உரையாற்றும் போதே அவர் இதனைக் குறிப்பிட்டார். இது குறித்து அவர் மேலும் தெரிவிக்கையில்: “கிளங்கன் வைத்தியசாலையில் உயிரிழந்த 23 வயதுடைய யுவதியொருவரின் உடல் பிணவறையில் […]
நயாகரா பிராந்திய காவல்துறையால் 9-1-1 தொழில்நுட்பம் புதுப்பிப்பு!

நயாகரா பிராந்திய காவல்துறை சேவை வழங்குநர்கள் அடுத்த 9-1-1 (NG9-1-1) தலைமுறைக்கு மேம்படுத்த வேண்டும் என்பதற்கிணங்க, 9-1-1 தொழில்நுட்பத்தை புதுப்பித்து வருகிறது. இந்த மாற்றம் அரசின் அனைத்து நிலைகள், அவசர சேவை வழங்குநர்கள் மற்றும் தொலைத்தொடர்பு நிறுவனங்கள் இணைந்து செயல்படும் ஒரு கூட்டுத் திட்டமாகும் என நயாகரா பிராந்திய காவல்துறை தனது சமூக வலைத்தளத்தில் பதிவு செய்துள்ளது. இது ஒன்டாரியோ மாகாண அரசு வழங்கும் நிதியுதவியின் மூலம் செயல்படுத்தப்படுகிறது. நயாகரா முழுவதும் உள்ள அவசர சேவைகள், இந்த […]
ஒன்டாரியோ மாகாண நெடுஞ்சாலைகளுடன் Ring of Fire பகுதியை இணைக்கும் சாலைகள்திட்டம் மிக விரைவில் நிறைவு பெறும் – ஒன்டாரியோ முதல்வர்

ஒன்டாரியோ மாகாண நெடுஞ்சாலைகளுடன் Ring of Fire பகுதியை இணைக்கும் சாலைகள் திட்டமிட்ட கால அட்டவணையை விட முன்பே நிறைவு செய்யப்படும் என ஒன்டாரியோ முதல்வர் டக் பேர்ட் தெரிவித்துள்ளார். இந்த ஆண்டிலேயே ஒன்டாரியோ நெடுஞ்சாலைகளை கனிம வளங்கள் நிறைந்த Ring of Fire பகுதியுடன் இணைக்கும் பணிகள் தொடங்கப்படும் என்றும், அந்தப் பகுதிக்கான சாலைகள் தற்போது 2031 நவம்பர் மாதத்திற்குள் தயாராகும் என எதிர்பார்க்கப்படுகின்றன என்றும் முதல்வர் டக் பேர்ட் தெரிவித்தார். புதிய கால அட்டவணையின்படி, […]
“ஈரானின் புதிய தலைவரும் கொல்லப்படுவார்” – இஸ்ரேல் எச்சரிக்கை

ஈரான் பயங்கரவாத ஆட்சியால் நியமிக்கப்படும் ஒவ்வொரு தலைவரும், யாராக இருந்தாலும் அவர்கள் அழிக்கப்படுவார்கள் என புதிய ஆட்சியாளருக்கு இஸ்ரேல் எச்சரிக்கை விடுத்துள்ளது. அமெரிக்கா, இஸ்ரேல் தாக்குதலில் கமேனி கொல்லப்பட்ட நிலையில், அவரது மகன் மொஜ்தபா, ஈரான் புதிய ஆட்சியாளர் மற்றும் மத குருவாக தேர்வு செய்யப்பட்டுள்ளார். அவருக்கு இஸ்ரேல் பாதுகாப்பு துறை அமைச்சர் காட்ஸ் எச்சரிக்கை விடுத்துள்ளார். அவர் சமூக வலைத்தளத்தில் வெளியிட்டுள்ள பதிவில், இஸ்ரேலை அழிக்கவும், அமெரிக்காவையும், உலகத்தையும், பிராந்திய நாடுகளையும் அச்சுறுத்தல் விடுக்க முடியாது. […]
வலி. வடக்கு ஊரணி மீனவர்கள் இருவர் காணமற் போயுள்ளமை குறித்து அரசு அக்கறை கொள்ளவில்லை
யாழ்ப்பாணம், வலி. வடக்கு ஊரணி பகுதியிலிருந்து கடலுக்குச் சென்ற இரண்டு மீனவர்கள் மாயமாகி ஆறு நாட்கள் கடந்துள்ள நிலையிலும், அரசாங்கம் அவர்களை கண்டுபிடிக்க எவ்வித நடவடிக்கையும் எடுக்கவில்லை என பாதிக்கப்பட்ட குடும்பத்தினர் மற்றும் மீனவ சங்கத்தினர் கடும் குற்றச்சாட்டுகளை முன்வைத்துள்ளனர். கடந்த வெள்ளிக்கிழமை (27) ஊரணி அன்னை வேளாங்கண்ணி கடற்றொழில் சங்கத்தைச் சேர்ந்த இரண்டு மீனவர்கள் வழமை போல மீன்பிடிக்க கடலுக்கு சென்றுள்ளனர். மறுநாள் அவர்கள் கரை திரும்பாததால் அதிர்ச்சியடைந்த சக மீனவர்கள், கடலுக்குள் சென்று தேடுதல் […]
ஜனாதிபதியின் அவசரத் திட்டம்

மத்திய கிழக்கு பிராந்தியத்தில் நிலவி வரும் போர்ச் சூழலால் இலங்கையின் பொருளாதாரத்திற்கு ஏற்படக்கூடிய தாக்கங்கள் மற்றும் அவற்றை நிர்வகிப்பதற்கான உடனடி நடவடிக்கைகள் குறித்த விசேட கலந்துரையாடல், ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க தலைமையில் இன்று (04) முற்பகல் ஜனாதிபதி அலுவலகத்தில் நடைபெற்றது. எதிர்கால நிலைமைகளை முன்கூட்டியே கணிப்பது கடினம் என்றாலும், அனைத்துத் துறைகளிலும் ஏற்படும் மாற்றங்களைத் தொடர்ந்து கண்காணித்து, சவால்களை ஒன்றிணைந்து வெற்றிகொள்ள வேண்டுமென ஜனாதிபதி இதன்போது அதிகாரிகளுக்கு வலியுறுத்தினார். இக்கலந்துரையாடலில் எடுக்கப்பட்ட முக்கிய முடிவுகள் வருமாறு: […]
காட்டு யானைகளால் சிறைக் கைதிகளின் நெற்செய்கை அழிந்தது!

மட்டக்களப்பு சிறைச்சாலையில் உள்ள கைதிகளினால் பயிரிடப்பட்டு, அறுவடைக்குத் தயாரான நிலையில் இருந்த மூன்று ஏக்கர் நெற் செய்கை காட்டு யானை தாக்குதலால் முற்றாக அழிவடைந்துள்ளதாக, மட்டக்களப்பு திறந்த வெளிச் சிறைச்சாலை பொறுப்பதிகாரி திலிப் பிரான்சிஸ் தெரிவித்தார். மட்டக்களப்பு விமான நிலையத்திற்கு பின்னால் உள்ள திருப்பெருந்துறை திறந்தவெளி சிறைச்சாலை காணியில் இந்த நெற்செய்கை மேற்கொள்ளப்பட்டிருந்தது. அறுவடைக்குத் தயாராக இருந்த நிலையில், நள்ளிரவு வேளையில் வயல் நிலத்திற்குள் புகுந்த காட்டு யானை, அங்கிருந்த பயிர்களை மிதித்தும் உண்டும் அழித்துள்ளது. குறித்த […]
நடிகர் விஜயை பின்தொடர்ந்தவர்கள் மருதத்துவமனையில் அனுமதி

தமிழக வெற்றிக் கழகம் (TVK) தலைவரும் நடிகரான விஜய்யின் வாகனத்தை இருசக்கர வாகனத்தில் பின்தொடர்ந்து சென்ற இரண்டு இளைஞர்கள் விபத்தில் காயமடைந்துள்ளனர். திருச்சியைச் சேர்ந்த மூன்றாம் ஆண்டு கல்லூரி மாணவர் விக்னேஷ் (20) மற்றும் அவரது நண்பர் அருண் (21) ஆகியோர், தஞ்சாவூர் அருகே சென்றபோது அவர்கள் பயணித்த இருசக்கர வாகனம் எதிர்பாராத விதமாக காரின் மீது மோதி விபத்துக்குள்ளானது. இந்த விபத்தில் விக்னேஷுக்கு தலையில் பலத்த காயம் ஏற்பட்டுள்ளது. அவர் தற்போது மருத்துவமனையில் தீவிர சிகிச்சைப் […]