ஒன்டாரியோவின் அறிவியல் மைய புதிய வளாகத் திட்டம்

ஒன்டாரியோவின் அறிவியல் மையம் (Ontario Science Centre) உடைய முற்றிலும் புதிய வளாகத்திற்கான திட்டங்களை Ontario Place-இல் நாம் வெளியிட்டோம் என ஒன்ராறியோ முதல்வர் டக் பேர்ட் தனது சமூக வலைத்தளத்தில் பதிவிட்டுள்ளார். இந்த நவீன தரத்திலான வசதி முன்பெப்போதும் இல்லாத அளவுக்கு அதிக நிகழ்ச்சி இடத்தை கொண்டிருக்கும். மேலும், சினிஸ்பியர் (Cinesphere) உட்பட Ontario Place-இன் புகழ்பெற்ற ‘பாட்ஸ்’ அமைப்புகளையும் ஒருங்கிணைத்து, முழு குடும்பமும் அனுபவிக்கக்கூடிய அற்புதமான புதிய காட்சிகள் மற்றும் கல்வி அனுபவங்களையும் சிறப்பாக […]
இரட்டைக் கொலை: இரண்டாவது துப்பாக்கிதாரி உட்பட மூவருக்கு விளக்கமறியல்!
அக்குரேகொட பகுதியில் சட்டத்தரணி மற்றும் அவரது மனைவி படுகொலை செய்யப்பட்ட சம்பவத்துடன் தொடர்புடைய இரண்டாவது துப்பாக்கிதாரியுடன் கைது செய்யப்பட்ட ஏனைய இரு சந்தேகநபர்களையும் எதிர்வரும் மார்ச் மாதம் 12 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. இந்த இரட்டைக் கொலைச் சம்பவத்திற்காக துப்பாக்கிதாரிகள் பயணித்த மோட்டார் காரைச் செலுத்திய சாரதி மற்றும் தாக்குதலின் பின்னர் துப்பாக்கிதாரிகளுக்குத் தங்குமிட வசதிகளைச் செய்து கொடுத்த நபர் ஆகிய இருவருமே இவ்வாறு விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளனர். இவர்களுடன் கைது செய்யப்பட்ட […]
தலிபான் தளங்கள் மீது பாகிஸ்தான் வான்வழித் தாக்குதல்!

ப்கானிஸ்தானில் உள்ள தலிபான் கிளர்ச்சியாளர்களை இலக்கு வைத்து பாகிஸ்தான் நேற்றிரவு வியாழக்கிழமை (26) முன்னெடுத்த பாரிய வான்வழித் தாக்குதல்களில், குறைந்தது 133 தலிபான் உறுப்பினர்கள் உயிரிழந்துள்ளமை உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. நீண்டகாலமாக நீடித்து வரும் எல்லைப் பிரச்சினை காரணமாக, ஆப்கானிஸ்தான் தரப்பிலிருந்து பாகிஸ்தான் மீது அண்மையில் தாக்குதல்கள் முன்னெடுக்கப்பட்டன. இதற்குப் பழிவாங்கும் நடவடிக்கையாகவே, பாகிஸ்தான் விமானப்படை நேற்றிரவு இந்த உக்கிரமான தாக்குதலைத் தொடுத்துள்ளது. பாகிஸ்தானின் இந்த இராணுவ நடவடிக்கை ‘கசாப் லில் ஹக்’ எனப் பெயரிடப்பட்டுள்ளது. இதன் கீழ், தலைநகர் […]
இந்தியா – இஸ்ரேல் இடையே 17 ஒப்பந்தங்கள்

பிரதமர் நரேந்திர மோடி மற்றும் இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு முன்னிலையில் இந்தியா – இஸ்ரேல் இடையே 17 ஒப்பந்தங்கள் கையெழுத்தாகின. உத்தியோகபூர்வ பயணமாக இஸ்ரேல் சென்றுள்ள பிரதமர் மோடிக்கு அந்நாட்டு பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு நேற்று முன்தினம் இரவு விருந்து அளித்தார். அப்போது பிரதமர் மோடி போல, இந்திய பாரம்பரிய உடையை அவர் அணிந்திருந்தார். முன்னதாக, இருவரும் இணைந்து ஜெருசலேமில் நடைபெற்ற தொழில்நுட்பக் கண்காட்சியை பார்வையிட்டனர். ஹிட்லர் ஆட்சியின்போது கொல்லப்பட்ட யூதர்கள் நினைவாக ஜெருசலேமில் அமைக்கப்பட்டுள்ள […]
தையிட்டி விகாரைக்கு எதிரான போராட்ட வழக்கு விசாரணை

தையிட்டி சட்டவிரோத விகாரைக்கு எதிராக போராடியவர்கள் மீதான வழக்கு விசாரணைகள் ஏப்ரல் மற்றும் ஜூலை மாதத்திற்கு திகதியிடப்பட்டுள்ளன. தையிட்டி விகாரைக்கு எதிராக போராட்டம் நடத்தினார்கள் என குற்றம்சாட்டி, தவிசாளர்கள், வலி.வடக்கு பிரதேச சபை உறுப்பினர்கள், காணி உரிமையாளர்கள் உள்ளிட்ட 11 பேருக்கு எதிராக பலாலி பொலிஸாரினால் மல்லாகம் நீதவான் நீதிமன்றில் தனித்தனியாக மூன்று வழக்குகள் தாக்கல் செய்யப்பட்டு விசாரணைகள் இடம்பெற்று வருகின்றன. இந்நிலையில் குறித்த வழக்குகள் வியாழக்கிழமை (26) விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்ட போது, குற்றம் சாட்டப்பட்டு பிணையில் […]
விமான நிலையத்தில் டுபாயிலிருந்து வந்திறங்கிய இருவர் கைது
சட்டவிரோதமான முறையில், வெளிநாட்டு சிகரெட்டுகளை நாட்டுக்குள் கொண்டு வந்த இரு இலங்கை பயணிகள் இரு இலங்கை பயணிகள் சுங்க அதிகாரிகளால் கைது செய்யப்பட்டுள்ளனர். கட்டுநாயக்க விமான நிலைய வருகை முனையத்தின் கிரீன் சேனல் வழியாக கடத்திச்செல்ல முயன்றபோது இன்று வெள்ளிக்கிழமை (27) அதிகாலை கைது செய்யப்பட்டுள்ளனர். இவர்களிடமிருந்து கைப்பற்றப்பட்ட சிகரெட்டுகள் சுமார் ஒரு கோடியே 35 இலட்சம் ரூபாய் பெறுமதியானவை என மதிப்பிடப்பட்டுள்ளது. இவ்வாறு கைது செய்யப்பட்டவர்களில் ஒருவர் அவிசாவளைப் பகுதியைச் சேர்ந்த 27 வயதுடையவர் எனவும், […]
மத்திய வங்கி விடுத்த எச்சரிக்கை
பொதுமக்களின் பணத்தை மிகவும் நுட்பமான மற்றும் மோசடியான முறையில் சுரண்டும் தடை செய்யப்பட்ட பிரமிட் திட்டங்களில் ஈடுபட்டுள்ள 24 நிறுவனங்களை இலங்கை மத்திய வங்கி அடையாளம் கண்டுள்ளது. இதுபோன்ற 23 நிறுவனங்கள் முன்னர் அடையாளம் காணப்பட்டதாகவும், நேற்று முன்தினம் மேலும் ஒரு நிறுவனம் அடையாளம் காணப்பட்டுள்ளதாக இலங்கை மத்திய வங்கியின் நிதி நுகர்வோர் உறவுகள் பிரிவு தெரிவித்துள்ளது. அதற்கமைய, I.C.A.N Advertising (Pvt) Ltd மற்றும் அதன் இணைப்பு வலைத்தளங்களான icanonlineadvertising.com, bannercuts.com, bannercuts.lk, bannercuts.net மற்றும் […]
அறிவுசார் வெளியேற்றம் இலங்கையில் பாரிய நெருக்கடியாக உருவெடுத்துள்ளது!

இலங்கையிலிருந்து பட்டதாரிகளின் வெளியேறும் அறிவுசார் வெளியேற்றம் பாரிய நெருக்கடியாக உருவெடுத்துள்ளதாக பேராதனைப் பல்கலைக்கழகத்தின் புதிய ஆய்வு ஒன்று எச்சரிக்கை விடுத்துள்ளது. அரச பல்கலைக்கழக பட்டதாரிகளில் 50 சதவீதத்திற்கும் அதிகமானோர் நாட்டை விட்டு நிரந்தரமாக வெளியேறுவதாக அந்த ஆய்வு சுட்டிக்காட்டுகிறது. அந்த ஆய்வில் மேலும், மருத்துவம், பொறியியல் மற்றும் விவசாயம் போன்ற முக்கியமான துறைகளில் வெளியேற்ற வீதம் 80% முதல் 90% வரை உயர்ந்துள்ளது. ஆண்டுதோறும் சுமார் 42,000 மாணவர்கள் பல்கலைக்கழகங்களில் பயில்கின்றனர். குறிப்பாக அறிவியல் சார்ந்த துறைகளில் […]
முன்னாள் ஜனாதிபதி சந்திரிக்காவைச் சந்தித்த பாட்டலி சம்பிக்க ரணவக்க

நிலக்கரி ஊழல் தகவல்கள் குறித்து அரசியல் தலைவர்களை தெளிவுபடுத்தும் நடவடிக்கையில் முன்னாள் அமைச்சர் பாட்டலி சம்பிக்க ரணவக்க ஈடுபட்டுள்ளார். இது தொடர்பில் முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க மற்றும் சர்வஜன அதிகாரம் கட்சியின் தலைவர் திலித் ஜயவீர ஆகியோரிடம் குறித்த தகவல்கள் அடங்கிய அறிக்கையை கையளித்து விளக்கமளித்துள்ளார். மேலும் முன்னாள் சபாநாயகரும் சிரேஷ்ட அரசியல் வாதியுமான கரு ஜயசூரியவை சந்தித்தும் விளக்கமளித்துள்ளார். அந்த வரிசையில் நேற்று (26.02.2026) முன்னாள் ஜனாதிபதி சந்திரிகா குமாரதுங்கவின் வீட்டுக்கு சென்று நிலக்கரி […]
புலம்பெயர் அமைப்புகளின் ஒப்பந்தங்களை நிறைவேற்றும் ஒரு கருவியாக அரசு மாறியுள்ளது!

உயிர்த்த ஞாயிறு பயங்கரவாதத் தாக்குதல் தொடர்பான விசாரணைகளில், அரச புலனாய்வுப் பிரிவின் முன்னாள் பணிப்பாளர் மேஜர் ஜெனரல் சுரேஷ் சலே கைது செய்யப்பட்டமையானது முற்றிலும் ஓர் அரசியல் பழிவாங்கல் நடவடிக்கை என விமல் வீரவன்ச தலைமையிலான தேசிய சுதந்திர முன்னணி தெரிவித்துள்ளது. கொழும்பில் இன்று நடைபெற்ற விசேட ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு உரையாற்றிய அக்கட்சியின் முக்கியஸ்தரும் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினருமான ஜயந்த சமரவீர இக்கருத்துக்களை வெளியிட்டார். அவர் மேலும் தெரிவித்ததாவது, “இந்த அரசு ஆட்சிக்கு வந்தது முதல், […]