இலங்கையிலிருந்து பட்டதாரிகளின் வெளியேறும் அறிவுசார் வெளியேற்றம் பாரிய நெருக்கடியாக உருவெடுத்துள்ளதாக பேராதனைப் பல்கலைக்கழகத்தின் புதிய ஆய்வு ஒன்று எச்சரிக்கை விடுத்துள்ளது.
அரச பல்கலைக்கழக பட்டதாரிகளில் 50 சதவீதத்திற்கும் அதிகமானோர் நாட்டை விட்டு நிரந்தரமாக வெளியேறுவதாக அந்த ஆய்வு சுட்டிக்காட்டுகிறது.
அந்த ஆய்வில் மேலும், மருத்துவம், பொறியியல் மற்றும் விவசாயம் போன்ற முக்கியமான துறைகளில் வெளியேற்ற வீதம் 80% முதல் 90% வரை உயர்ந்துள்ளது. ஆண்டுதோறும் சுமார் 42,000 மாணவர்கள் பல்கலைக்கழகங்களில் பயில்கின்றனர்.
குறிப்பாக அறிவியல் சார்ந்த துறைகளில் பட்டம் பெற்ற மிகச்சிறந்த மாணவர்கள் பெருமளவில் நாட்டை விட்டு வெளியேறுகின்றனர். பல்கலைக்கழகக் கல்விக்காக அரசாங்கம் ஆண்டுதோறும் 87 பில்லியன் ரூபாய்களை செலவிடுகிறது.
இலங்கையின் 24.5% மக்கள் வறுமையில் வாடும் நிலையில், எமது நாட்டின் வரிப்பணத்தில் உருவான மருத்துவர்களும் பொறியியலாளர்களும் மேற்கத்தேய நாடுகளின் பொருளாதாரத்திற்கு பங்களிப்பு செய்கின்றனர்.
இலங்கையிலிருந்து நிரந்தரமாக வெளியேறும் பெருமளவானோர் – ஆய்வில் வெளியான எச்சரிக்கை |
இது இலங்கையின் இலவச கல்வி செல்வந்த நாடுகளுக்கான ஒரு ‘அபிவிருத்தி உதவித் திட்டமாக’ மாறியுள்ளது என விமர்சனங்கள் எழுந்துள்ளன. பொருளாதார மற்றும் சமூக யதார்த்தங்களே இந்த நிலைக்குக் காரணம் என ஆய்வில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும், உலகளாவிய சந்தையுடன் ஒப்பிடும்போது அரச மற்றும் தனியார் துறைகளில் வழங்கப்படும் சம்பளம் மிகக் குறைவாக உள்ளது எனவும் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.