ஒன்டாரியோவின் அறிவியல் மையம் (Ontario Science Centre) உடைய முற்றிலும் புதிய வளாகத்திற்கான திட்டங்களை Ontario Place-இல் நாம் வெளியிட்டோம் என ஒன்ராறியோ முதல்வர் டக் பேர்ட் தனது சமூக வலைத்தளத்தில் பதிவிட்டுள்ளார்.
இந்த நவீன தரத்திலான வசதி முன்பெப்போதும் இல்லாத அளவுக்கு அதிக நிகழ்ச்சி இடத்தை கொண்டிருக்கும். மேலும், சினிஸ்பியர் (Cinesphere) உட்பட Ontario Place-இன் புகழ்பெற்ற ‘பாட்ஸ்’ அமைப்புகளையும் ஒருங்கிணைத்து, முழு குடும்பமும் அனுபவிக்கக்கூடிய அற்புதமான புதிய காட்சிகள் மற்றும் கல்வி அனுபவங்களையும் சிறப்பாக இது வழங்கும் என அவர் மேலும் தெரிவித்துள்ளார்.