நடிகர் விஜயின் மனைவி விவாகரத்து கோரி வழக்கு

தமிழ் சினிமாவில் உச்ச நட்சத்திரமாக இருந்த நடிகர் விஜய் தற்போது தமிழக வெற்றிக் கழகம் என்ற கட்சியை ஆரம்பித்து அரசியலில் குதித்துள்ளார். இவரது மனைவி சங்கீதா ஒரு இலண்டன் வாழ் தமிழ்ப் பெண்மணி. இலங்கையை பூர்வீமாக கொண்ட இவர் விஜய்யின் தீவிர ரசிகையாக இருந்து, பின்னாளில் அவரை திருமணம் செய்து கொண்டார். கடந்த 1996ஆம் ஆண்டு ‘பூவே உனக்காக’ திரைப்படம் மிகப்பெரிய வெற்றி பெற்றிருந்த நேரம் விஜய்யைப் பாராட்டுவதற்காக இலண்டனில் இருந்து சென்னை வந்திருந்தார் சங்கீதா. படப்பிடிப்பு […]
திமுகவில் இணைந்துள்ள ஓபிஎஸ் துணைப் பொதுச் செயலாளராகிறார்?

திமுகவில் இணைந்துள்ள ஓ. பன்னீர்செல்வத்துக்கு துணைப் பொதுச் செயலாளர் பதவி வழங்கப்படவிருப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. மேலும், போடி தொகுதியில் போட்டியிட ஓ. பன்னீர்செல்வத்துக்கும், அவருடன் திமுகவில் இணைந்த ரவீந்திரநாத் மற்றும் ஐயப்பனுக்கும் போட்டியிட வாய்ப்பு வழங்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. தமிழ்நாடு சட்டப்பேரவைத் தேர்தல் தேதி ஓரிரு வாரங்களில் அறிவிக்கப்படவிருக்கும் நிலையில், அதிமுகவில் இருந்து நீக்கப்பட்ட தமிழ்நாட்டின் மூன்று முறை முதலமைச்சரான ஓ. பன்னீர்செல்வம் தனது நிலைப்பாட்டை அறிவிக்காமல் இருந்தார். இந்த நிலையில், சென்னை அண்ணா அறிவாலயத்துக்கு இன்று […]
ஐஸ்வர்யா ரஜினிகாந்த் இயக்கும் புதிய திரைப்படம்

இயக்குநர் ஐஸ்வர்யா ரஜினிகாந்த் இயக்கும் புதிய திரைப்படம் குறித்த அறிவிப்பு வெளியாகியுள்ளது. இந்தப் படத்துக்கு யுவன் ஷங்கர் ராஜா இசையமைக்கிறார் என அதிகாரபூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது. நடிகர் ரஜினியின் மகளான ஐஸ்வர்யா 2012-ல் ’3’ என்ற படத்தின் மூலம் இயக்குநராக அறிமுகமானார். பின்னர் அவர் 2015-ல் இயக்கிய வை ராஜா வை படம் சுமாரான வரவேற்பைப் பெற்றது. நீண்ட காலத்துக்குப் பிறகு லால் சலாம் எனும் படத்தை 2024ல் வெளியிட்டார். இந்தப் படம் மிகவும் கடுமையான விமர்சனத்தைப் பெறவே, […]
கனடிய பிரதமர் இந்தியா விஜயம்!

கனடா பிரதமர் மார்க் கார்னி அரசு முறைப் பயணமாக இந்தியாவுக்கு சென்றுள்ளார். இதையடுத்துஇ மும்பை விமான நிலையத்தில் அவருக்கு உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டுள்ளது. கனடா பிரதமர் மார்க் கார்னி மற்றும் அவரின் மனைவி டயானா ஃபாக்ஸ் கார்னி ஆகியோர் இன்று வெள்ளிக்கிழமை (பிப். 27) இந்தியாவுக்கு வருகை தந்துள்ளனர். மும்பை விமான நிலையம் வந்தடைந்த அவர்களுக்கு மகாராஷ்டிர மற்றும் மத்திய அரசுகளின் சார்பில் வரவேற்பு அளிக்கப்பட்டது.
“உண்மையை உணருங்கள் உலகில் நாம் மிகவும் பலவீனமாக இருக்கிறோம்”

இலங்கை அணி T20 உலகக் கோப்பையின் சூப்பர் 8 சுற்றில் நியூசிலாந்திற்கு எதிரான முக்கியமான போட்டியில் 61 ரன்கள் வித்தியாசத்தில் அவமானகரமான தோல்வியைச் சந்தித்தது. T20 உலகக் கோப்பையில் இலங்கை அணி வெற்றியின் தொடக்கத்தை எடுத்திருந்தாலும், அந்த வெற்றியின் தாளத்தை தக்கவைக்க அணி தவறியது கிரிக்கெட் ரசிகர்களிடையே பெரும் ஏமாற்றத்தை ஏற்படுத்தியுள்ளது. குறிப்பாக சமூக ஊடகங்களில், ரசிகர்கள் தங்கள் கோபத்தையும் விமர்சனத்தையும் வெளிப்படுத்துவதைக் காணலாம். இத்தகைய சூடான சூழலில், முன்னாள் முதல் தர வீரர் திலான் சேனநாயக்க […]
அடுத்த மாதம் 12 ஆம் திகதி வரை கமாண்டோ சலிந்த விளக்கமறியலில்…

குற்றப் புலனாய்வுத் திணைக்களத்தின் பொறுப்பில் வைக்கப்பட்டிருந்த, பாதாள உலகக் குழுவின் முக்கிய செயற்பாட்டாளர் எனக் கூறப்படும் ‘கமாண்டோ சலிந்த’ என்பவரை அடுத்த மாதம் 12 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு கொழும்பு நீதவான் நீதிமன்றம் உத்தரவிட்டது. கணேமுல்ல சஞ்சீவ கொலைச் சம்பவத்தின் சந்தேகநபராகப் பெயரிடப்பட்டுள்ள கமாண்டோ சலிந்த என்பவரை, பலத்த பாதுகாப்புக்கு மத்தியில் குற்றப் புலனாய்வுத் திணைக்கள அதிகாரிகள்,. கொழும்பு மேலதிக நீதவான் அசங்க எஸ். போதரகமவின் உத்தியோகபூர்வ அறைக்குள் இன்று (27) ஆஜர்ப்படுத்தினர். இதன்போது, […]
இயலாமையுள்ள நபர்களை உள்ளடக்கிய சேவை வழங்கலை மீளாய்வு செய்ய வேண்டும்!

விசேட தேவையுடையோருக்கு வழங்கப்படும் மாதாந்த கொடுப்பனவை அரசாங்கம் மீளாய்வு செய்ய வேண்டும் என மட்டக்களப்பு மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் சாணக்கியன் இராசமாணிக்கம் தெரிவித்தார். இயலாமையுள்ள நபர்களை உள்ளடக்கிய சேவை வழங்கலை மேம்படுத்துவது தொடர்பான மாவட்ட மட்டக் கலந்துரையாடல் இன்று (27) மட்டக்களப்பு மாநகர சபை மண்டபத்தில் நடைபெற்றது. இதன் போதே மேற்கண்டவாறு தெரிவித்தார். மேலும் உரையாற்றிய அவர், இயலாமையுள்ள நபர்கள் தொடர்பாக பாராளுமன்ற ஒன்றியம் முன்னெடுத்து வரும் இந்த நிகழ்ச்சித் திட்டத்தை வரவேற்கின்றேன். நாடு முழுவதும், கிராமந்தோறும் […]
நிவாரண சேவைகள் இடைநடுவில் நிறுத்தப்பட்டதா?

கிராம உத்தியோகத்தர்கள், அனர்த்த நிவாரண சேவை உத்தியோகத்தர்கள் மற்றும் தொழில்நுட்ப உத்தியோகத்தர்கள் இன்று (27) முதல் டித்வா அனர்த்த நிவாரணப் பணிகளிலிருந்து விலக தீர்மானித்துள்ளனர். நிவாரண மதிப்பீடுகளுக்கான முறையான சுற்றுநிருபங்கள் இல்லாமை, வாக்குறுதி அளிக்கப்பட்ட கொடுப்பனவுகளை வழங்காமை உள்ளிட்ட பல்வேறு காரணங்களை முன்வைத்து அவர்கள் இந்தத் தீர்மானத்தை எடுத்துள்ளனர். இது தொடர்பாக கருத்துத் தெரிவித்த அகில இலங்கை அனர்த்த நிவாரண சேவை உத்தியோகத்தர்கள் தொழிற்சங்கக் கூட்டமைப்பின் தலைவர் உப்புல் குமார, டித்வா நிவாரணச் செயல்முறைக்கு இதுவரை முறையான […]
முன்னாள் அமைச்சர்களான மேர்வின், பிரசன்ன உள்ளிட்டோருக்கு எதிராக குற்றப்பத்திரிகை

முன்னாள் அமைச்சர்களான மேர்வின் சில்வா மற்றும் பிரசன்ன ரணவீர உள்ளிட்ட குழுவினருக்கு எதிராக கம்பஹா மேல் நீதிமன்றத்தினால் குற்றப்பத்திரிகை கையளிக்கப்பட்டுள்ளது. அரசாங்கத்திற்குச் சொந்தமான காணியொன்றை போலி உறுதிப்பத்திரங்களைத் தயாரித்து விற்பனை செய்ததாகக் கூறப்படும் சம்பவம் தொடர்பிலேயே இவ்வாறு குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டுள்ளது. அதற்கமைய, தற்போது மேல் நீதிமன்றப் பிணையில் விடுவிக்கப்பட்டுள்ள முன்னாள் அமைச்சர்கள் இருவர் உள்ளிட்ட பிரதிவாதிகளுக்கு இன்று இக்குற்றச்சாட்டுகள் தொடர்பான குற்றப்பத்திரிகைகள் வாசித்துக் காட்டப்பட்டன. முன்னாள் அமைச்சர்களைத் தவிர சரத் எதிரிசிங்க, அஜித் மில்ரோய், ஜயந்த […]
தடுப்புக்காவலில் போதைப்பொருள் கடத்தல்காரர் பொடி லெசி!

பாரிய அளவிலான போதைப்பொருள் கடத்தல்காரரும், பல கொலைச் சம்பவங்களுடன் தொடர்புடையவருமான பொடி லெசி என்ற ஜனித் மதுசங்கவை 7 நாட்கள் தடுப்புக்காவலில் வைத்து விசாரணை செய்வதற்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது. அவர் இன்று (27) பத்தேகம நீதவான் நீதிமன்றத்தில் ஆஜர்ப்படுத்தப்பட்ட போதே இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. இந்தியாவில் கைது செய்யப்பட்ட பொடி லெசி என்ற ஜனித் மதுசங்க இன்று (27) அதிகாலை நாட்டுக்கு அழைத்து வரப்பட்டதுடன், மேலதிக விசாரணைகளுக்காக காலி மாவட்ட குற்றத்தடுப்பு பிரிவினரிடம் ஒப்படைக்கப்பட்டார். ரத்கம பிரதேச […]