இயலாமையுள்ள நபர்களை உள்ளடக்கிய சேவை வழங்கலை மீளாய்வு செய்ய வேண்டும்!

விசேட தேவையுடையோருக்கு வழங்கப்படும் மாதாந்த கொடுப்பனவை அரசாங்கம் மீளாய்வு செய்ய வேண்டும் என மட்டக்களப்பு மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் சாணக்கியன் இராசமாணிக்கம் தெரிவித்தார்.

இயலாமையுள்ள நபர்களை உள்ளடக்கிய சேவை வழங்கலை மேம்படுத்துவது தொடர்பான மாவட்ட மட்டக் கலந்துரையாடல் இன்று (27) மட்டக்களப்பு மாநகர சபை மண்டபத்தில் நடைபெற்றது. இதன் போதே மேற்கண்டவாறு தெரிவித்தார்.

மேலும் உரையாற்றிய அவர்,

இயலாமையுள்ள நபர்கள் தொடர்பாக பாராளுமன்ற ஒன்றியம் முன்னெடுத்து வரும் இந்த நிகழ்ச்சித் திட்டத்தை வரவேற்கின்றேன். நாடு முழுவதும், கிராமந்தோறும் உள்ள விசேட தேவையுடையோரின் பிரச்சினைகளை கேட்டறிந்து அவற்றை பாராளுமன்றத்துக்கு கொண்டு செல்லும் திறன் இவ்வொன்றியத்துக்கு உள்ளது. எனவே, எதிர்வரும் காலங்களில் நிறைவேற்றப்பட வேண்டிய சில விடயங்களை முன்வைக்க விரும்புகின்றேன்.

விசேட தேவையுடையோருக்கான கொடுப்பனவு கடந்த காலத்தை விட தற்போது அதிகரிக்கப்பட்டு வழங்கப்படுகின்றது. இது வரவேற்கத்தக்கது. எனினும், இலங்கை இறக்குமதிகளை அதிகம் சார்ந்த நாடாக இருப்பதாலும், தற்போதைய பணவீக்கம் காரணமாக வழங்கப்படும் தொகை அவர்களுக்கு போதுமானதா என்பதை அரசாங்கம் மறுபரிசீலனை செய்ய வேண்டும்.

மட்டக்களப்பு மாவட்டத்தில் 9,235 விசேட தேவையுடையோர் உள்ளதாகவும், அதில் 8,712 பேர் தற்போது கொடுப்பனவு பெறுகின்றனர் என்றும், மீதமுள்ளவர்களில் 152 பேருக்கு கொடுப்பனவு பெற தகுதி உள்ளதாக மாவட்ட சமூக சேவை திணைக்களத்தின் புள்ளிவிபரங்கள் தெரிவிக்கின்றன.

உதாரணமாக, மண்முனை தென் எருவில் பற்று பிரதேசத்தில் சுமார் 1,258 விசேட தேவையுடையோர் உள்ளதாக அறியப்படுகிறது. ஆனால், இங்கு 930 பேருக்கு மட்டுமே கொடுப்பனவு வழங்கப்படுகின்றது. மீதமுள்ளவர்கள் உண்மையில் தகுதியற்றவர்களா என்பதை மீளாய்வு செய்ய வேண்டும். இதுபோன்ற நிலைமை மாவட்டத்தின் பிற பிரதேசங்களிலும் இருக்கக்கூடும்.

எனவே, அனைத்து விவரங்களையும் முழுமையாக மீளாய்வு செய்து, தகுதியுள்ள அனைவருக்கும் கொடுப்பனவை வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.

மேலும், தற்போது ரூபாய் 10,000 ஆக வழங்கப்படும் கொடுப்பனவை அதிகரிப்பதற்காக எதிர்வரும் வரவுசெலவுத்திட்டத்தில் முன்மொழிவு செய்து, அதற்கான அழுத்தத்தை சம்பந்தப்பட்ட தரப்புகள் வழங்க வேண்டும்.

அதேவேளை, சிலர் கொடுப்பனவை பெறுவதற்காக அதிக கட்டணம் செலுத்தி முச்சக்கர வண்டிகளில் பயணம் செய்ய வேண்டிய நிலை உள்ளது. எனவே, இக்கொடுப்பனவை அவர்களின் வீடுகளுக்கே சென்று வழங்கும் வகையில் பிரதேச சபைகள் மற்றும் பிரதேச செயலகங்களுடன் இணைந்து செயற்படும் நடைமுறையை அறிமுகப்படுத்த பாராளுமன்ற ஒன்றியம் பரிந்துரை செய்ய வேண்டும் என தெரிவித்தார்.

இக்கலந்துரையாடலில் இயலாமையுள்ள நபர்கள் தொடர்பான பாராளுமன்ற ஒன்றியத்தின் தலைவர் சுகத் வசந்த டி சில்வா, பிரதித் தலைவர் ப. சத்தியலிங்கம், உறுப்பினர் இ. சிறிநாத், மட்டக்களப்பு மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர்கள், உள்ளூராட்சி மன்றத் தலைவர்கள், அரச அதிகாரிகள் மற்றும் விசேட தேவையுடையோர் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

தமிழக-மக்கள்-கழகம்

விஜய்க்கு எதிராக நடிகர் அஜித் அரசியலா? “தமிழக மக்கள் கழகம்” – கள்ளக்குறிச்சியில் ரசிகர்கள் புதிய கட்சி தொடக்கம்!

September 20, 2026

கள்ளக்குறிச்சி: திரைப்படங்களிலும் கார் பந்தயங்களிலும் கவனம் செலுத்தி வரும் நடிகர் அஜித்குமாரின் ரசிகர்கள் மற்றும் ஆதரவாளர்கள் ஒன்றிணைந்து, ‘தமிழக மக்கள்

Tamil_News_lrg_4088019

வங்கக்கடலில் காற்றழுத்தத் தாழ்வு மண்டலம்: கோயம்புத்தூர் உள்பட 21 மாவட்டங்களில் நாளை கனமழை எச்சரிக்கை!

September 20, 2026

சென்னை: வங்கக்கடலில் நிலவும் காற்றழுத்தத் தாழ்வுப் பகுதி தீவிரமடைந்து வருவதால், கோயம்புத்தூர், நீலகிரி உள்பட தமிழகத்தின் 21 மாவட்டங்களில் நாளை

RAJMOHAN3

“மு.க.ஸ்டாலின் பட்டிமன்றப் பேச்சாளரைப் போல் எதுகை மோனையில் பேசுகிறார்!” – அமைச்சர் ராஜ்மோகன் விமர்சனம்

September 20, 2026

திருநெல்வேலி: திருநெல்வேலியில் செய்தியாளர்களைச் சந்தித்த பள்ளிக்கல்வி மற்றும் தமிழ் வளர்ச்சித்துறை அமைச்சர் ராஜ்மோகன், ஆளும் தவெக அரசின் செயல்பாடுகளை விளக்கியதுடன்,

tn-che-08-vinayagar-script-photo-7204807_20092026210403_2009f_1789918443_215

சென்னையில் விநாயகர் சிலை ஊர்வலத்தில் அடுத்தடுத்து மோதல் மற்றும் சலசலப்பு!

September 20, 2026

சென்னை: பலத்த காவல் துறை பாதுகாப்புக்கு மத்தியில், சென்னையில் இன்று நடைபெற்ற விநாயகர் சிலை கரைப்பு ஊர்வலத்தின் போது பட்டினப்பாக்கம்

images (12)

“அண்ணா பல்கலைக்கழக மாணவர் உயிரிழந்தது டெங்குவால் அல்ல; உண்ணிக் காய்ச்சலால்!” – சுகாதாரத்துறை அமைச்சர் அருண்ராஜ் விளக்கம்

September 20, 2026

சென்னை: தமிழ்நாட்டில் டெங்கு காய்ச்சல் முழுமையாகக் கட்டுப்பாட்டுக்குள் உள்ளதாகத் தெரிவித்துள்ள சுகாதாரத்துறை அமைச்சர் அருண்ராஜ், அண்ணா பல்கலைக்கழக மாணவரின் உயிரிழப்பு

HH9G3vpboAECv_k

“வடகிழக்கு பருவமழை முன்னெச்சரிக்கை!” – அமைச்சர்கள் மற்றும் அதிகாரிகளுடன் முதலமைச்சர் விஜய் நாளை அவசர ஆலோசனை!

September 20, 2026

சென்னை: தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை தொடங்கவுள்ள நிலையிலும், வங்கக்கடலில் உருவாகியுள்ள காற்றழுத்தத் தாழ்வுப் பகுதியால் நாளை முதல் 21 மாவட்டங்களில்

1200-675-27675426-thumbnail-16x9-protestannouncement

“பிற மாநிலங்களுக்கு இணையான ஊதியம் தேவை!” – அக்டோபர் 5-ல் இடைநிலை சுகாதாரப் பணியாளர்கள் உண்ணாவிரதப் போராட்டம்

September 20, 2026

சென்னை: தமிழ்நாட்டில் பணிபுரியும் இடைநிலை சுகாதாரப் பணியாளர்கள், தங்களுக்குப் பிற மாநிலங்களுக்கு இணையான ஊதிய உயர்வு மற்றும் பணிப்பெயர் மாற்றம்

Tamil_News_lrg_4088019

வங்கக்கடலில் காற்றழுத்தத் தாழ்வு மண்டலம்: கோயம்புத்தூர் உள்பட 21 மாவட்டங்களில் நாளை கனமழை எச்சரிக்கை!

September 20, 2026

சென்னை: வங்கக்கடலில் நிலவும் காற்றழுத்தத் தாழ்வுப் பகுதி தீவிரமடைந்து வருவதால், கோயம்புத்தூர், நீலகிரி உள்பட தமிழகத்தின் 21 மாவட்டங்களில் நாளை

1200-675-26075167-thumbnail-16x9-ctrnirmal

“தமிழ்நாட்டில் நவோதயா பள்ளிகளை தவெக அரசு அனுமதிக்காது!” – அமைச்சர் நிர்மல்குமார் திட்டவட்டம்

September 20, 2026

ராமநாதபுரம்: ராமநாதபுரம் அரசு சட்டக் கல்லூரி பட்டமளிப்பு விழாவில் பங்கேற்ற தமிழ்நாடு சட்டத்துறை மற்றும் எரிசக்தித் துறை அமைச்சர் நிர்மல்குமார்,

tamil-nadu-govt-employees

5 மாதங்களில் ரூ. 30,021 கோடி நிதிப் பற்றாக்குறை: தவெக அரசின் வரவு – செலவு கணக்கு வெளியீடு!

September 20, 2026

சென்னை: 2026-27 நிதியாண்டின் முதல் 5 மாதங்களுக்கான (ஏப்ரல் முதல் ஆகஸ்ட் வரை) தமிழ்நாடு அரசின் தற்காலிக நிதிநிலை அறிக்கையை

sivajisanthi

நடிகர் திலகம் சிவாஜி கணேசனின் மூத்த மகள் சாந்தி நாராயணசாமி காலமானார்

September 20, 2026

சென்னை: மறைந்த நடிகர் திலகம் சிவாஜி கணேசன் – கமலா தம்பதியின் மூத்த மகளும், திரைப்படத் தயாரிப்பாளருமான சாந்தி நாராயணசாமி

ne7

தேசிய மட்ட அமைதிப் பாத யாத்திரை

September 20, 2026

சர்வதேச சமாதான தினத்தை முன்னிட்டு, தேசிய மீனவர் ஒத்துழைப்பு இயக்கத்தின் ஏற்பாட்டில் நீர்கொழும்பில் தேசிய மட்ட அமைதிப் பாத யாத்திரையும்