முதலீட்டாளர்களையும் சுற்றுலாப் பயணிகளையும் நாம் அன்புடன் வரவேற்கின்றோம் – பிரதமர்

இலங்கை நிலைபேறான அபிவிருத்தியை நோக்கிப் பயணிக்கும் இந்த வேளையில், பொருளாதார மற்றும் கலாசார உறவுகளை மேலும் பலப்படுத்தும் வகையில் நாட்டிற்கு வருகை தரும் முதலீட்டாளர்களையும் சுற்றுலாப் பயணிகளையும் தாம் மனமுவந்து வரவேற்பதாக பிரதமர் கலாநிதி ஹரிணி அமரசூரிய தெரிவித்தார். இந்தியாவின் 77ஆவது குடியரசு தினம் மற்றும் இலங்கையின் 78ஆவது சுதந்திர தினம் ஆகியவற்றை முன்னிட்டு, ‘இலங்கை – இந்தியச் சங்கம்’ (Sri Lanka India Society) ஏற்பாடு செய்திருந்த விசேட கொண்டாட்டத்துடன் கூடிய இராப்போசன விருந்து, வியாழக்கிழமை […]

கொழும்பில் உலக பத்திரிகை புகைப்படக்கண்காட்சி

2025 ஆம் ஆண்டுக்கான உலக பத்திரிகை புகைப்படக்கண்காட்சியை கொழும்பு, ஒன்கோல் பேஸ் மோல் வளாகத்தில் இன்று வெள்ளிக்கிழமை (27) வெகுஜன ஊடக பிரதி அமைச்சர் கௌசல்யா ஆரியரத்ன ஆரம்பித்து வைத்தார். இந்த புகைப்படக்கண்காட்சியை நெதர்லாந்து தூதரகம், இலங்கை பத்திரிகை நிறுவனத்துடன் இணைந்து நடத்துகிறது. கொழும்பு, ஒன்கோல் பேஸ் மோல் வளாகத்தில் இன்றையதினம் ஆரம்பித்து வைக்கப்பட்ட இந்த கண்காட்சியை மார்ச் மாதம் 08 ஆம் திகதி ஞாயிற்றுக்கிழமை வரை பார்வையிடலாம். இதனை தொடர்ந்து மார்ச் மாதம் 13 ஆம் […]

அரசாங்கம் அரங்கேற்றிக் கொண்டிருக்கும் இந்த நாடக அரசியல் விரைவில் முடிவுக்கு வரும் – – மனோ கணேஷன்

அரசாங்கம் அரங்கேற்றிக் கொண்டிருக்கும் இந்த நாடக அரசியல் விரைவில் முடிவுக்கு வரும். நிலக்கரி ஊழல் தேசிய மக்கள் சக்தி அரசாங்கத்தின் உண்மையான முகத்தைக் காண்பித்துள்ளது. அநுரகுமார திஸாநாயக்கவின் ஆட்சியின் முகத்தில் இந்த நிலக்கரி மோசடி கரியைப் பூசியிருக்கிறது என தமிழ் முற்போக்கு கூட்டணியின் தலைவர் பாராளுமன்ற உறுப்பினர் மனோ கணேஷன் தெரிவித்தார். கொழும்பில் வெள்ளிக்கிழமை (27) இடம்பெற்ற கலந்துரையாடலொன்றின் போது இதனைத் தெரிவித்த அவர் மேலும் குறிப்பிடுகையில், அரசாங்கம் அரங்கேற்றிக் கொண்டிருக்கும் இந்த நாடக அரசியல் விரைவில் […]

யுத்தத்தை வெற்றிகொண்ட இராணுவத்தினரை புலனாய்வுத்துறையை காட்டிக்கொடுக்கும் நடவடிக்கையே சலே கைது

பிரிவினைவாதிகளை மகிழ்ச்சிப்படுத்தவே சுரேஷ் சலேயை அரசாங்கம் கைது செய்திருக்கிறது. இது யுத்தத்தை வெற்றிகொண்ட இராணுவத்தினரை புலனாய்வுத்துறையை காட்டிக்கொடுக்கும் நடவடிக்கையாகும் என சிறிலங்கா பொதுஜன பெரமுன முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் சம்பத் அத்துகோரல தெரிவித்தார். சிறிலங்கா பொதுஜன பெரமுன கட்சி காரியாலயத்தில் வெள்ளிக்கிழமை (27) இடம்பெற்ற செய்தியாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கையிலேயே இவ்வாறு குறிப்பிட்டார். அவர் அங்கு மேலும் தெரிவிக்கையில், உயிர்த்த ஞாயிறு தாக்குதல் சூத்திரதாரிகளை கண்டுபிடித்து பாதிக்கப்பட்ட மக்களுக்கு குறுகிய காலத்தில் நீதியை நிலைநாட்டுவதாக தெரிவித்து […]

கச்சதீவு புனித அந்தோனியார் திருவிழா

கச்சதீவு புனித அந்தோனியார் ஆலய உயர் திருவிழாவிற்கு செல்வதற்காக, வெள்ளிக்கிழமை (27) குறிகட்டுவான் இறங்குதுறையிலிருந்து 4200 மேற்பட்ட பக்தர்கள் கச்சதீவு நோக்கி பயணாமாகிக்கொண்டிருக்கிறார்கள் என்பதுடன், மொத்தமாக இலங்கையிலிருந்து 5000 மேற்பட்ட பக்தர்கள் பங்குபற்றுவார்கள் என எதிர்பார்க்கப்படுகின்ற அதேவேளை இந்தியாவிலிருந்து 3992 பக்தர்கள் கச்சதீவுக்கு வந்தடைந்துள்ளார்கள் என்பதும் குறிப்பிடத்தக்கது. மேலும், குறிகட்டுவான் இறங்குதுறையில் அரசாங்க அதிபர் மருதலிங்கம் பிரதீபன், பக்தர்களுக்கான பயண ஒழுங்குகளை சம்பந்தப்பட்டவர்களுடன் இணைந்து ஒருங்கிணைப்பினை மேற்கொண்டு வருகின்றார் என்பது குறிப்பிடத்தக்கது. மேலும், மேலதிக அரசாங்க அதிபர் […]

கடற்றொழிலாளர்களின் பிரச்சினை குறித்து விசேட கலந்துரையாடல்

மன்னாரில் கடற்றொழில் மற்றும் நீரியல் வளங்கள் திணைக்கள அதிகாரிகள், மற்றும் கடற்றொழில் சங்கங்களின் பிரதிநிதிகளுக்கிடையிலான விசேட கலந்துரையாடல் நடைபெற்றுள்ளது. குறித்த கலந்துரையாடலானது இன்று(27.2.2026) மதியம் மன்னார் மாவட்டச் செயலக மாநாட்டு மண்டபத்தில் இடம்பெற்றது இதன்போது, உழவு இயந்திரங்கள் பயன்படுத்தி கரைவலை தொழில் மேற்கொள்வதற்கு விதிக்கப்பட்ட தற்காலிக தடையால் கடற்றொழிலாளர்கள் பாதிக்கப்பட்டுள்ளனர். இது தொடர்பாக ஜனாதிபதி மட்டத்தில் எடுக்கப்பட்ட முடிவுகள் மற்றும் மேற்கொள்ளப்பட்டு வரும் ஆய்வுகள் குறித்து விளக்கமளிக்கப்பட்டது. மன்னார் கடல் பகுதி ஏனைய இடங்களை விட மாறுபட்டது […]

பாடசாலை மாணவர்களுக்கு முக்கிய அறிவிப்பு

பாடசாலை மாணவர்களுக்கான பாதணி வவுச்சர்களின் செல்லுபடி காலம் நீடிக்கப்பட்டுள்ளது. எதிர்வரும் 28 ஆம் திகதியுடன் நிறைவடையவிருந்த போதிலும், தற்போது அதன் செல்லுபடியாகும் அடுத்த மாதம்15 ஆம் திகதி வரை நீடிக்கப்பட்டுள்ளது. 2026 ஆம் ஆண்டிற்காகத் தெரிவு செய்யப்பட்ட பாடசாலை மாணவர்கள், பிரிவெனாக்களில் கல்வி பயிலும் இல்லற மற்றும் துறவற மாணவர்கள் மற்றும் சீலமாதாக்களுக்கு 3,000 ரூபா பெறுமதியான பாதணி வவுச்சர்களை வழங்கும் திட்டத்தின் கால எல்லை நீடிக்கப்பட்டுள்ளது. இதற்கமைய, குறித்த வவுச்சர்களின் செல்லுபடியாகும் காலம் அடுத்த மாதம்15 […]

யாழ்.பல்கலையில் தையிட்டியை முன்னிறுத்திய ஒரு கலந்துரையாடல்!

தனியார் காணியை ஆக்கிரமித்து அமைக்கப்பட்டுள்ள தையிட்டி விகாரையை முன்னிறுத்திய கலந்துரையாடல் “அரச மதமும் தனியார் காணியும்” எனும் பொருளில் யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தில் இடம்பெற்றது. குறித்த கலந்துரையாடலானது இன்று (27.02.2026) ஆசிரியர் சங்கத்தினால் ஒழுங்கமைப்பில் பல்கலைக்கழக நூலக கேட்போர் கூடத்தில் நடைபெற்றது. வடக்கு – கிழக்கில், சிங்கள பௌத்த மதச் சின்னங்களை முன்னிறுத்திய நில ஆக்கிரமிப்புக்களில் முதன்மையான தையிட்டி விவகாரத்தில் அரச மதத்தை மையமாகக் கொண்ட தனியார் காணி உரிமைகள் தொடர்பாக எழுந்துள்ள சமூக, சட்ட, அரசியல் மற்றும் […]

ஒரு மாற்றுச் சட்டம் ஒன்றைக் கொண்டு வருவதென்பது ஏற்றுக் கொள்ள முடியாது

மக்கள் விடுதலை முன்னணி பயங்கரவாதத் தடைச்சட்டம் வேண்டாம், புதிய சட்டமே வேண்டாம் என்ற நிலைப்பாட்டிலேயே இருந்தார்கள். இன்று ஆட்சிக்கு வந்ததும் அவர்களே இதற்கு ஒரு மாற்றுச் சட்டம் ஒன்றைக் கொண்டு வருவதென்பது ஏற்றுக் கொள்ள முடியாது என இலங்கை தமிழரசுக்கட்சியின் மட்டக்களப்பு மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் இரா.சாணக்கியன் தெரிவித்தார். நாளை சனிக்கிழமை மட்டக்களப்பில் புதிய பயங்கரவாத பயங்கரவாத தடைச்சட்டமும் வேண்டாம், பயங்கரவாத தடைச்சட்டமும் வேண்டாம் என்ற தொனிப்பொருளில் முன்னெடுக்கப்படும் போராட்டத்திற்கு முழுமையான ஆதரவினை தமிழரசுக்கட்சி வழங்கவுள்ளதுடன் பிரதேசசபை […]

பிரம்ப்டன் நகர சபை வாகன உற்பத்தித் துறை மேம்பாட்டுத்திட்டம்!

கனடா பிரம்ப்டன் நகர சபை (Brampton City Council) ஒருமனதாக Stellantis Brampton Assembly Plant-க்கு புதிய திட்டமிடல் பாதுகாப்புகளை அங்கீகரித்தது. இது வாகன உற்பத்தித் துறையை பாதுகாப்பதற்கும், எங்கள் உள்ளூர் சமூகத்தில் நீண்டகால வேலை வாய்ப்புகளை ஆதரிப்பதற்குமான எங்கள் உறுதிப்பாட்டை வலுப்படுத்துகிறது என பிரம்ப்டன் நகர சபை தனது முகநூல் பக்கத்தில் பதிவிட்டுள்ளது. அதிகாரப்பூர்வ திட்டம், சட்டம் மற்றும் தொடர்புடைய கொள்கைகளில் செய்யப்பட்ட திருத்தங்களின் மூலம், 2000 Williams Parkway-இல் உள்ள நிலப்பகுதி வாகன அசெம்ப்ளி […]