டொராண்டோ வளிமண்டல நிதியத்தால் கார்பன் உமிழ்வு கணக்கெடுப்பு வெளியீடு

டொராண்டோ வளிமண்டல நிதியம் (Toronto Atmospheric Fund) 2024 ஆம் ஆண்டிற்கான GTHA கார்பன் உமிழ்வு கணக்கெடுப்பை வெளியிட்டுள்ளது. அதன் முடிவுகள் பிராம்டன் நகரம் மேலும் நிலைத்த எதிர்காலத்தை நோக்கி முன்னேற்றம் அடைந்து வருவதை வெளிப்படுத்துவதாகத் தெரிவிக்கப்படுகின்றது. பீல் பிராந்தியம் (Peel Region) முழுவதும் உள்ள அனைத்து நகராட்சிகளும் இயற்கை எரிவாயு உமிழ்வுகளில் குறைப்பை பதிவு செய்துள்ளன. அவற்றில்,பிராம்டன் ஏழு சதவீதம் என்ற மிக அதிகமான குறைப்பை பதிவு செய்துள்ளது. நிலைத்த வளர்ச்சியை நோக்கி நகரம் தொடர்ந்து […]

காதல் முரண்பாடு; காதலி தற்கொலை!

அனுராதபுரம், நொச்சியாகமை பிரதேசத்தில் காதல் முரண்பாடு காரணமாக 23 வயதுடைய யுவதி ஒருவர் தனது வீட்டில் தூக்கிட்டுத் தற்கொலை செய்துகொண்ட சோகச் சம்பவம் நேற்று(21) இடம்பெற்றுள்ளது. உயிரிழந்த யுவதிக்கும், அதே பிரதேசத்தைச் சேர்ந்த 27 வயதுடைய இளைஞர் ஒருவருக்கும் இடையே கடந்த 5 வருடங்களாகக் காதல் தொடர்பு இருந்து வந்துள்ளது. இவர்களது காதலுக்கு இரு வீட்டார் பெற்றோர்களும் சம்மதம் தெரிவித்திருந்த நிலையில், நீண்டகாலமாக இந்த உறவு நீடித்து வந்துள்ளது. சம்பவம் இடம்பெற்ற தினமான இன்று, காதலர்களுக்கு இடையே […]

நாட்டை விட்டு விலகுகிறது குறைந்த அழுத்தம்

தென்மேற்கு வங்காள விரிகுடா கடல் பிராந்தியத்தில் நிலவும் குறைந்த அழுத்தப் பிரதேசம் நாட்டை விட்டு விலகிச் செல்வதால், தற்போது நிலவும் பலத்த மழை நிலைமை படிப்படியாகக் குறைந்து வருவதாக வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது. அத்திணைக்களம் இன்று (22) பிற்பகல் 2 மணிக்கு விடுத்துள்ள அறிக்கையில் இவ்விடயம் குறிப்பிடப்பட்டுள்ளது. எவ்வாறாயினும், நாளை (23) வடக்கு, வடமத்திய மற்றும் வடமேல் மாகாணங்களிலும் திருகோணமலை மாவட்டத்திலும் அடிக்கடி மழை பெய்யக்கூடும். அதேபோல், களுத்துறை, காலி மற்றும் மாத்தறை மாவட்டங்களின் கடலோரப் பகுதிகளில் […]

தீவிர கண்காணிப்பில் புலனாய்வுத்துறை

பாதாள உலக நடவடிக்கைகளுக்காக காவலில் உள்ள சந்தேகநபர்களுடன் நட்புறவைப் பேணும் சிறை அதிகாரிகள் மீது புலனாய்வு அதிகாரிகள் மிகுந்த கவனம் செலுத்தியுள்ளனர். சந்தேகநபர்களை பொலிஸார் சட்டத்தின்படி விசாரிக்கும்போது முக்கியமான தகவல்கள் வெளியாவதைத் தடுக்க சில சிறை அதிகாரிகள் பல்வேறு தந்திரோபாயங்களைப் பயன்படுத்தக்கூடும் என்றும் பொலிஸார் கூறுகின்றனர். சில பாதாள உலக குற்றவாளிகளுக்கு தொலைபேசி வசதிகள் மற்றும் உணவு மற்றும் பான வசதிகளை வழங்கும் பல சிறை அதிகாரிகள் பற்றிய தகவல்கள் முன்னர் வெளியாகியிருந்தன. இருப்பினும், காவலில் உள்ள […]

சாவகச்சேரியில் ஜனநாயக தமிழ் தேசிய கூட்டணியின் முதல் பேராளர் மாநாடு

ஜனநாயக தமிழ் தேசிய கூட்டணியின் முதலாவது பேராளர் மாநாடு இடம்பெற்றுள்ளது. இன்று(22.02.2026) சாவகச்சேரியின் நகரசபையின் பொன் விழா மண்டபத்தில் பேராளர் மாநாடு ஆரம்பமாகியுள்ளது. இந்த மாநாட்டின் ஆரம்பத்தில் ஜனநாயக தமிழ் தேசிய கூட்டணியின் இணைத்தலைவர்களால் மக்கள விளக்கு ஏற்றப்பட்டது. இதனை தொடர்ந்து மாநாட்டில் கட்சியின் எதிர் கால செயற்பாடுகள் தொடர்பாக கலந்துரையாடப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. மாநாட்டில் ஜனநாயக தமிழ் தேசிய கூட்டணியின் இணைத்தலைவர்கள் கட்சியின் மாவட்ட இணைப்பாளர்கள் மற்றும் ஜனநாயக தமிழ் தேசிய கூட்டணியின் உள்ளூராட்சி சபை உறுப்பினர்கள் […]

தமிழீழ விடுதலைப் புலிகளின் தலைவர் பிரபாகரன் எந்த நிலையிலும் சரணடைவதை விரும்பியதில்லை – முன்னாள் அமைச்சர் சரத் வீரசேகர

தமிழீழ விடுதலைப் புலிகளின் தலைவர் பிரபாகரன் எந்த நிலையிலும் சரணடைவதை விரும்பியதில்லை அதை மறுத்தவர்.ஆனால் மேற்கத்திய நாடுகள் இறுதி நேரத்தில் தம்மை காப்பாற்றும் என்ற நம்பிக்கையில் அவர் உறுதியாக இருந்தார். சரத் பொன்சேக்காவின் பேச்சு முன்னுக்குப் பின் முரணானதாகும் என முன்னாள் அமைச்சர் சரத் வீரசேகர குறிப்பிட்டுள்ளார். அண்மையில் சரத் பொன்சேகா காணொளி ஒன்றை வெளியிட்டு தெரிவித்த கருத்துக்கு பதிலளிக்கும் வகையில் தனது சமூக வலைத்தளத்தில் இதனை குறிப்பிட்டுள்ளார்.அதில் அவர் மேலும் குறிப்பிட்டுள்ளதாவது, பீல்ட் மார்ஷல் சரத் […]

அண்ணனை வாளால் வெட்டிக்கொன்ற தம்பி

நீண்டகாலமாகக் காணப்பட்டு வந்த காணித் தகராறு முற்றியதில், தம்பி நடத்திய வாள்வெட்டுத் தாக்குதலில் அண்ணன் உயிரிழந்துள்ளார். இந்தக் கொடூர சம்பவம் கொழும்பு, ஹோமாகமை பிரதேசத்தில் நேற்று சனிக்கிழமை ( 21.02.2026 ) இரவு இடம்பெற்றுள்ளது. சம்பவத்தில் ஹோமாகமை பகுதியைச் சேர்ந்த 32 வயதுடைய மூன்று பிள்ளைகளின் தந்தையே உயிரிழந்துள்ளார். சம்பவம் குறித்துத் தெரியவருவதாவது, உயிரிழந்த நபருக்கும் அவரது 28 வயதுடைய தம்பிக்கும் இடையில் காணி விவகாரம்தொடர்பாக நீண்டகாலமாகப் பகை இருந்து வந்துள்ளது. நேற்று இரவு இருவருக்கும் இடையில் […]

பெர்லின் திரைப்பட விழாவில் அசாம் பெண் இயக்கிய படத்துக்கு விருது!

பெர்லின் திரைப்பட விழாவில் அசாம் பெண் இயக்குநர் ரிமா தாஸ் இயக்கிய படத்துக்கு, ’கிரிஸ்டல் பியர் ஸ்பெஷல் மென்ஷன் விருது’ கிடைத்துள்ளது. பெர்லின் திரைப்பட விழாவில் ’நாட் எ ஹீரோ’ என்ற படத்திற்காக இந்த விருது அளிக்கப்பட்டுள்ளது. தேர்வுக்குழுவுக்கு ரிமா தாஸ் நெகிழ்ச்சியாக நன்றி தெரிவித்துள்ளார். அசாமைச் சேர்ந்த இயக்குநர் ரிமா தாஸ் (44 வயது) முதன்முதலாக வில்லேஜ் ராக்ஸ்டார் என்ற படத்தின் மூலமாக தேசிய விருது பெற்று பிரபலமானார். அடுத்து இவர் இயக்கிய ’புல்புல் கேன் […]

நடிகர் விக்ரமின் புதிய திரைப்படம்

இயக்குநர் ஆனந்த் ஷங்கர் இயக்கத்தில் நடிகர் விக்ரம் நடிக்கவுள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது. இயக்குநர் பொடி கே ராஜ்குமார் இயக்கத்தில் விக்ரம் நடிக்கவுள்ளார். இப்படம் மதுரையைப் பின்னணியாக வைத்து உருவாகிறது. இதற்கான, முன் தயாரிப்பு பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகின்றன. அடுத்ததாக, நடிகர் விக்ரம் வித்தியாசமான கதைக்களங்களில் 4 திரைப்படங்களில் நடிக்க உள்ளதாகத் தெரிவித்ததுடன் கடந்த ஓராண்டாக நல்ல கதைகளைக் கேட்டு வந்ததாகவும் குறிப்பிட்டுள்ளார். இந்த நிலையில், அந்த 4 திரைப்படங்களில் ஒன்றை இருமுகன் திரைப்படத்தை இயக்கிய ஆனந்த் […]

சூர்யா – 47 திரைப்படம் குறித்து…

நடிகர் சூர்யாவின் 47-வது திரைப்படம் குறித்து இயக்குநர் ஜித்து மாதவன் பேசியுள்ளார். தமிழ் சினிமாவின் முன்னணி நடிகரான சூர்யா நடிப்பில் இறுதியாக வெளியான ரெட்ரோ படம் ரசிகர்கள் மத்தியில் கலவையான விமர்சனங்களையே பெற்றது. இதனை தொடர்ந்து சூர்யா ஆர்.ஜே.பாலாஜி இயக்கத்தில் கருப்பு என்ற திரைப்படத்தில் நடித்து முடித்துள்ளார். இப்படம் ஏப்ரல் மாதம் திரைக்கு வருகிறது. இதனையடுத்து இயக்குநர் வெங்கி அட்லூரி இயக்கத்தில் சூர்யா 46 படத்தில் நடித்து வருகிறார். சூர்யா தன் 47-வது படமாக இயக்குநர் ஜித்து […]