‘டிலைட்’ படுகொலையின் பின்னணி

மாத்தறை – தேவேந்திர முனையில் இன்று (21) பிற்பகல் இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டுச் சம்பவமானது, குறித்த நபருக்கு இருந்த உயிர் அச்சுறுத்தல்களுக்கு மத்தியில் வழங்கப்பட்டிருந்த பொலிஸ் பாதுகாப்பிற்கு மத்தியிலேயே இடம்பெற்றுள்ளதாக தற்போது தெரியவந்துள்ளது. இன்று பிற்பகல் 1 மணியளவில் மோட்டார் கார் ஒன்றில் வந்த இருவர் இந்தத் துப்பாக்கிச் சூட்டை நடத்தியுள்ளதுடன், இந்தத் தாக்குதலில் 55 வயதான சிரில் ஹேந்தவித்தாரண என்ற “டிலைட்” என அழைக்கப்படும் மீன் வியாபாரி ஒருவர் உயிரிழந்துள்ளார். இந்தத் துப்பாக்கிச் சூடு 9 […]

அமெரிக்க பசிபிக் கடற்படைத் தளபதி கொழும்பு டொக்யார்ட் நிறுவனத்திற்கு விஜயம்

இந்தியப் பெருங்கடல் பிராந்தியத்தில் கடல்சார் ஈடுபாட்டை வலுப்படுத்துவதற்கும், சாத்தியமான ஒத்துழைப்புகளை ஆராய்வதற்கும் அமெரிக்க பசிபிக் கடற்படையின் தளபதி அட்மிரல் ஸ்டீபன் கோலர் தலைமையிலான உயர்மட்டக் குழுவினர் நேற்று வெள்ளிக்கிழமை (20) கொழும்பு டொக்யார்ட் நிறுவனத்திற்கு விஜயம் செய்தனர். இந்த விஜயத்தின் போது, கொழும்பு டொக்யார்ட் நிறுவனத்தின் முகாமைத்துவப் பணிப்பாளர் பிரதம நிறைவேற்று அதிகாரி திமிர எஸ். கொடாகும்பர உள்ளிட்ட உயர்மட்ட அதிகாரிகளுடன் கலந்துரையாடல்கள் இடம்பெற்றன. இந்தியப் பெருங்கடலில் கொழும்பு கொண்டுள்ள மூலோபாய ரீதியான முக்கியத்துவம் மற்றும் அமெரிக்க […]

தொழிற்சங்க நடவடிக்கையை நோக்கி கிராம உத்தியோகத்தர்கள்

கடுமையான தொழிற்சங்க நடவடிக்கையை நோக்கி கிராம உத்தியோகத்தர்கள் 2009/2010 ஆம் ஆண்டுகளில் இணைத்துக்கொள்ளப்பட்ட கிராம உத்தியோகத்தர்கள் தொழிற்சங்க நடவடிக்கையில் ஈடுபடத் தீர்மானித்துள்ளனர். அவர்கள் இணைத்துக்கொள்ளப்பட்டதிலிருந்து இதுவரை இழைக்கப்பட்ட அநீதிகள், புறக்கணிப்புகள் மற்றும் கிராம உத்தியோகத்தர் சேவைக்கு அறிமுகப்படுத்தப்பட்டுள்ள புதிய சேவைப் பிரமாணத்தினூடாக ஏற்பட்டுள்ள அநீதிகள் தொடர்பில் இவ்வாறு தொழிற்சங்க நடவடிக்கையில் ஈடுபடத் தீர்மானிக்கப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது. இதற்கமைவாக, எதிர்வரும் மார்ச் 03 ஆம் திகதி பொது நிர்வாக அமைச்சின் முன்பாக இவர்கள் மௌனப் போராட்டமொன்றை முன்னெடுக்கவுள்ளனர். இதற்கு கிராம […]

பொன்சேகாவின் கருத்தை வரவேற்கும் நாமல் ராஜபக்ஷ!

முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ ஒரு கொலையாளி அல்ல என பாராளுமன்ற உறுப்பினர் சரத் பொன்சேகா கூறியிருப்பது மிகவும் நல்ல விடயமாகும் என ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் தேசிய அமைப்பாளர் நாமல் ராஜபக்ஷ தெரிவித்துள்ளார். சமீபத்தில் சரத் பொன்சேகா வெளியிட்ட கருத்து குறித்து ஊடகவியலாளர்கள் எழுப்பிய கேள்விக்கு பதிலளிக்கும் போதே அவர் இதனைத் தெரிவித்தார். அங்கு அவர் மேலும் கருத்து தெரிவிக்கையில், “சரத் பொன்சேகா சர்ச்சைக்குரியவராக இருக்கலாம், ஆனால் கடந்த காலங்களில் மஹிந்த ராஜபக்ஷ பிரபாகரனை ஆயுதங்களை […]

10 பேரின் சொத்துகள் முடக்கம் – ஆனந்த விஜேபால

2024.09.21 ஆம் திகதி முதல் முதல் 2026.01.26 ஆம் திகதி வரையான காலப்பகுதியில் போதைப்பொருட்கள் மற்றும் ஒழுங்கமைக்கப்பட்ட செயல்களில் ஈடுபட்டவர்களில் 10 பேரின் சொத்துக்கள் நீதிமன்றத்தின் உத்தரவுக்கமைய முடக்கப்பட்டு அரசுடமையாக்கப்பட்டுள்ளன. ‘கெஹெல்பத்தர பத்மே’ உள்ளிட்ட ஒழுங்கமைக்கப்பட்ட குற்றவாளிகளின் பல சொத்துக்களும் அடங்குவதாக பொதுமக்கள் பாதுகாப்பு மற்றும் பாராளுமன்ற விவகாரங்கள் அமைச்சர் ஆனந்த விஜேபால தெரிவித்தார். பாராளுமன்றத்தில் வெள்ளிக்கிழமை (20) நடைபெற்ற அமர்வில் வாய்மூல விடைக்கான வினாக்கள் வேளையின் போது ஆளும் தரப்பின் பாராளுமன்ற உறுப்பினர் ரவீந்திர பண்டார […]

தமிழக மீனவர்கள் ஆர்ப்பாட்டம்

இலங்கை கடற்படையால் சிறைபிடிக்கப்பட்ட 22 மீனவர்களை படகுடன் விடுதலை செய்ய வலியுறுத்தி தங்கச்சிமடத்தில் சனிக்கிழமை (21) காலை மீனவர்கள் ஆர்ப்பாட்டம் நடத்தினர். இராமநாதபுரம் மாவட்டம் ராமேஸ்வரம் மற்றும் மண்டபம் மீன் பிடி துறைமுகங்களில் இருந்து கடந்த புதன்கிழமை மீன்பிடிக்க சென்ற நான்கு படகுகளையும் அதிலிருந்த 22 மீனவர்களையும் வியாழக்கிழமை அதிகாலை இலங்கை கடற்படையினர் நெடுந்தீவு மற்றும் மன்னார் கடற்பரப்பில் வைத்து கைது செய்தனர். கைது செய்யப்பட்ட 22 மீனவர்களும் வவுனியா மற்றும் யாழ்ப்பாணம் சிறைச்சாலைகளில் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளனர். […]

சட்டத்தரணி தம்பதியர் கொலைச் சம்பவத்தில் முக்கிய சந்தேகநபர் கைது

அக்குரேகொடவில் சட்டத்தரணி மற்றும் அவரது மனைவி மீது நடத்தப்பட்ட துப்பாக்கிச் சூட்டு கொலைச் சம்பவத்தில் ஈடுபட்டதாக சந்தேகிக்கப்படும் இரு துப்பாக்கிதாரிகளில் ஒருவரை பொலிஸார் கைது செய்துள்ளனர். கைது செய்யப்பட்ட சந்தேகநபர், இராணுவத்திலிருந்து தப்பிச் சென்ற ஒருவராக இருப்பதாக தெரிவிக்கப்படுகிறது. அவர் அம்பலங்கொட பகுதியில் வைத்து கைது செய்யப்பட்டுள்ளார். பொலிஸ் தகவல்களின் படி, அக்குரேகொட துப்பாக்கிச் சூட்டில் ஈடுபட்ட இருவரில் ஒருவராக இவர் அடையாளம் காணப்பட்டுள்ளார். சம்பவ இடத்திலுள்ள கண்காணிப்பு (CCTV) காட்சிகளில் T-56 ரக துப்பாக்கியை பயன்படுத்தி […]

பேருந்து உரிமையாளர் புங்குடுதீவு அகிலன் படுகொலை: மற்றுமொரு சந்தேக நபர் கைது

புங்குடுதீவில் கடந்த 2025 ஓகஸ்ட் மாதம் தனியார் பேருந்து உரிமையாளர் அகிலன் என்பவரை கொடூரமாக வெட்டிக் கொலை செய்ததாக குற்றம் சாட்டப்பட்ட இரண்டாவது சந்தேகநபர் கைது செய்யப்பட்டுள்ளார். குறித்த கைது நடவடிக்கையானது இன்று (21.2.2026) ஊர்காவற்றுறை பொலிஸாரால் மேற்கொள்ளப்பட்டுள்ளது. முன்பதாக குறித்த கொலைக் கும்பலின் பிரதான சந்தேக நபரான அனலைதீவை சேர்ந்த நபர் கடந்த செப்டெம்பர் 14 ஆம் திகதியன்று முல்லைத்தீவு மாவட்டத்தில் காட்டு பகுதியொன்றில் வைத்து கைது செய்யப்பட்டிருந்தார். அந்த நபர் வழங்கிய வாக்குமூலத்தின் அடிப்படையில் […]

பொலிஸாரின் அவசர அறிவுறுத்தல்!

வளிமண்டலத் திணைக்களத்தின் அறிவுறுத்தலின்படி, தருமபுரம் பொலிஸார் இன்று( 21.02.2026) கோரிக்கை விடுத்துள்ளனர். இதன்படி, நாட்டில் நிலவி வரும் சீரற்ற காலநிலை காரணமாக மக்கள் அவதானத்துடன் இருக்குமாறு தருமபுரம் பொலிஸார் அறிவுறுத்தியுள்ளனர். இது தொடர்பாக, தருமபுரம் பொலிஸ் பிரிவிற்குட்பட்ட அனைத்து கிராமங்களிலும் ஒலிபெருக்கி மூலம் பொதுமக்களுக்கு அறிவிப்புகள் வழங்கப்பட்டு வருவதாக எமது செய்தியாளர் தெரிவித்துள்ளார். 0 மண்சரிவு அபாயம்! கண்டியில் மண்சரிவு அபாயம் குறித்து எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. தேசிய கட்டிட ஆய்வு நிறுவனம் இன்று (21) மாலை வெளியிட்ட […]

நாளை வானிலையில் ஏற்படவுள்ள மாற்றம்

வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களிலும் புத்தளம் மாவட்டத்திலும் நாளை (22) சில இடங்களில் மழை பெய்யும் சாத்தியம் இருப்பதாக வளிமண்டலவியல் திணைக்களம் அறிவித்துள்ளது. ஏனைய பகுதிகளில் பகல் 1.00 மணிக்குப் பின்னர் இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடும். நாளை நாட்டின் சில பகுதிகளில் 75 மில்லிமீட்டர் மழை பெய்வதற்கான சாத்தியக்கூறுகள் உள்ளன. மேலும் மத்திய, சபரகமுவ மாகாணங்களிலும் காலி, மாத்தறை, களுத்துறை மாவட்டங்களிலும் சில இடங்களில் காலை நேரங்களில் மூடுபனியாக இருக்கக்கூடும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இடியுடன் கூடிய […]