விசேட வைத்திய நிபுணர்கள் தொழிற்சங்க நடவடிக்கையில் ஈடுபடப்போவதில்லை !

தமது சங்கத்தைச் சேர்ந்த எந்தவொரு வைத்தியரும் இன்றைய தினம் தொழிற்சங்க நடவடிக்கையில் ஈடுபடப்போவதில்லை என விசேட வைத்திய நிபுணர்கள் சங்கம் தெரிவித்துள்ளது. தமது சங்கத்தின் உறுப்பினர்கள் இன்று (02) வழமை போன்று தமது கடமைகளை முன்னெடுப்பார்கள் என அந்தச் சங்கத்தின் ஊடகப் பேச்சாளர் விசேட வைத்திய நிபுணர் அசோக குணரத்ன குறிப்பிட்டார். கோரிக்கைகளுக்கு அரசாங்கம் சாதகமான பதில்களை வழங்காமைக்கு எதிர்ப்புத் தெரிவித்து, அரச வைத்திய அதிகாரிகள் சங்கம் இன்றைய தினம் முதல் தமது தொழிற்சங்க நடவடிக்கையைத் தீவிரப்படுத்தவுள்ளதாக […]

வட,கிழக்கில் 2009 ஆம் ஆண்டு வரை போதைப்பொருள் பாவனை இருக்ககவில்லை – அருட்தந்தை வசந்தன்

2009ஆம் ஆண்டு காலப்பகுதிக்கு முன்னர் வட,கிழக்கில் போதை பொருள் பாவனை பூச்சியமாக இருந்ததாக கட்டைக்காடு ஆலய பங்குத்தந்தை வசந்தன் தெரிவித்துள்ளார். கட்டைக்காடு சென்மேரிஸ் விளையாட்டு கழகம் நடாத்திய உதைபந்தாட்ட தொடரின் இறுதிப் போட்டியில் கலந்து கொண்டு கருத்துரைக்கும் போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டார். அவர் மேலும் தெரிவிக்கையில், எங்களுடைய நாட்டில் போதை பொருளின் தாக்கம் அதிகரித்துள்ளது, குறிப்பாக எங்களுடைய தமிழர் தாயகம் வரலாறு காணாத அளவிற்கு போதை பொருளின் தாக்கத்தால் பாதிப்படைந்துள்ளது. பலர் இந்த போதைப்பொருளுக்கு நாளாந்தம் […]

அரசாங்கம் பௌத்தத்தை அவமதிக்கிறது!

தேசிய மக்கள் சக்தி தலைமையிலான அரசாங்கம் பெளத்த சமயத்தை அவமரியாதைக்கு உற்படுத்துவதை உடனடியாக நிறுத்த வேண்டும்” என்று கூறி திருகோணமலை நீதிமன்ற கட்டிடத்தொகுதிக்கு முன்பாக மூன்று பேர் வீதியில் அமர்ந்து இன்று திங்கட்கிழமை(2) கவனயீர்ப்பு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். பொதுஜன அரகலய குடிமக்கள் கூட்டமைப்பு என்ற அமைப்பின் செயலாளர் சானக்க பண்டார மற்றும் சிங்கள பெளத்த ஐக்கியம் அமைப்பின் செயலாளர் லங்கா தரங்க ஆகியோரே இவ்வாறு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். திருகோணமலை நீதவான் நீதிமன்றில்,திருகோணமலை கடற்கரையில் சட்டவிரோத கட்டுமானத்தை அமைத்து, […]

தமிழ்த் தேசியக் கட்சிகள் இணைந்து விசேட கருத்தரங்கு

“என்று தணியும் சுதந்திரத் தாகம்” என்ற தலைப்பில் தமிழ்த் தேசியக் கட்சிகள் இணைந்து விசேட கருத்தரங்கு ஒன்றுக்கு ஏற்பாடு செய்துள்ளன. மேற்கொள்ளப்பட்டுள்ள ஏற்பாடுகள்.. யாழ்ப்பாணம் மாவட்ட செயலகத்துக்கு அருகில் அமைந்துள்ள வை.எம்.சி. மண்டபத்தில் இலங்கையின் சுதந்திர தினமான பெப்ரவரி மாதம் 4ஆம் திகதி, மாலை 3 மணி தொடக்கம் 5 மணிவரை இந்தக் கருத்தரங்கு நடைபெறவுள்ளது. தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் தலைவரும் நாடாளுமன்ற உறுப்பினருமான கஜேந்திரகுமார் பொன்னம்பலம், வடக்கு மாகாண சபையின் முன்னாள் அமைச்சர் பொ.ஐங்கரநேசன், […]

தமிழர்களின் சுதந்திர தின – கரிநாள் போராட்டம் தெற்கிற்கு விழிப்பாகட்டும் – மா.சத்திவேல்

தமிழர்களின் அரசியல் போராட்டத்தோடு தெற்கு கைகோர்த்தால் மட்டுமே சுதந்திரத்திற்கான மீட்பு உண்டு. அதுவரைக்கும் முழு நாட்டுக்கும் சுதந்திர தினம் என்பது கரிநாளே என அருட்தந்தை மா.சத்திவேல் தெரிவித்துள்ளார். நேற்று(01.02.2026) வெளியிட்டுள்ள ஊடக அறிக்கையிலே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார். இது தொடர்பில் அந்த அறிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது, ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க தலைமையிலான தேசிய மக்கள் சக்தி நாட்டின் 78வது சுதந்திர தினத்தை தமது பதவிக்காலத்தில் இரண்டாவது சுதந்திர தினத்தையும் கொண்டாடுவதற்கான அனைத்து ஏற்பாடுகளையும் செய்துள்ளது. இந்த தினத்தினை […]

மாங்குளம் – செல்வபுரம் பகுதியில் மூன்று வாகனங்கள் மோதி கோர விபத்து

மூன்று வாகனங்கள் ஒன்றுடன் ஒன்று மோதி கோர விபத்துக்குள்ளாகியதில் காயமடைந்த மூவர் கிளிநொச்சி வைத்தியசாலையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர். மாங்குளம் பொலிஸ் பிரிவிற்குட்பட்ட செல்வபுரம் பகுதியில் குறித்த விபத்து நேற்று A9 வீதியில் இடம்பெற்றுள்ளது. கொழும்பு நோக்கி பயணித்த மோட்டார் வாகனத்தின் சக்கரம் காற்றுபோன நிலையில், கட்டுப்பாட்டை இழந்து எதிரே பயணித்த வானுடன் மோதி விபத்தை ஏற்படுத்தி பின்னர் மற்றுமொரு வானுடனும் மோதியுள்ளது. இதன்போது முதல் விபத்தில் சிக்கிய வான் தடம்புரண்டுள்ளது. வானில் பயணித்த பயணிகள் சிறு காலங்களுடன் […]

முன்னாள் ஜனாதிபதி ரணில் மீதான வழக்கு!

முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவுக்கு எதிராகத் தொடரப்பட்டுள்ள நிதி மோசடி வழக்கில், குற்றப் புலனாய்வுத் திணைக்களம் சட்ட நடைமுறைகளைப் பின்பற்றவில்லை என்ற குற்றச்சாட்டுகளைப் பொதுப் பாதுகாப்பு அமைச்சர் ஆனந்த விஜேபால நிராகரித்துள்ளார். 2023ஆம் ஆண்டு செப்டெம்பர் மாதம், ரணில் விக்கிரமசிங்க ஜனாதிபதியாக இருந்தபோது இலண்டனிலுள்ள வொல்வர்ஹாம்டன் பல்கலைக்கழகத்திற்கு மேற்கொண்ட பயணம் தொடர்பானதே இந்தச் சர்ச்சையாகும். அவரது மனைவி பேராசிரியர் மைத்திரி விக்கிரமசிங்க கௌரவப் பட்டம் பெறும் நிகழ்வில் கலந்துகொள்ளச் சென்ற இந்தப் பயணம், ஒரு தனியார் பயணமாக […]

இலங்கையின் சுதந்திர தினம்; கரிநாள் போராட்டம்!

இலங்கையின் சுதந்திர தினத்தைக் கரிநாளாகப் பிரகடனப்படுத்தி, எதிர்வரும் 4ஆம் திகதி வடக்கு, கிழக்கில் நடைபெறவுள்ள மாபெரும் கரிநாள் போராட்டங்களில் மக்கள் அனைவரும் கலந்துகொள்ள வேண்டும் என்று தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் தலைவரும், யாழ்ப்பாணம் மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினருமான கஜேந்திரகுமார் பொன்னம்பலம் அழைப்பு விடுத்துள்ளார். யாழ். தையிட்டி திஸ்ஸ விகாரைக்கு எதிரான போராட்டத்தில் நேற்று கலந்துகொண்டு ஊடகங்களுக்குக் கருத்துத் தெரிவிக்கும் போதே அவர் இந்த அழைப்பை விடுத்துள்ளார்.இது தொடர்பில் அவர் மேலும் தெரிவித்ததாவது, “இலங்கையின் சுதந்திர தினத்தைக் […]

உயிர்த்த ஞாயிறு தாக்குதல் வழக்கு:பிரதிவாதிகளின் சட்டத்தரணிகள் திடீர் விலகல்

உயிர்த்த ஞாயிறு குண்டுத் தாக்குதல்களில் 24 பிரதிவாதிகள் சார்பாகப் வாதாடிய சட்டத்தரணிகள், விசாரணைகள் துரிதப்படுத்தப்படுவதால் அவர்கள் எதிர்கொள்ளும் சிரமங்களைக் காரணம் காட்டி விலக தீர்மானித்துள்ளதாக அறிவித்துள்ளனர். வழக்கை விசாரிக்கும் மூன்று நீதிபதிகள் கொண்ட குழாமுக்கு இவர்கள் தெரியப்படுத்தியுள்ளனர். சட்டத்தரணிகள் முன்வைத்துள்ள காரணங்கள் குற்றம் சாட்டப்பட்ட 24 சந்தேக நபர்களை கூட்டாகப் பிரதிநிதித்துவப்படுத்தும் கே.எஸ். ரத்னவேல், எச். கசாலி ஹுசைன், ருஷ்டி ஹபீப் மற்றும் நிரஞ்சன் சிறிவர்தன ஆகிய நான்கு சட்டத்தரணிகளும், ஜனவரி 22 அன்று மனு ஒன்றை […]

மத்துகம பொலிஸ் நிலையத்தில் துப்பாக்கியைக் காணவில்லை?

மத்துகம பொலிஸ் நிலையத்தில் இருந்த கைத்துப்பாக்கி ஒன்றும் 10 தோட்டாக்களும் காணாமல் போயுள்ளதாகப் பொலிஸார் தெரிவிக்கின்றனர். மத்துகம பொலிஸ் நிலையத்தின் உப சேவைப் பொறுப்பில் இருந்த கைத்துப்பாக்கியும், 10 தோட்டாக்கள் அடங்கிய மெகஸின் ஒன்றுமே இவ்வாறு காணாமல் போயுள்ளதாகப் பொலிஸ் ஊடகப் பிரிவு குறிப்பிட்டுள்ளது. ஆவணங்களைப் பரிசோதித்த போதே, கடந்த ஜனவரி 26 ஆம் திகதி முதல் அவை காணாமல் போயுள்ள விடயம் தெரியவந்துள்ளது. இது தொடர்பில் மத்துகம பொலிஸார் மேலதிக விசாரணைகளை ஆரம்பித்துள்ளதாகப் பொலிஸ் ஊடகப் […]