கோலியின் சாதனையை முறியடித்த பாபர் அசாம்!

வுஸ்திரேலிய அணி பாகிஸ்தானில் சுற்றுப்பயணம் செய்து 3 போட்டிகள் கொண்ட தொடரில் விளையாடி வருகிறது. முதல் 2 டி20 போட்டியில் வெற்றி பெற்று தொடரை 2 – 0 என்ற கணக்கில் பாகிஸ்தான் கைப்பற்றியது. இந்நிலையில், இரு அணிகளுக்கு இடையிலான 3 ஆவது டி20 போட்டி லாகூரில் இன்று (02) நடைபெற்றது. நாணய சுழற்சியில் வென்ற பாகிஸ்தான் முதலில் துடுப்பாட்டத்தை தேர்வு செய்தது. அதன்படி, முதலில் துடுப்பெடுத்தாடிய பாகிஸ்தான் 20 ஓவரில் 6 விக்கெட்டுக்கு 207 ஓட்டங்களை […]

இணையவழி மோசடி; மியன்மாரில் மேலும் நால்வருக்கு மரண தண்டனை

மியன்மாரில் இணையவழி மோசடி மையங்களை நடத்தி வந்த மிக முக்கியமான ‘பாய்’ குடும்ப மாஃபியா கும்பலைச் சேர்ந்த நான்கு பேருக்கு சீனா மரண தண்டனை நிறைவேற்றியுள்ளது. மோசடி, கொலை, திட்டமிட்ட தாக்குதல் மற்றும் பிற குற்றங்களுக்காக இந்தக் குடும்பத்தைச் சேர்ந்த மற்றும் இவர்களுடன் தொடர்புடைய 21 பேருக்கு சீன நீதிமன்றம் தண்டனை வழங்கியது. கடந்த நவம்பர் மாதம், இந்தக் கும்பலின் தலைவர் பாய் சுவோசெங் (Bai Suocheng) உட்பட ஐந்து பேருக்கு மரண தண்டனை விதிக்கப்பட்டது. இதில் […]

திபெத்திய ஆன்மீகத் தலைவர் தலாய் லாமாவுக்கு கிராமி விருது

திபெத்திய ஆன்மீகத் தலைவர் தலாய் லாமா தனது 90 ஆவது வயதில் உலகின் உயரிய இசை விருதாகக் கருதப்படும் கிராமி விருதை (Grammy Award) வென்று புதிய சாதனை படைத்துள்ளார். அமெரிக்காவின் லொஸ் ஏஞ்சல்ஸ் நகரில் நடைபெற்ற 68 ஆவது கிராமி விருது வழங்கும் விழாவில், “சிறந்த ஓடியோ புத்தகம், கதை சொல்லல் மற்றும் பதிவு” (Best Audio Book, Narration, and Storytelling Recording) என்ற பிரிவின் கீழ் இவருக்கு இந்த விருது வழங்கப்பட்டது. Meditations: […]

பயணியால் விமானப் பயணம் தடை!

யட்நாமில் இருந்து தாய்லாந்து – பெங்கொக் நோக்கிப் பயணித்த ஏர் ஏசியா (AK647) விமானத்தில், ரஷ்ய மொழி பேசும் பயணி ஒருவர் அநாகரீகமாக நடந்துகொண்டதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. சுமார் ஒரு மணிநேரம் 40 நிமிடங்கள் தாமதத்திற்குப் பிறகு புறப்பட்ட அந்த விமானத்தில், திடீரென ஒரு பயணி தனது ஆடைகளைக் களைந்துவிட்டு கருப்பு நிற உள்ளாடையுடன் விமானத்திற்குள் ஓடத் தொடங்கியுள்ளார். இதன்போது அவர், இருக்கைகள் மீது ஏறி குதித்தும், கூச்சலிட்டும் பயணிகளை அச்சுறுத்தியுள்ளார். விமானப் பணிப்பெண்களிடம் ஆங்கிலத்தில் […]

அமைச்சர் வசந்த சமரசிங்கவுக்கு ஏற்பட்ட சிக்கல்!

புதிதாக நிறுவப்பட்ட அரசுக்குச் சொந்தமான நிறுவனத்திடம் (National Agri Marketing Limited) பொருளாதார மத்திய நிலையங்களின் நிர்வாகத்தை ஒப்படைக்கும் அரசாங்கத்தின் திட்டத்தை வணிக உரிமையாளர்கள் கடுமையாக எதிர்த்ததாக தெரிவிக்கப்படுகிறது. தம்புள்ளை பொருளாதார மத்திய நிலையத்தில் (31.01.2026) நடைபெற்ற கூட்டத்திலே குறித்த எதிர்ப்பு தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்தக் கூட்டத்தில் வர்த்தகம், உணவுப் பாதுகாப்பு மற்றும் கூட்டுறவு மேம்பாட்டு அமைச்சர் வசந்த சமரசிங்க, பிரதியமைச்சர்கள், மாவட்ட செயலாளர்கள், அரசு அதிகாரிகள் மற்றும் தம்புள்ளை பொருளாதார மத்திய நிலைய வர்த்தக சங்கத்தின் பிரதிநிதிகள் […]

பூமியின் வெப்பநிலை 1.5 டிகிரி செல்சியஸ் அதிகரித்தது!

பூமியின் வெப்பநிலை முன் இருந்த நிலையை விட 1.5 டிகிரி செல்சியஸ் அதிகரித்துள்ளதாக அமெரிக்கா, ஜப்பான் மற்றும் ஐரோப்பிய விஞ்ஞானிகள் ஆய்வுகளை மேற்கொண்டு தரவுகளை வெளியிட்டுள்ளனர். அத்துடன், புவி வெப்பமாதல் 1.5 டிகிரி செல்சியஸை கடந்து, அபாயகரமான எல்லையைத் தாண்டியுள்ளதாகத் அதிர்ச்சி தகவலையும் கூறியுள்ளனர். இந்த வெப்பநிலை அதிகரிப்பின் எதிரொலியாக 2024இல் உலகம் முழுவதும் தீவிர வானிலை நிகழ்வுகள் நிகழ்ந்துள்ளன. இத்தாலி மற்றும் தென் அமெரிக்காவில் கடுமையான வறட்சி, நேபாளம், சூடான் போன்ற நாடுகளில் உயிரைப் பறிக்கும் […]

ஒருங்கிணைந்த தமிழ் கட்சிகளின் ஏற்பாட்டில் கிவுல் ஓயா எதிர்ப்பு ஆர்ப்பாட்டம்

தமிழ் மக்களின் இனப்பரம்பல் கோலத்தை மாற்றியமைக்கும் வகையில் மகாவலி அதிகாரசபையின் (எல்) வலயத்திட்டத்தினூடாக முன்னெடுக்கப்படும் கிவுல் ஓயாத் திட்டத்திற்கு எதிரான ஆர்ப்பாட்டப்பேரணியொன்று இன்று திங்கட்கிழமை (02) இடம்பெற்றது. அந்தவகையில் ஒருங்கிணைந்த தமிழ் கட்சிகளின் ஏற்பாட்டில் இடம்பெற்ற இவ்வார்ப்பாட்டப்பேரணியானது நெடுங்கேணி பேருந்து தரிப்பிடத்திலிருந்து ஆரம்பமாகி, வவுனியாவடக்கு பிரதேசசெயலகம் வரையில் இடம்பெற்றதுடன், வவுனியா வடக்கு பிரதேச செயலக முன்றலிலும் ஆர்ப்பாட்டம் இடம்பெற்றது. இவ்வார்ப்பாட்டப்பேரணியில் கலந்துகொண்டார் கிவுல் ஓயாத் திட்டம் வேண்டாம் என்பதை வலியுறுத்தும் கோசங்கள் அடங்கிய பதாதைகளைத் தாங்கியவாறும், கோசங்களை […]

துப்பாக்கி வெடித்ததில் சார்ஜென்ட் மரணம்

களுத்துறை விசேட அதிரடிப்படை முகாமில் வைத்து துப்பாக்கி வெடித்ததில் குறித்த முகாமின் பயிற்சிப் பிரிவில் கடமையாற்றிய சார்ஜன்ட் ஒருவர் உயிரிழந்துள்ளதாக களுத்துறை தெற்கு பொலிஸார் தெரிவித்துள்ளனர். அவரது தலையில் துப்பாக்கிச் சூடு பட்டுள்ளதாக பொலிஸ் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. இது தொடர்பான மேலதிக விசாரணைகளை களுத்துறை தெற்கு தலைமையகம் பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

இந்தியாவுக்கெதிரான போட்டியை புறக்கணிக்கும் பாகிஸ்தான்

சர்வதேச கிரிக்கெட் சபையின் இருபதுக்கு – 20 உலகக் கிண்ணத் தொடரில், இந்தியாவுக்கெதிரான குழு ஏ போட்டியை பாகிஸ்தான் புறக்கணிக்கவுள்ளது. இதற்கான காரணம் குறிப்பிடப்படவில்லை. இந்நிலையில் புறக்கணிப்பு குறித்து சர்வதேச கிரிக்கெட் சபைக்கு பாகிஸ்தான் கிரிக்கெட் சபை இன்னும் அறிவிக்கவில்லையெனத் தெரிகிறது. இதேவேளை விலகல் முறையிலான போட்டியொன்றில் இந்தியாவும், பாகிஸ்தானும் சந்தித்தால் என்ன நடக்குமென இதுவரையில் குறிப்பிடப்பட்டிருக்கவில்லை.

புத்தர் சிலை விவகாரம்: 10 பேருக்கும் விளக்கமறியல் நீடிப்பு

திருகோணமலை கடற்கரையில் புத்தர் சிலையை வைத்த விவகாரம் தொடர்பில் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள 4 பெளத்த பிக்குகள் உற்பட 10 பேரினதும் விளக்கமறியல் எதிர்வரும் 9 ந் திகதி வரை மீண்டும் நீடிக்கப்பட்டுள்ளது. திருகோணமலை நீதிவான் நீதிமன்ற பிரதான நீதிவான் எம்.எஸ்.எம்.சம்சுடீன் இந்த உத்தரவை திங்கட்கிழமை (02) வழங்கினார். இவ்விவகாரம் தொடர்பில் மேல்முறையீட்டு நீதிமன்றில் நாளை(3) மீண்டும் வழக்கு விசாரணை நடைபெறவுள்ளது.இதில் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள பிக்குகள் உற்பட எதிராளிகளுக்கு பிணைக்கான அனுமதி வழங்கப்பட்டால் அதனை அடிப்படையாக கொண்டு திருகோணமலை […]