களுத்துறையில் காயங்களுடன் வயோதிபப் பெண்ணின் சடலம் மீட்பு!
களுத்துறையில் அகலவத்தை, திரிவானகெட்டிய தோட்டப் பகுதியில் காயங்களுடன் வயோதிபப் பெண்ணின் சடலம் நேற்று ஞாயிற்றுக்கிழமை (01) காலை மீட்கப்பட்டுள்ளதாக களுத்துறை பொலிஸ் குற்றத் தடுப்பு பிரிவினர் தெரிவித்துள்ளனர். சடலமாக மீட்கப்பட்டவர் திரிவானகெட்டிய தோட்டப் பகுதியைச் சேர்ந்த 74 வயதுடைய வயோதிபப் பெண் ஆவார். வயோதிபப் பெண்ணின் மரணத்திற்கான காரணம் இதுவரை கண்டறியப்படவில்லை என பொலிஸார் தெரிவித்துள்ளனர். இது தொடர்பான மேலதிக விசாரணைகளை களுத்துறை பொலிஸ் குற்றத் தடுப்பு பிரிவினர் மேற்கொண்டு வருகின்றனர்.
பூந்தோட்டம் வீதியில் விபத்து – பலர் காயம்

வவுனியா பூந்தோட்டம் பிரதான வீதியில் நேற்று (2) இரவு இடம்பெற்ற விபத்தில் இரண்டு பெண்கள் உட்பட ஏழு பேர் காயமடைந்த நிலையில் வவுனியா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். குறித்த விபத்து தொடர்பாக மேலும் தெரியவருவதாவது. இரண்டு முச்சக்கரவண்டிகள் நேருக்கு நேர் மோதியதில் இந்த விபத்து இடம்பெற்றுள்ளது. விபத்தில் இரு முச்சக்கரவண்டிகளின் சாரதிகள் மற்றும் இரு பெண்கள் உட்பட 7 பேர் காயமடைந்த நிலையில் வவுனியா வைத்தியசாலையில் சிகிச்சைகளுக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர். சம்பவ இடத்திற்கு சென்ற வவுனியா பொலிஸார் விபத்து தொடர்பான […]
எந்தவொரு மாணவரும் பொருளாதார சிக்கலால் தொழிற்கல்வி வாய்ப்பை இழக்கக் கூடாது!

நாட்டின் எந்தவொரு மாணவரும் பொருளாதார சிக்கல்கள் காரணமாக தொழிற்கல்வி அல்லது வேறு எந்த கல்வி வாய்ப்பையும் இழக்காத வகையில் அரசாங்கத்தின் அனைத்து மூலோபாயத் திட்டங்களும் தயாரிக்கப்பட வேண்டும் என பிரதமர் டாக்டர் ஹரிணி அமரசூரிய கூறினார். தொழிற்கல்வித் துறையுடன் இணைக்கப்பட்ட நிறுவனங்களின் பட்ஜெட் மற்றும் மூலோபாய திட்டமிடல் குறித்த பட்டறையில் உரையாற்றும் போது பிரதமர் இதை வலியுறுத்தினார். தொழில்கல்வித் துறையுடன் இணைக்கப்பட்ட இரண்டு பல்கலைக்கழகங்கள் உட்பட ஒன்பது நிறுவனங்களின் தலைவர்கள் மற்றும் பணிப்பாளர்கள், அதிகாரிகளின் பங்கேற்புடன் இந்தப் […]
குருநாகல் வீதியோரத்தில் சென்று கொண்டிருந்த சிறுவர்களுக்கு நேர்ந்த பரிதாபம்
சிலாபம் – குருநாகல் வீதியின் மேல் கொஸ்வத்த பகுதியில் இடம்பெற்ற விபத்தில் 13 வயது சிறுவன் உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். குறித்த சம்பவம் நேற்று (01.02.2026) பிற்பகல் இடம்பெற்றுள்ளது. சிலாபம் நோக்கிச் சென்ற பாரவூர்தி ஒன்று, வீதியோரத்தில் நடந்து சென்ற இரண்டு சிறுவர்கள் மீது மோதியதில் இந்த விபத்து ஏற்பட்டுள்ளது. விபத்தில் படுகாயமடைந்த இரண்டு சிறுவர்களும் உடனடியாக சிலாபம் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். இந்த நிலையில் சிகிச்சை பெற்று வந்த சிறுவர்களில் ஹல்மில்லேவ பகுதியைச் சேர்ந்த 13 வயது […]
வடமாகாண மீனவ சங்கங்கள் கோரிக்கை!

அண்மையில் தமிழ் தேசிய மக்கள் முன்னணியினர் தமிழகம் சென்றிருந்த நிலையில் இந்திய மீனவர் விடயங்கள் பேசும் பொருளாக காணப்பட்டது. ஆனால் தமிழகம் செல்வதற்கு முன்னர் தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியினர் இலங்கை மீனவர் பிரதிநிதிகளை சந்தித்து எதுவிதமான கலந்துரையாடும் இல்லாமல் தான்தோன்றித்தனமாக தமிழகம் சென்று அங்கு இலங்கை மீனவர் பிரச்சினை தொடர்பில் பேசி இருக்கின்றார் என வடமாகாண கடற்தொழில் இணையத்தின் செயலாளர் மொகமட் ஆலம் தெரிவித்தார். பாராளுமன்ற உறுப்பினர் கஜேந்திரகுமார் பொன்னம்பலம் அழைப்பு ஏற்று, வடமாகாண மீனவ […]
கனமழை; இரணைமடுக் குளத்தின் 8 வான் கதவுகள் திறப்பு!

வட மாகாணத்தில் தற்போது பெய்து வரும் கனமழை காரணமாக மக்களின் இயல்பு வாழ்க்கை பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளது. தற்போது பெரும் போக அறுவடை நடைபெற்று வரும் நிலையில், அறுவடைக்குத் தயாராக இருந்த நெற்பயிர்கள் வெள்ளத்தில் மூழ்கியுள்ளன. தொடர்ச்சியான மழை காரணமாக கிளிநொச்சி மாவட்டத்தின் இரணைமடுக் குளத்தின் நீர் வரத்து அதிகரித்துள்ளது. இதன் காரணமாக குளத்தின் நீர்மட்டம் தற்போது 36 அடி 6 அங்குலமாக உயர்ந்துள்ளது. இதனைத் தொடர்ந்து குளத்தின் 08 வான் கதவுகளும் தலா அரை அங்குலம் (1/2″) […]
மயிலிட்டியில் இராணுவ வாகனம் மோதி வயோதிபர் பலி

இராணுவத்திற்கு சொந்தமான வாகனம் ஒன்று, மோதுண்டதில் வயோதிபர் ஒருவர் உயிரிழந்தார். யாழ்ப்பாணம் – மயிலிட்டி பகுதியில் இன்று (2) குறித்த வயோதிபர் துவிச்சக்க வண்டியில் பயணித்துள்ளார். அந்த சந்தர்ப்பத்தில் அங்கு பயணித்த இராணுவத்திற்கு சொந்தமான வாகனம் குறித்த துவிச்சக்கரவண்டியுடன் மோதியுள்ளது. இதன்போது துவிச்சக்கரவண்டியில் பயணித்த வயோதிபர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். சடலம் உடற்கூற்று பரிசோதனைக்காக தெல்லிப்பழை வைத்தியசாலையில் ஒப்படைக்கப்பட்டுள்ளதுடன், பலாலி பொலிஸார் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.
கனடா அறிவித்த வேலைவாய்ப்பு வாக்குறுதியை நிறைவேற்ற விமானங்களை வாங்க வேண்டும்!

12,600 வேலைவாய்ப்புகளை கனடாவில் உருவாக்கும் தனது வாக்குறுதியை நிறைவேற்றுவதற்காக, கனடா ஆயுதப் படைகள் 72 Gripen போர் விமானங்களையும், 6 GlobalEye கண்காணிப்பு விமானங்களையும் வாங்க வேண்டியிருக்கும் என்று ஸ்வீடன் நிறுவனமான சாப்(Saab) கூறியுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. அரசு மற்றும் தொழில்துறை வட்டாரங்கள் கூறுவதாவது, இரு வகை விமானங்களுக்கான சாப்(Saab) நிறுவனத்தின் முன்மொழிவுகள் தற்போது ஒட்டாவாவில் பாதுகாப்பு மற்றும் பொருளாதார பலன்கள் தொடர்பான நிபுணர்களால் ஆய்வு செய்யப்படுகின்றன. சாப்(Saab) நிறுவனத்தின் உயர் அதிகாரிகள் கடந்த ஆண்டு இறுதியில், கனடாவில் […]
கியூபெக்கில் பிரெஞ்ச் தேர்வில் 1 மதிப்பெண் குறைவாகப் பெற்றதால் இக்கட்டில் ஒரு குடும்பம்

கியூபெக்கில் குடியேறியதிலிருந்து சுமார் நான்கு ஆண்டுகள் கடந்த நிலையில், இந்த வாரம் தங்கள் பட்டமேற்படிப்பு முடிந்த பின் வழங்கப்படும் வேலை அனுமதி (post-graduation work permit) விண்ணப்பம் நிராகரிக்கப்பட்டதால், உடனடியாக வேலைகளை விட்டு விலக வேண்டியதாக தங்களுக்கு அறிவிக்கப்பட்டதாக அந்த கொலின் சில்வா என்பவர் தெரிவித்துள்ளார். கொலின் சில்வா கும்பத்தினர் சிறந்த வாழ்க்கையை நாடி மெக்சிக்கோவை விட்டு வெளியேற முடிவு செய்ததாகவும் கனடா பற்றியும் அதன் பாதுகாப்பு மற்றும் வரவேற்பு மனப்பான்மை கொண்ட நாடு என்பதையும் பற்றி […]
தொடர்ச்சியான வர்த்தக மற்றும் அரசியல் முரண்பாடுகளுக்கு மத்தியில் கனடிய இராணுவம் அமெரிக்கா விஜயம்!

அமெரிக்காவில் தயாரிக்கப்படும் F-35 போர் விமானங்களில் முதல் ஒன்றை விரைவில் பெற்றுக்கொள்ளும் நிலையில், கனடிய ஆயுதப்படைகள் திங்கட்கிழமை டெக்சாஸில் நடைபெறும் விழாவில் பங்கேற்க உள்ளன. இருப்பினும், அமெரிக்காவில் தயாரிக்கப்படும் எத்தனை போர் விமானங்களை இறுதியாக வாங்கப்போகிறது என்பதை ஓட்டாவா இன்னும் அறிவிக்கவில்லை. கனடா–அமெரிக்கா இடையிலான தொடர்ச்சியான வர்த்தக மற்றும் அரசியல் முரண்பாடுகள் காரணமாக CF-18 போர் விமானங்களை மாற்றும் திட்டத்தின் எதிர்காலம் தற்போது மீளாய்வு செய்யப்படுகிறது. சமீபத்திய எச்சரிக்கையாக, அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் கனடாவில் தயாரிக்கப்படும் […]