இஞ்சியின் விலை அதிகரிப்பு

உள்ளூர் சந்தையில் இஞ்சியின் விலை சடுதியாக அதிகரித்துள்ளதாக மரக்கறி வியாபாரிகள் தெரிவித்துள்ளனர். கடந்த காலங்களில் 300 தொடக்கம் 500 ரூபாய் வரை விற்பனை செய்யப்பட்ட இஞ்சியின் விலை, தற்போது 1 கிலோ கிராம் 1,500 ரூபாய் தொடக்கம் 2,000 ரூபாய் வரையான அதிக விலைக்கு விற்பனை செய்யப்படுவதாகவும் மரக்கறி வியாபாரிகள் தெரிவித்துள்ளனர். நாட்டில் ஏற்பட்ட சீரற்ற காலநிலை காரணமாக இஞ்சிச் செய்கைகள் அழிவடைந்துள்ளது எனவும் இந்நாட்களில் உள்ளூர் சந்தையில் பச்சை இஞ்சிக்குத் தட்டுப்பாடு நிலவுவதாகவும் மரக்கறி வியாபாரிகள் […]
சமலின் இளைய மகனை கைது செய்ய உத்தரவு
முன்னாள் சபாநாயகர் சமல் ராஜபக்ஷவின் இளைய மகன் ஷமிந்திர ராஜபக்ஷவை கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்துமாறு கொழும்பு கோட்டை நீதவான் நீதிமன்றம் திங்கட்கிழமை (02)அன்று குற்றப் புலனாய்வுத் துறைக்கு (சிஐடி) உத்தரவிட்டது. ஸ்ரீலங்கன் ஏர்லைன்ஸ் நிறுவனத்திற்கு 14 ஏர்பஸ் விமானங்களை வாங்கியதில் நடந்ததாகக் கூறப்படும் நிதி மோசடி தொடர்பாக அவரை கைது செய்ய உத்தரவிட்டுள்ளது.
உயிருக்கு போராடிய இலங்கையரை மீட்ட பாகிஸ்தான் கடற்படை

மனிதாபிமான அடிப்படையிலும், கடலில் ஆபத்தில் இருப்பவர்களைக் காக்கும் கடமையுணர்வோடும் பாகிஸ்தான் கடற்படை இந்தியப் பெருங்கடலில் ஒரு மிகப்பெரிய மீட்புப் பணியை செய்து முடித்துள்ளது. பாகிஸ்தான் கரையில் இருந்து சுமார் 1,500 கி.மீ (800 கடல் மைல்) தொலைவில், நடுக் கடலில் உயிருக்கு போராடிக்கொண்டிருந்த இலங்கை பிரஜை ஒருவரை பாகிஸ்தான் கடற்படையினர் பத்திரமாக மீட்டுள்ளனர். சர்வதேச அளவில் விடுக்கப்பட்ட அவசர அழைப்பை ஏற்று, மிக விரைவாகச் செயல்பட்டு இந்த நீண்ட தூர மருத்துவ மீட்புப் பணியை அவர்கள் வெற்றிகரமாக […]
மழை, மின்னல் தாக்கம் குறித்து எச்சரிக்கை
மேல் மற்றும் சப்ரகமுவ மாகாணங்களிலும் காலி மற்றும் மாத்தறை மாவட்டங்களின் சில இடங்களிலும் இடியுடன் கூடிய மழையுடன் பலத்த மின்னல் தாக்கங்கள் ஏற்படக்கூடிய அதிக சாத்தியக்கூறுகள் காணப்படுவதாக வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வு கூறியுள்ளது. இடியுடன் கூடிய மழை பெய்யும் போது அந்தப் பகுதிகளில் தற்காலிகமாக பலத்த காற்று வீசக்கூடும் என அறிவிக்கப்பட்டுள்ளது. மின்னல் தாக்கங்களினால் ஏற்படக்கூடிய விபத்துக்களைக் குறைத்துக் கொள்ளத் தேவையான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு வளிமண்டலவியல் திணைக்களம் பொதுமக்களை அறிவுறுத்தியுள்ளது.
இலஞ்ச, ஊழல் விசாரணை ஆணைக்குழுவில் சபாநாயகருக்கு எதிராக முறைப்பாடு

பொதுச்செயலாளர் சமிந்த குலரத்ன, இலஞ்ச அல்லது ஊழல் குற்றச்சாட்டுகளை விசாரணை செய்யும் ஆணைக்குழுவிற்கு வருகை தந்துள்ளார். சபாநாயகருக்கு எதிராக முறைப்பாடொன்றை முன்வைப்பதற்காகவே அவர் இவ்வாறு வருகை தந்துள்ளார். இதன்போது சமிந்த குலரத்ன சார்பில் ஊடகங்களுக்கு கருத்துத் தெரிவித்த சட்டத்தரணி மிதுன் டயஸ், இது அரசாங்கத்திற்கு எதிரான முறைப்பாடு அல்ல எனவும், தற்போது பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ள தனது கட்சிக்காரருடன் கொண்டுள்ள தனிப்பட்ட விரோதம் காரணமாகவே இம்முறைப்பாடு செய்யப்படுவதாகவும் தெரிவித்தார். அத்துடன், சபாநாயகரின் ஊழல் எதிர்ப்பு நடவடிக்கைகள் தொடர்பிலான […]
தங்கத்தின் விலை வீழ்ச்சி
உலக சந்தையில் தங்கத்தின் விலை வீழ்ச்சியடைந்ததைத் தொடர்ந்து, இலங்கையிலும் ஒரு பவுன் தங்கத்தின் விலை குறைவடைந்துள்ளது. இதன்படி, 24 கரட் தங்கப் பவுன் ஒன்றின் விலை 12,000 ரூபாவினால் குறைந்துள்ளதாக கொழும்பு செட்டியார் தெரு தங்க சந்தை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. அதன் அடிப்படையில், இன்று (02) 24 கரட் ஒரு பவுன் தங்கம் 368,000 ரூபாவாகவும், 22 கரட் ஒரு பவுன் தங்கம் 338,600 ரூபாவாகவும் பதிவாகியுள்ளது. உலக சந்தையில் தற்போது ஒரு அவுன்ஸ் தங்கத்தின் விலை […]
பிரச்சினைகளுக்குத் தீர்வு கிடைக்காமையினால் பாடசாலை அபிவிருத்தி உத்தியோகத்தர்கள் போராட்டம்

டசாலை அபிவிருத்தி உத்தியோகத்தர்களின் பிரச்சினைகளுக்குத் தீர்வு கிடைக்காமையினால், இன்று (02) முற்பகல் முதல் ஜனாதிபதி செயலகத்திற்கு முன்னால் இலங்கை பாடசாலை அபிவிருத்தி உத்தியோகத்தர் சங்கத்தினால் ஆர்ப்பாட்டம் ஒன்று ஆரம்பிக்கப்பட்டுள்ளது. பாடசாலை அபிவிருத்தி உத்தியோகத்தர்கள் சிவில் அமைப்புக்களின் பிரதிநிதிகள் உள்ளிட்ட குழுவினருடன் இணைந்து இந்தப் போராட்டத்தை முன்னெடுப்பதாக இலங்கை பாடசாலை அபிவிருத்தி உத்தியோகத்தர் சங்கம் தெரிவித்துள்ளது. இலங்கை பாடசாலை அபிவிருத்தி உத்தியோகத்தர் சங்கம் ஜனாதிபதி செயலகத்திற்கு முன்னால் ஆரம்பித்த உண்ணாவிரதப் போராட்டம் இன்று 8வது நாளாகவும் தொடர்கிறது. பாடசாலைகளில் […]
ஆமை இறைச்சி, முட்டைகளுடன் மூவர் கைது

13 கிலோ கிராம் ஆமை இறைச்சி, 39 ஆமை முட்டைகள் மற்றும் ஒரு டிங்கி படகுடன் மூன்று சந்தேக நபர்களை கடற்படையினர் கைது செய்துள்ளனர். கைது செய்யப்பட்ட சந்தேக நபர்கள் 26 முதல் 32 வயதுக்கு இடைப்பட்டவர்கள் என கடற்படையினர் தெரிவித்துள்ளனர். கடந்த 31ஆம் திகதி மன்னார், நாச்சிக்குடா கடற்கரைப் பகுதியில் முன்னெடுக்கப்பட்ட விசேட தேடுதல் நடவடிக்கையின் போதே இவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். சந்தேக நபர்கள், ஆமை இறைச்சி, முட்டைகள் மற்றும் டிங்கி படகு என்பன மேலதிக […]
தடைசெய்யப்பட்ட நிறுவனமொன்றின் உரிமையாளருக்குச் சொந்தமான வங்கி அட்டையை அமைச்சர் வைத்திருந்தார்?

தடைசெய்யப்பட்ட (பிளாக் லிஸ்ட்) நிறுவனமொன்றின் உரிமையாளருக்குச் சொந்தமான வங்கி அட்டையை அமைச்சர் நளிந்த ஜயதிஸ்ஸ பயன்படுத்தியதாக தகவல்கள் வெளியாகியுள்ளதாக குற்றம் சுமத்தப்பட்டுள்ளது. ஐக்கிய மக்கள் சக்தியின் முன்னாள் மாகாண சபை உறுப்பினர் நிரோஷன் பாதுக்க தெரிவித்துள்ளார். அமைச்சர் நளிந்த ஜயதிஸ்ஸ தனது இந்திய பயணத்தின் போது குறித்த வங்கி அட்டையை பயன்படுத்தி, ஒரு மில்லியன் ரூபாவிற்கும் மேற்பட்ட பணப் பரிவர்த்தனைகளை மேற்கொண்டதாக குற்றச்சாட்டுகள் எழுந்துள்ளதாக குறிப்பிட்டுள்ளார். அமைச்சர் நளிந்த ஜயதிஸ்ஸ இந்தியாவிற்கு மேற்கொண்ட பயணத்தின் போது, தடைசெய்யப்பட்ட […]
பிளாஸ்டிக் குழாய்க்குள் வெளிநாட்டு துப்பாக்கியுடன் ஒருவர் கைது
பிளாஸ்டிக் குழாய் ஒன்றினுள் மறைத்து வைக்கப்பட்டிருந்த வெளிநாட்டில் தயாரிக்கப்பட்ட துப்பாக்கி மற்றும் இரண்டு ரவைகளுடன் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். சந்தேக நபரிடமிருந்து கைப்பற்றப்பட்ட குறித்த துப்பாக்கியின் இலக்கம் தெளிவற்ற நிலையில் காணப்படுவதாக பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர். மத்திய குற்றப் புலனாய்வு பணியகத்தின் மனிதக் கொலைகள் மற்றும் ஒழுங்கமைக்கப்பட்ட குற்றப் புலனாய்வுப் பிரிவு பொறுப்பதிகாரி பொலிஸ் பரிசோதகர் எம்.ஜி. சாணக்கவின் வழிகாட்டுதலின் கீழ், பொலிஸ் பரிசோதகர் அறாகமவுக்கு கிடைத்த தகவலுக்கமைய, உஸ்வெட்டகெய்யாவ – பமுனுகம பிரதேசத்திலுள்ள வீடொன்றில் வைத்து சந்தேக […]