கனடா இந்தியாவுடன் முக்கிய ஒப்பந்தத்தில் கைச்சாத்து

இந்தியா மற்றும் கனடா இடையே மிகப்பெரிய யுரேனியம் ஒப்பந்தம் கையெழுத்தாகும் நிலையில் உள்ளது. சுமார் 3 பில்லியன் அமெரிக்க டொலர் மதிப்பிலான இந்த ஒப்பந்தம், மார்ச் 2026ல் நிறைவேற்றப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்த ஒப்பந்தத்தின் மூலம், கனடா இந்தியாவுக்கு நீண்ட காலத்திற்கு யுரேனியம் வழங்கும். இந்தியா தனது ஆற்றல் தேவைகளை பூர்த்தி செய்யவும், தூய்மையான மின்சாரம் உற்பத்தியை அதிகரிக்கவும் இந்த ஒப்பந்தத்தை முன்னெடுத்து வருகிறது. கனடா உலகின் முக்கிய யுரேனியம் உற்பத்தியாளர்களில் ஒன்றாகும். இந்தியாவுக்கு யுரேனியம் வழங்குவதன் […]

கனேடியப் பெண் அவுஸ்திரேலியாவில் மர்ம மரணம்?

அவுஸ்திரேலியாவில் கனேடிய பெண்ணொருவ மர்ம முறையில் உயிரிழந்த நிலையில், பிரித்தானிய பெண்ணொருவரின் டிக்டோக் காணொளி தற்போது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. கனடாவைச் சேர்ந்த பைப்பர் ஜேம்ஸ் என்கிற 19 வயது பெண், அவுஸ்திரேலியாவின் K’gari என்ற இடத்தில் உள்ள கடற்கரையில் சடலமாக கண்டெடுக்கப்பட்டார். அவர் காட்டு நாய்களால் கொல்லப்பட்டாரா என்ற கேள்வி எழுந்தது. உடற்கூறு ஆய்வில் அவரது உடலில், அவர் உயிரிழப்பதற்கு முன்பும், அவர் உயிரிழந்த பின்பும் காயங்கள் ஏற்பட்டது தெரிய வந்தது. ஆனால், அப்பெண் காட்டு நாய்கள் […]

உலகக் கிண்ணத்தை நல்லூர் ஆலயத்திற்குள் கொண்டு சென்றவர்களால் குழப்பம்

இலங்கை மற்றும் இந்திய நாடுகள் இணைந்து நடாத்தும் 20க்கு 20 உலகக் கிண்ண கிரிக்கெட் தொடருக்கான வெற்றிக் கிண்ணம் யாழ்ப்பாணத்துக்கு நேற்று(01.02.2026) வாகன பேரணியாக எடுத்து செல்லப்பட்டது. அதனடிப்படையில், யாழ்ப்பாணம், நல்லூர் கந்தசுவாமி ஆலயத்திற்கும் குறித்த வெற்றிக் கிண்ணம் எடுத்து செல்லப்பட்டது. இதன்போது, வெற்றிக் கிண்ணத்தை எடுத்து சென்ற குழுவில் சிலர் பாதணிகளுடன் ஆலய வளாகத்திற்குள் சென்றுள்ளனர். அதனை தொடர்ந்து, ஆலய நிர்வாகத்தினரால் பாதணிகளை அகற்றுமாறு அவர்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது. அதேநேரம், ஆலய வளாகத்திற்குள் வைத்து, புகைப்படங்கள் எடுக்க […]

நெடுங்கேணியில் கிவுல் ஓயா திட்டத்துக்கு எதிராக பெரும் போராட்டம்

அரசின் கிவுல் ஓயா திட்டத்துக்கு எதிர்ப்புத் தெரிவித்து இன்று வவுனியா – நெடுங்கேணியில் பெரும் போராட்டம் முன்னெடுக்கப்படவுள்ளது. இந்தப் போராட்டத்தில் தமிழ் மக்கள் பெருந்திரளாகப் பங்கேற்க வேண்டும் என்று ஏற்பாட்டாளர்கள் அழைப்பு விடுத்துள்ளனர். இன்று முற்பகல் 10 மணிக்கு நெடுங்கேணி பஸ் நிலையம் முன்பாக ஒன்றுகூடும் போராட்டக்காரர்கள் அங்கிருந்து பேரணியாக நெடுங்கேணி பிரதேச செயலகம் வரை நகர்ந்து ஆர்ப்பாட்டத்தை முன்னெடுப்பர். போராட்டத்தின் நிறைவில் மனு ஒன்றும் கையளிக்கப்படவுள்ளது. இந்தப் போராட்டத்துக்கு இலங்கைத் தமிழரசுக் கட்சி, ஜனநாயகத் தமிழ்த் […]

இருபதுக்கு 20; இலங்கையை வீழ்த்தி இங்கிலாந்து வெற்றி

இலங்கை அணிக்கு எதிரான இரண்டாவது இருபதுக்கு 20 போட்டியில் இங்கிலாந்து அணி டக்வத் லூயிஸ் முறைமையின் மூலம் 6 விக்கெட்டுக்களால் வெற்றி பெற்றுள்ளது. சுற்றுலா இங்கிலாந்து அணிக்கும் இலங்கை அணிக்கும் இடையிலான இரண்டாவது இருபதுக்கு 20 போட்டி நேற்று(1) பல்லேகலையில் இடம்பெற்றது. போட்டியில் நாணய சுழற்சியில் வென்ற இங்கிலாந்து அணி முதலில் பந்து வீச தீர்மானித்தது. இன்றைய போட்டியில் இலங்கை அணி இரண்டு முக்கிய மாற்றங்களுடன் களமிறங்கியது. தனஞ்சய டி சில்வா மற்றும் மஹீஸ் தீக்ஸனவுக்கு பதிலாக […]

போதைப்பொருள் சோதனை; பொலிஸாரை தாக்கியவர்கள் கைது

போதைப்பொருள் சோதனையில் ஈடுபடச் சென்ற பொலிஸ் அதிகாரிகள் குழுவொன்றைத் தாக்கிய குற்றச்சாட்டில் நான்கு பேர் மஹா ஓயா பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளனர். மஹா ஓயா பொலிஸ் நிலைய அதிகாரிகள் குழுவொன்று, ‘கல்வலயாய 1000 ஏக்கர்’ பகுதியில் போதைப்பொருள் சோதனையில் ஈடுபட்டிருந்த போது, அங்கு வந்த நான்கு நபர்களால் பொலிஸார் மீது இந்தத் தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது. இந்தத் தாக்குதலில் காயமடைந்த பொலிஸ் சார்ஜன்ட் ஒருவர் சிகிச்சைக்காக மஹா ஓயா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது. தாக்குதலை நடத்திய சந்தேகநபர்களும், தாக்குதலுக்குப் […]

பிற்பகல் இடியுடன் கூடிய மழை!

வடக்கு, வடமத்திய, கிழக்கு, ஊவா மற்றும் மத்திய மாகாணங்களிலும் ஹம்பாந்தோட்டை மாவட்டத்திலும் இன்று (2) அடிக்கடி மழை பெய்யக்கூடும் என வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வுகூறியுள்ளது. மேல் மற்றும் சப்ரகமுவ மாகாணங்களிலும் காலி மற்றும் மாத்தறை மாவட்டங்களிலும் பிற்பகல் 2.00 மணிக்குப் பின்னர் ஆங்காங்கே மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடும். சில இடங்களில் சுமார் 50 மி.மீ அளவிலான பலத்த மழை பெய்ய வாய்ப்புள்ளது. மேல், சப்ரகமுவ மற்றும் மத்திய மாகாணங்களிலும் காலி மற்றும் மாத்தறை […]

தொழிற்சங்க போராட்டம் தீவிரம்!

அரசாங்க வைத்திய அதிகாரிகள் சங்கத்தின் தொடர்ச்சியான தொழிற்சங்க நடவடிக்கை இன்று (02) காலை முதல் தீவிரப்படுத்தப்படும் என அந்த சங்கம் தெரிவித்துள்ளது. இதன்படி, இன்று காலை 8.00 மணி முதல் இந்த தொழிற்சங்க நடவடிக்கை முன்னெடுக்கப்படவுள்ளது. தமது கோரிக்கைகள் தொடர்பில் சுகாதார அமைச்சு சாதகமான தீர்வுகளை வழங்கத் தவறியுள்ளதால், இன்று முதல் பின்வரும் தொழிற்சங்க நடவடிக்கைகளை மேற்கொள்ளத் தீர்மானித்துள்ளதாக அந்த சங்கம் குறிப்பிட்டுள்ளது. வைத்தியசாலைகளில் இல்லாத மருந்து வகைகள் மற்றும் உபகரணங்களை வெளியில் இருந்து பெற்றுக்கொள்ளுமாறு நோயாளர்களுக்குப் […]

உலக சதுப்பு நில தினம் இன்று!

உலக சதுப்பு நில தினம் இன்று (02) இன்றாகும். ஒவ்வொரு ஆண்டும் பெப்ரவரி மாதம் 2 ஆம் திகதி ‘உலக சதுப்பு நில தினமாக’ ராம்சார் சதுப்பு நில உடன்படிக்கையின் பொதுச் செயலகம் அறிவித்தது. பின்னர், இது ஐக்கிய நாடுகள் சபையினாலும் அங்கீகரிக்கப்பட்டது. 1971 ஆம் ஆண்டு பெப்ரவரி மாதம் 2 ஆம் திகதி ஈரானின் ரம்சார் (Ramsar) நகரில் சதுப்பு நிலங்களைப் பாதுகாப்பதற்கான சர்வதேச உடன்படிக்கை எட்டப்பட்டது. இலங்கை இந்த உடன்படிக்கையில் 1991 ஆம் ஆண்டில் […]