தொடர் தொழிற்சங்க நடவடிக்கையில் அரச வைத்திய அதிகாரிகள்

இன்று (26) காலை 8.00 மணி முதல் தொடர்ச்சியான தொழிற்சங்க நடவடிக்கையில் ஈடுபடவுள்ளதாக அரச வைத்திய அதிகாரிகள் சங்கம் தெரிவித்துள்ளது. 05 தொழிற்சங்க வழிமுறைகளின் ஊடாக இந்த பணிப்புறக்கணிப்பு முன்னெடுக்கப்படுவதாக அச்சங்கத்தின் ஊடகப் பேச்சாளர் வைத்தியர் சமில் விஜேசிங்க தெரிவித்தார். அதற்கமைய, 01.கிளினிக்குகள் மற்றும் வெளிநோயாளர் பிரிவுகளில் (OPD) இல்லாத மருந்துகளை, வெளி மருந்தகங்களில் கொள்வனவு செய்வதற்காக துண்டுச் சீட்டுகளை (பரிந்துரைச் சீட்டு) வழங்காமை. 02.வைத்தியசாலை அமைப்பிற்குள் இல்லாத ஆய்வுகூட பரிசோதனைகளை, வெளி ஆய்வுகூடங்கள் மற்றும் தனியார் […]
கடும் குளிர்கால புயல் அமெரிக்காவின் 23 மாநிலங்களில் அவசர நிலை

அமெரிக்காவில் கடும் குளிர்கால புயல் காரணமாக இன்று சுமார் 185 மில்லியன் மக்கள் குளிர்கால எச்சரிக்கைகளின் கீழ் உள்ளனர். தெற்கு பகுதிகளிலிருந்து வடகிழக்கு வரை உள்ள 23 மாநிலங்களில் அவசர நிலை அறிவிக்கப்பட்டுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். இந்த புயலின் தாக்கத்தால் லூசியானா மாநிலத்தின் காடோ பாரிஷ் பகுதியில் வசித்த இரண்டு ஆண்கள் உயிரிழந்துள்ளனர். இந்த இருவரும் கடும் குளிரால் ஏற்பட்ட ஹைப்போதெர்மியா (உடல் வெப்பநிலை அபாயகரமாக குறைவது) காரணமாக உயிரிழந்ததாக மாநில சுகாதாரத்துறை உறுதிப்படுத்தியுள்ளது. புயல் தெற்கு […]
கனடா சீனாவுடன் சுதந்திர வர்த்தக ஒப்பந்தம் செய்ய யோசிக்கவில்லை – பிரதமர் கார்னி

அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப், கனடா சீனாவுடன் “ஒப்பந்தம் செய்தால்” கடுமையான சுங்க வரிகளை விதிப்பதாக மிரட்டும் சூழலில், கனடா பிரதமர் மார்க் கார்னி, சீனாவுடன் சுதந்திர வர்த்தக ஒப்பந்தத்தை முன்னெடுக்க “எந்த நோக்கமும் இல்லை” என்று தெரிவித்துள்ளார். “கடந்த சில ஆண்டுகளில் உருவான சில பிரச்சினைகளை சரிசெய்வதே சீனாவுடன் நாம் மேற்கொண்ட நடவடிக்கைகளின் நோக்கம்,” என ஞாயிற்றுக்கிழமை காலை ஒட்டாவாவில் செய்தியாளர்களிடம் கார்னி தெரிவித்தார். அவர் குறிப்பிட்ட வர்த்தகப் பொருட்களில் சீனாவில் தயாரிக்கப்பட்ட மின்சார வாகனங்கள் […]
பொலிஸ் தாக்குதல்; பாதிரியார் கொழும்பு தேசிய வைத்தியசாலைக்கு மாற்றம்

பொலிஸ் உத்தியோகத்தர்களின் தாக்குதலுக்கு உள்ளானதாக கூறப்படும் கத்தோலிக்க பாதிரியார், நீர்கொழும்பு பொது வைத்தியசாலையிலிருந்து மேலதிக சிகிச்சைக்காக கொழும்பு தேசிய வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டுள்ளார். நேற்று (25) பிற்பகல் அவர் கொழும்பு தேசிய வைத்தியசாலைக்கு அழைத்து வரப்பட்டார். பொலிஸ் உத்தியோகத்தர்கள் குழுவொன்று தம்மைத் தாக்கியதாகத் தெரிவித்து, கொடதெனியாவ பிரதேசத்தைச் சேர்ந்த மிலான் பிரியதர்ஷன என்ற கத்தோலிக்க பாதிரியார் நேற்று முன்தினம் (24) நீர்கொழும்பு மாவட்ட பொது வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டிருந்தார். நேற்று இரவு வழிபாட்டு நிகழ்வொன்றில் கலந்துகொள்வதற்காக மோட்டார் சைக்கிளில் பயணித்துக்கொண்டிருந்த […]
கனடா முழுவதும் கடும் குளிர்; பனி மழை, ஆயிரக்கணக்கானோர் மின்சாரமின்றி பாதிப்பு!

நேற்று ஞாயிற்றுக்கிழமை, கனடாவின் பெரும்பாலான பகுதிகளில் கடும் குளிரும் அதிக பனிப்பொழிவும் மக்களின் இயல்பு வாழ்க்கையை கடுமையாக பாதித்து வருகிறது. கடந்த சில நாட்களாக போலார் வோர்டெக்ஸ் (Polar Vortex) எனப்படும் கடும் குளிர் வானிலை அமைப்பு நாட்டின் பெரும்பகுதியை மூடியுள்ளதால், பல நிர்வாக பகுதிகளுக்கு ஆரஞ்சு எச்சரிக்கை (Orange Alert) விடுக்கப்பட்டுள்ளதாக என்விரான்மென்ட் கனடா தெரிவித்துள்ளது. இத்தகைய எச்சரிக்கை, கடுமையான வானிலை குறிப்பிடத்தக்க சேதம், இடையூறு அல்லது உடல்நல பாதிப்புகளை ஏற்படுத்தக்கூடும் என்பதைக் குறிக்கிறது. சாஸ்காச்சுவான் […]
நெடுஞ்சாலையில் கைவிடப்பட்டிருந்த சொகுசு கார் மீட்பு

தெற்கு அதிவேக நெடுஞ்சாலையில் அபரக்க மற்றும் பெலியத்த பகுதிகளுக்கு இடையில் 140 ஆவது கிலோமீற்றர் தூணுக்கு அருகில் பூட்டப்பட்டு கைவிடப்பட்டிருந்த சந்தேகத்திற்கிடமான சொகுசு கார் ஒன்றை திஹகொட பொலிஸார் தமது பொறுப்பில் எடுத்துள்ளனர். வீதி அபிவிருத்தி அதிகாரசபை அதிகாரிகளால் வழங்கப்பட்ட தகவலுக்கமைய, அபரக்க அதிவேக நெடுஞ்சாலை போக்குவரத்து பொலிஸ் அதிகாரிகளால் நேற்று (25) இரவு இந்த கார் கண்டுபிடிக்கப்பட்டு, மேலதிக விசாரணைகளுக்காக திஹகொட பொலிஸாரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது. அக்காரிலிருந்த பற்றுச்சீட்டின் மூலம், அது தொடாங்கொட நுழைவாயிலூடாக உட்சென்று மத்தல […]
கனேடிய அமைச்சரால் வாகீசனுக்கு ‘வேல்’ வழங்கல்

கனடாவின் ரொறன்ரோ நகரில் மாபெரும் கலை நிகழ்ச்சியொன்று நடைபெற்றுள்ளது. குறித்த நிகழ்வானது, டூறம் மாநாட்டு மண்டபத்தில் (Durham Convention Centre), ஜனவரி 24ஆம் திகதி சனிக்கிழமை அன்று இடம்பெற்றுள்ளது. இந்த கலைவிழாவில், ‘சிலோன் ராப்’ (Ceylon Rap) சொல்லிசைக் கலைஞர்களின் பங்களிப்பும் அவர்களின் ஆழமான தமிழ்ப்பற்றும் வெகுவாகப் பாராட்டப்பட்டது. இந்த விழாவில் சிறப்பு விருந்தினராகக் கலந்துகொண்ட ஒன்ராறியோ மாநில சுகாதார இணை அமைச்சரும், ஒன்ராறியோ சட்டமன்ற உறுப்பினருமான விஜய் தணிகாசலம் சொல்லிசைக் கலைஞர்களை நேரில் பாராட்டி கௌரவித்துள்ளார். […]
இலங்கை டித்வா புயல்; அதிகரித்துள்ள பலி எண்ணிக்கை

இலங்கையில் டித்வா சூறாவளியால் ஏற்பட்ட உயிரிழப்புகளில் மேலும் 3 பேரின் மரணங்கள் உறுதி செய்யப்பட்டுள்ளன என்று தேசிய அனர்த்த முகாமைத்துவ நிலையம் அறிவித்துள்ளது. நேற்று இற்றைப்படுத்தப்பட்ட தரவுகளின் அடிப்படையில் இந்த விடயம் அறிவிக்கப்பட்டுள்ளது. மாவட்ட அரச அதிபர்களினால் உறுதி செய்யப்பட்ட தரவுகளுக்கு அமைய, கண்டி, வவுனியா மற்றும் இரத்தினபுரி ஆகிய மாவட்டங்களில் தலா ஒவ்வொரு மரணங்கள் உறுதி செய்யப்பட்டுள்ளன என்று புதுப்பிக்கப்பட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. அதற்கமைய, டித்வா சூறாவளியால் ஏற்பட்ட அனர்த்தங்களில் சிக்குண்டு உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 649 […]
போதைப்பொருள் பாவனைக்கு அடிமையான மகனைக் கொன்ற தந்தை

பொலனறுவையில் இளைஞர் ஒருவர் அவரின் தந்தையாரால் வெட்டிப் படுகொலை செய்யப்பட்டுள்ளார். இந்தச் சம்பவம் பொலனறுவை, மெதிரிகிரியை பிரதேசத்தில் நேற்றையதினம்(25) இடம்பெற்றுள்ளது. 24 வயதுடைய இளைஞரே சம்பவத்தில் உயிரிழந்துள்ளதாக விசாரணையில் தெரியவந்துள்ளது. போதைப்பொருள் பாவனைக்கு அடிமையான மேற்படி இளைஞர், தந்தையாருடன் முரண்பட்டு வீட்டில் தொடர்ந்து குழப்பங்களை ஏற்படுத்தி வந்துள்ளார்.இது இறுதியில் கொலையில் முடிவடைந்துள்ளது என்று பொலிஸாரின் ஆரம்பகட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது. உயிரிழந்தவரின் தந்தையான 48 வயது நபரைக் கைது செய்துள்ள பொலிஸார், மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
பல பகுதிகளில் இடியுடன் கூடிய மழை

வடக்கு, வடமத்திய, கிழக்கு, வடமேல் மற்றும் ஊவா மாகாணங்களிலும் மாத்தளை மற்றும் நுவரெலியா மாவட்டங்களிலும் பல தடவைகள் மழை பெய்யக்கூடும் என வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வு கூறியுள்ளது. நாட்டின் ஏனைய பிரதேசங்களில் பிற்பகல் 2.00 மணிக்குப் பின்னர் ஆங்காங்கே மழையோ அல்லது இடியுடன் கூடிய மழையோ பெய்யக் கூடிய சாத்தியம் காணப்படுவதாக அந்த திணைக்களம் வௌியிட்டுள்ள வானிலை முன்னறிவிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேல் மற்றும் சப்ரகமுவ மாகாணங்களிலும் காலி மற்றும் மாத்தறை மாவட்டங்களிலும் சில இடங்களில் 50 மி.மீ […]