கனேடிய அமைச்சரால் வாகீசனுக்கு ‘வேல்’ வழங்கல்

கனடாவின் ரொறன்ரோ நகரில் மாபெரும் கலை நிகழ்ச்சியொன்று நடைபெற்றுள்ளது.

குறித்த நிகழ்வானது, டூறம் மாநாட்டு மண்டபத்தில் (Durham Convention Centre), ஜனவரி 24ஆம் திகதி சனிக்கிழமை அன்று இடம்பெற்றுள்ளது.

இந்த கலைவிழாவில், ‘சிலோன் ராப்’ (Ceylon Rap) சொல்லிசைக் கலைஞர்களின் பங்களிப்பும் அவர்களின் ஆழமான தமிழ்ப்பற்றும் வெகுவாகப் பாராட்டப்பட்டது.

இந்த விழாவில் சிறப்பு விருந்தினராகக் கலந்துகொண்ட ஒன்ராறியோ மாநில சுகாதார இணை அமைச்சரும், ஒன்ராறியோ சட்டமன்ற உறுப்பினருமான விஜய் தணிகாசலம் சொல்லிசைக் கலைஞர்களை நேரில் பாராட்டி கௌரவித்துள்ளார்.

“ஈழ மண்ணிலிருந்து வந்த இந்த இளம் கலைஞர்கள், சொல்லிசை எனும் நவீன கலை வடிவத்தினூடாக எமது செந்தமிழை அடுத்த தலைமுறைக்குக் கொண்டு செல்கின்றனர்.

எமது வரலாற்றையும் அடையாளத்தையும் உலகுக்கு உரக்கச் சொல்லி, உலகெங்கும் சிதறிக்கிடக்கும் தமிழர்களை ஒன்றிணைக்கும் ஒரு குரலாக இவர்கள் ஒலிக்கின்றனர். சமூக மாற்றத்திற்கும் ஒற்றுமைக்கும் கலை ஒரு வலிமையான ஆயுதம் என்பதை இவர்கள் நிரூபித்துள்ளனர்” என அமைச்சர் தெரிவித்துள்ளார்.

அத்துடன் அமைச்சர் விஜய் தணிகாசலம் ஒவ்வொரு கலைஞரின் தனித்துவத்திற்கும் ஏற்ப பெறுமதிமிக்க நூல்களைத் தனது கைப்படப் பரிசாக வழங்கினார்.

தமிழர்களின் வீரம், கொடை மற்றும் கல்வி நெறிகளைப் பறைசாற்றும் ‘புறநானூறு’ நூலை அத்விக் உதயகுமாருக்கும், அறம் போதிக்கும் உலகப் பொதுமறையாம் ‘திருக்குறள்’ நூலை திஷோன் விஜயமோகனுக்கும் அவர் வழங்கினார்.

வாகீசன் இராசையாவுக்கு, முப்பாட்டன் முருகனின் பெருமைகளைச் சந்த ஓசையுடன் பாடும் ‘திருப்புகழ்’ நூல் வழங்கப்பட்டது. இந்த நிகழ்வின் மிக முக்கிய சிறப்பம்சமாக, பாடகர் வாகீசனுக்கு ஒரு ‘வேல்’ பரிசாக வழங்கப்பட்டது.

‘வண்ண மயில் ஏறும்…’ பாடலின் மூலம் உலகளாவிய புகழ்பெற்ற வாகீசன், தனது சொல்லிசைப் பாடல்களில் ‘பார்வதி மகன்’ என்றும், எம் இனத்தலைவன் என்றும், போற்றப்படும் முப்பாட்டன் முருகனைத் தொடர்ந்து முன்னிறுத்தி வருவதைச் சுட்டிக்காட்டிய அமைச்சர், வாகீசனை எதிர்காலத்தின் ஒரு சிறந்த தலைமையாகக் கருதுவதாகவும், அதன் அடையாளமாகவே இந்த வேலை அவருக்கு வழங்குவதாகவும் தெரிவித்தார்.

கலை விழாவிற்கு அப்பால், அன்றைய நிகழ்வு சமூக முன்னேற்றத்திற்கும் ஒரு முக்கிய மைல்கல்லாக அமைந்தது. ரொறன்ரோவில் அமையவிருக்கும் தமிழ் சமூக மையத்திற்காக ஒரே இரவில் ஒரு மில்லியன் டொலர்களுக்கும் அதிகமான நிதி திரட்டப்பட்டது.

கனடிய மத்திய அரசு, மாநில அரசு மற்றும் மாநகராட்சி ஆகிய மூன்று நிலை அரசாங்கங்களின் நிதியுதவியையும் ஆதரவையும் இந்த மையம் ஏற்கனவே பெற்றுள்ளது.

உலகளாவிய தமிழ்ச் சூழலில், புலம்பெயர் தமிழ் மக்களால் கட்டப்படும் முதலாவது தமிழ் சமூக மையம் இது என்பதால், எமது எதிர்கால சந்ததியினருக்காக ஒரு நிரந்தரமான இடத்தை உருவாக்கித் தரும் வரலாற்றுப் பொறுப்பை ஏற்று தமிழ்ச் சமூகம் தனது பங்களிப்பை வழங்க வேண்டும் என்ற அறைகூவல் விடுக்கப்பட்டது.

அரசாங்கங்கள் தமது பங்கைச் செய்துள்ள நிலையில், இந்த மையத்தை முழுமைப்படுத்துவது சமூகத்தின் கடமை என்பதும் இவ்விழாவில் வலியுறுத்தப்பட்டது.

இந்த விழா ரொறன்ரோ வாழ் தமிழ் மக்களிடையே பெரும் எழுச்சியையும், இளம் சொல்லிசை கலைஞர்களுக்கான கௌரவத்தையும் ஒருசேர வழங்கிய ஒரு வரலாற்று நிகழ்வாகப் பதிவாகியுள்ளது.

hungary pm

நெதன்யாகு ஹங்கேரிக்கு வந்தால் கைது செய்வோம்: புதிய பிரதமர் பீட்டர் மக்யார் அதிரடி

April 21, 2026

ர்வதேச குற்றவியல் நீதிமன்றத்தில் (ICC) இருந்து ஹங்கேரி விலகும் முடிவை தாம் நிறுத்தப்போவதாக ஹங்கேரியின் புதிய பிரதமராகப் பொறுப்பேற்கவுள்ள பீட்டர்

Screenshot

இலங்கைக்கருகே ஈரானுடன் தொடர்புடைய எண்ணெய் கப்பலில் அமெரிக்கப் படைகள் அதிரடி சோதனை: பென்டகன் அறிவிப்பு

April 21, 2026

ஆசியக் கடற்பரப்பில் ஈரானிய எண்ணெய் கப்பல் (Oil Tanker) ஒன்றில் அமெரிக்கப் படைகள் ஏறிச் சோதனை நடத்தியுள்ளதாக அமெரிக்கப் பாதுகாப்புத்

tn-chief-electoral-officer-archana-patnaik-has-said-sir-forms-have-been-6-16-crore-people-in-tamil-nadu

தமிழகத்தில் தேர்தல் பிரசாரம் ஓய்ந்தது: உடனடியாக அமலுக்கு வந்த கெடுபிடிகள்! மீறினால் 2 ஆண்டு சிறை – தேர்தல் ஆணையம் எச்சரிக்கை!

April 21, 2026

சென்னை, தமிழக சட்டமன்றத் தேர்தலுக்கான அனல் பறக்கும் பிரசாரம் இன்று மாலை 6 மணியுடன் நிறைவடைந்தது. இதனைத் தொடர்ந்து, வாக்குப்பதிவு

hwar

வடக்கு மாகாண ஆளுநருடன் யாழ். கட்டளை தளபதி சந்திப்பு

April 21, 2026

யாழ்ப்பாணம் பாதுகாப்புப் படைகளின் புதிய கட்டளைத் தளபதியாக அண்மையில் பதவியேற்ற மேஜர் ஜெனரல் கே.ஜே.என்.எம்.பி.கே. நவரத்ன, வடக்கு மாகாண ஆளுநர்

Diana

முன்னாள் அமைச்சர் டயனா கமகேயிற்கு எதிரான வழக்கு ஒத்திவைப்பு

April 21, 2026

கடவுச்சீட்டைப் பெற்றுக்கொள்வதற்காக குடிவரவு மற்றும் குடியகல்வு கட்டுப்பாட்டாளருக்கு தவறான தகவல்களை வழங்கியமை மற்றும் செல்லுபடியாகும் விசா இன்றி இலங்கையில் தங்கியிருந்தமை

heat

சிவப்பு எச்சரிக்கை!

April 21, 2026

நாளை (22) பகல் வேளையில் பல மாகாணங்களில் வெப்பச் சுட்டெண், அதாவது மனித உடலுக்கு உணரப்படும் வெப்பத்தின் அளவு ‘கவனம்

ddsfd

கடும் மழை காரணமாக சுமார் 50 தோட்ட வீடுகள் நீரில் மூழ்கின!

April 21, 2026

ஹட்டன் – டிக்கோயா பகுதியில் இன்று (21) பிற்பகல் பெய்த கடும் மழை காரணமாக, டிக்கோயா போடைஸ் தோட்டத்தின் தாழ்நிலப்பகுதிகளில்

war

இந்திய போர்க்கப்பல் கொழும்பு வந்தது

April 21, 2026

இந்தியக் கடற்படைக்குச் சொந்தமான ‘INS NIREEKSHAK’ போர்க்கப்பல், ‘கலப்பு வாயு முக்குளிப்புப் பயிற்சி’ (Mixed Gas Diving Training) திட்டத்தை

17405459651

“பிள்ளை அப்பாவுக்கு 5 கோடி கொடுக்கக்கூடாதா?” – மகன் விஜய் குறித்து எஸ்.ஏ.சந்திரசேகர் உருக்கம்!

April 21, 2026

சென்னை, தமிழக வெற்றிக் கழகத் தலைவர் விஜய், வரும் சட்டசபை தேர்தலில் பெரம்பூர் மற்றும் திருச்சி கிழக்கு ஆகிய இரண்டு

semm

எதிர்வரும் 27 ஆம் திகதி; செம்மணி மூன்றாம் கட்ட அகழ்வுப் பணிகள்!

April 21, 2026

செம்மணி மனித புதைகுழியின் மூன்றாம் கட்ட அகழ்வு பணிகள் எதிர்வரும் 27 ஆம் திகதி ஆரம்பமாகவுள்ளது. செம்மணி மனித புதைகுழியில்

G2geVPza4AEUez7_

“வென்று வா தலைவா.. எப்போதும் உங்களுடன் இருப்பேன்!” – விஜய்க்காக சிபி சத்யராஜ் எழுதிய உருக்கமான கடிதம்!

April 21, 2026

சென்னை, தமிழக அரசியலில் நடிகர் விஜய் எடுத்துள்ள புதிய பாய்ச்சல் குறித்து விவாதங்கள் கிளம்பியுள்ள நிலையில், நடிகர் சத்யராஜின் மகன்

sain

தொடர் பரிசோதனைக்கு உட்படுத்தப்படும் உணவகங்கள்

April 21, 2026

சாய்ந்தமருது சுகாதார வைத்திய அதிகாரி பிரிவிற்குட்பட்ட உணவகங்கள் தொடர்ச்சியாக பொதுச் சுகாதார பரிசோதகர்களினால் பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்டு வருகின்றன. இதன்போது மனித