2026 சட்டப்பேரவைத் தேர்தலில் மக்கள் நீதி மய்யம் போட்டியிடவில்லை – கமல்ஹாசன்

2026 சட்டப்பேரவைத் தேர்தலில் மக்கள் நீதி மய்யம் போட்டியிடவில்லை என அக்கட்சியின் தலைவர் கமல்ஹாசன் எம்.பி. அறிவித்துள்ளார்.

சென்னை அண்ணா அறிவாலயத்தில் முதல்வர் ஸ்டாலின் உடனான சந்திப்புக்குப் பின்னர் செய்தியாளர்களை சந்தித்த கமல்ஹாசன், “முதல்வரும், துணை முதல்வரும் மிகவும் மரியாதையுடன் நடந்துகொண்டார்கள். நாட்டுக்கான முக்கியமான போராட்டம் இது. இந்த ஆட்சி தொடர வெண்டும் என்பதே என் விருப்பம், என் முடிவு. எனக்கு அரசியல் தொழில் அல்ல, கடமை.

தொண்டர்களின் உணர்வை புறக்கணிக்க முடியாது, புறக்கணிக்கவும் மாட்டேன். அரசியல் களத்தில் தேர்தல் என்பது ஒரு பகுதிதான், அதுவே இறுதி கிடையாது. அரசியலில் முற்றுப்புள்ளி என்பதே கிடையாது. இந்த தேர்தலில் திமுகவுக்கு வெளியில் இருந்து அழுத்தமான ஆதரவு கொடுப்போம். இந்த ஆட்சி மீண்டும் மலர வேண்டும் என்பதே என் முடிவு. என்னை பெரும் மரியாதையோடு நடத்துகிறார்கள்” என்றார்.

இது குறித்து மக்கள் நீதி மய்யம் கட்சியின் தலைவர் கமல்ஹாசன் வெளியிட்ட அறிக்கையில், ‘கடந்த நாடாளுமன்றத் தேர்தலில், தேச நன்மைக்காக திராவிட முன்னேற்றக் கழகத்தின் தலைமையிலான கூட்டணியில் இணைந்தோம். கூட்டணியின் வெற்றிக்காக கடுமையாக உழைத்தோம். அதன் விளைவாக, மக்கள் நீதி மய்யத்தின் குரல் இந்திய நாடாளுமன்றத்தின் மாநிலங்களவையில் ஒலித்தது. அன்று முதல் இன்று வரை நம்முடைய தனித்துவத்தை விட்டுக்கொடுக்காமல், கூட்டணி தர்மத்தை பேணி வருகிறோம்.

2026 தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தலுக்கான தொகுதி ஒதுக்கீடு பேச்சுவார்த்தை இரண்டு கட்டமாக நடைபெற்றது. அந்தப் பேச்சுவார்த்தையின் போது முதல்வர், துணை முதல்வர் மற்றும் திமுக பேச்சுவார்த்தை குழு உறுப்பினர்களும் அன்போடும் மரியாதையோடும் நட்புணர்வோடும் நடந்துகொண்டார்கள் என்பதை பதிவு செய்யத்தான் வேண்டும்.

இன்றிருக்கும் இக்கட்டான அரசியல் சூழலில், நமக்குத் தருவதாகச் சொல்லியிருக்கும் தொகுதி எண்ணிக்கையும், உதயசூரியன் சின்னத்தில் போட்டியிட வேண்டும் என்ற பரிந்துரையும், மக்கள் நீதி மய்யத்தின் உறுப்பினர்களுக்கும் எனக்கும் ஏற்புடையதாக இல்லை.

தமிழ்நாட்டின் உரிமைகள் ஒவ்வொன்றாகப் பறிக்கப்பட்டு, தமிழ் மக்களின் நலன்கள் புறக்கணிக்கப்பட்டு வரும் ஒரு நெருக்கடியான சூழலில், ‘எங்கே எங்கள் பங்கு’ என்று கேட்பது நல்ல சகோதரனின் அடையாளமாக இருக்கமுடியாது. இது தியாகம் அல்ல; கடமை. சுய நலம் அல்ல; பொறுமை.

தேர்தல் அரசியலில் யாருமே இப்படி செய்ததில்லையே என்று கேட்பீர்களானால், ஒரு புதிய அரசியல் நாகரீகத்தின் விதை நான் போட்டது என்று பணிவோடு சொல்வேன். முதல்வர் அன்போடு அளிப்பதை பெருமையோடு மறுப்பதும் அன்பின் வடிவமே. தங்கள் குடும்பத்துக்காக எத்தனையோ பேர் தன் வீட்டை விட்டு, ஊரை விட்டு, நாட்டை விட்டு எண்ணற்ற தியாகங்களை செய்கிறார்கள். தமிழ்நாடுதான் என் குடும்பம். நான் சீட்டுகளை விட்டுக்கொடுத்திருக்கிறேன்.

தமிழ்நாட்டின் முன்னேற்றத்திற்கு, திராவிட மாடல் 2.0 அரசு அமைவது இன்றைய தேவை. இது வெறும் ஆட்சி மட்டுமல்ல. காந்தி, பெரியார், அம்பேத்கர் ஆகியோரின் கொள்கைகளை நடைமுறைப்படுத்தும் நீதிபரிபாலனம். ஆகவே 2026 தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தலில் மக்கள் நீதி மய்யம் நேரடியாகப் போட்டியிடவில்லை என்றும், திராவிட முன்னேற்றக் கழகத்தின் தலைமையிலான கூட்டணியின் வேட்பாளர்களை நிபந்தனையின்றி ஆதரிப்பது என்கிற முடிவை திறந்த மனதுடன், தெளிந்த உள்ளத்துடனும் அறிவிக்கிறோம் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Amar

தோல்வியுற்ற கொள்கைகளால் பாதிக்கப்பட்ட கனடா – பிரம்ப்டன் நகர வாகனத் துறையை மீட்க கன்சர்வேட்டிவ் கட்சி புதுத்திட்டம் வகுப்பு!

March 25, 2026

லிபரல் கட்சியின் தோல்வியுற்ற கொள்கைகள் கனடாவின் வாகனத் துறையை பெருமளவில் பாதித்து வருகின்றன. 2015-ஆம் ஆண்டு முதல், கனடாவின் வாகன

ALka

ஈரானின் புதிய உச்ச தலைவர் அமெரிக்காவுடன் பேச்சு நடத்தத் தயாராக இருக்கிறார் – இஸ்ரேலிய ஊடகம் செய்தி

March 25, 2026

ஈரானின் புதிய உச்ச தலைவர் மொஜ்தபா காமெனி, அமெரிக்காவுடன் பேச்சுவார்த்தை நடத்தத் தயாராக இருக்கிறார் என இஸ்ரேலிய ஊடகமான யெடியோத்

leb

‘விரும்பத் தகாத நபர்’; லெபனானுக்கான ஈரான் தூதுவரை வெளியேறுமாறு உத்தரவு

March 25, 2026

லெபனானுக்கான ஈரான் தூதுவரை ‘விரும்பத் தகாத நபர்’ என அறிவித்துள்ள லெபனான் அரசாங்கம், எதிர்வரும் ஞாயிற்றுக்கிழமைக்கு முன்னர் அவரை நாட்டை

arrest

எரிபொருள் சட்டவிரோத விற்பனை; பவுசருடன் ஒருவர் கைது

March 25, 2026

பல்வேறு நபர்களுக்கு விற்பனை செய்யும் நோக்கில், சட்டவிரோதமான முறையில் எரிபொருள் பவுசர் ஒன்றையும் அதிகளவிலான எரிபொருளையும் தன்வசம் வைத்திருந்த வர்த்தகர்

Elec

மின்சாரப் பயன்பாட்டைக் குறைக்குமாறு அரசாங்கம் கோரிக்கை

March 25, 2026

தற்போது ஏற்பட்டுள்ள எரிபொருள் நெருக்கடி காரணமாக தினமும் மாலை 6 மணி முதல் இரவு 10 மணி வரை மின்சாரப்

Court

நீதிமன்ற வளாகத்திற்குள் பெண்ணொருவர் குத்திக் கொலை!

March 25, 2026

குருணாகல், கல்கமுவ நீதவான் நீதிமன்ற வளாகத்தில் உள்ள வழக்கறிஞர்கள் வளாகத்திற்கு முன்பாக 37 வயதான பெண் கொடூரமாக கொலை செய்யப்பட்டுள்ளார்.

chama

நாடாளுமன்ற உறுப்பினர் சாமரவுக்கு எதிரான ஊழல் வழக்கு ஒத்திவைப்பு

March 25, 2026

எதிரணி நாடாளுமன்ற உறுப்பினர் சாமர சம்பத் தசநாயக்கவுக்கு எதிராகத் தாக்கல் செய்யப்பட்டுள்ள ஊழல் வழக்கை, எதிர்வரும் ஏப்ரல் மாதம் 30

Laxman

எரிபொருள் விலையை தனியார் நிறுவனங்கள் தன்னிச்சையாகக் அதிகரிப்பதாகக் குற்றசாட்டு!

March 25, 2026

அரசாங்கம் மூன்று முறை எரிபொருள் விலையை அதிகரித்தமையானது பொதுமக்கள், வர்த்தக சமூகம், தொழிலதிபர்கள் மற்றும் விவசாயிகள் என அனைத்துத் தரப்பினரையும்

jud_1

கிளிநொச்சியில் சட்டவிரோத கடற்றொழில்; இந்திய கடற்றொழிலாளர்களுக்கு கடூழிய சிறை

March 25, 2026

இரணைதீவுக்கு அண்மித்த கடற்பரப்பில் சட்டவிரோத கடற்றொழிலில் ஈடுபட்ட இரண்டு இந்திய கடற்றொழிலாளர்களுக்கு இன்றிலிருந்து பத்து வருடங்களுக்கு ஒத்திவைக்கப்பட்ட நான்கு மாத

cabinet

நாட்டின் பொருளாதாரத்தை மேம்படுத்துவதற்காக ஜனாதிபதி சமர்ப்பித்த முன்மொழிவுக்கு அமைச்சரவை அனுமதி

March 25, 2026

வலுசக்தி பொருளாதாரத்தை மேம்படுத்துவதற்காக, ஹான்ஸ் விஜேசூரிய தலைமையில் விசேட நிபுணர் குழுவை நியமிக்க ஜனாதிபதி அனுர குமார திசாநாயக்க சமர்ப்பித்த

muj

யுத்த நிலைமையால் நாட்டுக்கு ஏற்படுகின்ற நெருக்கடிகளுக்கு தீ்ர்வுகாண எந்த முன் ஏற்பாடுகளையும் அரசாங்கம் செய்யவில்லை

March 25, 2026

மத்திய கிழக்கில் ஏற்பட்டுள்ள யுத்த நிலைமையால் நாட்டுக்கு ஏற்படுகின்ற நெருக்கடிகளுக்கு தீ்ர்வுகாண எந்த முன் ஏற்பாடுகளையும் அரசாங்கம் செய்யவில்லை. அரசாங்கத்திடம்

Sivakolunthu Sri Satgunarajah

யாழ்.பல்கலை நிர்வாகப் பணிகளில் இருந்து விடைபெற்றார் சற்குணராஜா

March 25, 2026

யாழ்ப்பாணப் பல்கலைக் கழகத்தின் கணிதவியல் பேரா சிரியர் சிவக்கொழுந்து சிறி சற்குணராஜா, கடந்த 2020ஆம் ஆண்டிலிருந்து வகித்த துணைவேந்தர் பதவியில்