2026 ஜனவரியில் யாழ் சர்வதேச வர்த்தகக் கண்காட்சி!

வட இலங்கையின் மிகப் பெரிய மற்றும் மிகவும் ஆதிக்கம் செலுத்தும் பன்முக வர்த்தகக் கண்காட்சியான யாழ் சர்வதேச வர்த்தகக் கண்காட்சி நிகழ்வானது. தொடர்ந்து 16 தடவையாகவும் இடம்பெற ஏற்பாடாகியுள்ளதுடன், 2026 ஜனவரி 23 முதல் 25 வரை யாழ் முற்றவெளி மைதானத்தில் இடம்பெறவுள்ளது. இப்பிராந்தியத்தில் மிகவும் நிலைபெற்றுள்ள வர்த்தக மேடையாக மாறியுள்ள இக்கண்காட்சி, வட மாகாணத்தின் மத்தியில் பொருளாதார மேம்பாட்டை முன்னேற்றி, வணிக தொடர்புகளை வளர்த்து, தொழில்நுட்பத்தால் முன்னெடுத்துச் செல்லப்படும் புத்தாக்கத்தை ஊக்குவிப்பதில் தொடர்ந்தும் முக்கிய பங்கு வகிக்கும்.

இலங்கையில் கண்காட்சி மற்றும் வர்த்தக நிகழ்வுகளை ஏற்பாடு செய்வதில் முன்னிலை வகிக்கும் அதேசமயம், ஜனாதிபதி விருதினையும் வென்றுள்ள Lanka Exhibition & Conference Services (LECS) ன் ஏற்பாட்டிலும், யாழ் வர்த்தக மற்றும் கைத்தொழில் சம்மேளனத்தின் ஒத்துழைப்புடனும் ஒழுங்கு செய்யப்பட்டுள்ள ITF, நாட்டில் மிகவும் ஆவலுடன் எதிர்பார்க்கப்படுகின்ற நிகழ்வுகளில் ஒன்றாக வளர்ச்சி கண்டுள்ளது. தொழில் நேர்த்தி மற்றும் பல தசாப்தங்கள் நீவிட தொழில்துறை நிபுணத்துவம் ஆகியவற்றுக்காகப் பெயர்பெற்று விளங்கும் LECS, உச்ச மட்ட பங்கேற்பு பரந்தளவில் தேசிய தெரிநிலை, மற்றும் யாழ் குடாநாடு எங்கிலும் சீரான வகையில் JITF குறித்த ஊக்குவிப்பு எட்டுவதை உறுதி செய்யும். அதன் வலுவான வலையமைப்பு மற்றும் நன்மதிப்பு ஆகியன மிக வேகமாக வளர்ச்சி கண்டு வருகின்ற வட பிராந்திய சந்தையில் மூலோபாய நுழைவாயிலாக இக்கண்காட்சி திகழ்வதை அங்கீகரித்துள்ள வியாபாரங்கள், முதலீட்டாளர்கள், மற்றும் நிறுவனங்களை தொடர்ந்தும் இந்நிகழ்வு தன்பால் ஈர்த்து வருகின்றது.

உச்ச பணிபலனைத் தரக்கூடிய வியாபார ஈடுபாடுகளை நிரூபித்துள்ள மேடை

வடக்கில் இடம்பெறும் மிகவும் விரிவான மற்றும் பெறுபேறுகளால் முன்னெடுக்கப்படுகின்ற வர்த்தகக் கண்காட்சியாக JITF மிகவும் வலுவாக நிலைபெற்றுள்ளது. இந்த ஸ்தானத்தை 2026 ஆண்டு நிகழ்வும் மீண்டும் வலுப்படுத்தவுள்ளது. கடந்த ஆண்டு நிகழ்வில் இலங்கையின் அனைத்து பாகங்களிலுமிருந்து 78,452 பார்வையாளர்கள் பங்குபற்றியதுடன், சிரேஷ்ட அதிகாரிகள், வர்த்தகத் துறை தலைவர்கள், தொழில்முயற்சியாளர்கள், மற்றும் முதலீட்டாளர்கள் அடங்கலாக, வணிகப் பிரதிநிதிகள் 5,000 பேரும் அழைக்கப்பட்டிருந்தனர். வர்த்தகப் பரிமாற்றம் மற்றும் சந்தை ஆய்வு ஆகியவற்றுக்கான முதன்மையான மேடை என்ற இக்கண்காட்சியின் அந்தஸ்தை மேற்குறிப்பிட்ட எண்ணிக்கையான வரவுகள் பிரதிபலிக்கின்றன.

பல்வகைப்பட்ட கைத்தொழில் துறைகள் மத்தியில் விரிவான தயாரிப்புக்கள், சேவைகள், மற்றும் நவீன தொழில்நுட்பங்களைக் கொண்ட 400 க்கும் மேற்பட்ட கண்காட்சிக்கூடங்களை இக்கண்காட்சி நிகழ்வு கொண்டிருக்கும். இலங்கை மிகவும் பிரகாசமான வாய்ப்புடன், சீராக விஸ்தரிப்படைந்து வருகின்ற பிராந்தியப் பொருளாதாரங்களில் ஒன்றின் அனுபவங்களை ஆராய விரும்புகின்ற உற்பத்தியாளர்கள், வழங்குநர்கள், விநியோகத்தர்கள், இறக்குமதியாளர்கள். ஏற்றுமதியாளர்கள், மற்றும் புத்தாக்குநர்கள் போன்ற தரப்பினரை இந்நிகழ்வின் பல்வகைப்பட்ட கண்காட்சியாளர்கள் தளம் வெருவாக ஈர்க்கின்றது. சேவை

கண்காட்சி நிகழ்வைப் பார்வையிட வருகை தருகின்றவர்கள் மத்தியில் கிட்டத்தட்ட 70% பேர் நேரடி வணிக கலந்துரையாடல்களில் ஈடுபட்டு, புதிய கூட்டாண்மைகள், விநியோக ஒப்பந்தங்கள், மற்றும் முதலீட்டு வாய்ப்புக்களை ஏற்படுத்திக் கொள்ளும் வகையில் அர்த்தமுள்ள வணிக உரையாடல்களை வளர்ப்பது இச்சந்தையின் ஆற்றலின் முக்கியமான பலமாகக் காணப்படுகின்றது. சந்தை விரிவாக்கம், வர்த்தகநாம தெரிநிலை, மற்றும் நீண்ட கால வியாபார மேம்பாடு ஆகியவற்றுக்கான வழிகாட்டியாக JITF நிகழ்வை கண்காட்சியாளர்கள் தொடர்ச்சியாக அங்கீகரித்து வருகின்றனர்.

பங்கேற்பு மற்றும் ஈடுபாட்டை உச்சப்படுத்துவதற்கு உதவுவதற்காக, ஏனைய கடப்பாடுகள் மத்தியில் இன்னல்படாது கண்காட்சியாளர்களும், பார்வையாளர்களும் தவறாது வருகை தருவதை உறுதி செய்வதற்காக, 2026* ஆண்டு நிகழ்வானது பிராந்திய விடுமுறைகளைத் தவிர்க்கும் வகையில் மூலோபாயரீதியாக திட்டமிடப்பட்டுள்ளது. இத்தகைய சிறப்பான திட்டமிடல் கொண்ட அணுகுமுறையானது, வணிக நடவடிக்கைகள் வளம் கொழிக்கக்கூடிய சந்தையாக JITE ஆதிக்கத்தை தொடர்ந்தும் வலுப்படுத்தி வருகின்றது.

பல்வகைப்பட்ட கைத்தொழில் துறைகளை பிரதிநிதித்துவம் செய்யும் பல்துறை கண்காட்சி

பல்வகைப்பட்ட துறைசார் பிரதிநிதித்துவத்திலேயே JITF ன் பலம் தங்கியுள்ளதுடன், புத்தாக்கம், வணிகம், மற்றும் வர்த்தக வளர்ச்சிக்கான மையமாக மாற்றுகின்றது. 2026″ ஆண்டு கண்காட்சி நிகழ்வில், கட்டுமான மூலப்பொருட்கள் மற்றும் எந்திரங்கள், மோட்டார் வாகனம், நுகர்வோர் தயாரிப்புக்கள், விவசாயம், ஹோட்டல் வழங்கல் பொருட்கள், ஆடையணி மற்றும் எந்திரங்கள், உணவு, பான வகை, மற்றும் பொதியிடல், தகவல் தொடர்பாடல் தொழில்நுட்பம், நிதிச் சேவைகள், கல்வி, சுகாதாரப் பராமரிப்பு தயாரிப்புக்கள் மற்றும் சேவைகள், வளர்ந்து வரும் மற்றும் விசேட கைத்தொழில் துறைகள் உள்ளிட்ட பல்வகைப்பட்ட துறைகள் இடம்பெறவுள்ளன.

இத்தகைய அளவில் அதன் பிரலபமானது பல்வேறு துறைகளுடனும் தொடர்புபட்ட பல்வேறு தரப்பினரையும் ஈர்த்து, வணிக-வணிக மற்றும் வணிக-நுகர்வோர் வர்த்தக முயற்சிகளுக்கு துணைபோவதை இக்கண்காட்சி உறுதி செய்கின்றது. தயாரிப்புக்களின் அறிமுகம், சந்தையை பரீட்சார்த்தமாக முயற்சி செய்தல், வணிக இணைப்பொருத்தம், மற்றும் முக்கிய தீர்மானம் வகுப்பவர்களுடன் அறிமுகங்களை ஏற்படுத்திக் கொள்ளல் ஆகியவற்றுக்கான உகந்த சூழலை இக்கண்காட்சி வழங்குகின்றது.

பல்வகைப்பட்ட மற்றும் செல்வாக்கு மிக்க பார்வையாளர்கள் வருகை

யாழ் சர்வதேச வர்த்தக கண்காட்சியானது ஆண்டுதோறும் பல்வகைப்பட்ட மற்றும் செல்வாக்கு மிக்க பங்கேற்பாளர்களை ஈர்ப்பதுடன், பிராந்தியத்தின் பொருளாதார நடவடிக்கைகளுக்கு கணிசமான அடங்கியுள்ளவர்கள்: அளவில் பங்களிக்கின்றது. பங்கேற்பவர்கள் வழக்கமாக மத்தியில்

இறக்குமதியாளர்கள், ஏற்றுமதியாளர்கள், மொத்த விற்பனையாளர்கள் மற்றும் விநியோகத்தர்கள்

வர்த்தக சம்மேளனங்கள் மற்றும் வர்த்தக சங்கங்களின் அங்கத்தவர்கள்

கூட்டாண்மைகள் அல்லது கூட்டு வர்த்தக முயற்சிகளை நாடும் உள்ளூர் தொழில் முயற்சியாளர்கள் மற்றும் சிறிய, நடுத்தர அளவிலான தொழில் முயற்சிகள்

நிதி நிறுவனங்கள் மற்றும் அபிவிருத்தி முகவர் நிறுவனங்களின் பிரதிநிதிகள்

விவசாயம், மீன்பிடி, பொறியியல், மற்றும் தொழில்நுட்ப துறை சார் தொழில் வல்லுனர்கள் ஆராய்ச்சியாளர்கள், ஆலோசகர்கள், மற்றும் சான்று அங்கீகாரம் வழங்கும் அமைப்புக்கள்

இத்தகைய அளவிற்கு மகத்தான மட்டத்தில் தொடர்புபட்ட பல்வேறு தரப்பினரும் இணைந்து கொள்வது; வடக்கில் நீண்டகால வணிக கூட்டாண்மைகளை வளர்த்து, வணிக அபிவிருத்தியைத் தூண்டுவதற்கான இயல்பான மையமாக இக்கண்காட்சியை மாற்றியமைத்துள்ளது.

வட இலங்கையின் வளர்ச்சிக்கான வழிகாட்டி

வட மாகாணத்தில் போருக்குப் பின்னரான பொருளாதார மீட்சிக்கான அத்திவாரமாக யாழ் சர்வதேச வர்த்தகக் கண்காட்சி நிகழ்வு மாறியுள்ளது. இப்பிராந்தியத்தில் உட்கட்டமைப்பு வசதிகள் சீராக வலுப்பட்டு மற்றும் முதலீடுகள் உள்வரும் நிலையில், வலுவான, மற்றும் வேகமாக பரிணமித்து வருகின்ற ஒரு சந்தையில் புதிய வாய்ப்புக்களை ஆராய்வதற்கு JITF தொடர்ந்தும் வழிவகுத்து வருகின்றது.

அதிக எண்ணிக்கையில் வருகை தரும் பார்வையாளர்கள், பரந்த துறைகளின் பிரதிநிதித்துவம், நிலைபேற்றியல் சார்ந்த முயற்சிகள், மற்றும் அறிவூட்டல் தளங்கள் ஆகியவற்றுடன், 168 யாழ் சர்வதேச வர்த்தகக் கண்காட்சி 2026 நிகழ்வு வணிகம், புத்தாக்கம், மற்றும் நிலைபேற்றியல் கொண்ட அபிவிருத்திக்கான மிகவும் முக்கியமான மையமாக நிலைபெற்றுள்ள வட இலங்கையின் ஸ்தானத்தை மேலும் வலுப்படுத்தவுள்ளது.

சூழல் மீதான பொறுப்புணர்வை வலுப்படுத்தல்: பிளாஸ்திக் சமநிலை முயற்சி

சர்வதேச நிலைபேற்றியல் போக்குகளுக்கு அமைவாக, தொடர்ந்து இரண்டாவது தடவையாக, 2026 ஆண்டிலும் தனது பிளாஸ்திக் சமநிலை முயற்சியை ITF தொடரவுள்ளது. சுற்றுச்சூழல் மீது ஏற்பாட்டாளர்கள் காண்பிக்கும் பொறுப்புணர்வையும், அர்ப்பணிப்பையும், மற்றும் பாரிய அளவிலான நிகழ்வுகளில் சூழலுக்கு ஏற்படும் தாக்கங்களை குறைந்தபட்சமாக்கும் முனைப்பையும் இம்முயற்சி பிரதிபலிக்கின்றது.

பிளாஸ்திக் மற்றும் பொலித்தீன் கழிவுகளை முறையாக அகற்றுவதை ஊக்குவிப்பதற்காக. கண்காட்சி மைதானங்கள் எங்கிலும் விசேட கழிவு முகாமைத்துவம் மற்றும் மீள்சுழற்சி மையங்கள் ஏற்பாடு செய்யப்படவுள்ளன. நிலைபேற்றியல் சார்ந்த கழிவு முகாமைத்துவம் மற்றும் மீள்சுழற்சிச் செயற்பாடுகள் குறித்த விழிப்புணர்வைக் கட்டியெழுப்பும் வகையில். அறிவூட்டல் நடவடிக்கைகளில் பங்குபற்றுவதற்கான வாய்ப்புக்களும் பார்வையாளர்களுக்குக் கிட்டும், இப்பிராந்தியத்தில் மீள்சுழற்சி முயற்சிகளுக்கு நேரடியாக உதவுவதற்காக, தமது வீடுகளிலுள்ள பிளாஸ்திக் கழிவுகளை கொண்டு வந்து இங்கு அப்புறப்படுத்தும் இடத்தில் அவற்றை இடுமாறு இக்கண்காட்சி நிகழ்வு பொதுமக்களை ஊக்குவிக்கின்றது.

இவ்வாறு சேகரிக்கப்படுகின்ற அனைத்து பிளாஸ்திக் கழிவுகளும், அங்கீகரிக்கப்பட்ட கழிவு முகாமைத்துவ நிறுவனங்களின் கூட்டாண்மையுடன் பொறுப்புள்ள வழியில் மீள்சுழற்சி செய்யப்படும் அல்லது மீள்பயன்பாட்டுக்காக வடிவமைக்கப்படும். இம்முயற்சியினூடாக நிகழ்வு இடம்பெறும் போது தோற்றுவிக்கப்படுகின்ற கழிவுகளை குறைப்பது மாத்திரமன்றி, வட மாகாணத்தில் தூய்மையான சூழல்நேயம் கொண்ட, மற்றும் சுற்றுச்சூழல் மீது கரிசனை கொண்ட எதிர்காலமொன்றைத் தோற்றுவிப்பதற்கும் JITF நிகழ்வு பங்களிக்கும்.

By C.G.Prashanthan

chi

அதிகரித்து வரும் போர் பதற்றத்தை தணிக்கும் நோக்கில் சீனா!

March 5, 2026

மத்திய கிழக்கில் அதிகரித்து வரும் போர் பதற்றத்தை தணிக்கும் நோக்கில் சீனா மத்தியஸ்த முயற்சியில் இறங்கியுள்ளது. சீன வெளியுறவு அமைச்சர்

vijitha

அமைச்சர் விஜித ஹேரத் ஈரான் உச்ச தலைவர் அயதுல்லா அலி கமேனியின் மறைவிற்கு இரங்கல்

March 5, 2026

ஈரானின் ஆன்மீக உச்ச தலைவர் அயதுல்லா அலி கமேனியின் மறைவையொட்டி, இலங்கை அரசாங்கம் மற்றும் மக்கள் சார்பாக அமைச்சர் விஜித

Ninda

புதிய தவிசாளர் தெரிவுக் கூட்டத்தில் பங்கேற்கத் தவறுவோரின் உறுப்புரிமை இரத்து!

March 5, 2026

நிந்தவூர் பிரதேச சபையின் புதிய தவிசாளர் தெரிவுக் கூட்டத்தில் பங்கேற்கத் தவறும் உறுப்பினர்களின் உறுப்புரிமை இரத்து செய்யப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

anu

மத்திய கிழக்கு நாடுகளுக்குச் சென்றுள்ள இலங்கையர்கள் குறித்துக் கண்டறியுமாறு ஜனாதிபதி அதிகாரிகளுக்குப் பணிப்பு

March 5, 2026

மத்திய கிழக்கின் யுத்த சூழல் நிலவும் பகுதிகளில் உள்ள சுற்றுலாப் பயணிகள் மற்றும் வெளிநாட்டில் பணிபுரியும் ஊழியர்களின் பாதுகாப்பு மற்றும்

us

உயிரிழந்த முதல் அமெரிக்கப் படையினரின் விபரங்கள் வெளியீடு

March 5, 2026

அமெரிக்கா மற்றும் ஈரானுக்கு இடையிலான போர் மோதல்களில் உயிரிழந்த முதல் அமெரிக்கப் படையினரின் விபரங்களை அமெரிக்க இராணுவம் உத்தியோகபூர்வமாக அறிவித்துள்ளது.

new

2026 ஐசிசி ஆண்கள் டி20; நியூசிலாந்து இறுதிப் போட்டிக்கு தகுதி

March 5, 2026

2026 ஐசிசி ஆண்கள் டி20 உலகக் கிண்ணத் தொடரின் விறுவிறுப்பான முதலாவது அரையிறுதிப் போட்டியில், தென்னாபிரிக்க அணியை 9 விக்கெட்டுகளால்

Sarath Savendra

அனுர அரசினால் சரத் பொன்சேகா மற்றும் சவேந்திரா சில்வா வகித்த பதவி ரத்து?

March 5, 2026

முன்னாள் இராணுவத் தளபதி சரத் பொன்சேகா, சவேந்திர சில்வா உள்ளிட்டவர்கள் வகித்த பாதுகாப்புப் படைகளின் பிரதானி பதவியை அரசாங்கம் ரத்து

ganja

ஊர்காவற்துறையில் கஞ்சா கடத்த முற்பட்ட இளைஞர் கைது!  

March 4, 2026

ஊர்காவற்துறை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட சுருவில் பகுதியில் 9 கிலோ கிராம் கஞ்சாவுடன் சந்தேகநபர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். இந்த கைது

boa

கடற்றொழிலாளர்களுக்கு தடையின்றி எரிபொருள் விநியோகம்

March 4, 2026

நாட்டில் நிலவும் எரிபொருள் நெருக்கடிக்கு மத்தியில், கடற்றொழிலாளர்களுக்குத் தேவையான எரிபொருளை எந்தவிதத் தடையுமின்றி விநியோகிப்பதற்கு முறையான பொறிமுறை ஒன்று உருவாக்கப்பட்டுள்ளதாகக்

curr

வெளிநாட்டு நாணயமாற்று நிர்வாகமானது இலங்கையின் பொருளாதார நிலையை அளவிடும் கருவியாக செயற்பட்டு வருகிறது

March 4, 2026

வெளிநாட்டு நாணயமாற்று நிர்வாகமானது இலங்கையின் பொருளாதார நிலையை அளவிடும் கருவியாக வரலாற்று அடிப்படையில் செயற்பட்டு வருகிறது என திருகோணமலை மாவட்ட

b

பிறப்பு வீதம் இலங்கையில் குறைவடைகிறது?

March 4, 2026

இலங்கையில் பிறப்பு வீதம் படிப்படியாகக் குறைந்து வருவதாக லேடி ரிஜ்வே சிறுவர் வைத்தியசாலையின் எலும்பியல் அறுவை சிகிச்சை நிபுணர் வைத்தியர்

arrest

போதைப்பொருளுடன் இராணுவச் சிப்பாய் கைது

March 4, 2026

திருகோணமலையில் வான்எல பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பகுதியில், உள்ளூர் தயாரிப்பு துப்பாக்கி மற்றும் ஐஸ் போதைப்பொருளுடன் சந்தேகநபர் ஒருவர் இன்று(04.03.2026) கைது