நாடாளுமன்ற உறுப்பினர்களை நேரடியாக தொடர்புகொள்ள வாய்ப்பு
இலங்கை நாடாளுமன்றத்தின் உத்தியோகபூர்வ இணையத்தளம் (www.parliament.lk), கடந்த 19 வருட சேவையில் மூன்றாவது தடவையாக, புதிய அம்சங்களுடன் நவீனமயமாக்கப்பட்டு அண்மையில் சபாநாயகர் ஜகத் விக்ரமரத்ன தலைமையில் அங்குரார்ப்பணம் செய்யப்பட்டது. தேசிய ஜனநாயக நிறுவகத்தின் (NDI) முழுமையான அனுசரணையுடன் மேற்கொள்ளப்பட்ட இந்தச் சீரமைப்பு, மேம்படுத்தப்பட்ட அணுகல் மற்றும் நவீன தேவைகளைப் பூர்த்தி செய்யும் பல புதிய அம்சங்களைக் கொண்டுள்ளது. இதில் முக்கியமாக, “எனது நாடாளுமன்றம்” (“My Parliament”) என்ற புதிய பகுதி அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. நாடாளுமன்ற உறுப்பினர்களை நேரடியாக தொடர்புகொள்ள […]
பாதித்த பகுதிகளில் உள்ள வீடுகளுக்கு மின்சாரம் துண்டிக்கப்படாது!
பேரிடர் பாதித்த பகுதிகளில் உள்ள வீடுகளுக்கு மின்சாரம் துண்டிக்கப்படாது என்று இலங்கை மின்சார சபையின் (CEB) பொது மேலாளர் ஷெர்லி குமார தெரிவித்தார். இந்தப் பகுதிகளில் செலுத்தப்படாத மின் கட்டணங்களுக்கு மின்சாரத்தை CEB நிறுத்தாது என்றும், எதிர்கால பில்லிங் சுழற்சிகளில் ஏதேனும் நிலுவைத் தொகைகள் சேர்க்கப்படும் என்றும் அவர் கூறினார். இந்தக் காலகட்டத்தில் எந்த மின் துண்டிப்பும் மேற்கொள்ளப்படாது என்றும் அவர் கூறினார். நிலவும் சூழ்நிலை காரணமாக பாதிக்கப்பட்ட பல பகுதிகளில் மீட்டர் வாசிப்பு மற்றும் மின் […]
சீரற்ற காலநிலை முல்லைத்தீவில் காரணமாக ஆயிரக்கணக்கானோர் பாதிப்பு
முல்லைத்தீவு மாவட்டத்தில் தொடர்சியான மழை காரணமாக 12691குடும்பங்களை சேர்ந்த 39193 பேர் பாதிப்பட்டுள்ளதாக மாவட்ட அனர்த்த முகாமைத்துவப் பிரிவு தெரிவித்துள்ளது. தற்போது நிலவும் தொடர் மழை காரணமாக முல்லைத்தீவு மாவட்டத்தில் குளங்களின் நீர்மட்டம் அதிகரித்து வான் பாயத் தொடங்கியுள்ளதுடன், இதனால் தாழ் நிலப்பகுதிகளிலும் வெள்ள நீர் தேங்கியுள்ளது. இதன் காரணமாக மாந்தை கிழக்கு பிரதேச செயலாளர் பிரிவில் 656 குடும்பங்களை சேர்ந்த 2062 நபரும், கரைதுறைப்பற்று பிரதேச செயலாளர் பிரிவில் 4400 குடும்பங்களை சேர்ந்த 13559 நபரும், […]
டித்வா சூறாவளி; இலட்சக்கணக்கான சிறுவர்கள் பாதிப்பு
டித்வா சூறாவளி ஏற்படுத்திய பேரழிவுகளால் இலங்கையில் 275,000க்கும் அதிகமான சிறுவர்கள் பாதிக்கப்பட்டுள்ளதாக ஐக்கிய நாடுகளின் சிறுவர் நிதியம் தெரிவித்துள்ளது. தகவல் தொடர்பு மற்றும் போக்குவரத்துத் தடைகள் காரணமாக உண்மையான பாதிப்பு எண்ணிக்கை இதைவிட அதிகமாக இருக்கலாம் என்றும் அந்த நிதியம் கவலை வெளியிட்டுள்ளது. இந்த சூறாவளி ஏற்படுத்திய வெள்ளம் மற்றும் மண்சரிவு காரணமாக, வீடுகள் மற்றும் முக்கிய உட்கட்டமைப்புகளில் கடும் சேதத்தை ஏற்படுத்தியது. இதனால் சிறுவர்களிடையே நோய்த்தொற்று அபாயம், ஊட்டச்சத்துக் குறைபாடு மற்றும் கடுமையான உள நெருக்கடி […]
நிவாரணங்கள் தொடர்பான மோசடிகளை தவிர்க்க விசேட திட்டம்!
பேரிடரால் பாதிக்கப்பட்டுள்ள வடக்கு மாகாண மக்களுக்கு உதவுவதற்கு உள்ளூர் மற்றும் புலம்பெயர் உறவுகள் ஆர்வத்துடன் முன்வருகின்றமை மகிழ்ச்சியளிக்கிறது. எனினும், இவ்வுதவிகள் பயனாளிகளைச் சரியான முறையில் சென்றடைவதையும், மோசடிகள் இடம்பெறாதிருப்பதையும் உறுதிப்படுத்த, அந்தந்த மாவட்டச் செயலர்களின் தலைமையில் உருவாக்கப்பட்டுள்ள ‘இடர் முகாமைத்துவக் குழுக்களை’ தொடர்புகொள்ளுமாறு வடக்கு மாகாண ஆளுநர் நா.வேதநாயகன் வேண்டுகோள் விடுத்துள்ளார். ஐ.நா. முகவர் அமைப்புக்கள், சர்வதேச மற்றும் உள்ளூர் அரச சார்பற்ற நிறுவனங்களுடனான அவசர கலந்துரையாடல் நேற்றைய தினம் செவ்வாய்க்கிழமை காலை ஆளுநர் செயலகத்தில் நடைபெற்றது. […]
பேரிடர் காரணமாக நாட்டை மீட்டெடுக்க ஒன்றுதிரண்ட மக்கள்
இலங்கையின் ஏற்பட்ட பேரிடர் காரணமாக பல மாவட்டங்கள் நிர்மூலமாகி உள்ளன. இதில் பதுளை மாவட்டம் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ள நிலையில் உயிரிழப்புகளும் அதிரித்துள்ளன. இந்நிலையில் பதுளை மாவட்டத்தை மீள கட்டியெழுப்பும் நோக்கில் மாத்தறையில் இருந்து குழுவொன்று வருகை தந்துள்ளது. சுமார் 826 பொது மக்கள் ஒன்றுகூடிய பதுளையை மீட்கும் நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளனர். புனரமைப்பு பணிகளுக்கு தேவையான இயந்திரங்களும் உபகரணங்களும் மக்களால் கொண்டு வரப்பட்டுள்ளன. அகழ்வாராய்ச்சியாளர்கள் குழுவுடன் பேக்கோ லோடர்கள், செயின்சாக்கள், தண்ணீர் பவுசர்கள், சுத்தப்படுத்தும் உபகரணங்களும் கொண்டு வரப்பட்டுள்ளன. […]
எரிவாயு சிலிண்டர்கள் விநியோகம்
யாழ்ப்பாணத்திற்கு லிட்ரோ எரிவாயு சிலிண்டர்கள் எடுத்துவரப்பட்டுள்ளதாக அரசாங்க அதிபர் மருதலிங்கம் பிரதீபன் தெரிவித்துள்ளார். யாழ்ப்பாணத்திற்கு இன்றைய தினம் 3729 லிட்ரோ எரிவாயு சிலிண்டர்கள் எடுத்துவரப்பட்டுள்ளதாக அரசாங்க அதிபர் தெரிவித்துள்ளார். இதேவேளை இன்று (03.12.2025) 1716 எரிவாயு சிலிண்டர்களும், நாளை(04.12.2025) 2217 எரிவாயு சிலிண்டர்களும் எடுத்து வரப்படவுள்ளதாகவும்அவர் தெரிவித்துள்ளார். மேலும், கட்டம் கட்டமாக தொடர்ச்சியாக எரிவாயு சிலிண்டர்கள் எடுத்துவரப்படவுள்ளதாகவும் தெரிவித்துள்ளார்.
விமானியின் தியாகத்துக்குக் கொழும்பு பல்கலைக்கழகம் வழங்கவுள்ள அங்கீகாரம்
பேரிடர் மீட்பு நடவடிக்கைகளின் போது உச்சபட்ச தியாகத்தை செய்த இலங்கை விமானப்படை விமானி விங் கமாண்டர் நிர்மல் சியபலபிட்டியவுக்கு மரணத்திற்குப் பின் பட்டம் வழங்குவதாக கொழும்பு பல்கலைக்கழகம் அறிவித்துள்ளது. சர்வதேச உறவுகள் திட்டத்தில் முதுகலைப் பட்டம் பெற்ற அவர், தனது இறுதி தருணம் வரை தைரியத்துடனும் அர்ப்பணிப்புடனும் தேசத்திற்கு சேவை செய்தார். அவரது சேவை மற்றும் கல்வி அர்ப்பணிப்பைக் கௌரவிக்கும் வகையில், பல்கலைக்கழகம் அவரது பட்டத்தை மிக உயர்ந்த கௌரவங்களுடன் வழங்கும் என கொழும்பு பல்கலைக்கழகம் தெரிவித்துள்ளது. […]
பேரிடலில் பாதிக்கப்பட்ட தொடருந்து பாதைகளை மீளமைக்க வெளிநாட்டு உதவிகள்
பேரிடலில் பாதிக்கப்பட்ட தொடருந்து பாதைகளை மீளமைக்க வெளிநாட்டு தொடருந்து பொறியியல் நிறுவனங்கள் மற்றும் சர்வதேச பேரிடர் மீட்பு நிறுவனங்களிடமிருந்து உடனடியாக உதவி பெறுமாறு இலங்கை தொடருந்து நிலைய அதிபர் சங்கம் ஜனாதிபதியிடம் கோரிக்கை விடுத்துள்ளது. இது தொடர்பில் சங்கத்தின் பொதுச் செயலாளர் கசுன் சாமர ஜெயசேகர ஜனாதிபதிக்கு கடிதம் மூலம் கோட்டுக் கொண்டுள்ளார். பாதைகள் மறுசீரமைப்பு, அணைகளை உறுதிப்படுத்துதல், பாலங்கள் மறுசீரமைப்பு மற்றும் சமிக்ஞை மற்றும் தகவல் தொடர்பு அமைப்புகளை மீண்டும் செயல்படுத்துவதற்கு வெளிநாட்டு தொழில்நுட்ப நிபுணத்துவம், […]
கம்பளையில் காணாமல் போயுள்ளவர்களை தேடுவதில் அரச தரப்பு முறையாக செயற்படவில்லை?
கம்பளை பகுதியில் மண்சரிவினால் காணாமல் போயுள்ளவர்களை தேடுவதிலும், உதவிகளை வழங்குவதிலும் அரச தரப்பு முறையாக செயற்படவில்லை என மக்கள் குற்றஞ்சாட்டுகின்றனர். கடும் மழையால் மிக மோசமாகப் பாதிக்கப்பட்ட கண்டி மாவட்டத்துக்கு, எதிர்க்கட்சி நாடாளுமன்ற உறுப்பினர்கள் குழுவொன்று இன்று (2) விஜயம் மேற்கொண்டது. இந்த விஜயத்தின்போது, நாடாளுமன்ற உறுப்பினர்கள் தொடர்ந்தும் நடைபெற்றுவரும் நிவாரணப் பணிகளில் இணைந்துகொண்டதுடன், அரசு அதிகாரிகளைச் சந்தித்து நிலைமைகள் குறித்துக் கேட்டறிந்தனர். அத்துடன், கம்பளையின் இஹலகமவில் உள்ள மாவதுரவில் மண்சரிவு ஏற்பட்ட பகுதியை அவர்கள் நேரில் […]