நிவாரணங்கள் தொடர்பான மோசடிகளை தவிர்க்க விசேட திட்டம்!

பேரிடரால் பாதிக்கப்பட்டுள்ள வடக்கு மாகாண மக்களுக்கு உதவுவதற்கு உள்ளூர் மற்றும் புலம்பெயர் உறவுகள் ஆர்வத்துடன் முன்வருகின்றமை மகிழ்ச்சியளிக்கிறது.

எனினும், இவ்வுதவிகள் பயனாளிகளைச் சரியான முறையில் சென்றடைவதையும், மோசடிகள் இடம்பெறாதிருப்பதையும் உறுதிப்படுத்த, அந்தந்த மாவட்டச் செயலர்களின் தலைமையில் உருவாக்கப்பட்டுள்ள ‘இடர் முகாமைத்துவக் குழுக்களை’ தொடர்புகொள்ளுமாறு வடக்கு மாகாண ஆளுநர் நா.வேதநாயகன் வேண்டுகோள் விடுத்துள்ளார்.

ஐ.நா. முகவர் அமைப்புக்கள், சர்வதேச மற்றும் உள்ளூர் அரச சார்பற்ற நிறுவனங்களுடனான அவசர கலந்துரையாடல் நேற்றைய தினம் செவ்வாய்க்கிழமை காலை ஆளுநர் செயலகத்தில் நடைபெற்றது. இக்கலந்துரையாடலின் போதே ஆளுநர் இதனைத் தெரிவித்தார். ஆளுநர் மேலும் தெரிவித்ததாவது: பல தரப்பினரும் உதவிகளை வழங்கத் தயாராக உள்ளனர்.

இருப்பினும், அனைவரும் ஒரே வகையான உதவிகளை வழங்குவது மக்களின் முழுமையான தேவையைப் பூர்த்தி செய்யாது. மாவட்டச் செயலகங்கள் ஊடாகத் தேவைகள் கண்டறியப்பட்டு, அதற்கேற்ப உதவிகள் பகிர்ந்தளிக்கப்பட வேண்டும்.

சில இடைத்தரகர்கள் அல்லது குழுக்கள், உதவிகளை வழங்குவதாகக் கூறி வெளிநாடுகளில் உள்ளவர்களிடம் நிதியைப் பெற்றுக்கொண்டு, பயனாளிகளுக்குப் பெயரளவில் மட்டும் சிறிய உதவிகளை வழங்கிவிட்டுப் ஒளிப்படங்களை அனுப்புவதாக முறைப்பாடுகள் கிடைத்துள்ளன.

இவ்வாறான மோசடிகளைத் தடுக்க, நன்கொடையாளர்கள் மாவட்டச் செயலகத்தின் ‘தேவைப் பட்டியலை’ பெற்றுக்கொண்டு உதவிகளை வழங்குவதே சிறந்தது. அரசாங்கம் அத்தியாவசிய நிதியையும் நிவாரணங்களையும் வழங்கி வருகிறது.

எனவே, அரசால் வழங்கப்படும் நிவாரணங்களுக்கு அப்பால், மக்களுக்குத் தேவைப்படும் ஏனைய உதவிகளை அரச சார்பற்ற நிறுவனங்களும், நன்கொடையாளர்களும் வழங்குவது பொருத்தமாக இருக்கும். மக்கள் நலன்புரி நிலையங்களிலிருந்து வீடுகளுக்குத் திரும்பத் தொடங்கியுள்ளதால், அவர்களின் தேவைகள் மாறுபடும்.

வாழ்வாதார உதவிகள் மற்றும் மீள்குடியேற்றத் தேவைகளை அறிந்து உதவுவது அவசியம். அரசாங்கத்தால் உருவாக்கப்பட்டுள்ள நிவாரண நிதியத்துக்கும் புலம்பெயர் உறவுகள் நம்பிக்கையுடன் நிதியுதவிகளை வழங்கி வருவதாக ஆளுநர் இதன்போது சுட்டிக்காட்டினார்.

இக்கலந்துரையாடலில் ஐ.நா. முகவர் அமைப்புக்கள் மற்றும் அரச சார்பற்ற நிறுவனங்களின் பிரதிநிதிகள் கலந்துகொண்டதுடன், தமது நிவாரணப் பணிகளை மாவட்டச் செயலகங்களின் ஒருங்கிணைப்புடனேயே முன்னெடுப்பதாக உறுதியளித்தனர்.

அத்துடன் தொடர்புகளுக்கு – இடர் முகாமைத்துவக் குழுவின் மாவட்ட ரீதியான இணைப்பாளர்களான யாழ்ப்பாணம்:

சுரேந்திரநாதன் – 077 484 0199

கிளிநொச்சி: அஜித்தா – 077 565 0671

மன்னார்: பிரதீப் – 071 990 5324

வவுனியா: கமலதாசன் – 077 613 8369

முல்லைத்தீவு: ரஜினிகாந்த் – 077 370 7720 கோகுலராஜ் – 077 395 7886 ஆகியோரை தொடர்பு கொள்ளுமாறு ஆளுநர் அறிவித்துள்ளார்.

7JFWSDPFKFG4ZDWVNCBNCHIKCY

வோட்டர்லூவில் இடம்பெற்ற கொள்ளைச் சம்பவத்தின் போது கடை மேலாளர் காயம் – பொலிஸார் தெரிவிப்பு

July 28, 2026

திங்கட்கிழமை இரவோடு இரவாக வோட்டர்லூவில் (Waterloo) இடம்பெற்ற கொள்ளைச் சம்பவத்தில் கடை மேலாளர் ஒருவர் காயமடைந்தமை குறித்து வோட்டர்லூ பிராந்திய

POLICE CANADA 111

ஹால்டன் பொலிஸார் தமது வரலாற்றிலேயே மிகப்பெரிய மனித கடத்தல் தடுப்பு நடவடிக்கையின் முடிவுகளை வெளியிடவுள்ளனர்

July 28, 2026

ஹால்டன் பிராந்திய பொலிஸ் வரலாற்றிலேயே மிகப்பெரிய மனித கடத்தல் (Human trafficking) விசாரணை தொடர்பான முடிவுகள் இன்று உத்தியோகபூர்வமாக வெளியிடப்படவுள்ளன.

5XSONJLBFZCXDNCH5UVBLEETRQ

1.7 மில்லியன் மக்கள் வாழும் இந்தப் பகுதியில் துப்பாக்கிச் சூட்டுச் சம்பவங்கள் இரட்டிப்பாகியுள்ளன. அதற்கான காரணம் குறித்து காவல்துறை கூறுவது இதோ.

July 28, 2026

கனடாவின் குற்றக் தீவிரக் குறியீடு (Crime severity index) குறைந்துள்ளதாகவும், தீவிரக் குற்றங்களின் எண்ணிக்கை குறைவதே ஒட்டுமொத்த சரிவுக்குக் காரணம்

7

எம்எல்ஏ மார்க்கண்டேயனை கைது செய்ததில் எந்த சட்டவிரோதமும் இல்லை: உயர் நீதிமன்றத்தில் காவல்துறை திட்டவட்ட பதில்!

July 28, 2026

சென்னை: விளாத்திக்குளம் திமுக எம்எல்ஏ மார்க்கண்டேயனை கைது செய்ததில் எந்தவிதமான சட்டவிரோதமும் இல்லை என்று சென்னை உயர் நீதிமன்றத்தில் காவல்துறை

6

டெல்லி புத்தக வெளியீட்டு விழாவில் முதலமைச்சர் விஜய் பங்கேற்க வேண்டாம்! – வைகோ கோரிக்கை!

July 28, 2026

சென்னை: டெல்லியில் நடைபெறவுள்ள தமது புத்தக வெளியீட்டு விழா நிகழ்ச்சியில், கூட்ட நெரிசல் மற்றும் பாதுகாப்புக் காரணங்களைக் கருத்திற்கொண்டு தமிழ்நாடு

images (19)

சாவகச்சேரி நகர சபையின் உப தவிசாளராக முத்துலிங்கம் கோகுல்ராஜ்தெரிவு!

July 28, 2026

சாவகச்சேரி நகர சபையின் உப தவிசாளராக முத்துலிங்கம் கோகுல்ராஜ் திருவுளச்சீட்டு மூலம் தெரிவு செய்யப்பட்டுள்ளார். சாவகச்சேரி நகர சபையின் உப

5

மேகதாது விவகாரம்: பிரதமர் மோடி உடனடியாக தலையிட வேண்டும் – முதலமைச்சர் விஜய் வலியுறுத்தல்!

July 28, 2026

சென்னை: காவிரியின் குறுக்கே மேகதாது அணை கட்ட தமிழகத்தின் அனுமதி தேவையில்லை என்று நாடாளுமன்றத்தில் மத்திய அரசு அளித்த அதிரடி

photo-collage.png (4)

செம்மணி மனித புதைகுழி பேரவலத்திற்கு யார் காரணமென்பது விசாரணைகளின் இறுதியிலேயே தெரிய வரும் – நீதி அமைச்சர்

July 28, 2026

செம்மணி மனித புதைக்குழி விவகாரத்தில் உண்மையான குற்றவாளிகள் சட்டத்தின் முன் நிறுத்தப்பட்டு உரிய தண்டனை வழங்கப்படும் என நீதி மற்றும்

s

அனைத்துப் பல்கலைக்கழக மாணவர் ஒன்றியத்தினர் கொழும்பில் ஆர்ப்பாட்டம்

July 28, 2026

இலவசக் கல்வியைப் பாதுகாக்கவும், தனியார் பட்டப்படிப்பு மையங்களுக்கு எதிராகவும் அனைத்துப் பல்கலைக்கழக மாணவர் ஒன்றியம் மற்றும் துணை மருத்துவப் பட்டதாரிகள்

a35

கிளிநொச்சி மாவட்ட A35 வீதி முதலாவது பாலம் திறப்பு!

July 28, 2026

கிளிநொச்சி மாவட்டத்தில் A35 பரந்தன் – முல்லைத்தீவு பிரதான வீதியில் 12 ஆவது கிலோமீற்றர் தூரத்தில் உள்ள முதலாவது பாலம்

1688202098-EARTHQUAKE-6

ஜப்பானில் சக்திவாய்ந்த நிலநடுக்கம்

July 28, 2026

ஜப்பானின் கியூஷூ (Kyushu) தீவில் அமைந்துள்ள குமாமோட்டோ (Kumamoto) பகுதியை மையமாகக் கொண்டு இன்று சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஒன்று பதிவாகியுள்ளது.

Nali

நீதிபதிகளின் ஓய்வு; சர்வஜன வாக்கெடுப்பு தேவையில்லை – அமைச்சரவை பேச்சாளர்

July 28, 2026

நீதிபதிகளின் ஓய்வுபெறும் வயதை உயர்த்துவது தொடர்பான தீர்மானம் குறித்து சர்வஜன வாக்கெடுப்பிற்கு செல்ல வேண்டிய அவசியமில்லை என அமைச்சரவை ஊடகப்