இலங்கையில் அட்வான்ஸ்ட் க்ரோஹேர் & க்ளோஸ்கின் கிளினிக் அங்குரார்ப்பணம்

அட்வான்ஸ்ட் க்ரோ & க்ளோ அழகியல் (Advanced Grow & Glow Aesthetics (Pvt.) Ltd.) நிறுவனத்தின் உலகளாவிய விரிவாக்கத்தின் ஒரு பகுதியாக இலங்கையில் முதல் சர்வதேச கிளை தொடங்கப்பட்டது. அட்வான்ஸ்ட் க்ரோஹேர் & க்ளோஸ்கின் கிளினிக் (Advanced GroHair & GloSkin Clinic) தனது முதல் சர்வதேச கிளினிக்கை இலங்கையின் கொழும்பில் பிரம்மாண்டமாகத் திறந்திருப்பதை பெருமையுடன் அறிவிக்கிறது. இந்தியாவில் 100-க்கும் மேற்பட்ட வெற்றிகரமான கிளினிக்குகளுடன் உறுதியான இருப்பைக் கொண்ட இந்தக் கிளைத் திறப்பு, நிறுவனத்தின் உலகளாவிய […]

திரு அன்னலிங்கம் செல்வகுமார்

திரு அன்னலிங்கம் செல்வகுமார் கிளிநொச்சி வட்டக்கச்சி இராமநாதபுரம் 5ம் யூனிற்றைப் பிறப்பிடமாகவும், சுவிஸ் Bern ஐ வதிவிடமாகவும் கொண்ட அன்னலிங்கம் செல்வகுமார் அவர்கள் 18-11-2025 செவ்வாய்க்கிழமை அன்று இறைபதம் அடைந்தார். அன்னார், யாழ் புங்குடுதீவு 1ம் வட்டாரத்தைச் சேர்ந்த காலஞ்சென்ற இராசையா செல்லம்மா தம்பதிகளின் அன்புப் பேரனும்,காலஞ்சென்ற அன்னலிங்கம் மற்றும் அன்னலெட்சுமி தம்பதிகளின் அன்பு மகனும், காலஞ்சென்ற தட்சணாமூர்த்தி மற்றும் லீலாவதி தம்பதிகளின் பாசமிகு மருமகனும்,தனுஷா அவர்களின் அன்புக் கணவரும்,றக்‌ஷா அவர்களின் பாசமிகு தந்தையும்,பூசணா, காலஞ்சென்ற நந்தகுமார், […]

இலங்கையில் ஏழ்மையடைந்தோர் தொடர்பில் ஆண்ட – ஆண்டு கொண்டிருக்கின்ற எந்த அரசிடமும் சரியான தரவுகள் கிடையாது – சஜித் பிரேமதாச

இன்று யாரும் பேசாத விடயமாக காணப்படும், கடுமையான பிரச்சினையான அமைந்து காணப்படும் வறுமை நாட்டில் மேலும் அதிகரித்து காணப்படுகின்றன. Center for poverty analysis எனும் நிறுவனத்தால் நடத்தப்பட்ட ஒரு கணக்கெடுப்பின்படி, நாட்டின் 25% ஆனோர் ஏழ்மை நிலையை அடைந்துள்ளனர். அதே நேரத்தில் வேறு பல நிறுவனங்கள் நடத்திய கணக்கெடுப்புகள் நாட்டில் தற்போது வறுமை நிலையானது 40-50% க்கு இடையில் இருப்பதாகக் குறிப்பிடுகின்றன. நாட்டில் ஏழ்மையடைந்தோர் எண்ணிக்கை யாதென்பதை தற்போதைய அரசாங்கத்திற்கோ அல்லது முந்தைய அரசாங்கத்திற்கோ சரியாகத் […]

கனடா தனது குடியுரிமைச் சட்டங்களை நவீனப்படுத்துகிறது?

கனடா தனது குடியுரிமை சட்டங்களை நவீனப்படுத்தும் புதிய முயற்சியாக Bill C-3 எனும் மசோதாவை முன்வைத்துள்ளது. இதன் மூலம் வெளிநாட்டில் பிறந்த ஆயிரக்கணக்கான இந்திய வம்சாவளியினர் உட்பட பலர் பயன் பெற உள்ளனர். Bill C-3 நீண்டகாலமாக நிலவிய குடியுரிமை பிரச்சினைகளை சரிசெய்கிறது என கனடாவின் குடியேற்ற அமைச்சர் லீனா மெட்லெஜ் டயாப் தெரிவித்துள்ளார். வெளிநாட்டில் பிறந்த அல்லது தத்தெடுக்கப்பட்ட குழந்தைகளுக்கான குடும்பங்களுக்கு இது நியாயத்தை வழங்கும் எனவும் முன்னைய சட்டங்களால் நீக்கப்பட்டவர்களுக்கு குடியுரிமை மீண்டும் வழங்கப்படும் […]

இலங்கைக்கான ஆஸ்திரேலிய உயர் ஸ்தானிகர் – பிரதமர் கலாநிதி ஹரிணி அமரசூரிய சந்திப்பு!

இலங்கைக்கான ஆஸ்திரேலிய உயர் ஸ்தானிகர் மத்திவ் ஜோன் டக்வேர்த் அண்மையில் பாராளுமன்ற வளாகத்தில் பிரதமர் கலாநிதி ஹரிணி அமரசூரியவைச் சந்தித்தார். இந்தச் சந்திப்பின்போது, ஆஸ்திரேலியாவில் வசிக்கும் இலங்கையர் பற்றியும், இரு நாடுகளின் மக்களுக்கு இடையேயான உறவுகள் பற்றியும் கவனம் செலுத்திய பிரதமர், பொருளாதார மற்றும் ஏனைய பிரச்சினைகள் தொடர்பில் பிராந்திய உரையாடலை மேலும் முன்னெடுத்துச் செல்வதில் இலங்கையின் ஆர்வம் குறித்தும் நினைவுபடுத்தியதுடன், பிராந்திய மற்றும் பல்தரப்பு நிகழ்ச்சித்திட்டங்களின் முக்கியத்துவத்தையும் வலியுறுத்தினார். அத்தோடு, தொழில்சார் கல்வித் துறையின் ஒத்துழைப்பை […]

கனடா அமெரிக்காவுடன் வர்த்தக பேச்சுவார்த்தை!

அமெரிக்காவுடனான வர்த்தக பேச்சுவார்த்தைகளை மீளவும் ஆரம்பிக்கவுள்ளதாக பிரதமர் மார்க் கார்னி அறிவித்துள்ளார். அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்புடன் உரையாற்றுவதற்கு எந்த அவசர பிரச்சினையும் இல்லை என்றும் அவர் மேலும் தெரிவித்துள்ளார். ஜோகன்னஸ்பர்க்கில் நடந்த G20 மாநாட்டின் போது செய்தியாளர்களிடம் கருத்து வெளியிட்ட அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார். இதன்போது மேலும் கருத்து வெளியிட்ட அவர், கனடாவின் எதிர்காலம் மற்றும் புதிய கூட்டாண்மைகளை ஏற்படுத்துவது தொடர்பில் இருக்கிறோம்” எனத் தெரிவித்துள்ளார். அமெரிக்கா மீளவும் வர்த்தகம் தொடர்பில் விவாதங்களை முன்னெடுக்கும்போது நாங்கள் […]

2026 ஜனவரியில் மக்கள் இயக்கம் உதயம் – சுமந்திரன்

மாகாணசபைத்தேர்தலை நடாத்துவது குறித்து கடந்த வாரம் இடம்பெற்ற சந்திப்பின்போது ஜனாதிபதி திருப்திகரமான பதில் எதனையும் வழங்காமை தொடர்பில் அதிருப்தியை வெளிப்படுத்தியுள்ள இலங்கைத் தமிழரசுக்கட்சியின் பொதுச்செயலாளர் எம்.ஏ.சுமந்திரன், அத்தேர்தலை உடன் நடாத்துவதற்கு அழுத்தம் பிரயோகிக்கும் வகையிலான மக்கள் இயக்க நடவடிக்கைகள் எதிர்வரும் ஜனவரி மாதம் ஆரம்பமாகுமென அறிவித்துள்ளார். தமிழர்களுக்கான அரசியல் தீர்வு குறித்துக் கலந்துரையாடுவதற்கான சந்திப்புக்கு நேரம் ஒதுக்கித்தருமாறு இலங்கைத் தமிழரசுக்கட்சியினால் முன்வைக்கப்பட்ட கோரிக்கைக்கு அமைவாகக் கடந்த வாரம் ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்கவுக்கும் தமிழரசுக்கட்சி உறுப்பினர்களுக்கும் இடையில் நடைபெற்ற […]

இலங்கைக்கு வரும் இரண்டு முக்கிய அணிகள்

ஐசிசி உலகக் கிண்ண தயாரிப்புகளின் ஒரு பகுதியாக, இலங்கை கிரிக்கெட் அணி 2026 ஜனவரியில் ஆறு டி20 சர்வதேசப் போட்டிகளை நடத்த திட்டமிட்டுள்ளதாக, தகவல்கள் வெளியாகியுள்ளன. இதன்படி, பாகிஸ்தான் ஜனவரி 8 முதல் 12 வரை மூன்று போட்டிகள் கொண்ட டி20 தொடரிலும், அதைத் தொடர்ந்து ஜனவரி 30 முதல் பெப்ரவரி 3 வரை இங்கிலாந்து அணி,மூன்று போட்டிகள் கொண்ட டி20 தொடரிலும் விளையாட திட்டமிடப்பட்டுள்ளது. அத்துடன், இங்கிலாந்து தங்கள் சுற்றுப்பயணத்தின் போது மூன்று போட்டிகள் கொண்ட […]

சட்டவிரோத மதுபான விற்பனை; சந்தேக நபர் கைது

அனுமதிப்பத்திரமின்றி சட்டவிரோதமாக அரச மதுபானங்களை விற்பனை செய்த சந்தேக நபரை (பெண்) கல்முனை தலைமையக பொலிஸார் கைது செய்துள்ளனர். நேற்று (23) மாலை கல்முனை தலைமையக ஊழல் தடுப்புப் பிரிவிற்கு கிடைக்கப்பெற்ற தகவல் ஒன்றிற்கமைய சோதனை நடவடிக்கை ஒன்றினை சேனைக்குடியிருப்பு பகுதியில் உள்ள வீடு ஒன்றில் மேற்கொண்டிருந்தனர். இதன் போது சட்டவிரோதமாக அனுமதிப்பத்திரமின்றி சூட்சுமமாக மதுபானங்களை விற்பனை செய்த சந்தேக நபர் கைது செய்யப்பட்டுள்ளார். மேலும் சந்தேக நபரும் மீட்கப்பட்ட மதுபான வகைகளும் நீதிமன்ற நடவடிக்கைகளுக்காக கல்முனை […]

கிண்ணியா உப்பளச் செய்கை நிலம் நீரில் மூழ்கியது

திருகோணமலை-கிண்ணியா, கச்சக்கொடித்தீவு பகுதியில் உள்ள உப்பளம் கனமழை காரணமாக நீரில் மூழ்கியுள்ளது. பலத்த மழையுடனான கால நிலை காரணமாக குறித்த உப்பளச் செய்கை பாதிக்கப்பட்டுள்ளதுடன் நீரிலும் மூழ்கியுள்ளது. இதனால் உப்பளச் செய்கையாளர்கள் மாரி மழை காலங்களில் உப்பளச் செய்கையில் ஈடுபட முடியாத நிலை காணப்படுகிறது. அதிக வெப்ப நிலை மூலமே உப்பு உற்பத்தியை பெறக் கூடிய நிலை இங்கு காணப்படுகிறது. உப்புச் செய்கை உற்பத்தியை விருத்தி செய்வதன் ஊடாக அதிக வருமானங்களை ஈட்ட முடியும் என எதிர்பார்க்கப்படுவதுடன் […]