2026 ஜனவரியில் மக்கள் இயக்கம் உதயம் – சுமந்திரன்

மாகாணசபைத்தேர்தலை நடாத்துவது குறித்து கடந்த வாரம் இடம்பெற்ற சந்திப்பின்போது ஜனாதிபதி திருப்திகரமான பதில் எதனையும் வழங்காமை தொடர்பில் அதிருப்தியை வெளிப்படுத்தியுள்ள இலங்கைத் தமிழரசுக்கட்சியின் பொதுச்செயலாளர் எம்.ஏ.சுமந்திரன், அத்தேர்தலை உடன் நடாத்துவதற்கு அழுத்தம் பிரயோகிக்கும் வகையிலான மக்கள் இயக்க நடவடிக்கைகள் எதிர்வரும் ஜனவரி மாதம் ஆரம்பமாகுமென அறிவித்துள்ளார்.

தமிழர்களுக்கான அரசியல் தீர்வு குறித்துக் கலந்துரையாடுவதற்கான சந்திப்புக்கு நேரம் ஒதுக்கித்தருமாறு இலங்கைத் தமிழரசுக்கட்சியினால் முன்வைக்கப்பட்ட கோரிக்கைக்கு அமைவாகக் கடந்த வாரம் ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்கவுக்கும் தமிழரசுக்கட்சி உறுப்பினர்களுக்கும் இடையில் நடைபெற்ற சந்திப்பின்போது மாகாணசபைத்தேர்தல்கள் தொடர்பில் விரிவாகக் கலந்துரையாடப்பட்டது.

குறிப்பாக நடாத்தப்படாமல் இருக்கும் உள்ளுராட்சிமன்ற மற்றும் மாகாணசபைத்தேர்தல்களை ஒரு வருடத்துக்குள் நடாத்துவதாகத் தேசிய மக்கள் சக்தியின் தேர்தல் விஞ்ஞாபனத்தில் வாக்குறுதி அளிக்கப்பட்டிருப்பதை மேற்கோள்காட்டி, அதனை உடன் நிறைவேற்றுமாறு சுமந்திரனால் ஜனாதிபதியிடம் வலியுறுத்தப்பட்டது.

இருப்பினும் மாகாணசபைத்தேர்தலை எந்த முறைமையில் நடாத்துவது என்பதில் நிலவும் குழப்பம், விகிதாசாரப் பிரதிநிதித்துவ முறைமையில் தேர்தலை நடாத்துவதாக இருப்பினும் விருப்பு வாக்கு முறைமையுடன் தாம் உடன்படாமை என்பன உள்ளடங்கலாக அதனுடன் தொடர்புடைய பல்வேறு விடயங்கள் குறித்து ஜனாதிபதி கருத்துரைத்தார். நிறைவாக விரைவில் மாகாணசபைத்தேர்தல்களை நடாத்துவதற்கு நடவடிக்கை எடுக்கப்படும் எனத் தெரிவித்தார்.

எனினும் இச்சந்திப்பின்போது மாகாணசபைத்தேர்தல் தொடர்பில் பேசப்பட்ட விடயங்களில் ஜனாதிபதி பெருமளவுக்கு அக்கறை காண்பிக்கவில்லை எனவும், அதுபற்றி திருப்தியளிக்கக்கூடிய சாதகமான பதில் எதனையும் வழங்கவில்லை எனவுமே சந்திப்பில் கலந்துகொண்ட தமிழரசுக்கட்சியின் பிரதிநிதிகள் குறிப்பிட்டனர்.

இவ்வாறானதொரு பின்னணியில் மாகாணசபைத்தேர்தல் விடயத்தில் ஜனாதிபதியின் அக்கறையீனம், மாகாணசபைத்தேர்தலை நடாத்துவதை மேலும் தாமதிப்பதற்கு அரசாங்கம் கூறிவரும் போலியான காரணங்கள் என்பன தொடர்பில் அதிருப்தியை வெளிப்படுத்திய சுமந்திரன், மாகாணசபைத்தேர்தலை உடன் நடாத்துவதற்கு அழுத்தம் பிரயோகிக்கும் வகையிலான மக்கள் இயக்க நடவடிக்கைகள் எதிர்வரும் ஜனவரி மாதம் ஆரம்பமாகும் என அறிவித்துள்ளார்.

வடக்கு, கிழக்கு, தெற்கு உள்ளடங்கலாக நாட்டின் சகல பாகங்களையும் பிரதிநிதித்துவப்படுத்தும் அரசியல் கட்சிகள், சிவில் சமூகக்குழுக்களை ஒன்றிணைந்து மாகாணசபைத்தேர்தலை விரைவாக நடத்துமாறு அரசாங்கத்தின்மீது அழுத்தம் பிரயோகிக்கும் வகையில் மக்கள் இயக்கமொன்றை உருவாக்கவிருப்பதாக சுமந்திரன் ஏற்கனவே கூறியிருந்த நிலையில், அந்நடவடிக்கைகள் எதிர்வரும் ஜனவரி மாதம் ஆரம்பமாகும் எனக் குறிப்பிட்டுள்ளார்.

Thileepan

திலீபன் சிலை திறப்பு நிகழ்வில் மாணவர்களை பங்கேற்கச் செய்தமை குறித்து விசாரணை?

September 22, 2026

யாழ்ப்பாணம் நல்லூர் பகுதியில் திலீபனின் நினைவாக அமைக்கப்பட்ட சிலை திறப்பு நிகழ்வில் பாடசாலை மாணவர்களைப் பங்கேற்கச் செய்தமை தொடர்பில் விசாரணை

dsa

இலங்கைக்கான ஐ.நா. போதைப்பொருள் மற்றும் குற்றவியல் அலுவலகத்தின் 2026 பயிற்சித் திட்டங்கள் ஆரம்பம்

September 22, 2026

இலங்கைக்காக ஐக்கிய நாடுகளின் போதைப்பொருள் மற்றும் குற்றவியல் அலுவலகத்தினால் 2026 ஆம் ஆண்டில் நடைமுறைப்படுத்தப்படும் பயிற்சித் திட்டங்களின் தொடரை ஆரம்பித்து

photo-collage.png

தியாக தீபம் திலீபன் நினைவாக சித்திரப் போட்டிகள்

September 22, 2026

​அடுத்தடுத்த சந்ததிகளுக்கு எமது வரலாற்றைக் கடத்தும் முகமாக தியாக தீபம் திலீபன் அவர்களின் நினைவைப் போற்றி நடாத்தப்படும் சித்திரப் போட்டி…

Gnanasa

நான் மீண்டும் சிறைக்குச் செல்ல நேரிடலாம்!

September 22, 2026

நான் மீண்டும் சிறைக்குச் செல்ல வேண்டிய நிலை ஏற்படலாம் என்ற எண்ணம் ஏற்பட்டதாலேயே தனது 87 வயதான தாயாருடன் இணைந்து

va

வங்காள விரிகுடாவில் தாழமுக்கம் – மீனவர்களுக்கு சிவப்பு எச்சரிக்கை

September 21, 2026

மேற்கு – மத்திய மற்றும் அதனை அண்மித்த மத்திய- கிழக்கு வங்காள விரிகுடாவில் நிலவிய குறைந்த காற்றழுத்த தாழ்வு பிரதேசம்,

CM-Vijay-2

“அக். 2 காந்தி ஜெயந்தி முதல் ‘வெற்றிப் பயணம்’ திட்டம்!” – முதல்வர் விஜய் அறிவிப்பு!

September 21, 2026

சென்னை: தமிழ்நாட்டில் பெண்களுக்கான இலவசப் பேருந்து பயணத் திட்டத்தை மேலும் விரிவுபடுத்தும் வகையில், மறைந்த தேசத்தந்தை மகாத்மா காந்தியின் பிறந்தநாளான

790457579_1953889535287104_7272108374973593865_n

மதுராந்தகத்தில் அக். 3-இல் மு.க.ஸ்டாலின் சூறாவளிப் பிரச்சாரம்!

September 21, 2026

சென்னை: அக்டோபர் 6-ஆம் தேதி இடைத்தேர்தல் நடைபெறவுள்ள மதுராந்தகம் (தனி) சட்டமன்றத் தொகுதியில், திமுக வேட்பாளர் ஐ. பரந்தாமனை ஆதரித்துப்

1200-675-26159036-thumbnail-16x9-ctr-nirmal-kumar-aspera (1)

“ஜெம் வீரமணி விவகாரம் மு.க.ஸ்டாலினுக்குத் தெரியாமல் நடந்திருக்காது?” – அமைச்சர் நிர்மல் குமார் சரமாரி குற்றச்சாட்டு!

September 21, 2026

சென்னை: தமிழ்நாடு மேற்கூரை சூரியசக்தி மானியத் திட்டத்தைத் தொடங்கி வைத்துப் பேசிய எரிசக்தி மற்றும் சட்டத்துறை அமைச்சர் நிர்மல் குமார்,

1200-675-27679355-thumbnail-16x9-ajith

“அஜித்துக்காகக் காத்திருக்கும் பொதுச்செயலாளர் பதவி!” – ரசிகர்கள் தொடங்கிய ‘தமிழக மக்கள் கழகம்’ (TMK)

September 21, 2026

கள்ளக்குறிச்சி: முதலமைச்சர் விஜய்யின் அரசியல் வெற்றியால் உந்தப்பட்ட நடிகர் அஜித்குமாரின் ரசிகர்கள், கள்ளக்குறிச்சி மாவட்டம் எலவனாசூர்கோட்டையில் ‘தமிழக மக்கள் கழகம்’

618c12f4bb64efc3583f8a25311d96ad

“ஜெம் வீரமணி வழக்கில் யாரையும் தப்பவிடக் கூடாது!” – முதலமைச்சர் விஜய் காவல் துறைக்கு அதிரடி உத்தரவு

September 21, 2026

சென்னை: ஜெம் கிரானைட்ஸ் அதிபர் வீரமணி மீதான சிறுமி வன்கொடுமை (போக்சோ) வழக்கில் தொடர்புடைய ஒருவரைக் கூடத் தப்பவிடக் கூடாது

ஸ்டாலின்

“மீனவர்கள் இடத்தில் தலைமைச் செயலகம் யாருடைய ஆசைக்காக?” – தவெக அரசுக்கு திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் கடும் எச்சரிக்கை!

September 21, 2026

ன்னை: பட்டினப்பாக்கத்தில் மீனவர்களின் வாழ்விடங்களை அழித்துவிட்டுப் புதிய தலைமைச் செயலகம் கட்டும் முடிவை ஆளும் தவெக அரசு உடனடியாகக் கைவிடாவிட்டால்,

1200-675-25418417-thumbnail-16x9-sanmugam

“ராஜினாமா செய்துவிட்டு மீண்டும் அதே பதவிக்குப் போட்டியிடுவதா?” – சிபிஎம் சண்முகம் காட்டம்

September 21, 2026

சென்னை: பொதுவுடைமைக் கவிஞர் தமிழ்ஒளி பிறந்தநாளையொட்டி, சென்னை திருவல்லிக்கேணியில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி (சிபிஎம்) சார்பில் ‘சிங்காரவேலர் அறிவகம்’ திறப்பு