தேர்தலுக்குச் செலவு செய்த புலம்பெயர் தமிழ் சமூகத்தின் ஒப்பந்தத்தை நிறைவேற்றவே அரசாங்கம் செயற்படுகிறது – விமல் வீரவன்ச
தேர்தலுக்குச் செலவு செய்த புலம்பெயர் தமிழ் சமூகத்தின் ஒப்பந்தத்தை நிறைவேற்றுவதற்காகவே இந்த அரசாங்கம் செயற்பட்டுக் கொண்டிருக்கிறது. பயங்கரவாதத்துடன் தொடர்புடைய குற்றச்சாட்டுகளுடன் தொடர்புடையவர்களை தடை செய்யப்பட்ட பட்டியலில் இருந்து நீக்கும் அரசாங்கம், கடற்படை மற்றும் இராணுவப் புலனாய்வுப் பிரிவில் உள்ளவர்கள் மீது குற்றச்சாட்டுக்களை முன்வைத்து தேசத்துரோக நிகழ்ச்சி நிரலின் அடிப்படையிலேயே செயற்படுவதாக தேசிய சுதந்திர முன்னணியின் தலைவர் விமல் வீரவன்ச தெரிவித்தார். கொழும்பில் வியாழக்கிழமை (20) இடம்பெற்ற ஊடகவியலாளர் மாநாட்டில் இதனைத் தெரிவித்த அவர் மேலும் குறிப்பிடுகையில், பாதுகாப்புச் […]
விபத்தில் இளம் பெண் மரணம்
முச்சக்கரவண்டியும், லொறியும் நேருக்கு நேர் மோதிய விபத்தில் இளம் பெண் ஒருவர் உயிரிழந்துள்ளார். இந்த சம்பவம் கேகாலையில் மாவனெல்ல – ஹெம்மாத்தகம வீதியில் 9 ஆவது கிலோ மீற்றர் மைல்கல்லுக்கு அருகில் நேற்று(19) இடம்பெற்றுள்ளது. ஹெம்மாத்தகம நோக்கிச் சென்ற முச்சக்கரவண்டி, எதிர்த் திசையில் வந்த லொறியுடன் நேருக்கு நேர் மோதியதில் இந்த விபத்து நேர்ந்துள்ளது. இதன்போது, பலத்த காயமடைந்த முச்சக்கரவண்டி சாரதி மற்றும் இரண்டு பெண் பயணிகள் மாவனெல்ல வைத்தியசாலையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டனர். இதன்போது, சிகிச்சை பலனின்றி […]
நோர்வேயில் இருந்து யாழ்.வந்தவர் கிணற்றினுள் விழுந்து பலி
யாழில் கால் தவறி கிணற்றினுள் விழுந்த நபர் ஒருவர் இன்று வியாழக்கிழமை (20) உயிரிழந்துள்ளார். யாழ்ப்பாணம் – ஆறுகால்மடம் பகுதியைச் சேர்ந்த சின்னத்துரை ராஜ்வதனன் (வயது 40) என்பவரே இவ்வாறு உயிரிழந்துள்ளார். இது குறித்து மேலும் தெரியவருகையில், இவர் நோர்வேயில் வசித்து வந்த நிலையில் இலங்கைக்கு வந்துள்ளார். இன்று காலை சாப்பிட்டுவிட்டு கை கழுவுவதற்காக கிணற்றடிக்கு சென்றவேளை கால் தவறி கிணற்றினுள் விழுந்துள்ளார். பின்னர் கிணற்றில் இருந்து அவர் சடலமாக மீட்கப்பட்டுள்ளார். அவரது சடலம் மீதான மரண […]
ஊடக நிறுவனங்கள் மீது சட்ட நடவடிக்கைகளை ஆரம்பியுங்கள்!

போதைப்பொருள் வர்த்தகத்தில் ஈடுபடும் ஊடக நிறுவனங்கள் மீது சட்ட நடவடிக்கைகளை ஆரம்பிக்குமாறு ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்கவிடம் எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச கோரியுள்ளார். போதைப்பொருள் வர்த்தகத்தில் ஈடுபடும் ஊடக நிறுவனங்கள் குறித்து நாடா ளுமன்றத்தில் அறிக்கை வெளியிடுவதற்குப் பதிலாக, அவற்றின் மீது சட்ட நடவடிக்கைகளை உடனடியாக ஆரம்பிக்குமாறு இன்று நாடாளுமன்றில் வலியுறுத்தியுள்ளார். இது தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில், இங்கு அறிக்கை வெளியிடத் தேவையில்லை. அவர்களைக் கைது செய்யுங்கள். ஒரு ஊடக நிறுவனம் போதைப்பொருள் கடத்தலில் ஈடுபட்டிருந்தால், […]
பாகிஸ்தானின் அமைச்சருக்கும் இலங்கை பிரதி அமைச்சருக்கு இடையில் சந்திப்பு
பாகிஸ்தானின் தகவல் மற்றும் ஒலிபரப்புத் துறை அமைச்சர் அதாவுல்லாஹ் தராருக்கும் இலங்கை இளைஞர் விவகார மற்றும் விளையாட்டுத்துறை பிரதி அமைச்சர் சுகத் திலகரத்னவுக்கும் இடையில் சந்திப்பொன்று இடம்பெற்றுள்ளது. இச்சந்திப்பில் இலங்கையின் உயர் ஸ்தானிகர் ரியர் அட்மிரல் ஃப்ரெட் செனவிரத்ன, பிரதி உயர் ஸ்தானிகர் கிறிஸ்டி ரொபின், மற்றும் அமைச்சர் ஆலோசகர் (பாதுகாப்பு) பிரிகேடியர் ஜி.அ.கே.ஆர். குணரத்ன ஆகியோரும் கலந்து கொண்டனர். கிரிக்கெட் மேம்பாடு, விளையாட்டுத்துறையில் பரஸ்பர ஒத்துழைப்பு, மற்றும் இருதரப்பு உறவுகள் குறித்து விரிவான கலந்துரையாடல்கள் நடைபெற்றன. […]
தங்காலை வரவு செலவுத் திட்டம் தோற்றது
தேசிய மக்கள் சக்தியின் (NPP) கட்டுப்பாட்டில் உள்ள தங்காலை மாநகர சபையின் முதல் பட்ஜெட் தோற்றது. வாக்கெடுப்பில் பட்ஜெட்டுக்கு ஆதரவாக ஒன்பது உறுப்பினர்களும்,எதிராக பத்து உறுப்பினர்களும் வாக்களித்தனர். சர்வ ஜன பல கட்சியை பிரதிநிதித்துவப்படுத்தும் கவுன்சிலர் எதிர்க்கட்சியுடன் சேர்ந்து வாக்களித்து, அவர்களுக்கு பெரும்பான்மையை வழங்கியதை அடுத்து தோல்வி உறுதிசெய்யப்பட்டது. இதற்கிடையில்,இதற்கு நேர்மாறாக, ஐக்கிய மக்கள் சக்தி (SJB) வெலிகம பிரதேச சபையின் முதல் பட்ஜெட்டை நிறைவேற்றியது. பட்ஜெட்டுக்கு ஆதரவாக 23 வாக்குகள் கிடைத்தன.
அரச எதிர்ப்பு ஆர்ப்பாட்டத்தில் தமிழ் பேசும்; மக்களும் தமிழ் முஸ்லிம் அரசியல் கட்சிகளும் புறக்கணிக்க வேண்டும் – தி. யோகநாயகன்
நாட்டின் தற்போதைய அரசியல், பொருளாதார மற்றும் சமூக சூழ்நிலையை விரிவாக ஆராயும் போது நாளை நடைபெறவுள்ள அரச எதிர்ப்பு ஆர்ப்பாட்டத் திற்கு ஐக்கிய மக்கள் முன்னணி தனது வலுவான கண்டனத்தை அதன் ஸ்தாபகர் மற்றும் செயலாளர் நாயகம் தி. யோக நாயகன் வாயிலாக அறிவித்துள்ளது. இன்று நாட்டில் உருவாகி வரும் அரசியல் மாற்றங்கள், குறிப்பாக தமிழ் ; மக்களுக்கு இதுவரை கிடைக்காத புதிய வாய்ப்புகளையும் நம்பிக்கையயும் உருவாக்கி வருகின்றன. சுதந்திரத்துக்கு பின்னர் 76 ஆண்டுகளாக பல ஆட்சிகள் […]
நாடு கடத்தப்படவுள்ளார் மொன்ட்ரியல் கொலை தொடர்பாளி?
மொன்ட்ரியலைச் சேர்ந்த நபர் ஒருவர், கொலை மற்றும் கோகோயின் கடத்தல் தொடர்பான குற்றச்சாட்டுகளை எதிர்கொண்டுள்ளதுடன், இப்போது அமெரிக்காவிற்கும் நாடு கடத்தப்படவுள்ளார். ஒழுங்கமைக்கப்பட்ட குற்றக் குழுக்களுடன் தொடர்பு இருப்பதாகக் கூறப்படும் அட்னா ஒன்ஹா காணொலி வாயிலாக மொன்ட்ரியல் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டார். 40 வயதுடைய ரியான் வெட்டிங் (Ryan Wedding) என்ற இந்த கனடாவின் முன்னாள் ஒலிம்பிக் வீரர், குற்றவியல் வழக்குடன் தொடர்புபட்டுள்ளார். இவரை அமெரிக்க மத்திய புலனாய்வு அமைப்பின் வேண்டுகோளின் பேரில் கனேடிய காவல்துறையினர் செவ்வாய்க்கிழமை அதிகாலையில் கைது […]
இலங்கைத் தமிழர்களுக்கான பொறுப்புக்கூறல், நீதி மற்றும் நிலையான சமாதானம் – பிரிட்டனில் கலந்துரையாடல்
தமிழர்களுக்கான நீதியையும் பொறுப்புக்கூறலையும் வென்றெடுக்க உழைப்போம் – தமிழர்களுக்கான பிரிட்டன் அனைத்துக் கட்சி பாராளுமன்றக் குழு உறுதி தமிழர்களுக்கான பிரிட்டனின் அனைத்துக் கட்சி பாராளுமன்றக்குழுவின் டேம் சியோபைன் மெக்டொனாக் மீண்டும் தெரிவுசெய்யப்பட்டிருப்பதுடன் தமிழ் மக்களுக்கான நீதி மற்றும் பொறுப்புக்கூறலை அடைந்துகொள்வதிலும், மனித உரிமைகளை உறுதிப்படுத்துவதிலும் தாம் கொண்டிருக்கும் அர்ப்பணிப்புடன்கூடிய கடப்பாட்டினை அக்குழுவின் உறுப்பினர்கள் மீளுறுதிப்படுத்தியுள்ளனர். தமிழர்களுக்கான பிரிட்டனின் அனைத்துக் கட்சி பாராளுமன்றக் குழுவின் இந்த ஆண்டுக்கான வருடாந்தப் பொதுக்கூட்டம் அண்மையில் பிரிட்டன் பாராளுமன்றத்தில் நடைபெற்றது. இக்கூட்டத்தில் பிரிட்டன் […]
மண்முனையில் தொல்பொருள் அறிவித்தல் பலகை?
மட்டக்களப்பு மாவட்டம் படுவான்கரைப் பெருநிலம் மண்முனை தென்மேற்கு பிரதேச பிரிவில் உள்ள தாந்தாமலை முருகன் ஆலயத்தில் செல்லும் வீதிகளில் இரு இடங்களில் அறிவித்தல் பலகை இடப்பட்டுள்ளது. குறித்த அறிவித்தல் பலகைகள், இன்றையதினம் (20.11.2025) இடப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. அதில் தாந்தாமலை தொல்லியல் இடம் என மூன்று மொழிகளாலும் எழுதப்பட்ட அறிவித்தல் பலகை தாந்தாமலை செல்லும் நாற்பது வட்டை சந்தியில் முருகன் ஆலயத்தை அம்புக்குறி காட்டி இடப்பட்டுள்ளது. மற்றைய அறிவித்தல் பலகை தாந்தாமலை முருகன் ஆலத்துக்கு அண்மையில் உள்ள பொலிஸ் […]