இன்றைய வானிலை

வட மாகாணங்களிலும் அத்துடன் திருகோணமலை மாவட்டத்திலும் காலை வேளையிலும் மழை பெய்யக்கூடும். மத்திய, சப்ரகமுவ, மேல், தென் மற்றும் ஊவா மாகாணங்களின் சில இடங்களிலும் அத்துடன் அம்பாறை மாவட்டத்தின் சில இடங்களிலும் அதிகாலை வேளையில் பனி மூட்டம் காணப்படும். பலத்த காற்றும் மின்னல் தாக்கங்களும் ஏற்படக்கூடிய சந்தர்ப்பங்களில் பொது மக்கள் அவதானத்துடன் செயற்படுமாறு கேட்டுக் கொள்ளப்படுகின்றனர். திருகோணமலை தொடக்கம் காங்கேசன்துறை ஊடாக மன்னார் வரையான கரையோரத்திற்கு அப்பால் உள்ள கடல் பிராந்தியங்களின் பல இடங்களில் மழை அல்லது […]

யாழ்.மானிப்பாயில் போதை மாத்திரைகள்இ கஞ்சா கலந்த மாவா கைப்பற்றல்

யாழ்ப்பாணம் – மானிப்பாய் பகுதியில் போதை மாத்திரைகள் மற்றும் கஞ்சா கலந்த மாவாவுடன் ஒருவர் கைது செய்யப்பட்டார். யாழ்ப்பாண மாவட்ட குற்றத்தடுப்பு பிரிவு பொலிஸாரால் குறித்த கைது நடவடிக்கை இன்று முன்னெடுக்கப்பட்டது. ஆயிரம் போதை மாத்திரைகளும் இரண்டு கிலோ 420 மில்லிகிராம் கஞ்சா கலந்த மாவாவும் இதன்போது கைப்பற்றப்பட்டது. இருபது வயது மதிக்கத்தக்க குறித்த சந்தேக நபர் கொட்டாஞ்சேனை துப்பாக்கி சூட்டு சம்பவம் தொடர்பாக உடுவிலில் கைது செய்யப்பட்டவரின் உறவினர் என பொலிஸார் தெரிவித்தனர். சந்தேக நபரை […]

இலங்கை வங்கியின் தகவல் தொழிநுட்ப தீர்வுகள்

இலங்கை வங்கி தகவல் தொழிநுட்ப தீர்வுகள் (தனியார்) கம்பனி (BOC IT Solutions (Pvt) Ltd), எனும் பெயரில் இலங்கை வங்கியுடன் முழுமையாக இணைக்கப்பட்ட நிறுவனமாக தாபிப்பதற்காக அமைச்சரவை அங்கீகாரம் அளித்துள்ளது. 25.11.10 அன்று இடம்பெற்ற அமைச்சரவைக் கூட்டத்தில் எட்டப்பட்ட அமைச்சரவை முடிவுகளை அறிவிக்கும் ஊடகவியலாளர் மாநாடு நேற்று செவ்வாய்க்கிழமை ஊடக அமைச்சில் இடம்பெற்றது. இதன் போதே இந்த அங்கீகாரம் வழங்கப்பட்டுள்ளது. மாற்றமடைந்து வரும் வாடிக்கையாளர் கேள்விக்கு பதிலளிப்பதற்காகவும், வங்கித் துறையில் போட்டித்தன்மையைப் பேணிச் செல்வதற்காகவும் தனது […]

நாயுடன் மோதி மோட்டார் சைக்கிள் விபத்து – இளைஞன் உயிரிழப்பு!

யாழ்ப்பாணத்தில் தனது மோட்டார் சைக்கிளில் வீடு திரும்பும் போது , வீதியின் குறுக்கே ஓடிய நாயுடன் மோதி விபத்துக்கு உள்ளானவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார். வட்டுக்கோட்டை பகுதியை சேர்ந்த 38 வயதுடைய இளைஞனே உயிரிழந்துள்ளார். யாழ் . நகரில் பணியாற்றி வரும் நிலையில் , கடந்த 06ஆம் திகதி பணி முடிந்து , தனது மோட்டார் சைக்கிளில் வீடு திரும்பும் போது , வீதியின் குறுக்கே ஓடிய நாயுடன் மோதி விபத்துக்களான நிலையில் , படுகாயங்களுடன் , […]

பெற்றோலிய களஞ்சிய பெறுகைச் செயன்முறையை நடைமுறைப்படுத்துவதற்கு அமைச்சரவை அங்கீகாரம்

பெற்றோலிய உற்பத்திகளின் தொடர்ச்சியான விநியோகத்தை உறுதிப்படுத்துவதற்காக கொலன்னாவை முனையத்தில் தற்போது 30 மற்றும் 31 ஆம் இலக்க எரிபொருள் களஞ்சியத்தின் புதிய தாங்கி மூலம் புனரமைக்க வேண்டிய தேவையைக் கருத்தில் கொண்டு, குறித்த பணிகளுக்கு இலங்கை பெற்றோலிய மொத்தக் களஞ்சிய முனையக் கம்பனியின் நிதியைப் பயன்படுத்தி பெறுகைச் செயன்முறையை நடைமுறைப்படுத்துவதற்கு அமைச்சரவை அங்கீகாரம் அளித்துள்ளது. அமைச்சரவை முடிவுகளை அறிவிக்கும் ஊடகவியலாளர் மாநாடு நேற்று செவ்வாய்க்கிழமை ஊடக அமைச்சில் இடம்பெற்றது. இதன் போதே இந்த அங்கீகாரம் வழங்கப்பட்டுள்ளது. இலங்கை […]

யாழ். மாநகரசபையின் சொத்ததே யாழ். திருவள்ளுவர் கலாசார மையத்தின் அமைவிடம்

யாழ்ப்பாணம் – திருவள்ளுவர் கலாசார மையம் அமைந்துள்ள நிலப்பரப்பு யாழ். மாநகரசபையின் சொத்து. அது ஒரு சந்தர்ப்பத்திலும் இன்னொரு தரப்பினருக்கு வழங்கப்படவில்லை என யாழ். மாநகரின் முன்னாள் முதல்வர் யோகேஸ்வரி பற்குணராஜா தெரிவித்துள்ளார். யாழ். மாநகரின் மாதாந்த அமர்வு நேற்று முதல்வர் மதிவதனி தலைமையில் நடைபெற்றது. இதன்போது யாழ். மாநகருக்கு உரித்தான காணி நிலங்கள், கட்டடங்கள் என்பன அரச நிறுவனங்களுக்கு வழங்குவதில்லை என யாழ். மாநகரசபையில் தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் ஈ.பி.டி.பியின் உறுப்பினர் இளங்கோ (றீகன்) முன்பள்ளி […]

சிறுவர்களுக்கான உலக மேசைப்பந்தாட்ட தரிவரிசையில் 3ஆம் இடத்தில் இலங்கையின் டாவி சமரவீர

பதினொரு வயதுக்குட்பட்ட சிறுவர்களுக்கான உலக மேசைப்பந்தாட்டத் தரவரிசையில் இலங்கையின் டாவி சமரவீர 3ஆம் இடத்துக்கு முன்னேறி வரலாறு படைத்துள்ளார். இவர் கல்கிஸ்ஸை சென் தோமஸ் கல்லூரி மாணவராவார். சர்வதேச மேசைப் பந்தாட்ட சம்மேளனத்தினால் உத்தியோகபூர்வ தரவரிசை பட்டியல் இன்று வெளியிடப்பட்டது. இத்தாலியின் லிஞ்ஞானோ சபியடோரோ, பெல்லா இத்தாலியா EFA விலேஜ் ஸ்போர்ட்ஸ் மண்டபத்தில் நவம்பர் 3ஆம் திகதியிலிருந்து 9ஆம் திகதிவரை நடைபெற்ற 11 வயதுக்குட்பட்ட சிறுவர்களுக்கான உலக மேசைப்பந்தாட்ட போட்டியில் டாவி சமரவீசர சம்பியன் பட்டத்தை சூடி […]

வடக்கு, கிழக்கு மாகாணங்களில் நுண் கடன் நிதி நிறுவனங்களின் செயற்பாடுகளால் யாரும் தற்கொலை செய்யவில்லை

வடக்கு, கிழக்கு மாகாணங்களில் நுண் கடன் நிதி நிறுவனங்களின் மனிதாபிமானமற்ற செயற்பாடுகள் காரணமாக பலர் தற்கொலை செய்து கொண்டுள்ளார்கள் என்று எந்தவித அறிக்கைகளும் இல்லையென என நிதி திட்டமிடல் மற்றும் பொருளாதார அபிவிருத்தி பிரதி அமைச்சர் அனில் பெர்னாண்டோ தெரிவித்தார். பாராளுமன்றத்தில் செவ்வாய்க்கிழமை (11) இடம் பெற்ற வாய்மூல விடைக்கான வினா நேரத்தில் இலங்கைத் தமிழரசுக் கட்சியின் யாழ் மாவட்ட எம்.பி. எஸ்.சிறிதரன் எழுப்பிய கேள்விகளுக்கு பதிலளிக்கையிலேயே அவர் இவ்வாறு தெரிவித்தார். வடக்கு மாகாணத்தில் உள்ள அரச […]

பெருந்தோட்ட மக்களின் சம்பளம்; இதுவரை காலமும் அரசியல் பேசுபொருளாகவே பயன்படுத்தப்பட்டது – உபாலி பன்னிலகே

பெருந்தோட்ட மக்களின் சம்பள விவகாரம் இதுவரை காலமும் அரசியல் பேசுபொருளாகவே பயன்படுத்தப்பட்டது. எவ்வித போராட்டங்களுமில்லாம் பெருந்தோட்ட மக்களுக்குரிய சம்பளம் அதிகரிக்கப்பட்டுள்ளது. பெருந்தோட்ட மக்களின் பிரச்சினைகளை அவர்களின் நாளாந்த சம்பளத்துடன் மாத்திரம் வரையறுக்க முடியாது. அந்த மக்களின் ஏனைய அடிப்படை பிரச்சினைகள், உட்கட்டமைப்பு பிரச்சினைகளுக்கும் தீர்வு காண்பதற்கு நிதி ஒதுக்கப்பட்டுள்ளது என கிராமிய அபிவிருத்தி மற்றும் சமூக பாதுகாப்பு அமைச்சர் உபாலி பன்னிலகே தெரிவித்தார். பாராளுமன்றத்தில் நேற்று செவ்வாய்க்கிழமை (11) நடைபெற்ற 2026 ஆம் ஆண்டுக்கான வரவு செலவுத் […]