வடக்கு, கிழக்கு மாகாணங்களில் நுண் கடன் நிதி நிறுவனங்களின் செயற்பாடுகளால் யாரும் தற்கொலை செய்யவில்லை

வடக்கு, கிழக்கு மாகாணங்களில் நுண் கடன் நிதி நிறுவனங்களின் மனிதாபிமானமற்ற செயற்பாடுகள் காரணமாக பலர் தற்கொலை செய்து கொண்டுள்ளார்கள் என்று எந்தவித அறிக்கைகளும் இல்லையென என நிதி திட்டமிடல் மற்றும் பொருளாதார அபிவிருத்தி பிரதி அமைச்சர் அனில் பெர்னாண்டோ தெரிவித்தார்.

பாராளுமன்றத்தில் செவ்வாய்க்கிழமை (11) இடம் பெற்ற வாய்மூல விடைக்கான வினா நேரத்தில் இலங்கைத் தமிழரசுக் கட்சியின் யாழ் மாவட்ட எம்.பி. எஸ்.சிறிதரன் எழுப்பிய கேள்விகளுக்கு பதிலளிக்கையிலேயே அவர் இவ்வாறு தெரிவித்தார்.

வடக்கு மாகாணத்தில் உள்ள அரச மற்றும் தனியார் துறை வங்கிகள்,காப்புறுதி, நுண் நிதி மற்றும் ஏனைய நிதி நிறுவனங்களின் எண்ணிக்கை மற்றும் அவற்றின் பெயர்கள், அரச மற்றும் தனியார் துறை வங்கிகள் மற்றும் நுண் நிதி நிறுவனங்கள் கடன் வழங்கும் போது அறவிடும் வட்டி வீதம் தொடர்பில் ஸ்ரீதரன் கேள்வி எழுப்பி இருந்தார்.

வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களில் நுண் நிதி நிறுவனங்களின்
மனிதாபிமானமற்ற செயற்பாடுகள் காரணமாக நபர்கள் தற்கொலை செய்து கொண்டுள்ளதை அமைச்சர் அறிவாரா என்பதையும் அவ்வாறாயின், தற்கொலை செய்து கொண்டவர்களின் எண்ணிக்கை ஒவ்வொரு மாவட்டத்திற்கு அமைவாக வெவ்வேறாக எத்தனை என்பதையும் அவர்களின் மரணங்களுக்கு பொறுப்புக்கூற வேண்டியவர்கள் யார் என்பது தொடர்பிலும் கேள்வியெழுப்பினார்.

இதற்கு நிதி திட்டமிடல் மற்றும் பொருளாதார அபிவிருத்தி பிரதி அமைச்சர் அனில் பெர்னாண்டோ பதிலளிக்கையில்,

வடக்கு மாகாணத்தில் 28 அரச வங்கிகளும், 38 தனியார் வங்கிகளும், 78 நிதி நிறுவனங்களும், 13 அனுமதி பெற்ற நுண்கடன் நிதி நிறுவனங்களும் உள்ளன.அரச மற்றும் தனியார் வங்கிகள் கடன் வழங்கும் போது அறவிடப்படும் வட்டி வீதங்கள் இலங்கை மத்திய வங்கியின் தீர்மானத்துக்கு அமைய செயற்படுத்தப்படுகின்றன.

2025 செப்டெம்பர் மாத காலப்பகுதியில் அனுமதி பெற்ற நுண்கடன் நிதி நிறுவனங்கள் 22.69 முதல் 39.40 சதவீத அடிப்படையில் வருடாந்த வட்டி வீதத்துக்கமைய கடன் வழங்குகின்றன.

வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களில் நுண் கடன் நிதி நிறுவனங்களின் மனிதாபிமானமற்ற செயற்பாடுகள் காரணமாக பலர் தற்கொலை செய்து கொண்டுள்ளார்கள் என்று அறிக்கையிடப்படவில்லை.

குறிப்பாக குத்தகை நிறுவனங்கள், மற்றும் நுண்கடன் நிறுவனங்களை கண்காணிக்கும் பொறுப்பு வங்கிகளுக்கு வழங்கப்படவில்லை.நிதி நிறுவன கண்காணிப்பு திணைக்களத்துக்கு அந்த பொறுப்பு வழங்கப்பட்டுள்ளது.

நுண்கடன் கண்காணித்தல் அதிகார சபை தொடர்பான சட்ட வரைவு தயாரிக்கப்பட்டுள்ளது. எதிர்வரும் நாட்களில் அந்த வரைவு பாராளுமன்றத்துக்கு சமர்ப்பிக்கப்படும்.அதற்கமைய மத்திய வங்கியால் பதிவு செய்யப்பட்ட நிதி நிறுவனங்களை முறையாக கண்காணிக்கும் நடவடிக்கைகள் எடுக்கப்படும் என்றார்.

Screenshot 2025-07-30 100024

நாடெங்கும் நலமும் வீடெங்கும் வளமும் பெருகட்டும்: எடப்பாடி பழனிசாமி விநாயகர் சதுர்த்தி வாழ்த்து!

September 13, 2026

சென்னை: விநாயகர் சதுர்த்தித் திருநாளை முன்னிட்டு, அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி நாட்டு மக்களுக்குத் தனது உளங்கனிந்த நல்வாழ்த்துகளைத் தெரிவித்துள்ளார்.

images - 2026-09-13T134857.284

“கம்யூனிஸ்ட் கட்சிகள் தவெக கூட்டணிக்கு வருவார்கள்!” – அமைச்சர் ஷாஜகான் நம்பிக்கை

September 13, 2026

நாகர்கோவில்: கம்யூனிஸ்ட் கட்சிகள் தவெக ஆட்சிக்கு வெளியில் இருந்து நிபந்தனையற்ற ஆதரவு அளித்து வருவதாகவும், அவர்கள் வரக்கூடிய நாள்களில் அதிகாரப்பூர்வமாகத்

Tamil_News_lrg_432121120260912210533

லண்டன் கார் பந்தயம்: விபத்தைத் தாண்டி 3-வது இடத்தைப் பிடித்து நடிகர் அஜித் சாதனை!

September 13, 2026

லண்டன்: லண்டனில் முதலமைச்சர் விஜய் கொடியசைத்துத் தொடங்கி வைத்த புகழ்பெற்ற ‘லீ மான்ஸ் கப்’ (Le Mans Cup) கார்

images - 2026-09-13T133956.877

“வார்த்தைகளை அளந்து பேசுவது அரசியல்வாதிகளின் கடமை!” – அவதூறு பேச்சுகளுக்கு அமைச்சர் ஜெகதீஸ்வரி கண்டனம்

September 13, 2026

சென்னை: அரசியல் விமர்சனம் என்ற பெயரில் ஆபாசமாகப் பேசுவதும் மிரட்டல் விடுப்பதும் வன்மையாகக் கண்டிக்கத்தக்கது என அமைச்சர் ஜெகதீஸ்வரி தனது

36a6a19c6587d011b2834d714207e935

“லீடர்னா என்னன்னே தெரியாம பேசுறது ஏமாத்து வேலை!” – பிக்பாஸ் மேடையில் விஜய் சேதுபதி பேச்சு; முதலமைச்சருடன் ஒப்பிட்டுப் பரவும் சர்ச்சை!

September 13, 2026

சென்னை: பிக்பாஸ் நிகழ்ச்சியில் தலைமைப் பண்பு (Leadership) குறித்து நடிகர் விஜய் சேதுபதி பேசிய கருத்துகள் சமூக வலைதளங்களில் வைரலாகி

26-6aa59dd45056b

லண்டன் கார் பந்தயத்தில் திடீர் என்ட்ரி கொடுத்த த்ரிஷா!

September 13, 2026

லண்டன்: இங்கிலாந்தின் சில்வர்ஸ்டோன் சர்க்யூட்டில் நடிகர் அஜித் குமார் பங்கேற்ற கார் பந்தயத்தை முதலமைச்சர் விஜய் நேரில் சென்று தொடங்கி

ba4598f0-5b62-11ee-8789-13750be9e58d.jpg

“நாவைக் காக்க வேண்டும்”: திமுகவினரின் அநாகரிகப் பேச்சுக்குத் திருக்குறள் வழியே கனிமொழி கண்டனம்!

September 13, 2026

சென்னை: முதலமைச்சர் விஜய்க்கு எதிராக நடைபெற்ற கண்டன ஆர்ப்பாட்டத்தில் திமுக நிர்வாகிகள் அநாகரிகமான வார்த்தைகளைப் பயன்படுத்திய நிலையில், அவர்களுக்கு அறிவுரை

1200-675-27101861-thumbnail-16x9-sdew

“ஆ.ராசா மற்றும் சேகர்பாபுவின் பேச்சுகள் திமுகவின் வன்மத்தைக் காட்டுகிறது” – அமைச்சர் வன்னி அரசு கடும் கண்டனம்!

September 13, 2026

சென்னை: முதலமைச்சர் விஜய்யைக் கண்டித்து திமுகவினர் நடத்திய ஆர்ப்பாட்டங்களில், திமுக துணைப் பொதுச்செயலாளர் ஆ. ராசா மற்றும் முன்னாள் அமைச்சர்

1200-675-26159036-thumbnail-16x9-ctr-nirmal-kumar-aspera (1)

“மிசா சட்டத்தில் ஸ்டாலின் கைது செய்யப்படவில்லை; ஆவணங்கள் இல்லை” – அமைச்சர் நிர்மல்குமார் பரபரப்புப் பேட்டி!

September 13, 2026

துரை: அவசரநிலையின் போது மிசா சட்டத்தின் (MISA) கீழ் மு.க. ஸ்டாலின் கைது செய்யப்படவில்லை என்றும், வேறு காரணங்களுக்காகவே அவர்

b36f3954a794f9382daecd17359724952bb8ee0389728dfd9ea790750de3a7a2

“இல்லம் தேடி மதுவைக் கொண்டு வந்தவர் ஸ்டாலின்!” – ராமநாதபுரம் திமுக ஆர்ப்பாட்டத்தில் நிர்வாகி பேச்சால் சலசலப்பு

September 13, 2026

ராமநாதபுரம்: ராமநாதபுரத்தில் முதலமைச்சர் விஜய்க்கு எதிராக நடைபெற்ற திமுக கண்டன ஆர்ப்பாட்டத்தில், கட்சியின் மகளிர் அணி நிர்வாகி ஒருவர் நாக்கு

eft9J2c8vpDNB_Wg

தாராபுரம் இடைத்தேர்தல்: எனக்காக முதலமைச்சர் விஜய் பிரசாரம் செய்வார் – தவெக வேட்பாளர் சத்தியபாமா தகவல்!

September 13, 2026

தாராபுரம் / சென்னை: நடைபெறவுள்ள தாராபுரம் சட்டமன்றத் தொகுதி இடைத்தேர்தலில் தமிழக வெற்றிக் கழகத்தின் வெற்றி ஏற்கனவே உறுதியாகிவிட்டது என்றும்,

768-512-25775621-thumbnail-16x9-madurai-malli

விநாயகர் சதுர்த்தி எதிரொலி: திண்டுக்கல் மார்க்கெட்டில் மல்லிகைப் பூ கிலோ ரூ. 1,500-க்கு விற்பனை!

September 13, 2026

திண்டுக்கல்: விநாயகர் சதுர்த்தி பண்டிகை மற்றும் முகூர்த்த நாள்களை முன்னிட்டுத் திண்டுக்கல் மாவட்டம் நிலக்கோட்டைப் பூ மார்க்கெட்டில் பூக்களின் விலை