காணாமல் போனதாகக் கூறப்படும் 2.5 மில்லியன் அமெரிக்க டாலர் விவகாரம் தொடர்பாக, நிதியமைச்சு மே மாதம் 5 ஆம் திகதி நாடாளுமன்றத்தில் சிறப்பு அறிக்கை ஒன்றை சமர்ப்பிக்கவுள்ளது.
நிதி மற்றும் திட்டமிடல் பிரதி அமைச்சர் கலாநிதி அனில் ஜயந்த இந்த அறிக்கையை வெளியிடுவார் என எதிர்பார்க்கப்படுகிறது