19இன் கீழ் ஆசிய கிண்ணம்: இந்தியா 234 ஓட்டங்களால் வெற்றி

துபாய் ஐசிசி பயிற்சியக மைதானத்தில் இன்று வெள்ளிக்கிழமை (12) நடைபெற்ற ஏ குழுவுக்கான 19 வயதுக்குட்பட்ட ஆண்கள் ஆசிய கிண்ண ஆரம்பப் போட்டியில் ஐக்கிய அரபு இராச்சிய பந்துவீச்சாளர்களை வைபவ் சூரியவன்ஷி நையப்புடைக்க, இந்தியா 234 ஓட்டங்களால் வெற்றியீட்டியது.

15ஆவது பிறந்த தினத்தை நெருங்கிக்கொண்டிருக்கும் வைபவ் சூரியவன்ஷி 95 பந்துகளில் 9 பவுண்டறிகள், 14 சிக்ஸ்கள் உட்பட 171 ஓட்டங்களை விளாசி 19 வயதுக்குட்பட்ட ஆசிய கிண்ண கிரிக்கெட் வரலாற்றில் இந்தியாவுக்கான அதிகூடிய தனிநபர் எண்ணிக்கைக்குரிய சாதனையை நிலைநாட்டினார்.

எவ்வாறாயினும்,,இங்கிலாந்துக்கு எதிராக டோன்டன் விளையாட்டரங்கில் 2002இல் நடைபெற்ற 19 வயதுக்குட்பட்ட உலகக் கிண்ணப் போட்டியில் அம்பாட்டி ராயுடு ஆட்டம் இழக்காமல் குவித்த 177 ஓட்டங்களே இளையோர் சர்வதேச ஒருநாள் கிரிக்கெட் போட்டியில் இந்தியாவுக்கான அதிகூடிய தனிநபர் எண்ணிக்கைக்குரிய சாதனையாக தொடர்ந்தும் இருக்கின்றது.

வைபவ் சூரியவன்ஷி குவித்த அபார சதம், ஆரோன் ஜோர்ஜ், விஹான் மல்ஹோத்ரா ஆகியோர் பெற்ற அரைச் சதங்கள் ஆகியவற்றின் உதவியுடன் 19 வயதுக்குட்பட்ட இந்திய அணி 50 ஓவர்களில் 6 விக்கெட்களை இழந்து 433 ஓட்டங்களைக் குவித்தது.

19 வயதுக்குட்பட்ட ஆசிய கிண்ண கிரிக்கெட் போட்டியில் பெறப்பட்ட அதிகூடிய மொத்த எண்ணிக்கை இதுவாகும். கோலாலம்பூரில் கத்தாருக்கு எதிராக பங்களாதேஷ் 7 விக்கெட்களை இழந்து பெற்ற 363 ஓட்டங்களே 19 வயதுக்குட்பட்ட ஆசிய கிண்ணத்தில் இதற்கு முன்னர் பெறப்பட்ட அதிகூடிய மொத்த எண்ணிக்கையாக இருந்தது.

man

பாதிக்கப்பட்ட மக்களுக்கு அனர்த்த நிவாரண நிதி விநியோக வழிகாட்டல்கள் வெளியீடு

December 14, 2025

சீரற்ற வானிலையால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு அனர்த்த நிவாரண நிதியை விநியோகிப்பது தொடர்பாக வெளியிடப்பட்ட சுற்றறிக்கை தொடர்பான வழிகாட்டுதல்களை பாதுகாப்பு அமைச்சகம்

mihi

மிகிந்தலையில் பாரிய வெடிப்புக்கள்?

December 14, 2025

மிகிந்தலை விகாரையில் மண்சரிவு அபாயம் ஏற்பட்டுள்ளதாக மிகிந்தலை விகாராதிபதி தெரிவித்துள்ளார். இன்று (14.12.2025) தேசிய கட்டிடங்கள் ஆராச்சி திணைக்களத்தின் அநுராதபுரம்

1751730278-rice-hjg-L

அனர்த்தம் ஏற்பட்டிருந்தும் கூட எதிர்காலத்தில் நாட்டில் அரிசிக்கு தட்டுப்பாடு ஏற்படாது – விவசாய அமைச்சர்

December 14, 2025

அனர்த்தம் காரணமாக எதிர்காலத்தில் நாட்டில் அரிசி தட்டுப்பாடு ஏற்படுவதற்கான சாத்தியமில்லை என விவசாய அமைச்சர் கே.டி. லால்காந்த தெரிவித்தார். சில

arre

ஹேரோயினை கடத்த முற்பட்டவர் கைது

December 14, 2025

ஹெரோயினுடன் நாட்டிற்கு வந்த ஒருவர் கட்டுநாயக்க விமான நிலையத்தில் வைத்து கைது செய்யப்பட்டுள்ளார். சந்தேக நபர் மலேசியாவிலிருந்து நாட்டிற்கு வந்துள்ளதாக

3 dd

டித்வா புயல் காரணமாக சுமார் 6164 வரையிலான வீடுகள் முழுமையான சேதம்

December 14, 2025

டித்வா புயல் காரணமாக ஏற்பட்ட அனர்த்தங்களினால் நாட்டில் 6164 வீடுகளுக்கு முழுமையான சேதம் ஏற்பட்டுள்ளதாக அனர்த்த முகாமைத்துவ நிலையம் தெரிவித்துள்ளது.

gun

காட்டுப் பகுதியில் கட்டப்பட்ட துப்பாக்கி வெடித்ததில் ஒருவர் பலி

December 14, 2025

பலாங்கொடை, சமனல வேவ பொலிஸ் பிரிவுக்குட்பட்ட முத்தெட்டுவ கிராமத்தின், காட்டுப் பகுதியில், கட்டப்பட்ட துப்பாக்கியொன்று வெடித்ததில் ஒருவர் உயிரிழந்த சம்பவம்

HAri

புதிய டிஜிட்டல்மயமாக்கல் கொள்கை மீளாய்வு!

December 14, 2025

யுனிசெஃப் (UNICEF) நிறுவனப் பிரதிநிதிகளுக்கும் பிரதமர் கலாநிதி ஹரிணி அமரசூரியவுக்கும் இடையிலான சந்திப்பு கடந்த புதன்கிழமை (10) அன்று பிரதமர்

Mujibar Rahuman

குழு ஒன்று முஜிபுரின் தங்கையிடம் விசாரணை: முஜிபுர் முறைப்பாடு

December 14, 2025

குற்றப் புலனாய்வுத் துறையைச் சேர்ந்ததாகக் கூறிக்கொள்ளும் குழு ஒன்று, கொழும்பு மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் முஜிபுர் ரஹ்மானின் கல்கிஸையில் உள்ள

ரயிலில் யாசகம் பெற்ற பெண்ணை திருமணம் செய்த இளைஞர்!

December 14, 2025

ரயிலில் யாசகம் பெற்றுக் கொண்டிருந்த அனாதை பெண்ணை இளைஞர் ஒருவர் திருமணம் செய்து கொண்ட சம்பவம் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இந்தியாவின்

சிரியாவில் அமெரிக்க வீரர்கள் படுகொலை!

December 14, 2025

சிரியாவில் ஒரு தனி இஸ்லாமிய அரசு துப்பாக்கிதாரி நடத்திய தாக்குதலில் இரண்டு அமெரிக்க வீரர்களும் ஒரு அமெரிக்க சிவில் மொழிபெயர்ப்பாளரும்

ஓமன் வளைகுடாவில் எரிபொருளுடன் கடத்தப்பட்ட கப்பல் ஒன்றை கைப்பற்றிய ஈரான்!

December 14, 2025

கடத்தப்பட்ட எரிபொருட்களுடன், ஓமன் வளைகுடாவில் ஒரு எண்ணெய் கப்பலை ஈரான் கைப்பற்றியதாக ஈரானிய ஊடகங்கள் தெரிவித்துள்ளன. இதன்போது இந்தியா, இலங்கை

சீனாவின் செல்வாக்கு இந்தியப் பெருங்கடலில் விரிவடைகின்றது?

December 14, 2025

2022 ஆம் ஆண்டு ஏற்பட்ட பொருளாதார நெருக்கடி மற்றும் ஒரு கொடிய சூறாவளியிலிருந்து இலங்கை மீண்டு வருவதால், கடல்சார் பாதுகாப்பு,