நம் அண்டை நாடான பாகிஸ்தானின் சிந்து மாகாணத்தில் ஆயுதம் ஏந்திய கொள்ளை கும்பல், பஸ் ஒன்றை தாக்கி, 18 ஆண் பயணியரை கொள்ளை சென்றது.
பஞ்சாப் எல்லையில் உள்ள கோட்கி பகுதிக்கு அருகே, நெடுஞ்சாலையில் நேற்று முன்தினம் இரவு பஸ் ஒன்று சென்றுக் கொண்டிருந்தது.
அப்போது, முகமூடி அணிந்து, ஆயுதங்களுடன் வந்த, 20 பேர் கொண்ட கும்பல், அந்த பஸ் மீது துப்பாக்கிச்சூடு நடத்தியது. இதில் ஓட்டுநரும், சில பயணியரும் காயமடைந்தனர். பஸ்சில், 30 பயணியர் இருந்த நிலையில், பெண்களை விட்டுவிட்டு, ஆண்களை மட்டும் அந்த கும்பல் கடத்தியது.
கட்சா பகுதியைச் சேர்ந்த கொள்ளையர்கள் என்றும் அவர்களுடன் நடந்த துப்பாக்கிச் சண்டையில், 11 பயணியரை மீட்டுள்ளதாகவும் சிந்து மாகாண போலீசார் தெரிவித்துள்ளனர்.