140 அமெரிக்க வீரர்கள் காயம் – பென்டகன்

ஈரான் மீதான அமெரிக்க இராணுவ நடவடிக்கைகளின் ஆரம்பத்திலிருந்து இதுவரை சுமார் 140 அமெரிக்க வீரர்கள் காயமடைந்துள்ளதாகவும், அவர்களில் எட்டு பேர் பலத்த காயங்களுக்குள்ளாகியுள்ளதாகவும் பென்டகன் ஊடகப் பேச்சாளர் ஷான் பார்னெல் நேற்று (10) தெரிவித்தார்.

“Operation Epic Fury ஆரம்பமானது முதல் கடந்த 10 நாட்களில் மேற்கொள்ளப்பட்ட தொடர்ச்சியான தாக்குதல்களில் சுமார் 140 அமெரிக்க இராணுவத்தினர் காயமடைந்துள்ளனர்” என பார்னெல் விடுத்துள்ள அறிக்கையில் குறிப்பிட்டுள்ளார்.

“காயமடைந்தவர்களில் பெரும்பான்மையானோருக்குச் சிறிய அளவிலான காயங்களே ஏற்பட்டுள்ளன. அவர்களில் 108 பேர் ஏற்கனவே பணிக்குத் திரும்பியுள்ளனர். 8 வீரர்கள் தொடர்ந்தும் பலத்த காயமடைந்தவர்களின் பட்டியலில் உள்ளதுடன், அவர்களுக்கு உயர்தர மருத்துவ சிகிச்சைகள் வழங்கப்பட்டு வருகின்றன.”

உயிரிழப்பு ஏற்படக்கூடிய அல்லது ஆபத்தான நிலையிலுள்ள வீரர்களே ‘பலத்த காயமடைந்தவர்களின்’ பட்டியலில் உள்ளடக்கப்பட்டுள்ளதாக அமெரிக்க அதிகாரி ஒருவர் முன்னர் CNN செய்திச் சேவையிடம் தெரிவித்திருந்தார்.

இதுவரை இப்போராட்டத்தில் 7 அமெரிக்க வீரர்கள் கொல்லப்பட்டுள்ளனர். அவர்களில் இறுதியாக உயிரிழந்த வீரரின் உடல், கௌரவ மரியாதைகளுடன் கடந்த திங்கட்கிழமை மாலை டெலாவேரில் உள்ள டோவர் (Dover) விமானப்படைத் தளத்திற்குக் கொண்டு வரப்பட்டது.

தாக்குதல்களின் தீவிரத்தைப் பொறுத்து வீரர்கள் உடனடியாகச் சிகிச்சை பெறாத சந்தர்ப்பங்களும் உள்ளதால், காயமடைந்தவர்களின் எண்ணிக்கை அவ்வப்போது மாறுபடவோ அல்லது அதிகரிக்கவோ வாய்ப்புள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

WhatsApp Image 2026-03-11 at 10.43.39

பிராம்டனில் வாகனங்களை திருடிய இளைஞர் கைது

March 11, 2026

பீல் பிராந்தியத்தின் மத்திய கொள்ளைத் தடுப்பு பிரிவு (Central Robbery Bureau) விசாரணையாளர்கள், பிராம்டனில் இடம்பெற்ற இரண்டு தனித்தனி ரைடு-ஷேர்

lo

அரசாங்கம் மக்களின் சுமையை மேலும் அதிகரித்திருக்கிறது – யுக்திய கூட்டமைப்பு

March 11, 2026

அரசாங்கம் நுண்நிதி மற்றும் கடன் ஒழுங்குபடுத்தல் அதிகாரசபை சட்டத்தை பாராளுமன்றத்தில் நிறைவேற்றியதன் மூலம், ஏற்கனவே மக்கள் முகங்கொடுத்திருக்கும் தாங்கமுடியாத சுமையை

man

தோட்டத் தொழிலாளர்களுக்கு மண்ணெண்ணெய், கோதுமை மாவை மானிய விலையில் வழங்குக

March 11, 2026

மத்திய கிழக்கு போர்ச் சூழல் தீவிரமடைவதற்கு முன்னரே இலங்கையில் மின்சாரக் கட்டணம் மற்றும் எரிபொருள் விலை உயர்வு குறித்து எச்சரிக்கப்பட்டிருந்த

tra_An

இ.போ.சபைக்கு புதிய கலாசாரத்தைக் கொண்டு வர பாடுபடுவோம்

March 11, 2026

மக்களுக்கு வசதியான, பாதுகாப்பான, வினைத்திறனான,தொடர்ச்சியான மற்றும் ஒரு பலமான பொதுப் போக்குவரத்து கட்டமைப்பை நிறுவுவதே அரசாங்கத்தின் எதிர்பார்ப்பு என்றும், அதற்காக

wash

140 அமெரிக்க வீரர்கள் காயம் – பென்டகன்

March 11, 2026

ஈரான் மீதான அமெரிக்க இராணுவ நடவடிக்கைகளின் ஆரம்பத்திலிருந்து இதுவரை சுமார் 140 அமெரிக்க வீரர்கள் காயமடைந்துள்ளதாகவும், அவர்களில் எட்டு பேர்

fin

பொருளாதார கண்காணிப்புக் குழு ஜனாதிபதி அலுவலகத்தில் கூடியது

March 11, 2026

வெளிவாரியான அழுத்தங்களுக்கு மத்தியில் இலங்கையின் பொருளாதார ஸ்திரத்தன்மையைப் பேணவும், குடிமக்களின் நலனைப் பாதுகாக்கவும் ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்கவின் முன்மொழிவுக்கமைய

ns

மின்சார ஊழியர்களுக்குக் கடும் எச்சரிக்கை: உடனடியாகப் பணிக்குத் திரும்புமாறு உத்தரவு

March 11, 2026

2024 ஆம் ஆண்டின் 36 ஆம் இலக்க இலங்கை மின்சார (திருத்தப்பட்ட) சட்டத்தின் பிரகாரம், 2026 மார்ச் 09 ஆம்

no

ஈரானிய உயர்மட்டத் தலைவருக்கு வடகொரியா ஆதரவு

March 11, 2026

ஈரானின் புதிய உச்சத் தலைவராக மொஜ்தபா கமேனி தெரிவு செய்யப்பட்டமைக்கு வடகொரியா தனது ஆதரவை வெளியிட்டுள்ளது. அமெரிக்கா மற்றும் இஸ்ரேல்

rs

மீள்குடியமர்த்தலுக்கான கொடுப்பனவு தொகை அதிகரிப்பு

March 11, 2026

மண்சரிவு மற்றும் மண்சரிவு அபாயம் காரணமாக குடும்பங்களை மீளக்குடியமர்த்தல் தொடர்பான வேலைத்திட்டத்தின் கீழ் வீடொன்றை நிர்மாணிப்பதற்கான கொடுப்பனவுத் தொகையை திருத்தம்

ci

மொரட்டுவ முன்னாள் மேயரை விளக்கமறியலில் வைக்குமாறு இலஞ்ச ஊழல் விசாரணை ஆணைக்குழு கோரிக்கை

March 11, 2026

‘மக நெகும’ நகர்ப்புற மற்றும் கிராமிய வீதி அபிவிருத்தி திட்டத்தின் கீழ், மொரட்டுவ மாநகர சபையின் 112 அபிவிருத்தி திட்ட

gl

தவறான நிர்வாகத்தினால் ஏற்பட்டுள்ள சிக்கல்களை மத்திய கிழக்கு மோதல்களுடன் சுமத்த வேண்டாம் – ஜி.எல்.பீரிஸ்

March 11, 2026

தவறான நிர்வாகத்தினால் ஏற்பட்டுள்ள சிக்கல்களை அரசாங்கம் மத்திய கிழக்கில் தற்போது தோற்றம் பெற்றுள்ள மோதல் மீது சுமத்தி விட்டு பொறுப்பில்

cabinet

வெளிநாட்டவர்களுக்கு கட்டண அறவீடின்றி வீசா கால நீடிப்பு!

March 11, 2026

மத்தியகிழக்கு ஊடாக மேற்கொள்ளப்படுகின்ற விமானப் பயணங்கள் இரத்துச் செய்யப்பட்டமையால் பாதிப்புக்குள்ளாகியுள்ள வெளிநாட்டவர்களுக்கு கட்டண அறவீடின்றி வீசாவுக்கான செல்லுபடியாகும் காலத்தை நீடிக்கும்