10 ஆண்டுகளுக்கு முன் மாயமான மலேசிய விமானம்; மீண்டும் தேடும் பணி

மலேஷியா ஏர்லைன்ஸ் விமானம் MH370 காணாமலாகி 10 ஆண்டுகளுக்கும் மேலாகிவிட்ட நிலையில், அதைத் தேடும் பணி இந்த மாதம் மீண்டும் தொடங்கப்படுவதாக மலேஷியா போக்குவரத்து அமைச்சகம் அறிவித்துள்ளது.

நேற்றையதினம்(3) வெளியிட்ட அறிக்கையில் இது தொடர்பில் குறிப்பிடப்பட்டுள்ளது.

இங்கிலாந்து மற்றும் அமெரிக்காவைத் தலைமையிடமாகக் கொண்ட கடல் ரோபோட்டிக்ஸ் நிறுவனம் ‘ஓஷன் இன்ஃபினிட்டி’ டிசம்பர் 30 ஆம் திகதி முதல் கடலடி தேடலை மீண்டும் தொடங்கும் எனவும், இது 55 நாட்கள் இடைவெளியில் நடைபெறும் எனவும் அமைச்சகம் தெரிவித்துள்ளது.

இந்த புதிய தேடலானது, காணாமல் போன விமானம் இருப்பதற்கான அதிக வாய்ப்பு உள்ள பகுதிகளின் மீது கவனம் செலுத்தும், ஆனால் துல்லியமான இடங்கள் வெளியிடப்படவில்லை.

2014 மார்ச் 8 ஆம் திகதி, கோலாலம்பூரில் இருந்து பீஜிங்கிற்குச் சென்ற MH370 விமானம் திடீரென பாதை மாறி ரேடார் வரம்பில் இருந்து மறைந்தது. விமானத்தில் 12 மலேஷிய குழுவினர்கள் மற்றும் 227 பயணிகள் பயணித்துள்ளனர்.

அதிகமானோர் சீனப் பிரஜைகள். மேலும் மலேசியா, அவுஸ்திரேலியா, இந்தோனேசியா, இந்தியா, பிரான்ஸ், அமெரிக்கா, ஈரான், உக்ரைன், கனடா, நியூசிலாந்து, நெதர்லாந்து, ரஷ்யா மற்றும் தைவான் ஆகிய நாடுகளைச் சேர்ந்தவர்கள் பயணம் செய்திருந்தனர்.

விமானம் காணாமல் போனதிலிருந்து, பல நாடுகள் இணைந்து இந்தியப் பெருங்கடலின் மிகப்பெரிய பகுதிகளைத் தேடி வந்துள்ளன.

இருப்பினும், முக்கிய எச்சங்கள் எதுவும் இதுவரை கண்டுபிடிக்கப்படவில்லை. 2015 ஆம் ஆண்டு பிரெஞ்சு தீவான ரீயூனியனில் கிடைத்த விமான இறக்கை பகுதி MH370 யிலிருந்ததே என உறுதி செய்யப்பட்டது. ஆபிரிக்காவின் கிழக்குக் கரையோரத்திலும் சில சிதைவுகள் பின்னர் கண்டுபிடிக்கப்பட்டன.

ஆனால் பெரிய எச்சங்கள் அல்லது உடல்கள் எதுவும் இதுவரை கிடைக்கவில்லை. கடந்த ஆண்டு, புதிய ஆதாரங்கள் கிடைத்தால் விசாரணையை மீண்டும் திறக்கத் தயாராக இருப்பதாக மலேஷியா தெரிவித்தது.

‘ஓஷன் இன்ஃபினிட்டி’யுடன் “கண்டுபிடிக்கப்படாவிட்டால் கட்டணம் இல்லை” என்ற ஒப்பந்தத்தின் கீழ் 15,000 சதுக்க கிலோமீட்டர் புதிய பகுதியில் தேடல் நடத்த ஒப்புக்கொள்ளப்பட்டது. எச்சங்கள் கண்டுபிடிக்கப்பட்டால் மட்டுமே 70 மில்லியன் அமெரிக்க டொலர் வழங்கப்படும்.

இந்த ஆண்டு ஏப்ரலில், தெற்கிந்தியப் பெருங்கடலில் மோசமான வானிலை காரணமாக தேடல் நிறுத்தப்பட்டது. MH370, 2014 மார்ச் 8 ஆம் திகதி அதிகாலை 12.41க்கு கோலாலம்பூரில் இருந்து புறப்பட்டு, அதிகாலை 6.30க்கு பீஜிங்கில் தரையிறங்க வேண்டியிருந்தது.

இரவு 2.14க்கு கடைசியாக இராணுவ ரேடாரில் மலாக்கா நீரிணையின் மேல் மேற்குத் திசையில் பறந்துகொண்டிருந்ததாக பதிவாகியுள்ளது. அரைமணிநேரத்துக்குப் பிறகு விமானத்துடன் தொடர்பு துண்டிக்கப்பட்டது.

விமானத்தில் இருந்தோரின் குடும்பத்தினர், உண்மையை அறிந்து கொள்ளவும், எதிர்கால விபத்துகளைக் தவிர்க்கவும் தொடர்ந்த தேடலை வேண்டி வருகின்றனர். சிலர் 2016ஆம் ஆண்டு மடகாஸ்கர் சென்று சிதைவுகளைத் தேடினர்.

மேலும் பல நிறுவனங்களுக்கு எதிராக நஷ்டஈடு கோரி வழக்குகளும் தொடரப்பட்டன. 2017ஆம் ஆண்டு அவுஸ்திரேலியா தலைமையிலான 120,000 சதுர கிலோமீட்டர் கடலடித் தேடல் நிறுத்தப்பட்டது.

அதே ஆண்டில் வெளியிடப்பட்ட இறுதி அறிக்கை, பதில்களை வழங்க முடியாதது “மிகப் பெரிய துயரம்” எனக் கூறியது.

2018ஆம் ஆண்டு மலேஷியாவின் விசாரணை அறிக்கை, விமானம் தானியக்க இயக்கத்தில் அல்லாமல் கையேடு முறையில் திருப்பப்பட்டதாகவும், “மூன்றாம் தரப்பின் தலையீட்டை” நிராகரிக்க முடியாது என்றும் தெரிவித்தது.

ஆனால் விமானிகள் நோக்கமுடன் விபத்து ஏற்படுத்தியதாக இருந்த சில ஊகங்களையும், தொழில்நுட்ப கோளாறுகளையும் நிராகரித்தது.

புதன்கிழமை வெளியிடப்பட்ட அறிக்கையில், “இந்தப் புதிய முன்னேற்றம் MH370 உறவினர்களுக்கு முடிவு கிடைக்க மலேஷியா அரசு எடுத்துள்ள உறுதிப்பாட்டைக் காட்டுகிறது” என போக்குவரத்து அமைச்சகம் தெரிவித்துள்ளது.

jap

இலங்கை வெளிவிவகார அமைச்சர் மற்றும் கென்ய பிரதம அமைச்சரவைச் செயலாளர் இடையில் முக்கிய சந்திப்பு!

March 7, 2026

இந்தியாவின் புதுடெல்லியில் இடம்பெற்று வரும் ராய்சினா கலந்துரையாடலின் ஒரு பகுதியாக, இலங்கையின் வெளிவிவகார அமைச்சருக்கும் கென்யாவின் பிரதம அமைச்சரவைச் செயலாளர்

hon

வல்வெட்டித்துறையில் சீனிப்பாணி கரைசலை தேன் என விற்றவர் கைது!

March 7, 2026

யாழ்ப்பாணத்தில் சீனிப்பாணியை தூய தேன் எனவும் , கலப்பட நெய்யையும் விற்பனைக்கு வைத்திருந்த விற்பனையாளருக்கு எதிராக பொது சுகாதர பரிசோதகரால்

fffff

மீனவர்களுக்கான விசேட விழிப்புணர்வுத் திட்டம்

March 7, 2026

‘முழு நாடும் ஒன்றாக’ தேசிய வேலைத்திட்டத்திற்கு இணையாக, மார்ச் 01ஆம் திகதி ஆரம்பமான “போதைப்பொருள் தடுப்பு வாரத்தின்” கீழ், போதைப்பொருள்

jaf un

ஊடக கற்கைகள் மாணவர்களின் சஞ்சிகை வெளியீடும் – குறுந்திரைப்பட திரையிடலும்

March 7, 2026

யாழ்ப்பாணப் பல்கலைக்கழக ஊடகக் கற்கைகள் துறை மாணவர்களால் தயாரிக்கப்பட்ட சஞ்சிகை ‘கனலி’ – இதழ் 06 வெளியீடும், குறுந்திரைப்பட விழாவும்

mid

இலங்கையின் உணவுப் பாதுகாப்பு குறித்து அவசரக் கூட்டம்!

March 7, 2026

மத்திய கிழக்கில் நிலவும் போர் சூழல் காரணமாக, இலங்கையின் அத்தியாவசியப் பொருட்கள் விநியோகம் மற்றும் உணவுப் பாதுகாப்பில் ஏற்படக்கூடிய தாக்கத்தை

heat wa

நாட்டில் நிலவும் வெப்பம் குறித்து கடுமையான எச்சரிக்கை

March 7, 2026

நாட்டில் நிலவும் கடும் வெப்பமான வானிலை தொடர்பில் வளிமண்டலவியல் திணைக்களம் எச்சரிக்கை அறிவிப்பு ஒன்றினை வெளியிட்டுள்ளது. இதன்படி, சப்ரகமுவ, வடமேல்

Srilankan air

ஸ்ரீலங்கன் ஏர்லைன்ஸ் விமான சேவைகள் ரத்து?

March 7, 2026

மத்திய கிழக்கு பிராந்தியத்தில் நிலவும் போர்ச் சூழல் காரணமாக, இன்று மற்றும் நாளை நள்ளிரவு 11.59 மணி வரை சில

no

யாழ்ப்பாணம் மத்திய கல்லூரி வெற்றி!

March 7, 2026

வடக்கின் 119ஆவது சமரில் யாழ்ப்பாணம் மத்திய கல்லூரி அதிரடியாக வெற்றி பெற்றது. யாழ். மத்தியின் மைதானத்தில் வியாழக்கிழமை (05) ஆரம்பித்து

arre

போதைப்பொருளை தடுக்கும் தேசிய திட்டத்தின் கீழ் ஒரே நாளில் 1,073 பேர் கைது!

March 7, 2026

ஜனாதிபதியின் பணிப்புரைக்கமைய, நாட்டில் போதைப்பொருளை தடுக்கும் நோக்கிலான “முழு நாடுமே ஒன்றாக” எனும் தேசிய திட்டத்தின் கீழ், நேற்று வெள்ளிக்கிழமை

ff

கசிப்புடன் இளைஞர் கைது!

March 7, 2026

அம்பாறை மாவட்டம், சம்மாந்துறை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட வீரமுனைப் பகுதியில் 28,500 மில்லி லீற்றர் (28.5 லீற்றர் ) கசிப்புடன் 26

mazooth

பிராந்திய நாடுகள் மீது நடத்திய தாக்குதல்கள் தொடர்பில் மன்னிப்பு கோரினார் ஈரானிய ஜனாதிபதி!

March 7, 2026

அமெரிக்கா மற்றும் இஸ்ரேலின் கூட்டுத் தாக்குதல்களுக்கு பதிலடியாக பிராந்திய நாடுகள் மீது ஈரான் நடத்திய தாக்குதல்கள் தொடர்பில், ஈரானிய ஜனாதிபதி

nep

நேபாளத்தில் பாலேந்திர ஷா பிரதமராகும் வாய்ப்பு?

March 7, 2026

நேபாளத்தில் நடைபெற்ற நாடாளுமன்றத் தேர்தலின் வாக்கு எண்ணிக்கை நடைபெற்று வரும் நிலையில், ராஷ்டிரிய சுதந்திர கட்சி பல தொகுதிகளில் முன்னிலை