கியூபெக் நகருக்கு தெற்கே 14 வயது சிறுவன் கொல்லப்பட்ட சம்பவம் தொடர்பாக கியூபெக் மாகாண பொலிஸார் (SQ) இரண்டு சந்தேக நபர்களைக் கைது செய்துள்ளனர்.
2024 செப்டம்பர் மாதம், கியூபெக் மாகாணத்தின் தலைநகருக்கு தெற்கே சுமார் 75 கிலோமீட்டர் தொலைவில் உள்ள பிராம்ப்டன் (Frampton) எனும் சிறிய நகரில் இந்தச் சிறுவனின் உடல் கண்டெடுக்கப்பட்டது.
“ஹெல்ஸ் ஏஞ்சல்ஸ்” (Hells Angels) எனும் குழுவின் மறைவிடத்திற்கு அருகிலேயே இந்த உடல் மீட்கப்பட்டது.
அச்சிறுவனின் உடல் சிதைக்கப்பட்ட நிலையில் காணப்பட்டதால், அடையாளம் காண்பதில் பெரும் சிரமம் ஏற்பட்டதாகத் தெரிவிக்கப்பட்டது.
டாசன் சிர்-லெவெய்ல் (Dawson Cyr-Léveillé): 24 வயதான இவர் வேலிஃபீல்ட் (Valleyfield) பகுதியில் கைது செய்யப்பட்டார். இவர் மீது துப்பாக்கிச் சூடு நடத்தியமை, கட்டிடம் மற்றும் வாகனங்களுக்குத் தீ வைத்தமை (Arson) ஆகிய குற்றச்சாட்டுகள் சுமத்தப்பட்டுள்ளன.
மற்றொரு 30 வயது நபர் கியூபெக் தடுப்புக்காவல் மையத்தில் (Quebec Detention Centre) வைத்து கைது செய்யப்பட்டுள்ளார்.
முன்னதாக மார்ச் மாதம் 16 வயது சிறுவன் ஒருவன் கைது செய்யப்பட்டு, விசாரணைக்கு இடையூறு விளைவித்தல் மற்றும் தீவைப்பு குற்றச்சாட்டுகளின் கீழ் சிறுவர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டார்.
இந்தக் கைது நடவடிக்கைகள் கியூபெக் மாகாண பொலிஸாரின் திட்டமிட்ட குற்றத்தடுப்புப் பிரிவினரால் (Organized Crime Division) முன்னெடுக்கப்பட்டன. இதற்கு மொன்ட்ரியல், லாவல், லோங்குயில் பொலிஸார் மற்றும் கனடிய அரச பொலிஸார் (RCMP) ஒத்துழைப்பு வழங்கியுள்ளனர்.