ஒன்டாரியோ மாகாணத்தில் குடும்ப மருத்துவர்கள் அல்லது தாதிகளைத் நாடும் நோயாளிகள், மாகாணத்தின் காத்திருப்புப் பட்டியலான ‘ஹெல்த் கேர் கனெக்ட்’ (Health Care Connect – HCC) மீதான நம்பிக்கையை இழந்து வருவதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன.
மருத்துவர்களைத் தேடும் ஆயிரக்கணக்கான நோயாளிகளை, சிகிச்சையளிக்கும் மருத்துவர்களுடன் இந்த அமைப்பு இணைக்கத் தவறியுள்ளது.
இதனாலேயே, ‘ஹெல்த் கேர் கனெக்ட்’ அமைப்பு குறித்த பெரும் ஏமாற்றம் நோயாளிகள் மத்தியில் நிலவுகிறது.
‘ஹெல்த் கேர் கனெக்ட்’ அமைப்பு ஒன்டாரியோ மக்களின் தேவைகளை முழுமையாகப் பூர்த்தி செய்யவில்லை என்று, அந்த மாகாணத்தின் கணக்காய்வாளர் (Auditor General) ஷெல்லி ஸ்பென்ஸ் (Shelley Spence) சமீபத்தில் வெளியிட்ட அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.