ஹர்ஷன நாணயக்கார இலஞ்ச ஊழல் ஆணைக்குழுவிடம் கோரிக்கை

ஆணைக்குழுவில் முறைப்பாடளிக்கப்பட்டுள்ள விடயம் தொடர்பில் சபாநாயகரின் தனிப்பட்ட செயலாளர் சமீர கால்லகே, குறித்த முறைப்பாட்டில் குறிப்பிடப்பட்டுள்ள விடயங்களுக்குரிய தகவல்களை சபாநாயகருக்கு அறிக்கையிடுமாறு பாராளுமன்ற செயலாளர் நாயகத்துக்கு அறிவுறுத்தியுள்ளமை ஆணைக்குழுவின் நடவடிக்கைகளுக்கு இடையூறு விளைவிக்கும் செயற்பாடாகும்.

சபாநாயகரின் தனிப்பட்ட செயலாளரின் இந்த செயற்பாடு குறித்து உரிய சட்ட நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும். அதேபோல் சபாநாயகருக்கு எதிரான முறைப்பாட்டு தகவல்களை எக்காரணிகளுக்காகவும் வெளியாட்களுக்கோ அல்லது பிறிதொரு தரப்பினருக்கோ வழங்க வேண்டாம் என்று அவற்றின் பாதுகாப்பை உறுதிப்படுத்துமாறும் பாராளுமன்ற செயலாளர் நாயகத்துக்கு அறிவுறுத்துங்கள் என ஐக்கிய மக்கள் சக்தியின் கம்பஹா மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் ஹர்ஷன ராஜகருணா இலஞ்சம் அல்லது ஊழல் பற்றிய விசாரணை ஆணைக்குழுவிடம் எழுத்துமூலமாக கோரிக்கை விடுத்துள்ளார்.

இலஞ்சம் அல்லது ஊழல் பற்றிய ஆணைக்குழுவின் தலைவர் நீல் இத்தவலவுக்கு கடிதம் ஒன்றை அனுப்பி மேற்கண்டவாறு வலியுறுத்தியுள்ளார்.

அந்தக் கடிதத்தில் மேலும் குறிப்பிடப்பட்டுள்ளதாவது,

பாராளுமன்ற முன்னாள் பிரதி செயலாளர் நாயகம் மற்றும் பணிக்குழாம் பிரதானியாக பதவி வகித்த சமிந்த குலரத்ன, சபாநாயகர் ஜகத் விக்கிரமரத்ன மற்ம் சபாநாயகரின் தனிப்பட்ட செயலாளர் சமிர கால்லகே ஆகியோருக்கு எதிராக ஊழல் குற்றத்துக்கு அமைய 2026.02.02 ஆம் திகதியன்று இலஞ்சம் அல்லது ஊழல் பற்றிய ஆணைக்குழுவில் முறைப்பாடளித்துள்ளார்.

அதேபோல் இந்த முறைப்பாடு குறித்து பூரணமான விசாரணைகளை மேற்கொள்வதற்கு ஆணைக்குழு தீர்மானித்துள்ளதாக ஊடகங்களில் செய்தி வெளியாகின.

சபாநாயகருக்கும், அவரது தனிப்பட்ட செயலாளருக்கு எதிராகவும் இலஞ்சம் அல்லது ஊழல் பற்றிய ஆணைக்குழுவில் முறைப்பாடளிக்கப்பட்டுள்ள நிலையில் சபாநாயகரின் தனிப்பட்ட செயலாளர் சமீர கால்லகே, குறித்த முறைப்பாட்டில் குறிப்பிடப்பட்டுள்ள விடயங்களுக்குரிய தகவல்களை சபாநாயகருக்கு அறிக்கையிடுமாறு பாராளுமன்ற செயலாளர் நாயகத்துக்கு எழுத்துமூலமாக அறிவுறுத்தியுள்ளார்.

2023 ஆம் ஆண்டின் 09 ஆம் இலக்க ஊழல் எதிர்ப்பு சட்டத்தின் 1 ஆவது பந்தியின் 3(5) பிரிவு, 125 மற்றும் 127 ஆகிய பிரிவுகளுக்கமைய ஆணைக்குழுவுக்கு முறைப்பாடொன்று அளிக்கப்பட்டுள்ள சந்தர்ப்பத்தில் குறித்த முறைப்பாட்டில் சுட்டிக்காட்டப்பட்டுள்ள விடயங்கள் குறித்து குற்றஞ்சாட்டப்பட்டுள்ளவர் அறிக்கை கோருவதற்கு நடவடிக்கைகளை மேற்கொள்வது ஆணைக்குழுவின் பணிகளுக்கு இடையூறு ஏற்படுவதுடன், விசாரணை நடவடிக்கைகளுக்கு அழுத்தம் பிரயோகிக்கப்படும் நிலை ஏற்படும் என்று கருதுகிறோம்.அதற்கமைய, 2026.02.06 ஆம் திகதியன்று சபாநாயகரின் தனிப்பட்ட செயலாளர் பாராளுமன்ற செயலாளர் நாயகத்துக்கு அனுப்பி வைத்த கடிதத்தை பாராளுமன்றத்துக்கு சபைப்படுத்தியுள்ளேன்.(அந்த கடிதத்தை இந்த கடித்ததுடன் இணைத்துள்ளேன்).

சபாநாயகர் மற்றும் அவரது தனிப்பட்ட செயலாளர் குறித்து முறைப்பாடு கிடைக்கப் பெற்றுள்ள நிலையில், அந்த முறைப்பாடுகளுக்கு உரிய சாட்சிகளை மறைப்பதற்கும், மாற்றுவதற்கும் அல்லது சாட்சியாளர்களை அச்சுறுத்துவதற்கும் முயற்சிக்கப்படும் என்பது சபாநாயகரின் தனிப்பட்ட செயலாளரின் செயற்பாடுகள் ஊடாக விளங்கிக்கொள்ள முடிகிறது.

சபாநாயகரின் தனிப்பட்ட செயலாளர் பாராளுமன்ற செயலாளர் நாயகத்துக்கு அனுப்பி வைத்த தகவல் கோரல் கடிதம் குறித்து உரிய சட்ட நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் என்று கேட்டுக்கொள்கிறோம். அதேபோல் சபாநாயகருக்கு எதிரான முறைப்பாடு தகவல் தொடர்பில் எக்காரணிகளுக்காகவும் வெளியாட்களுக்கோ அல்லது பிறிதொரு தரப்பினருக்கோ வழங்க வேண்டாம் என்று அவற்றின் பாதுகாப்பை உறுதிப்படுத்துமாறும் பாராளுமன்ற செயலாளர் நாயகத்துக்கு அறிவுறுத்துமாறும் கேட்டுக்கொள்கிறோம்.

Vasantha Athukorala

ஏற்றுமதி வருமானத்தில் 8 சதவீத அதிகரிப்பு – பேராசிரியர் வசந்த அத்துகோரள

March 4, 2026

2025 ஆம் ஆண்டுடன் ஒப்பிடுகையில், 2026 ஆம் ஆண்டின் தொடக்கத்தில் ஏற்றுமதி வருமானத்தில் 8 சதவீத அதிகரிப்பு ஏற்பட்டுள்ளது. நாட்டின்

Nalin

ஊடக வல்லுநர் நிறுவனச் சட்ட வரைவு உருவாக்கம் – சுகாதாரம் மற்றும் வெகுசன ஊடக அமைச்சர்

March 4, 2026

பிராந்திய ஊடகவியலாளர்களுக்கு கொடுக்க வேண்டிய நிலுவை கொடுப்பனவுகளை விரைவாகச் செலுத்துமாறு , அரசாங்க தகவல் பணிப்பாளர் நாயகம் அனைத்து ஊடக

Sl E

சர்வதேச மனித உரிமைகள் நியமங்களுக்கு ஏற்றவாறே எந்தவொரு சட்டமும் இலங்கையில் அமையவேண்டும் – ஐரோப்பிய ஒன்றியம்

March 4, 2026

பயங்கரவாதத்தடைச்சட்டத்தைப் பதிலீடு செய்யும் நோக்கில் முன்னெடுக்கப்பட்டுவரும் புதிய சட்ட முன்மொழிவின் தயாரிப்புப்பணிகளை உன்னிப்பாக அவதானித்துவருகிறோம். எனினும் புதிதாக உருவாக்கப்படும் எந்தவொரு

kumara

அமைதியற்ற சூழலால் எரிபொருள் விநியோகத்துக்கு எவ்வித பாதிப்போ அல்லது தாமதமோ ஏற்படாது

March 4, 2026

மத்திய கிழக்கு நாடுகளில் நிலவும் அமைதியற்ற சூழலால் எரிபொருள் விநியோகத்துக்கு எவ்வித பாதிப்போ அல்லது தாமதமோ ஏற்படாது. எரிபொருள் விநியோக

Andreas

புதிய அரசியலமைப்பு உருவாக்கம் மாகாணசபைத்தேர்தல்கள் குறித்து இன்று அரசிடம் பேசுவதாக நோர்வே பிரதி வெளிவிவகார அமைச்சர் தெரிவிப்பு

March 4, 2026

புதிய அரசியலமைப்பு உருவாக்கம் மற்றும் மாகாணசபைத்தேர்தல்களை நடாத்துதல் என்பவற்றில் தொடரும் காலதாமதம் உள்ளடங்கலாக தமிழரசுக்கட்சியின் பிரதிநிதிகள் வெளிப்படுத்திய மனித உரிமைகள்சார்

Nish

இந்த அரசாங்கத்துக்கு ஆதரவளித்த ஒவ்வொரு முஸ்லிம் வாக்காளர்களும் ஆத்திரமடைந்துள்ளார்கள் – நிசாம் காரியப்பர்

March 4, 2026

ரானுக்கு எதிராக செயற்பட்ட தரப்பினருக்கு எதிராக ஜனாதிபதி ஒரு கண்டனத்தை கூட தெரிவிக்காததையிட்டு இந்த அரசாங்கத்துக்கு ஆதரவளித்த ஒவ்வொரு முஸ்லிம்

eu

உலகப் பொருளாதார பாதிப்பு: ஐரோப்பிய ஒன்றியம் – வளைகுடா கவுன்சில் அவசர பேச்சுவார்த்தை

March 4, 2026

ஐரோப்பிய ஒன்றியத்தின் வெளிவிவகார அமைச்சர்களுக்கு இடையில் விசேட காணொளி மாநாடு (EU) மற்றும் வளைகுடா ஒத்துழைப்பு கவுன்சிலின் (GCC) வெளியுறவு

Chavitha

டெக்சாஸ் ஆஸ்டினில் துப்பாக்கிச் சூட்டில் இந்திய வம்சாவளித் தமிழ் மாணவி பலி!

March 4, 2026

அமெரிக்காவின் டெக்சாஸ் ஆஸ்டினில், மார்ச் 2, 2026 அன்று பார் ஒன்றில் நடந்த துப்பாக்கிச்சூட்டில் சவிதா சண்முகசுந்தரம் (21) உயிரிழந்த

o

யாழ் வீரசிங்கம் கலாசார மண்டபத்தில் சர்வதேச மகளிர் தினம் – ஈழத்தமிழர் மகளிர் சிறுவர்களுக்கான அமைப்பு

March 3, 2026

சர்வதேச மகளிர் தினம் யாழ் வீரசிங்கம் கலாசார மண்டபத்தில் மிகவும் உணர்வு பூர்வமாக அனுஷ்டிக்கப்படும் என ஈழத்தமிழர் மகளிர் சிறுவர்களுக்கான

mano

இந்திய உயர்ஸ்தானிகரிடம் மனோ கணேசன் விரிவான கோரிக்கைகள் முன்வைப்பு!

March 3, 2026

இலங்கையில் வாழும் இந்திய வம்சாவளி மலையகத் தமிழர்களுக்கு இலகுவான முறையில் கடல் கடந்த இந்தியக் குடியுரிமை (OCI) அந்தஸ்து வழங்குவது

g

இலங்கைக்கு விஜயம் செய்யுமாறு பரிசுத்தப் பாப்பரசருக்கு அழைப்பு

March 3, 2026

இலங்கைக்கு விஜயம் செய்யுமாறு பரிசுத்தப் பாப்பரசர் 14 ஆம் லியோ அவர்களுக்கு ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க அழைப்பு விடுத்துள்ளார்.

au

அவுஸ்திரேலியா தமிழ் சங்கத்தின் அனுசரணையில் சுகாதார பொருட்கள் வழங்கல்!

March 3, 2026

அவுஸ்திரேலியா தமிழ் சங்கத்தின் அனுசரணையில் வழங்கப்பட்ட ஒரு தொகுதி சுகாதார பொருட்கள் இன்றைய தினம் செவ்வாய்க்கிழமை (3) முன்னாள் பிரதமரின்