இயக்குனர் ஷங்கர் கேம் சேஞ்சர் படத்திற்கு பிறகு வேள்பாரி என்ற திரைப்படத்தை தான் இயக்கவுள்ளார் என சொல்லப்படுகின்றது. எந்திரன் எப்படி தனக்கு ஒரு கனவு படமாக இருந்ததோ அதுபோல வேள்பாரி திரைப்படமும் தனக்கு ஒரு கனவு படம் தான் என ஷங்கர் கூறியிருக்கின்றார். எனவே தற்போது வேள்பாரி கதையை படமாக எடுக்கும் முயற்சியில் தீவிரமாக இறங்கியிருக்கிறார் ஷங்கர். முதலில் வேள்பாரி படத்தில் விஜய் நடிக்க வாய்ப்பிருப்பதாக சொல்லப்பட்டது.
பிறகு பாலிவுட் நடிகர்களில் ஒருவர் வேள்பாரி படத்தில் நடிக்க பேச்சுவார்த்தை நடந்து வருவதாக தகவல்கள் வந்தது. அதன் பிறகு விக்ரம், சூர்யா போன்ற நடிகர்களும் வேள்பாரி படத்தில் நடிக்கலாம் என பேசப்பட்டது. இவ்வாறு பல ஹீரோக்களின் பெயர்கள் வேள்பாரி படத்திற்காக பேசப்பட்டு வந்த நிலையில் இப்படத்தின் தற்போதைய நிலை என்ன என்பது பற்றி லேட்டஸ்ட்டாக ஒரு தகவல் கிடைத்திருக்கின்றது. அதாவது ஷங்கரின் கனவு படமான வேள்பாரி பட வேலைகள் எதுவுமே இன்னும் துவங்கப்படவில்லையாம்.
ஷங்கர் வேள்பாரி ஸ்கிரிப்ட் வேலைகளில் தான் தற்போது ஈடுபட்டு வருகிறாராம். இன்னும் படத்தின் ப்ரீ ப்ரொடக்ஷன் போன்ற எந்த வேலையும் துவங்கப்படாததால் ஹீரோவாக நடிக்கப்போவது யார் என்பது குறித்து எந்த தகவலும் இல்லை என சொல்லப்படுகின்றது. குறிப்பாக வேள்பாரி படம் இரண்டு பாகங்களாக தயாராகவுள்ளது. ஒருவேளை வேள்பாரி திரைப்படம் உருவானால் இந்திய திரையுலகிலேயே அதிக பட்ஜெட்டில் உருவாகும் படமாக இதுதான் இருக்கும்.