வெள்ளநீரை மறித்து பிரதேசங்களுக்கு இடையில் அரசியல்வாதிகள் பிரச்சினையை ஏற்படுத்துகிறார்கள் – அமைச்சர் இராமலிங்கம் சந்திரசேகரன்

வெள்ளநீரை மறித்து பிரதேசங்கள் இடையில் பிரச்சினையை ஏற்படுத்தும் தூர நோக்கற்ற அரசியல்வாதிகளின் செயற்பாடு அருவருக்கத்தக்கது என கடற்தொழில் அமைச்சர் இராமலிங்கம் சந்திரசேகரன் குற்றம் சாட்டியுள்ளார்.

யாழ்ப்பாணத்தில் , நல்லூர் பிரதேச சபை பகுதிக்குள் இருந்து கோப்பாய் பிரதேச சபை எல்லைக்குள் வெள்ள நீர் வர கூடாது என பருத்தித்துறை வீதியில் , கட்டைப்பிராய் பகுதியில் உள்ள கோப்பாய் பிரதேச சபை எல்லையில் வெள்ள வாய்க்காலுக்குள் மண் அணை அமைக்கப்பட்டுள்ளது.

இது தொடர்பில் ஊடகங்களில் செய்திகள் வெளியாகிய நிலையில் , சம்பவ இடத்திற்கு விரைந்த கடற்தொழில் அமைச்சர் , அங்கிருந்து உரிய தரப்பினர்களுடன் தொலைபேசியில் தொடர்பு கொண்டு , உடனடியாக மண் அணையை அகற்ற நடவடிக்கை எடுக்குமாறு பணிப்புரை விடுத்த பின்னர் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போதே அவ்வாறு தெரிவித்தார்.

மேலும் தெரிவிக்கையில், நல்லூருக்கும் கோப்பாய்க்கும் இடையில் பெரும் போர் வெடிக்க போகிறது. அது நீருக்கான போராக உள்ளது.

இதற்கு காரணம் கோப்பாய் பிரதேச சபையின் தவிசாளர் தான். வழமையாக நல்லூர் பிரதேச சபை எல்லைக்குள் இருந்து ஓடும் நீர் கோப்பாய் பிரதேச சபை ஊடாக வடிந்து கடல்நீரேரியை சென்றடையும். இது தான் வழமை.

இம்முறை நல்லூரில் இருந்து வரும் வெள்ளநீர் எங்களுடைய பிரதேசத்திற்குள் வர கூடாது என அதனை மண் அணை போட்டு தடுத்து போர் பிரகடனத்தை அறிவித்துள்ளார் கோப்பாய் பிரதேச சபை தவிசாளர்.இதொரு அருவருப்பான செயல். வெள்ளநீரை மறித்து பிரதேசங்கள் இடையில் பிரச்சினையை ஏற்படுத்த முனைகிறார்.

தூர நோக்கற்று செயற்படும் இந்த அரசியல்வாதிகளின் செயற்பாடு அருவருத்தக்கது.இதொரு மனவருத்தத்திற்கு உரிய விடயமாகும் என மேலும் தெரிவித்தார்.

oi

எண்ணெய் மற்றும் எரிவாயு விநியோகம் குறைந்தால் விலை உயர்வு ஏற்படுவது தவிர்க்க முடியாதது

March 7, 2026

உலகச் சந்தையில் விலைகள் அதிகரிப்பதைக் கட்டுப்படுத்த முடியாது எனவும், எண்ணெய் மற்றும் எரிவாயு விநியோகம் குறைந்தால் விலை உயர்வு ஏற்படுவது

Poli

போதைப்பொருள் கடத்தல் முறியடிப்பு!

March 7, 2026

இலங்கைக் கடற்படையினர் நாட்டின் தெற்கு திசையிலுள்ள ஆழ்கடலில் முன்னெடுத்த விசேட தேடுதல் நடவடிக்கையின் போது, போதைப்பொருள் என சந்தேகிக்கப்படும் பொதிகளை

ceb

வதந்திகளுக்கு முற்றுப்புள்ளி வைத்தது எரிசக்தி அமைச்சு

March 7, 2026

நுரைச்சோலை லக்விஜய மின் உற்பத்தி நிலையத்தின் நிலக்கரி விநியோகம் தொடர்பில் எழுந்துள்ள சிக்கல்கள் காரணமாக, எதிர்வரும் ஏப்ரல் மாதத்தில் மின்வெட்டு

44

மாவடிப்பள்ளியில் ஆண் ஒருவரின் சடலம் மீட்பு

March 7, 2026

அம்பாறை மாவட்டம் காரைதீவு பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட மாவடிப்பள்ளி பகுதியில் ஆண் ஒருவரின் சடலம் மீட்கப்பட்டுள்ளது. இந்தச் சம்பவம் இன்று

in

இருதரப்பு உறவுகளை மேலும் வலுப்படுத்துவது குறித்து இலங்கை – இந்தியா இணக்கப்பாடு!

March 7, 2026

இந்தியாவுக்கு உத்தியோகபூர்வ விஜயம் மேற்கொண்டுள்ள இலங்கை வெளிவிவகார அமைச்சர் விஜித ஹேரத் மற்றும் இந்திய வெளிவிவகார அமைச்சர் கலாநிதி எஸ்.

coo

சமூக வலைத்தள விற்பனை முகவர்களால் ஏமாற்றப்பட்ட யாழ். இளைஞர்

March 7, 2026

சமூக வலைத்தளங்கள் ஊடாக “காஸ் குக்கர்” விற்பனை என தம்பதி ஒன்று மோசடியில் ஈடுபட்டுவருவது தொடர்பில் பொலிஸ் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது.

urum

உரும்பிராய் எரிபொருள் நிலையத்தில் தீ விபத்து

March 7, 2026

யாழ்.உரும்பிராய் எரிபொருள் நிலையத்தில் தீ விபத்து இடம்பெற்றுள்ளது. குறித்த விபத்ததானது சற்றமுன்னர்(7.3.2026) இடம்பெற்றுள்ளது. இது குறித்து மேலும் தெரியவருகையில், எரிபொருள்

mug

டிட்வா’ சூறாவளியால் அனர்த்த முகாம்களில் உள்ளவர்களுக்கு நிரந்தர தீர்வு வேண்டும்!

March 7, 2026

`Rebuilding Sri Lanka” ஜனாதிபதி செயலணி, பிரதமர் ஹரிணி அமரசூரியவின் தலைமையில் ஜனாதிபதி அலுவலகத்தில் இடம்பெற்றுள்ளது. ‘டிட்வா’ சூறாவளியால் ஏற்பட்ட

aswe

அஸ்வெசும திட்டம் – வீட்டிற்கு வரப்போகும் அரச அதிகாரிகள்

March 7, 2026

அஸ்வெசும திட்டத்தின் முதற்கட்டத்தின் கீழ் (2022/2023 ஆம் ஆண்டுகளில்) விண்ணப்பித்த, நன்மைகளைப் பெறுவோர் மற்றும் பெறாதோர் என அனைவரினதும் தகவல்களைப்

jap

இலங்கை வெளிவிவகார அமைச்சர் மற்றும் கென்ய பிரதம அமைச்சரவைச் செயலாளர் இடையில் முக்கிய சந்திப்பு!

March 7, 2026

இந்தியாவின் புதுடெல்லியில் இடம்பெற்று வரும் ராய்சினா கலந்துரையாடலின் ஒரு பகுதியாக, இலங்கையின் வெளிவிவகார அமைச்சருக்கும் கென்யாவின் பிரதம அமைச்சரவைச் செயலாளர்

hon

வல்வெட்டித்துறையில் சீனிப்பாணி கரைசலை தேன் என விற்றவர் கைது!

March 7, 2026

யாழ்ப்பாணத்தில் சீனிப்பாணியை தூய தேன் எனவும் , கலப்பட நெய்யையும் விற்பனைக்கு வைத்திருந்த விற்பனையாளருக்கு எதிராக பொது சுகாதர பரிசோதகரால்

fffff

மீனவர்களுக்கான விசேட விழிப்புணர்வுத் திட்டம்

March 7, 2026

‘முழு நாடும் ஒன்றாக’ தேசிய வேலைத்திட்டத்திற்கு இணையாக, மார்ச் 01ஆம் திகதி ஆரம்பமான “போதைப்பொருள் தடுப்பு வாரத்தின்” கீழ், போதைப்பொருள்