வெள்ள நிலைமை காரணமாக பாதிப்படைந்த கிணறுகளை மீண்டும் பயன்படுத்தக்கூடிய வகையில் சுத்தப்படுத்துவதற்குத் தேவையான நடவடிக்கைகளை நீர் வழங்கல் சபை ஆரம்பித்துள்ளது.
அதற்கமைய, கொழும்பு பிரதான அலுவலகத்தின் ஊடாக கொழும்பு, கம்பஹா, இரத்தினபுரி மற்றும் கேகாலை மாவட்டங்களும், புத்தளம் மாகாண அலுவலகத்தின் ஊடாக குருநாகல் மற்றும் புத்தளம் மாவட்டங்களும் உள்ளடக்கப்படுவதாகத் தெரிவிக்கப்படுகிறது.
அநுராதபுர மாகாண அலுவலகத்தின் ஊடாக அநுராதபுரம், பொலன்னறுவை மற்றும் வவுனியா மாவட்டங்களும், மொனராகலை மாகாண அலுவலகத்தின் ஊடாக பதுளை, மொனராகலை மற்றும் அம்பாறை மாவட்டங்களும், யாழ்ப்பாண மாகாண அலுவலகத்தின் ஊடாக யாழ்ப்பாணம், கிளிநொச்சி மற்றும் முல்லைத்தீவு மாவட்டங்களும் உள்ளடக்கப்படுகின்றன.