மூன்றாவது ஒருநாள் போட்டியில் தென் ஆப்ரிக்கா ‘ஏ’ அணி 73 ரன் வித்தியாசத்தில் ஆறுதல் வெற்றி பெற்றது. இந்தியா ‘ஏ’ அணி 2-1 என தொடரை கைப்பற்றி கோப்பை வென்றது.
இந்தியா வந்துள்ள தென் ஆப்ரிக்கா ‘ஏ’ அணி, 3 போட்டிகள் கொண்ட அதிகாரப்பூர்வமற்ற ஒருநாள் தொடரில் இந்தியா ‘ஏ’ அணியுடன் விளையாடியது. முதலிரண்டு போட்டியில் வென்ற இந்தியா ‘ஏ’ அணி, 2-0 என ஏற்கனவே தொடரை கைப்பற்றியது. நேற்று, ராஜ்கோட்டில் 3வது போட்டி நடந்தது. ‘டாஸ்’ வென்ற இந்தியா ‘ஏ’ அணி கேப்டன் திலக் வர்மா ‘பீல்டிங்’ தேர்வு செய்தார்.