பதுளை அனர்த்த முகாமைத்துவ நிலையம்,லியங்கஹவல பத்தேரவ பகுதியில் வீதியின் ஒரு பகுதி வியாழக்கிழமை (04) தாழிறங்கியுள்ளது.
குறித்த இடம் இராவண நீர்வீழ்ச்சியின் மேல் நீர்ப்பிடிப்பு பகுதி என்று கூறப்படுகிறது.
இது தொடர்பாக தேசிய கட்டிட ஆராய்ச்சிநிறுவனத்தின் அறிக்கை பெறப்பட உள்ளது.
அந்த வீதி வழியாக வாகனங்கள் பயணிக்க முடியாத சூழ்நிலை உருவாகியுள்ளது, இதற்கிடையில்,பதுளையில் உள்ள அலகொல்ல மலைகளின் கல்வல பகுதியைச் சுற்றியுள்ள இடங்களில் தரையில் பெரிய விரிசல்கள் ஏற்பட்டுள்ளதாக பதிவாகியுள்ளது,
மேலும் அந்த இடத்திற்கும் தரை ஆய்வு செய்ய திட்டமிடப்பட்டுள்ளதாக பதுளை அனர்த்த முகாமைத்துவமையம் தெரிவித்துள்ளது.