வீடொன்றில் சூட்சுமமாக மறைத்து வைக்கப்பட்டிருந்த ஒரு தொகுதி பெட்ரோலை கல்முனை தலைமையக பொலிஸார் மீட்டுள்ளனர்.
வீடொன்றில் பெட்ரோல் பதுக்கி வைக்கப்பட்டு விற்பனை செய்யப்பட்டு வருவதாக இன்று(8.3.2026)கல்முனை தலைமையக பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரிக்கு இரகசிய தகவல் கிடைக்கப்பெற்றுள்ளது.
இதன் போது குறித்த வீட்டின் கட்டிலின் கீழ் சூட்சுமமாக போத்தல் மற்றும் கலன்களில் மறைத்து வைக்கப்பட்ட நிலையில் சுமார் 32 லீட்டர் பெட்ரோல் மீட்கப்பட்டுள்ளன.
அத்துடன் 39 வயது மதிக்கத்தக்க பெண் சந்தேக நபர் கைதான நிலையில் பொலிஸ் பிணையில் விடுதலை செய்யப்பட்டார்.
மேலும் குறித்த வழக்கு நாளை திங்கட்கிழமை(9) கல்முனை நீதிவான் நீதிமன்றத்தில் சட்ட நடவடிக்கைக்காக பாரப்படுத்தப்படவுள்ளமை குறிப்பிடத்தக்கது.