விவசாயிகளின் பிரச்சினைகளைத் தீர்க்க 3 விதமான திட்டங்கள் – அமைச்சர் கே.டீ. லால்காந்த

உள்நாட்டு உருளைக்கிழங்கு விவசாயிகளின் பிரச்சினைகளைத் தீர்ப்பதற்கான முறையான வேலைத்திட்டத்தை வகுப்பதற்காக உருளைக்கிழங்கு விவசாயிகளுடனான கலந்துரையாடல் இன்று (18) முற்பகல் ஜனாதிபதி அலுவலகத்தில் கமத்தொழில், கால்நடை வளங்கள், காணி மற்றும் நீர்ப்பாசன அமைச்சர் கே.டீ. லால்காந்த மற்றும் வர்த்தக, வாணிப, உணவுப் பாதுகாப்பு மற்றும் கூட்டுறவு அபிவிருத்தி அமைச்சர் வசந்த சமரசிங்க ஆகியோரின் தலைமையில் நடைபெற்றது.

உருளைக்கிழங்கு விவசாயிகள் எதிர்கொள்ளும் பிரச்சினைகளைத் தீர்ப்பதில் விவசாயிகள் மீது அதிக கவனம் செலுத்தி, நுகர்வோருக்கும் எந்த அநீதியும் ஏற்படாத வகையில் அவற்றுக்கான தீர்வுகளைக் காண்பதற்கு, உணவுப் பாதுகாப்புக் குழு முடிவு செய்துள்ளதாக கமத்தொழில், கால்நடை வளங்கள், காணி மற்றும் நீர்ப்பாசன அமைச்சர் கே.டீ. லால்காந்த தெரிவித்தார்.

இந்தப் பிரச்சினையைத் தீர்ப்பதில், அரசாங்கம், கமத்தொழில் திணைக்களம் மற்றும் விவசாயிகள் என்று, மூன்று தரப்பினராக தனித்தனியாகச் செயல்படாமல், அனைவரும் ஒரே தளத்தில் ஒரே நலன்களைப் பிரதிநிதித்துவப்படுத்தும் குழுவாகச் செயல்பட வேண்டும் என்றும் அமைச்சர் சுட்டிக்காட்டினார்.

உருளைக்கிழங்கு உற்பத்திச் செலவு மிக அதிகமாக இருப்பதாகவும், அதில் 40 சதவீதம் விதைகளைக் கொள்வனவு செய்வதற்கு செலவிடப்படுவதாகவும் விவசாயிகள் இங்கு சுட்டிக்காட்டினர். பயிர்களுக்கு உரங்களை ஒழுங்கற்ற முறையில் பயன்படுத்துதல், தரமற்ற உரங்கள் மற்றும் விவசாய உள்ளீடுகளால் விளைச்சல் குறைதல் மற்றும் உயர்தர விதைகள் இல்லாமை போன்ற சிக்கல்கள் உருளைக்கிழங்கு உற்பத்திச் செலவு அதிகரிப்பதற்கு பிரதானமாக உள்ளதாகவும் அவர்கள் சுட்டிக்காட்டினர்.

உருளைக்கிழங்கு விவசாயிகளின் பிரச்சினைகள் குறித்து இதுபோன்ற ஒரு கலந்துரையாடலை எந்த அரசாங்கமும் இதுவரை வழங்கவில்லை என்றும், தற்போதைய அரசாங்கத்தின் கீழ் அவர்களின் பிரச்சினைகள் தீர்க்கப்படும் என்று எதிர்பார்ப்பதாகவும் அவர்கள் மேலும் தெரிவித்தனர்.

இதன்போது முன்வைக்கப்பட்ட விடயங்கள் குறித்து கலந்துரையாடிய பின்னர், சதொச நிறுவனத்துடன் இணைந்து உருளைக்கிழங்கு கொள்வனவு செய்வதற்கான பொறிமுறையை உருவாக்கவும், ஒரு கிலோ உருளைக்கிழங்கை ரூ.200 முதல் 300 வரையிலான விலைக்கு கொள்வனவு செய்வதற்கும், இறக்குமதி செய்யப்படும் உருளைக்கிழங்கிற்கு விதிக்கப்படும் வரியை அதிகரிப்பது குறித்தும் பரிசீலிக்கப்படும் என்றும் வர்த்தக, வாணிப, உணவுப் பாதுகாப்பு மற்றும் கூட்டுறவு அபிவிருத்தி அமைச்சர் வசந்த சமரசிங்க தெரிவித்தார்.

விவசாயிகளுக்கு மானியங்கள் வழங்குவது குறித்தும் கவனம் செலுத்தப்படும் என்று கமத்தொழில், கால்நடை வளங்கள், காணி மற்றும் நீர்ப்பாசன அமைச்சர் கே.டீ. லால்காந்த தெரிவித்ததுடன், உருளைக்கிழங்கு உற்பத்திச் செலவைக் குறைப்பதற்காக தரமான உரங்கள் மற்றும் விவசாய உள்ளீடுகளைத் தயாரிப்பதற்கும், உயர்தர விதைகளை உற்பத்தி செய்வதற்கும் விவசாயிகளுடன் இணைந்து கமத்தொழில் திணைக்களத்தின் கீழ் எதிர்காலத்தில் செயற்திட்டம் ஒன்று தயாரிக்கப்படும் என்றும் தெரிவித்தார்.

உருளைக்கிழங்கு விவசாயிகளுக்குத் தேவையான அரசாங்க தலையீடுகளை நெறிப்படுத்த விவசாயிகள் பதிவுத் திட்டம் ஆரம்பிக்கப்படும் என்றும், விவசாயிகளின் பிரச்சினைகளைத் தீர்க்க குறுகிய கால, மத்திய கால மற்றும் நீண்டகால தீர்வுகளை வழங்கி, அந்தப் பிரச்சினைகளுக்கு விரைவான தீர்வுகளை வழங்க நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் அமைச்சர் கே.டீ. லால்காந்த மேலும் தெரிவித்தார்.

நாட்டின் வருடாந்த உருளைக்கிழங்கு நுகர்வு சுமார் 225,000 மெட்ரிக் டொன்கள் என்றும், அதில் சுமார் 70,000 முதல் 80,000 மெட்ரிக் டொன்கள் உள்நாட்டில் உற்பத்தி செய்யப்படுகின்றன என்றும், அதன்படி எஞ்சிய தொகையை இறக்குமதி செய்ய வேண்டியுள்ளது என்றும் கமத்தொழில் அமைச்சின் அதிகாரிகள் புள்ளிவிவரத் தரவுகளுடன் சுட்டிக்காட்டினர்.

கமத்தொழில் மற்றும் கால்நடை வளங்கள் பிரதி அமைச்சர் நாமல் கருணாரத்ன, கமத்தொழில், கால்நடை வளங்கள், காணி மற்றும் நீர்ப்பாசன அமைச்சின் செயலாளர் டீ.பீ. விக்ரமசிங்க மற்றும் கமத்தொழில் அமைச்சு,கமத்தொழில் திணைக்களத்தின் அதிகாரிகள் ஆகியோருடன் பதுளை மற்றும் நுவரெலியா மாவட்டங்களில் உருளைக்கிழங்கு விவசாயிகளைப் பிரதிநிதித்துவப்படுத்தும் விவசாயிகளும் இந்தக் கலந்துரையாடலில் கலந்து கொண்டனர்.

By C.G.Prashanthan

veth

2026ஆம் ஆண்டுக்குரிய அபிவிருத்தி வேலைத் திட்டங்களை விரைவாக நிறைவு செய்யுங்கள் – ஆளுநர் பணிப்பு

March 5, 2026

2026ஆம் ஆண்டுக்குரிய அபிவிருத்தி வேலைத் திட்டங்களை எவ்வளவு விரைவாக நிறைவு செய்ய முடியுமோ அவ்வளவு துரிதமாக நிறைவு செய்யுமாறும், அதற்காகத்

mu

அகில இலங்கை கிறிஸ்தவ அபிவிருத்தி ஒன்றிய தலைவரின் நல்லெண்ண விஜயம்

March 5, 2026

மன்னார் மறைமாவட்ட ஆயர் மேதகு அந்தோனிப்பிள்ளை ஞானப்பிரகாசம் ஆண்டகைக்கும் முன்னாள் பிரதமரின் மத விவகாரங்களுக்கான இணைப்பு செயலாளர் எஸ். சந்துரு

ceb

மின்சார விநியோக அமைப்பில் தொழில்நுட்பக் கோளாறு

March 5, 2026

அநுராதபுரம் மற்றும் வவுனியா இடையேயான மின்சார விநியோக அமைப்பில் ஏற்பட்ட தொழில்நுட்பக் கோளாறினால், நாடளாவிய ரீதியில் பல பகுதிகளில் மின்தடை

f

யாழ். மாவட்ட குறிப்பிட்ட சில நிலையங்களிலேயே எரிபொருள் விநியோகம்

March 5, 2026

யாழ்ப்பாண மாவட்டத்தில் உள்ள இலங்கை பெற்றோலிய கூட்டு தாபனத்தின் குறிப்பிட்ட சில எரிபொருள் நிரப்பும் நிலையங்களில் எரிபொருள் விநியோகம் இடம்பெறவுள்ளதாக

kanaf

தையிட்டி விகாரையில் இடம்பெற்ற பொலிஸார் தாக்குதல்; மனிதவுரிமை ஆணைக்குழு விசாரணை

March 5, 2026

தையிட்டி விகாரைக்கு எதிரான போராட்டத்தில் ஈடுபட்ட வேளை கைது செய்யப்பட்டவர்கள் மீது தாம் குறைந்தளவு பல பிரயோகத்தையே மேற்கொண்டதாக மனிதவுரிமை

une

தெஹ்ரானில் உள்ள யுனெஸ்கோ பாரம்பரியச் சின்னம் மீது ஏவுகணைத் தாக்குதல்

March 5, 2026

ஈரான் தலைநகர் தெஹ்ரானில் உள்ள வரலாற்றுச் சிறப்புமிக்க கொலெஸ்தான் அரண்மனை (Golestan Palace) மீது நடத்தப்பட்ட ஏவுகணைத் தாக்குதலை “பகிரங்கமான

sal

சுரேஷ் சலேவின் உயிருக்கு அச்சுறுத்தல் ஏற்படலாம்?

March 5, 2026

இலங்கை தேசிய புலனாய்வு பிரிவின் முன்னாள் பணிப்பாளர் சுரேஷ் சாலேவின் உயிருக்கு அச்சுறுத்தல் என அவரது சட்டத்தரணிகள் நீதிமன்றில் தெரிவித்துள்ளனர்.

ci

சட்டவிரோத விற்பனைக்காக வைக்கப்பட்டிருந்த சிகரெட்டுகளுடன் இந்தியர் உட்பட இருவர் கைது

March 5, 2026

சட்டவிரோத விற்பனைக்காக வைக்கப்பட்டிருந்த 220 வெளிநாட்டு சிகரெட்டுகளுடன் இந்திய நாட்டவர் ஒருவரும், நுவரெலியாவைச் சேர்ந்த ஒருவரும் கைது செய்யப்பட்டுள்ளனர். கடந்த

Death-2

ஓடிக்கொண்டிருந்த ரயிலில் இருந்து விழுந்தவர் பலி

March 5, 2026

ஓடிக்கொண்டிருந்த ரயிலில் ஏற முயன்ற தகவல் தொழில்நுட்பத்துறை (IT) நிபுணர் ஒருவர், கால் வழுக்கி ரயிலுக்கு அடியில் விழுந்து உயிரிழந்துள்ளதாக

aj

இலங்கை நரம்பியல் நிபுணர்கள் சங்கத்தின் 19 வது வருடாந்த மாநாடு

March 5, 2026

இலங்கை நரம்பியல் நிபுணர்கள் சங்கத்தின் 19 வது வருடாந்த மாநாடு, “மாற்றத்தக்க தாக்கத்திற்கான ஒருங்கிணைந்த நரம்பியல்” என்ற கருப்பொருளின் கீழ்

up

தன் உயிரை மாய்த்துக் கொண்ட இளம் பெண்ணின் சடலத்திற்கு பாலியல் வல்லுறவு ; இளைஞர்கள் ஆர்ப்பாட்டம்

March 5, 2026

தன் உயிரை மாய்த்துக் கொண்ட இளம் பெண்ணின் சடலத்திற்கு பாலியல் ரீதியான இழுக்கு ஏற்படுத்தியதாக கூறப்படும் அதிர்ச்சி சம்பவத்துடன் தொடர்புடையவர்களை

sh22

காணாமல் போன காங்கேசன்துறை ஊரணி மீனவர்கள் இந்தியாவில் மீட்பு

March 5, 2026

யாழ்ப்பாணம், காங்கேசன்துறை ஊரணி கடற்பகுதியில் இருந்து மீன்பிடிக்கச் சென்ற நிலையில் காணாமல் போன இரண்டு மீனவர்கள், தமிழ்நாட்டின் அரியமான் கடற்பரப்பில்